
அன்பான வாசகர்களே... நான் துபாயில் இருந்து பதிவிடுவது அனைவருக்குமே தெரியும். தாயகத்தை விட்டு பாலை மண்ணிற்கு பொருளீட்டும் பொருட்டு வந்த எமக்கு இந்த தமிழ் இணையங்களும், வலைப்பூக்களும் தான் ஆதரவு.
ஒரு சாதாரண பதிவரான நான் இன்று காலை பதிவிட்ட சாதியே உன்னை வெறுக்கிறேன் என்ற கட்டுரை தமிழிசில் இருந்து தூக்கப்பட்டு விட்டது....காரணம் அறிய வேண்டி... தமிழிசை துலாவியபோது...அவர்கள் கொடுத்துள்ள காரணங்கள் அறிந்த நான் பின் வரும் கேள்வியோடு இருக்கிறேன்.....யாரவது
1) உங்களின் வலைப்பூ பிடிக்காதவர்கள் வேண்டுமென்றே உங்களின் இடுகைக்கு பல்வேறு திருட்டுத்தனமாக நிறைய ஐ.டிகள் மூலம் வாக்களித்தால் உங்களின் இடுகை தமிழிசை விட்டுத் தூக்கப்படும்.
என்னுடைய கேள்வி இது தான் என்னுடைய வாசகர்கள் 32 பேர் வாக்களித்தும் யாரோ விசமத்தனம் செய்ததற்காக இடுகையை தூக்கியது எந்த விதத்தில் நியாயம்?
இது என்னுடைய குரல் மட்டுமல்ல....இதற்கு முன் பாதிக்கப்பட்டவர்கள் சார்பகவு இந்த கோரிக்கையை தமிழிசுக்கு வைக்கிறேன். இதற்கான தனிப்பட்ட மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன்.
இதனால் நல்ல பதிவுகள் மக்களைச் சென்றடையாமல் யாரோ சிலர் இந்த வலைத்தளத்தை கண்ட்ரோல் செய்யும் அபாயமும் இருப்பதால் இந்த இடுகையை அவசரமாக இடுகிறேன்....!
தேவா. S
Comments