
சப்தம்
விரிப்பில் அவ்வப்போது
விழுந்து கொண்டிருந்த
நாணயங்களின் சப்தங்களில்
ஒளிந்திருந்தது..தெருவோர
பிச்சைக்காரனின் வாழ்க்கை..!
***
மாயை
அடிக்கடி தலைவாரும்
எதிர் வீட்டு இளைஞன்...
அடிக்கடி தாவணி மாற்றும்
பக்கத்து வீட்டுப் பெண்
ஒளிந்து கொண்டு....
பல்லிளிக்கும் பதின்மம்....!
***
கோபம்
சாவு வீட்டில் வரும்
ஞானம்
சண்டைகளின் போது
எங்கே போய் தொலைகிறது?
***
யுத்தி
ஒரு டீக்கடை பெஞ்சும்
தினத்தந்தி பேப்பரும்....
துக்குணூண்டு அரசியலும்
டீக்கடை கல்லாவில்
சில்லறையாய்!
***
வேசம்
சேரிகளுக்குள்
வெள்ளைச் சட்டைகளின்
கும்பிடுகளும் பல்லிளிப்புகளும்
சொல்லாமல் சொல்லின
நெருங்கி வரும் தேர்தலை!
***
பக்தி
எப்பவோ நேந்துகிட்டது...
அடுப்பில் கொதிக்கும் ஆடு...
சலமின்றி அய்யனாரும்..
பசியோடு உறவுகளும்..!
***
நிதர்சனம்
ஒரு பேருந்து கிளப்பிச்
சென்ற புழுதி மறைந்த
பொழுதில் கடந்து சென்ற...
ஒரு மரண ஊர்வலம்...
கலைந்து கிடக்கும் வாழ்வுக்கு
மெளனமாய் சொல்லாமல்..
சொல்லிச் சென்றது ...
ஏதோ...ஒரு பதிலை...!
தேவா. S
Comments
மாயை....உண்மையான மாயை
கோபம்..ஆமா அதுஎன்ன எல்லா சாவுவீட்டில் சண்டை வருது....
ஏன் இப்படி ஓடுறீங்க வெயிட் அண்ட் சி ..
நிலவையும் வான்மேகங்களையும் பிரிப்பது
அம்மாவாசை ...!
உன்னையும் என்னையும் பிரிப்பது
அவள் அம்மாவின் ஆசை ....!
இது எப்படி இருக்கு ......ப்ளீஸ் ஓடாதீங்க ..........
நாங்களும் கிறுக்கல்கள் எழுதுவோம்ல
மாயை - வாழ்க்கை
கோபம் - மடமை
யுத்தி - வியாபாரம்
வேசம் - மோசம்
பக்தி - வேடிக்கை
நிதர்சனம் - நிசம்
ரசிக்க வைத்தன...!
எதிர் வீட்டு இளைஞன்...
அடிக்கடி தாவணி மாற்றும்
பக்கத்து வீட்டுப் பெண்//
அப்போ வேற வேலை சோலி ஒன்னும் இல்லை போல......
இதைதான் கவனிச்சுட்டு இருக்கீரோ ஹா ஹா ஹா ஹா...
கவிதை அருமை....
உலகைத் துறந்தோர்க்கு தர்மம்
உலகம் துறந்தோர்க்கு அதர்மம்
கோபம்
ஞான மறதி
மாயை
அற்ப சந்தோஷம்
அநித்யம் - ஆனாலும்
அப்போதைய நிஜம்
பக்தி
மாமிசம்
தாமசம்
வேஷம்
வாடிக்கையான
வேடிக்கை
நிதர்சனம்
மௌனத்தில் வெளிவரும்
தரிசனம்
******
நாங்களும் கிறுக்குவோம். :-) நிற்க, படத்தில் ஒரு ஆங்கில கவிதை ஒளிந்துள்ளது. :-)
என்ன கவிதை...? நிஜமாவே எனக்குத் தெரியலை...
கலக்குறீங்க :-)
உங்கள் "தலைப்பு - ஒரு வார்த்தை" ஸ்டைல் பின்னூட்டம் பார்த்தவுடன் இது போல எழுத தோன்றியது. :-)
என்ன கவிதை...? நிஜமாவே எனக்குத் தெரியலை...//
@தேவா
நன்றி. :-) ஒரு சின்ன கதை அல்ல...நிஜம்.
சமீபத்தில் எனது நண்பனுடன் ஒரு விவாதம் செய்து கொண்டிருந்தேன். "என்ன தான் படித்து கிழித்திருந்தாலும் புற அழகை தாண்டி பெண் பார்க்கும் பக்குவம் எல்லாம் எனக்கு இல்லை. காமம் சார்ந்த செலெக்ஷன் சரியா வராது. என்னையும் ஏமாற்றி அந்தப் பெண்ணையும் ஏமாற்றி இருவர் வாழ்வும் வெளங்காம போயிரும்..." இப்படி நான்.
"கல்யாணம் ஆன பின்னாடி அக அழகு தெரிந்தால் கசக்குமா என்ன? முதலில் கல்யாணம் பண்ணி பாரு. பின்னாடி பேசலாம்" இப்படி என் நண்பன்.
முடிவில்லா விவாதம். ஒரு நேரத்தில் எனது நண்பன் "இத பாரு. என் பொண்ணு எழுதிரிக்கிற கவிதை. இதெல்லாம் புரியணும்னா கல்யாணம் பண்ணு" என்று சொன்னான்.
*****
என் நண்பனுடைய மகள் u.k.g படிக்கிறாள். :-) சில பேரை பார்த்தா ரொம்ம்ம்ப நல்லவங்களா தோணும். சும்மா வம்பு இழுத்து பார்க்கலாமேன்னு கொளுத்தி போட்டேன் தேவா...அடி வாங்கறதுக்கு முன்னாடி எஸ் ஆயிடறேன். :-)
சீக்கிரமே சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து :-)
BTW, நீங்க ஹைக்கூ எழுதுவீங்களா ?
ஹைக்கூ...
"குன்றம் எடுத்த
குணக் குன்று!
கிரிதாரி"
மேலே உள்ளது ஹைக்கூ என்றால் இது தான் எனது முதல் ஹைக்கூ. :-) படிப்பேன், ரசிப்பேன், எழுதியது இல்லை.