Skip to main content

கவனியுங்கள்....புரிந்துகொள்வீர்கள்...!

















ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.

நாளை (21.06.2010) முதல் ஒரு வார காலத்திற்கு வலைச்சரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்கும் வாய்ப்பினை மரியாதைக்குரிய ஐயா சீனா அவர்கள் எனக்கு அளித்துள்ளார்கள். வலைச்சரத்தில் தொகுக்கும் நேரங்களில் என்னுடைய வலைப்பூவிலும் இடுகைகள் இட முயற்சிக்கிறேன்.


இரண்டு நாளாய்..புத்தரின் தம்மபதத்தை புரட்டிக்கொண்டு இருக்கிறேன். ஒரே ஓட்டமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு நடுவே...இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று. இந்த ருசியினை அனுபவித்தவர்களுக்கு நான் சொல்வதின் சாரம் விளங்கும். மற்றவர்களுக்கு வார்த்தை அளவிலேயே நின்று போகும்.

''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

இரண்டு நாட்களாய் திரும்ப திரும்ப என் நினைவுக்கு வரும் வாக்கியமாக மேலே சொன்ன வாக்கியம் இருக்கிறது. ஆமாம் கருத்துக்களும் சிந்தந்தங்களும் நிறைந்த ஒரு மனதுக்கு உண்மையை அறிய வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இந்த கருத்தோடு ஒத்த ஒரு கதையை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்.

கடைக்கு சென்று...ஒரு நாள் சிக்கன் லெக் பீஸ் ஆர்டர் செய்தான் ஒருவன். பெரிய பெரிய லெக் பீஸாக கொண்டு வந்து வைத்தான் அந்த சர்வர். ஒரு லெக் பீஸை எடுத்துக் கடித்தார் நமது நண்பர்....அந்த லெக் பீஸ் பழையது மேலும் ஏற்கெனவே கெட்டுப்போனது இதை உணராத நமது நண்பர் அதன் வித்தியாசமான சுவையைக் கண்டு சிக்கன் லெக் பீஸில் பெரியதாக இருக்கும் எல்லாம் இப்படித்தான் சுவையற்றதாக இருக்கும் என்ற கருத்தினை உறுதியாக கொண்டுவிட்டார். அவர் சர்வரிடம் கூட கேட்கவில்லை ஏன் இப்படி சுவையின்றி இருக்கிறது என்று....ஆனால் அவர் மனதில் கற்பிதம் கொண்டு விட்டார் இனி சிக்கன் பெரிய லெக் பீஸ் உண்ணக்கூடாது அது சுவையற்றது என்று...


அதன் பின் எப்போது அவர் உணவருந்த்தச் சென்றாலும் அவர் கேட்பது...சிக்கன் லெக் பீஸ் சிறியது என்று கவனமாய் கேட்பார். பெரிதான சிக்கன் லெக் பீஸ் கொண்டு வந்தால் சண்டை போடுவார்..எனக்கு தெரியாததா? என்னுடைய அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது என்று வாதிடுவார். காரணம் அவர் எடுத்துக் கொண்ட கருத்து அவரின் முன் அனுபவம் சார்ந்தது. அதை அவர் திடமாக நம்பினார்.

ஒரு நாள் உணவருந்த சென்ற போது அந்த உணவக பேரர் நமது நண்பருக்கு பாடம் புகட்ட விரும்பினார். வழக்கம் போல சிறிய லெக் பீஸ் கேட்ட நமது நண்பருக்கு வழக்கத்திற்கு மாறாக பெரிய லெக் பீஸையே கொடுத்தார்....! கோபத்தில் நமது நண்பரின் முகம் சிவக்க...காச் மூச் என்று கத்தத்தொடங்கினார். பேரர் அமைதியாக சொன்னார்....எங்களிடம் உள்ள லெக் பீஸிலேயே..இது மிகச் சிரியது என்று சிரிக்காமல் சொன்னார். நமது நண்பர்...அப்படியா...!!! இதுதான் சிறியதா என்று சந்தேகத்தோடு கேட்டு...ஒரு பீஸை எடுத்துக் கடித்தார். அது சுவையாயிருந்தவுடன்..அசடு வழிந்தபடி...ஹி....ஹி...ஹி... நல்ல டேஸ்ட்டா இருக்கு. இது சின்ன பீஸ்தான் என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டுப் போனார்.

