
வல்லூறுகள்...வகுத்தளிக்க....
எமக்கு ஒரு வாழ்க்கையா?
குள்ள நரிகள் தலைமை தாங்க....
வேங்கைகள் பணிந்து செல்வதா...
பிழைத்துப் போன வரலாற்றுக்கு
எம் தமிழனம் பழியாவதா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!
எமக்கான மண்ணில்...
யாரடா... நீ ஆட்சி செய்ய....?
எம் மக்கள் கண் பார்க்க...
உம் பார்வை எமக்கெதற்கு.....
கற்பு நெறி கொண்ட...எம் பெண்டிர்க்கு
கறுப்பு ஆடுகள்...காவலெதற்கு...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!
மார்பகம் உறிஞ்சி...உறிஞ்சி....
மரித்த தாயென்றரியாது..
தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்...
மரத்துப் போய்விடும்...அல்லது
நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்?
வெற்று மோகத்திலில்லாது.
தமிழ் ஈழ தாகத்தில்....இனி...
தழைக்கும் என் சந்ததி...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!
போர் முடிந்த்து போனதனால்...
எம் வடு மறைந்து போகுமா....
கல்லறையான எமது....உறவுகள்..
கண் முன் இனி தோன்றுமா...?
நீவீர் வென்று விட்டோம் ..
என்று சொன்னால் - அது
வெற்றியென்றாகுமா?
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!
வரலாற்றின்..பக்கங்களில்...
திருத்தங்கள் செய்து வை...!
எதிரியின் விலா எழும்புகளை..
தேடி எடுத்து..வென்றது தமிழனென்று...
பொன்னெழுத்தில் பொறித்துவை....
தற்போதைய..உன் செயலை....
நிரந்தரமாய்....மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!
தேவா. S
Comments
எம் வடு மறைந்து போகுமா....
கல்லறையான எமது....உறவுகள்..
கண் முன் இனி தோன்றுமா..//
அந்தக்கொடுமை என் கண்முன்னே விரிகிறது...
இந்த பதிவுக்கேற்ற படம்... அதைப்பார்க்கையிலேயே கண்களில் நீர் கோர்க்கிறது...
மரித்த தாயென்றரியாது..
தவித்த எம் குழந்தைகள்...எல்லாம்...
மரத்துப் போய்விடும்...அல்லது
நீதி மரித்துப் போய்விடும் என்றா நினைத்தாய்?
வெற்று மோகத்திலில்லாது.
தமிழ் ஈழ தாகத்தில்....இனி...
தழைக்கும் என் சந்ததி...!
உன்னை மறுக்கிறோம்...காலமே...
எம் எதிரிகள்..கருவறுக்கிறோம்...காலமே!//
கொடுமைகள்தானுங்க.. சொல்லி மாளாது..... மனதுக்குள் புழுங்குவதைத்தவிர வேறொன்றுமில்லை....