கடந்த தேடலுக்கு வந்த பின்னூட்டங்களை அப்படியே விட்டு விட்டு போவதற்கு பொறுப்புணர்ச்சி கொன்ட என் ஆன்மா சம்மதிக்கவில்லை. இரவு முழுதும் நடந்த விவாதத்தில் ஆன்மாவின் அந்த உள்ளுணர்ச்சியின் வழிகாட்டுதலுக்கு நான் பணிந்ததின் விளைவு இப்பதிவு....
நமது செயல்களின் விளைவு ஒரு மரணத்தோடு நின்று விடுமா? இல்லை மரணித்தபின்னும் தொடருமா....எதிர்விளைவு எப்படியிருக்கும் என்ற இலக்கு நோக்கிய பயணத்தில் பல தரப்பட்ட கருத்துக்களை வைத்த...எமது தோழர்கள் அனைவரும் இந்த வலை உலகத்தை ஒரு மிகச் சிறந்த கருத்துக் களமாக்க வேண்டும் என்ற ஒரு பேரவா கொண்டவர்களாக பார்க்க முடிகிறது. அருமையான கருத்துக்கள், விவாதங்கள்... நெஞ்சை உருக்கும் காதல் கவிதைகள், உலகை உலுக்கும் முற்போக்கு சிந்தனைகள்....விழிப்புணர்வூட்டும் ஆன்மீகத்தொடர்கள், சாட்டையடி கொடுக்கும் அரசியல் விமர்சனங்கள் என்று பயணிக்க வேண்டிய களம்....அரசியல்வாதிகளின் அறிக்கைப் போராக மாறக்கூடிய அபாயம் இருக்கிறது....! நல்ல படைப்பாளிகள் சிந்தனைவாதிகள் எல்லாம் கூடி...இந்த போக்கை மாற்றும் துரித நடவடிக்கையில் இறங்கி...அறிவுசார் களமாக மாற்ற வேண்டும்.
கூட்டணி சேரா நண்பர்கள் மற்றும் தம்பிகளின் நல்ல நல்ல படைப்புகள் மேலே வராமல் ஓரங்கட்டப்படுவதை...படைப்பாளிகளும், நல்ல எழுத்தை காதலிப்பவர்களும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க கூடாது. ஒரு கட்டுரையோ..கவிதையோ அல்லது கதையோ படித்து முடிக்கும் போது ஒரு சுகமான அனுபவமாக, சிந்தனையை தூண்டும் நெருப்பு பொறியாக நல்ல நினைவுகளை வாசகனுக்கு கொடுக்க வேண்டும். அப்படியில்லாத குப்பைகளை கொளுத்தி எறிவதற்கு நாம் கணமும் தாமதிக்க கூடாது.
சரி....கடந்த பதிப்பின் பின்னூட்டங்களைப் பார்க்கலாம்.....
"நமது செயல்களின் விளைவு ஒரு மரணத்தோடு நின்று விடுமா? இல்லை மரணித்தபின்னும் தொடருமா...."
நண்பர் அகல்விளக்கு ராஜா இது ஒரு தெளிவான தேடல்தான், உங்கள் தேடலிலேயே பதில் கிடைக்கும் என்ற ரீதியில் கூறியிருந்தார். நண்பர் பாலாசி...." மெளனம் மிகப் பெரிய வலுவான மொழி தேவா..." இதன் மூலம்தான் விடை தேட வேண்டும் என்று கவிதைத்தனமாக கூறியது நிச்சயமாய் என்னை ஈர்க்கவே செய்தது.
முரளிகுமார் பத்மநாபன், தம்பி சவுந்தர், தம்பி விஜய், நண்பர் கார்திக்(LK), நண்பர் நிகழ்காலத்தில், நண்பர் மகராஜன் இவர்கள் எல்லோருக்குள்ளும் என்னைப்போலவே தேடல் இருந்தாலும் சரியான பதிலை எதிர் நோக்கி காத்திருப்பவர்களாகத்தான் எனக்குப்பட்டது அல்லது அவர்களின் பதில் என்னை திசை திருப்பி விடக்கூடாது என்ற நல்ல எண்ணமும் இருப்பதாகப்பட்டது.