மேற்சொன்ன கதையில் வரும் நண்பர் போல நம்மைச் சுற்றி நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைப் பிடித்து தொங்கி கொண்டு புதிதாய் விசயங்கள் கற்பிக்கும்...பூச்செண்டு கொடுக்குm வாழ்க்கையை மறுத்து விடுகிறார்கள் (அப்பாடா...ஆரம்பிச்ச இடத்துக்கு மறுபடியும் கூட்டிகொண்டு வந்து விட்டேன்...)

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!

இந்தக்கட்டுரை கூட....கருத்துக்களோடு இருப்பவர்களுக்கு வேறு ஏதோ தான் சொல்லப்போகிறது.....!

'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "


உங்கள் அனைவருக்குள்ளும் ஆழ்ந்த அமைதி பரவட்டும்!


தேவா. S

Comments

" கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "

உண்மைதான் ஒன்றை நாம் கற்பிதம் செய்து விட்டால் அதோடு அது தொடர்பான் தேடல் முற்றுபெற்றுவிடுகின்றது. அதனை மெய்யாக்க நாம் தயாராகிவிடுகிறோம்.
வாழ்த்துகள் தேவா ...! வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் அசத்துங்க ...!
vasu balaji said…
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்:)
http://a21.idata.over-blog.com/0/59/51/46/titi-super.gif
Unknown said…
புரிகிறது..

வலைச்சர ஆசிரியர் பொறுப்பு... வாழ்த்துக்கள்
வலைச்சர வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்
\\'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "\\
அருமை.
வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்
வாழ்க்கைய எப்படி எடுத்துக்கணும்னு அழகா சொல்லியிருக்கீங்க. நம்ம ஒவ்வொருவரும் ஒரு பிரச்சனை என்றால் எதிரில் இருப்பவரின் நிலையில் இருந்து யோசித்தால் பிரச்சனையின் தன்மையை நம்மால் உணர முடியும்.

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள்!
Bavan said…
ம்ம்ம்... முதற் கோணல் முற்றிலும் கோணல் என்பது சரியாகத்தான் இருக்கிறது..
ஆனால் ஒருவரைப் பார்க்கிறோம் ஆனால் அவரைப் பார்த்த மாத்திரத்திலே சிலவேளை பிடித்துப் போய்விடும்.. ஆனால் ஆவர் உண்மையிலேயே கெட்டவராக இருக்கலாம். ஆனால் அவரது கெட்ட விடயங்களையும் நியாயப்படுத்த மனம் பார்க்குமே தவிர கெட்டது என்னதை உணராது.

மனதில் பதிந்த விடயங்களை மாற்றுவது மிகவும் கடினம்.. அப்படி மாறிவிட்டால் அது புதிய விடயம் மனதில் பதிந்து விட்டது எனலாம்..:)

நல்ல பதிவு...:)
ஹேமா said…
நல்ல சிந்தனை தந்தீர்கள் தேவா.வாழ்த்துக்களும் கூட உங்களுக்கு.
அன்பின் தேவா

நல்ல சிந்தனை - தம்மபதத்தில் ஒரு வரியினை எடுத்து - ஆழ சிந்தித்து - ஒரு இடுகை நன்று நன்று
நல்வாழ்த்துகள் தேவா
நட்புடன் சீனா
வலைச்சர ஆசிரியர் பொறுப்பு... வாழ்த்துக்கள் அண்ணா
Ahamed irshad said…
வலைச்சரத்திற்கு வாழ்த்துகள் தேவா!
//இப்படி புத்தகம் படிக்கும் நேரங்களில் மெல்ல நமக்க்குள்ளேயே தொலைந்து போவது தவிர்க்க முடியாத ஒன்று.//

தற்போதைய காலகட்டத்தில் புத்தகம் படிப்பவர்கள் பாக்கியவான்கள்.வாழ்த்துக்கள்!
அருமையான சிந்தனை, முயற்சிக்கிறேன்.
நன்றி.
வாழ்த்துக்கள்... இந்த பதிவுகூட மிக சின்னதா சுவையாயிருக்கு.
சுவையா இருப்பதெல்லாம்... சின்னததான் இருக்கும்.
வாழ்த்துக்கள் மாம்ஸ்...அப்புறம் சொன்னதுல்லாம் ஞபாகம் இருக்குல்ல...


கதை நல்லாருக்கே... எங்க சுட்டது???
இடுகை நன்றாக இருக்கிறது..ஒரு பெரிய லெக் பீஸ் போல.......
அனு said…
ஹெவி-யான விஷயத்த ரொம்ப ஈசியா விளக்கிட்டீங்க.. நல்லா இருக்கு..

