கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை ஆள்கிறது. அதனால் மீண்டும் கனவுகளை நிரப்பிக் கொண்டு எல்லைகளற்ற பெருவெளியில் சிறகுகளை விரிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்திருந்த நேரத்தில் பதிவுலகம் என்ற ஒன்று இருந்தது. நிறைய பதிவர்கள் தினம், தினம் எழுதிக் கொண்டிருந்தனர். தமிழில் தட்டச்சு செய்து நமது உணர்வுகளைப் பதியலாம் என்று ஒருவித உற்சாகத்தில் நிறைய, நிறைய, நிறைய பேர்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. படிக்க பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் மதிய உணவு கிடைக்குமே என்று பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல இலக்கிய தாகத்தில் எழுத வந்த ஆள் இல்லை நான்...வாழ்க்கையின் ஓட்டத்தில் கிடைத்த அலாதியான நினைவுகளை எழுதிப் பார்க்க வந்தவன். எல்லோரையும் போல சமூகக் கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் புரிதலின்மைக்கு காரணம் ஆன்மவிழிப்பு இல்லாததுதான் என்பதை உறுதியாக நம்புவன். ஆன்மீகம் என்பது ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....