வாழ்க்கை எப்போதும் மிகப்பெரிய போர்க்களமாய் விரிந்து கிடக்கிறது. காதலென்னும் வலுவான உணர்வும் எப்போதும் நெஞ்சின் ஓரத்தில் ஒரு எரிமலையாய் உள்ளுக்குள் உடன் குமுறிக் கொண்டுமிருக்கிறது. தினவெடுத்த தோள்களும், உன்மத்தம் கொண்ட புத்தியும் எப்போதும் எதிரிகளாய் சூழ்ந்து நிற்கும் சூழல்களை ஒரு கணமேனும் தாமதிக்காமல் வெட்டி விடும் வேகத்தில் வெறியேறிப் போய் கிடக்கிறது. ஏதேனும் ஒரு எதிர் கேள்வியை வாழ்க்கை கேட்டு முடிக்கும் முன்னால் அந்தக் கேள்வியைப் பெயர்த்தெடுத்து நொறுக்கி இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விட்டு மீண்டும் மனப்புரவியிலேறி நான் விரைந்து கொண்டிருக்கிறேன். நான் தோற்றுப் போவேன் என்று மிகையானவர்கள் தீர்மானித்து முடித்து என் உடலை இறந்து போன சடமாய் எண்ணி புதைப்பதா? எரிப்பதா என்று அவர்கள் பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கும் போதே நான் விசுவரூபமெடுத்து எழுகிறேன். ஒரு இடத்தில் விழுந்து வேறொரு இடத்தில் எழுந்து நிற்கும் கோழையல்ல நான் என்பதை அக்கணமே அறுதியிட்டு நான் எங்கே விழுந்தேனோ அங்கேயே பிரமாண்டமாய் எழுந்து நிற்கிறேன்.... வா..... வாழ்க்கையே ...வா...! வரிசையாக சூழல்களை என்னிடம் அ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....