வலைச்சரம் ஆசிரியர் பதவிக்கு வாழ்த்துக்கள்..
வலைச்சர ஆசிரியர் பணிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துகள்!
Chitra said…
'' கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "


..... Very nice post!

Dheva, Best wishes! அடிச்சி தூள் கிளப்புங்க.... !!!
Nalla karuthu pathivu anna...
vijay said…
valthukkal nanba
\\எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!\\

உண்மைதான் நண்பரே, வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான தன்மை இது...


வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்
dheva said…
ஜீவன் பென்னி
தமிழ் அமுதன்
வானம்பாடிகள் அண்ணன்
ப்ரியமுட்ன் வசந்த்
கே.ஆர்.பி.செந்தில்
ஜெய்லானி
ஈரோடு கதிர்
ஜெரால்ட் வில்சன்
தம்பி பவன்
ஜெயந்தி
ஹேமா.....
சீனா ஐயா...
தம்பி செளந்தர்
அகமது இர்ஷாத்
ராஜ நடராஜன்
அமைதி அப்பா
சி. கருணாகரசு
மாப்ஸ் நாஞ்சில் பிரதாப்
ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி
அன்புடன் அருணா
தோழி சித்ரா
தங்கை ரீனா
விஜய்
தம்பி உடந்தை வாலிபன்
நிகழ்காலத்தில்


அனைவரின் அன்பான வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி....உங்களின் ஆதரவு...மேலும் என்னை வலுவூட்டியுள்ளது என்பது சர்வ நிச்சயமான உண்மை...!

மிக்க நன்றி....!
kottaithaya said…
Hi Deva,
Realy good think you teach with us
அருமையனா பகிர்வு, பார்வை.

வலைச்சர ஆசிரியர் வாழ்த்துகள் தேவா!
க ரா said…
அருமையான் பகிர்வுன்னா. வலைச்ச்ர ஆசிரியராக கலக்குங்க.
உங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் !
விஜய் said…
//ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.//

ரொம்ப யதார்த்தமான உண்மைங்க அண்ணா... சொல்லவேண்டியதை கணக்கா சொல்லி முடிச்சு இருக்கீங்க .... :) ... வாழ்த்துக்கள் அண்ணா...
VELU.G said…
வாழ்த்துக்கள் தேவா

அருமையான கருத்துப்பதிவு
வலைச்சர வாழ்த்துக்கள்...

நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால் அவர் செய்யும் எதுவுமே பிடிப்பதில்லை...இது போன்ற முன்முடிவுகளால் இழப்பு நமக்குத்தான்...நல்ல பதிவு...
பயனுள்ள பதிவு. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
SASIKUMAR said…
//ஒவ்வொரு நாளும் பூங்கொத்துகளோடு காத்திருக்கிறது வாழ்க்கை..பாவம் மனிதன் நல்ல மனோ நிலையில் இருந்தால் அதை வாங்கிக் கொண்டு...சிரிக்கிறான். வேறு ஏதோ தாக்கத்தில் இருந்தால் திரும்பி கூட பார்க்காமால் சென்று விடுகிறான்......ஆனால் வாழ்க்கையோ நித்தம் காத்திருக்கிறது பூங்கொத்துக்களுடன்.//
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள். பூங்கொத்துக்களுடன்........
hi dheva i requested many times to keep your blog link in status. thanks--shysian
SASIKUMAR said…
வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்.பூங்கொத்துக்களுடன்......
hi dheva i requested you to keep your blog link
in status.many times many time many times.
தம்ம பதம் 65 சூப்பர்!
''கருத்துக்களைத்தாண்டிய மனம் கவனிக்கிறது புரிந்து கொள்கிறது "
சொல்வதை போல அவ்வளவு எளிதாயில்லை நிகழ் ...
தொலைந்ததை தேடாத பொது ஒரு வேளை கண்டுணரக்கூடும் நான் !
//எல்லா விஷயத்தையும் விருப்பு வெறுப்பின்றி பாருங்கள் அதன் அழகையும் அதில் உள்ள உயிர்ப்புத்தன்மையையும் காண்பீர்கள்....!//

ரொம்ப நல்ல பதிவு தேவா.. அழகா ஒரு கதையோட விளக்கிய விதம் சூப்பர்.. :-))

வலைச்சரத்தில் வலம் வர...
வாழ்த்துக்கள்.. :-)))
கலக்குங்க..!
dheva said…
பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய அனைவருக்கும் நன்றிகள்....!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...