தம்பி ஜீவன் பென்னி மற்றும் நண்பர் மணி இருவரின் பதிலும் தேடல் என்பது நீங்கள் உங்களுக்குள்ளேயே தேடித் தேடி அனுபவத்திம் மூலம் எட்ட வேண்டிய ஒரு நிலை என்று கூறியதிலும் உண்மை இருந்தது. நண்பர் மணி அடுத்தவரை கேட்பதால் தேடல் திசை திரும்பக்கூடும் என்று சொல்லியது ஒரு அர்த்தம் பொதிந்த பதிலாய் இருப்பதாக தொலைபேசியில் உரையாடிய நண்பர்கள் கூறினார்கள்.
தமிழ் அமுதனின் இணையதளத்தில் அவர் கூறியிருந்த மரணத்திற்கு பின் ரசிக்கும் படியாய் இருந்த அதே நேரத்தில் இன்னும் விரிவாக இருக்கலோமோ என்று தோன்றியது, எழுத்தில் இருக்கும் உண்மையை இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன் என்றும் எண்ணத் தூண்டியது. சுவாரஸ்யமான ஒரு பதிவு அது. பால் வீதியில் நீந்தினேன்.. என்று அவர் எழுதியிருப்பது அறிவின் முதிர்ச்சி.! அதே போல சகோதரி மலிக்கா நம்பிக்கை வேண்டும் என்று வலியுறுத்தினார்... நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கு என்று நம்பி நடந்தால் சந்தோசமாய் வாழ முடியும் என்றும் கூறினார்....!
தோழி ஜெயந்தி மரணித்த பின் பாவம் செய்தவனுக்கும், புண்ணியம் செய்தவனுக்கும் ஒன்றும் இல்லை, வாழும் போதே அது அவர்களை பாதிக்கும் என்று கூறியதிலும் ஓரளவிற்கு உண்மை இருக்கிறது, இருந்தாலும் ஒட்டு மொத்த வாழ்வும் ஏதோ ஒரு அர்த்தம் இல்லாமல் இருக்கவும் வாய்பு இல்லை என்பது எனது எண்ணம்!
தோழர் வீராவும், கும்மியும் இந்த பதிவின் பின்னூட்டத்திற்கு சுவாரஸ்யம் சேர்த்தவர்கள் என்று சொன்னால் மிகையாகாது. வீராவின் தமிழறிவும், பகுத்தறிவு சிந்தனையும், முற்போக்கு கருத்துக்களும், மிகவும் அருமையானவை. சமூகத்துக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் கண்டு அவர் கொந்தளிக்கும் போது எல்லாம் அவரது பகுத்தறிவு சிந்தனை மிளிறும். தீண்டாமையை, பெண்ணடிமைத்தனத்தை, மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் அதே நேரத்தில் அகம் நோக்கிய பயணம் இன்னும் அவர் மேற்கொள்ளவில்லையோ என்ற ஐயம் ஏற்படுகிறது. சிந்தனைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில்...ஏன் சிந்திக்கிறோம்? எங்கு ஓடிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையையும் சேர்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
அடுத்தாக நண்பர் கும்மி...! எனது தனிப்பட்ட பாராட்டுதலை இவருக்கு நான் தெரிவித்தே ஆகவேண்டும். என்னதான் வேறு வேறு கொள்கைகள் இருந்தாலும், கொஞ்சம் கூட கோபமில்லாமல் நாகரீகமான வார்த்தை உபோயகம் செய்து எனக்கு பின்னூட்டம் அளித்தபடியே இருந்தார். மிகத்தெளிவாக எதிர் திசையில் அவரும் தேடலில்தான் இருக்குக்கிறார் ஆனால் உணர்ச்சிவசப்படாமல் தெளிவாய் இருக்கிறார். நியூட்டனின் விதியை உடைத்து விட்டால் மேற்கொண்டு நான் நகர முடியாது என்று அதிலேயே மும்முரமாய் இருந்தவர்...உலகம் அழிந்தால் என்ன எஞ்சும் என்ற என்னுடைய கேள்வியை எதிர்பார்த்திருக்க நியாயமில்லை. தெளிவாய் கடையிசில் வெறுமையான ஒரு சூன்யம்தான் இருக்கும் என்று சொன்னார். அந்த வெற்றிடத்தில் அழிந்து போன எல்லாம் மறைந்து இருக்குமா? இல்லை வெற்றிடம் வெறும் வெற்றிடமானால் இயங்கிக் கொண்டிருக்கும் சக்தியும், சிதைந்து போன திடப் பொருட்களும் எங்கு போகும்? என்ற கேள்விக்கு சத்தியமான பதிலாய்..மெளனமாய் நின்று பதில் சொல்லியிருப்பதாக எனக்குபடுகிறது. ஆமாம் அவர் அதற்கு பின் பதிலளிக்கவில்லை.
