எங்கிருந்து தொடங்கியது இந்த இராட்சச வாழ்வின் முதல் முடிச்சு? கனவுகளை செரித்து செரித்து நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நிகழ்காலம் ஒரு மலைப்பாம்பைப் போல எங்கேதான் ஊர்ந்து செல்கிறது? அடையாளம் தொலைத்துக் கொள்ளும் முயற்சிகளெல்லாம் கிணற்றிலேறி வழுக்கி விழும் தவளையைப் போல் மீண்டும் மீண்டும் அதல பாதாளத்திற்குள் செல்வதும் மீண்டும் மனம் அதை மீட்டெடுத்து மேலேற்றுவதுமாகவே முடிந்து போகுமோ இந்த வாழ்க்கை...? அடையாளமற்றுப் போகவேண்டும். இந்த பெயரை நான் தொலைக்க வேண்டும். இன்னார் இன்னாரென்ற உறவுமுறைகளையும் பந்தச் செருக்குகளையும் எப்போது எரிக்கப் போகிறேன் நான்? படாரென்று வீட்டின் கதவை அறைந்து மூடிவிட்டு உள் சென்று தாளிட்டுக் கொள்வதைப் போல அடிக்கடி சராசரி வாழ்க்கையின் கதவுகளை நான் அடித்து மூடிவிடுகிறேன்.. இந்த வாழ்க்கையின் பெரும் அபத்தம்.. அடையாளம். யாரும் எதற்காகவும் வேண்டாம். சரி என்றோ தவறென்றோ சொல்லிக் கொண்டிருக்க ஒரு மனிதரும் தேவையில்லை. வாசலில் நிற்கும் மரத்தினைப் போல வெறுமனே நின்று கொண்டிருக்க வேண்டும். இலைகளை உதிர்த்து மொட்டையாய் நின்றாலும், பூத்துச் சிரித்து குலுங்கினாலும...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....