Skip to main content

Posts

Showing posts with the label புத்தகம்

இப்படிக்கு... வாசகன்...!

வாசிக்கும் பழக்கம் இல்லாமல் போயிருந்தால் வாழ்க்கையை நான் புரிந்து கொண்ட அளவிற்கு எனக்கு வாழத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகம்தான். பூந்தளிர், அம்புலிமாமா, கோகுலத்தில் தொற்றிக் கொண்ட பழக்கம் ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ் என்று அடித்துப் பிடித்து மேலேறி குமுதம், விகடன், குங்குமம், கல்கண்டு, கல்கி, இதயம் பேசுகிறது, சாவி, ராணி, தேவி என்று பயணித்து சரக்கென்று க்ரைம் நாவல், பாக்கெட் நாவல் என்று பயணித்து, விவேக் ரூபலாவிடமும், பரத் சுசியிடமும், நரேன் வைஜயந்தியிடமும் சுற்றிக் கொண்டிருந்தது. கதைகள் படிக்க ஆரம்பித்த போது பிடி சாமியின் திகில் கதைகளை வாசிப்பதென்பது ஒரு மிகப்பெரிய மிரட்டல் அனுபவமாயிருந்தது எனக்கு. வாரமலரில் அப்போது ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. அப்போது என்று நான் குறிப்பிட்டுச் செல்வது 1987 அல்லது 1988 ஆயிருக்கும் என்று நினைக்கிறேன். தினமலர் செய்தித்தாளை என் எதிர் வீட்டில்தான் வாங்குவார்கள். ஞாயிற்றுக் கிழமை அன்று மட்டும் அவர்கள் வீட்டில் என்னைப் போன்ற அரை டிரவுசர்கள் விடுமுறை நாளின் எல்லா அவரச(!!!!!) வேலைகளையும் தெருவிலேயே விட்டு விட்டு போய் வாரமலரைப் படிக்க க்யூவில் நிற...