எல்லாம் ஒடுங்கி வெற்றிடம் ஆனால்....ஒடுங்கிய வெற்றிடம் மீண்டும் எல்லாம் விரிந்து பல்கிப் பெருகும்தானே....? அதற்கான சாத்தியக்கூறுகள் உண்டுதானே? இது கும்மிக்கு சொல்லும் பதிலோ கேள்வியோ அல்ல....எல்லோரும் தனக்குள் கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வி.....!
இறுதியாக.........
நண்பர் வேலு கூறியது.....
//அன்பு நன்பரே, நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வாழ்க்கை வேடிக்கை பார்க்க மட்டுமே
நிகழ்வதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் போதே மட்டுமே குழப்பம் வருகிறது.
பின்னர் மேலே நீங்கள் சொன்னது போல் நிறைய பேர் தோன்றி நிறைய விஷயங்களை சொல்லி மேலும் குழப்பி எதற்கு இத்தனை பிரச்சனை
" இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள் "
நமக்கு மேலுள்ள சக்தி கடவுளோ, இயற்கையோ ஏதோவொன்று அது மனித சக்தி புரிந்து கொள்ளும் நிலையில் வைக்கப்படவில்லை
அப்படி மனிதனால் புரிந்து கொள்ளமுடியுமெனில் அது கடவுளோ, இயற்கையோ அல்ல அதற்கு ஒரு தியரி வைத்து இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி என்று நம் எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம் //
இருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறும் வேலு.....ஞானத்தின் உச்சத்தில் இருந்து கூறிய ஒரு சொற்றொடராகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. மனித அறிவு மட்டுப்பட்டது அதனால் உணரத்தான் முடியுமே அன்றி .....புரிந்து கொள்ள முடியாது என்று அவர் சொல்லியிருப்பது சத்திய வார்த்தை.
மனிதன் அதைப் புரிந்து கொள்ளும் பட்சத்தில் கடவுளுக்கும், இயற்கைக்கும் ஒரு தியரி வைத்து...இது கடவுள் தியரி, இது இயற்கை தியரி ..என்று ஒரு எல்லைக்குள் கொண்டு வந்து விடுவோம்....!
ஆம் வேலு....உண்மைதான்....உங்களின் வரிகள் மனம் தாண்டி வார்த்தைகள் தாண்டி ஆன்மாவின் மொழியாய் உணருகிறேன்...விளக்க முடியாத...பிரமாண்டம் சார்ந்த எல்லாம்....கடவுள் என்று நீங்களும் நானும் கற்பிதம் கொள்ளும் அதே நேரத்தில்.....சமுதாயம் கடவுள் என்று வேறு எதையோ கற்பித்து வைத்திருப்பதால் தானோ என்னவோ.... நண்பர் வீராவும், கும்மியும் மற்ற சகோதர்களும் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு வந்து விட்டார்களோ.....! இந்த உலகம் கற்பித்து இருக்கும் கடவுளை நாங்களும் மறுக்கிறோம்......ஆனால் நம்மால் மட்டுப்படுத்தி அறிய முடியா ஒரு விசயத்தை பார்த்து விக்கித்துப் போயிருக்கிறோம்......அந்த சக்தி....கும்மி சொன்ன எல்லவற்றையும் தன்னுளடக்கிய அந்த வெற்றிடம்....அதற்கு வேறு புது பெயர் சூட்டிக் கொள்வோம் ஏனென்றால் கடவுள் என்ற வார்த்தை..எதை எதையோ சுட்டிக்காட்டுவதால் நீங்கள் குழம்பி திசை திரும்பி விடுவீர்கள்.
