கடைசியில் அவள் இறந்து போய்விட்டாள். எப்படியாவது பிழைத்து எழுந்து வந்துவிடமாட்டாளா என்ற என்னைப் போன்றவர்களின் ஏக்கம் இன்று அதிகாலையில் தோற்றுப் போய்விட்டது. அவளை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களை தூக்கிலேற்றி கொன்று விடலாம், தெருவில் நிற்கவைத்து கல்லால் அடித்தே கொல்லலம், உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாய் பொதுவில் நிற்க வைத்து அறுத்து எரியலாம், கூட்டத்துக்குள் நிற்கவைத்து அடித்து கொல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் செய்வார்கள் செய்யவேண்டும்...!!!!!! ஆனால்... தாமினி போன்ற எங்கள் பெண் பிள்ளைகளை எங்கள் தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்து அம்மா, தாயே பெண்ணே என்று கொஞ்சிய எங்களின் ஈரக்குலைகளில் தலை தூக்கி இருக்கும் பயத்தை எப்படி போக்கும் இந்த தேசம்...? பெண்களை எப்போதும் செக்ஸ் அப்பீலாய் பார்க்கும் காட்டுமிராண்டி மனிதர்களை மொத்தமாய் அழித்தொழுக்க ஏதேனும் யுத்தி உள்ளதா...அதிகாரவர்க்கமே...? பகுத்தறிவுள்ள என் சமூகமே...???? 23 வயதில் பொசுக்கப்பட்ட என் குழந்தையே...! எத்தனை வேதனையோடு நீ மரித்துப் போயிருப்பாய் அம்மா...? உன்னை போன்ற பிள்ளைகள் இந்த தேசம் முழுதும் வயது வித்தியாசம் ப...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....