வேலு சொன்னதைப் போல...
" இருப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளுவோம்.........! வளமான வாழ்க்கை ஓட்டத்தின் அங்கமாவோம்....! "
மறுபடியும் சொல்றேங்க.....தேடலே வாழ்க்கையாயிடுச்சு.....வாழ்க்கையே தேடலாயிடுச்சு....!
தேவா. S

Comments
இந்த சிறியவனின் பின்னூட்டத்திற்கு மதிப்பு கொடுத்து விளக்கமும் கொடுத்தமைக்கு என் முதல் நன்றி. போராட்டம் தான் வாழ்க்கையா? இல்லை வாழ்க்கையே போராட்டமா என்று தீர்மானிக்க முடியாமல் ஓடிக்கொண்டிருக்கிறேன். நான் அறிந்தவை ஒரு சதவிகிதம் கூட இருக்காது. உங்களை போன்ற நல்ல பல எழுத்தாளர்களின் கட்டுரைகள்,கவிதைகள்,விமர்சனங்கள் போன்றவைகளை படிக்கும் போது அதிலுள்ள ஆரோக்கியமான செய்திகளை எடுத்து என்னை மேன்மை படுத்துக்கொள்வேன் என்று நம்புகிறேன்.உங்களை போன்ற பல இளம் எழுத்தாளர்கள் உருவாக உருவாக்க வேண்டும்.உங்களின் படைப்புகளுக்கும் உங்கள் எழுதுக்கும் என்றும் நான் உந்து சக்தியாகவே இருக்க விரும்புகிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.வாழ்த்துகளுடன் உங்கள் படைப்புகளை வரவேற்கிறேன்...நன்றி
Sorry for Thangilish.
நம்ம தம்பி...சிவா....போன்ல கூப்பிட்டு சொன்ன கமெண்ட்(வசவு).... அப்படியே உங்களுக்கு....ஹா ஹா ஹா!
Anna iru Tuition poiyavathu unnoda pathiva purunchuka muyarchikkiren avvvvvvvvvvvvv.....
accept as it is...
நல்ல மனதை பக்குவமடையச் செய்யக்கூடிய கருத்து
தொடருங்கள் நண்பரே :))
நான் சொன்ன இந்த கருத்தை எத்தனையோ நம் முன்னோர்கள் சொன்னது தான். நாம் சும்மா எதையும் படித்து விட்டு தாண்டி வந்து விடுகிறோம். எந்த கருத்திலும் உள்ள உண்மைகளை நம் மனதளவில் எடுத்து உட்சென்று ஆய்வதில்லை.
உங்களுக்கு ஒரு கதை தெரியுமா(எதிலோ படித்தது)
ஒரு துறவி ஒருவர் ஒரு ஊருக்கு வருகிறார். ஆசிரமம் அமைத்து தங்குகிறார். சாதாரணமாகவே துறவிக்கு மதிப்புக்கொடுக்கும் அக்கிராமத்தில் அவரை எல்லோரும் சென்று வணங்கி ஆசிர்வாதம் பெற்று வருகின்றனர். அவரிடம் அறிவுரை ஒன்று கூற சொல்கின்றனர். அவரும் எல்லோரும் சந்தோஷமாக இருங்கள் என்று ஆசிர்வதிக்கிறார். பின் கொஞ்ச நாட்களில் யார் சென்று அறிவுரை கேட்டாலும் இதையே திரும்பத் திரும்ப சொல்கிறார். மக்கள் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் ஆசிரமம் செல்வதையே விட்டு விடுகின்றனர். அதுமட்டுமில்லாமல் சில இளவட்டங்கள் அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது என்று புகார் கூறி பஞ்சாயத்துக்கு இழுக்கின்றனர்.
அவரும் பஞ்சாயத்துக்கு வருகிறார். அந்த ஊர் பெரியவர்கள் அவரின் மீது இளவல்களின் புகாரைச் சொல்கின்றனர்.
அவர் சொல்கிறார் அன்பாக, என்னிடம் நிறைய தத்துவங்கள் இருக்கின்றன. எல்லாமே உங்களுக்கு மிகவும் உபயோகமானவைதான். ஆனால் நான் முதலில் சொன்ன தத்துவத்தையே யாரும் கடைபிடிக்கவில்லை இங்கே யாருமே சந்தோஷமாக இல்லையே, எனவே நான் முதலில் சொன்ன விஷயத்தை பின்பற்றுங்கள் பின்னர் நான் அடுத்த விஷயத்தை சொல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
நாமெல்லாம் இந்த நிலையில் தானே இருக்கிறோம் நண்பரே.....
நான் சொன்ன இந்த கருத்தையே (நம் முன்னோர்கள் சொன்னதுதான்) நாம் எவ்வளவு நாளைக்கு தெரிந்து அதை அனுபவத்தில் புரிந்து மனதில் ஆய்ந்து பின் அதையே நிறுத்தி வைத்து அதை பயன்படுத்தப்போகிறோம்??????
நல்லது தான்
ஆனால் எல்லாரும் பின்
பற்றமுடியுமா நண்பரே?
அப்படி இல்லை மகாராஜன்...முரண்பட்டுப் போகாமல் ஒத்து வாழ்வோம் என்பதுதான் சாரமே....! எல்லோராலும் முடியாது ஏனென்றால் அது அவர்கள் மனதின் பக்குவத்தையும், அனுபவத்தையும் பொறுத்த விசயம்.
நன்றி மகாராஜன்..! ஆமா நீங்க துபாய்லயா இருக்கீங்க....?
திடீரென்று ஆணிகள் அதிகமாகிவிட்டன (ஆல் இன் ஆல் தளத்திலும், வால்பையன் தளத்திலும் கூட கும்மி அடிக்க இயலாத அளவிற்கு :-) )
முடிந்தால் நாளை மாலை வருகின்றேன். தொடர்வோம்.
@வேலு சார்...
கலக்கல் பின்னூட்டம்..
தேடல் தெளிவா குழப்பமா !
தேடல் தெளிவா குழப்பமா ! //
ரிப்பீட்ட்ட்ட்
ஒருவன் பணக்காரனாய் பிறந்து ஆடம்பரவாழ்க்கை வாழ்கிறான். மற்றொருவன் தலைமுறைகள் தாண்டியும் கஸ்டங்களை அனுபவிக்கிறான். எந்த நிகழ்வின் விளைவால் இப்படி எல்லாம் நிகழ்கிறது. வெறுமனே ஏதோ நடக்கிறது என்று அறிவினை உள் நோக்கி மடக்கிக் கொண்டு என்னை புத்திசாலி என்று காண்பிப்பதில் என்ன
கிடைத்துவிடபோகிறது.
ஒரு வகுப்பில் ஏதோ ஒரு மாணவன் மற்றுமே மிகத்தெளிவாக மதிப்பெண்கள் எடுத்து முன் வருகிறான். சிலர் என்னதான் முயன்றாலும் அதே நிலையில்தான் நீடிக்கிறார்கள்....திறமை இருந்தால் மேலே வரலாம் என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இது...கடுமையான திறமையிருந்தும் மேலே வர முடியாமல் தவிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் தெரியும்.....?
பணக்கார வீட்டில் பிறக்கும் குழந்தையும்.....ஏழை வீட்டில் பிறக்கும் குழந்தையும் எந்த வித காரணமும் இன்றி...சுகம் அல்லது அனுபவிப்பது....ஒரு காரணமும் இல்லாத சாதாரண விசயம் என்று சொல்வதன் மூலமும் மறுத்து பேசுவதன் மூலமும் என்னை ஒரு அறிவு ஜீவியாக காண்பித்துக் கொள்ளலாம்...அப்படி காண்பித்துக் கொள்வதற்காகவே.....மனிதர்கள் வேகமாக மறுக்கிறார்கள்.
எத்தனையோ கண்டு பிடிப்புகளை நிகழ்த்திய ஐன்ஸ்டீன் ....கடைசில் தனது நேரத்தை எல்லாம் கண்டு பிடிப்புகளிலேயே செலவழித்து வீணடித்து விட்டாதாக கூறி வருந்தியிருக்கிறார்......
தேடல் தெளிவுக்குத்தான் இட்டுச் செல்லும் ஹேமா...! மறுத்தலும்...விதண்டாவாதமும் மனிதனை அறியவிடாமல் தடுத்து.....சந்தேக் இருட்டுக்குள் தள்ளி நான் தான் புத்திசாலி என்ற அகங்கார நரகத்தில் தள்ளி......இறுதிவரை கேள்விகளோடே நிறுத்திவைக்கும்......!
கும்மி போன்ற நண்பர்கள் எனக்கு பின்னூட்டமிட்டு சபையின் முன் வாதத்திறமை கொண்டு ஜொலிப்பதாக காட்டிக் கொள்ளலாம்....! எல்லா கருத்தினையும் சொல்லும் அவர்களுக்கும் மனது இருக்கிறது.....அந்த மனது என்பது என்ன என்ற குறைந்த பட்ச சிந்தனையாவது ...அவர்களை கரை சேர்க்கலாம்.
இந்த இடுகைக்கு வேலு கொடுத்துள்ள பின்னூட்டமும் சவுக்கடி.....! நாம் இன்னும் முதல் நிலையையே ஒழுங்காக செய்ய வில்லை...தோழி...(அந்த பின்னூட்டதை மீண்டும் படித்துப் பாருங்கள்)
மிக்க நன்றிகள் தோழி...!
எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டமிடுபவர்கள் ஏதோ ஒரு நியதிக்கு உட்பட்டு அந்த இடுகையை பாரட்டியே சொல்லி விட்டு போவதில் எந்த வித சிக்கலும் இல்லை...தவறும் இல்லை...! ஒரு இயல்பான நிலைதான்.
ஆனால் பின்னூட்டங்களின் மூலம் கருத்துக்கள் பகிரப்பட வேண்டும். நான் பதிவு எழுதிவிட்டேன்....என்னுடை கருத்தினை பொதுவில் வைத்திருக்கிறேன். அதுவே இறுதி நான் சொல்வதே...இறுதி உண்மை என்று அர்த்தம் இல்லை...... இது என்னுடைய பகிர்வு...ஆனல் நல்ல பின்னூட்டங்கள் பதிவரை கிழிக்கும் வகையில், சந்தேகங்களை தைரியமாக பதிவரை நோக்கி முன்னெடுத்து சென்று உண்மையின் உச்சத்துக்கு அந்த விவாதம் செல்ல வேண்டும்.
என்னுடைய பதிவுகளின் பின்னூட்டமிடுபவர்கள் எல்லாம்....மிகச்சிறந்த சிந்தனைவாதிகள்...கேள்விகள் கேட்டு மேலும் ஒரு நகர்தலை உண்டாக்கும் அனைவரும் சமுதாய மற்றும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள். நானும் இப்படிப்பட்ட தளங்களுக்கு சென்று என்னுடைய கருத்தினை பதிய தவறுவதில்லை....!
இன்னும் சொல்லப்போனால் ஒரு பதிவினை விட.... கருத்து செறிந்த பின்னூட்டம்தான் முக்கியம் வாய்ந்தகு...ஜெயந்தி...!