Skip to main content

வாழ்க்கை வாழ்வதற்கே......!

















எல்லோருக்குமே...டி.வி. மற்றும் பத்திரிக்கைகளில் வரும் விளம்பரங்கள் ரொம்பவே பிடிக்கும், வயது வித்யாசம் இல்லாமல் அனைவருமே இதில் லயித்து விட காரணம் ....சில நிடங்களே வரும் அல்லது ஒரு புகைப்படமாய் இருந்தாலும் அதில் ஒரு மெல்லிய உயிரோட்டம் இருப்பதுதான் உண்மை.

புரூக் பாண்ட்....விளம்பரத்தில்....கடைசிவரை தன் மனைவியை திணறடித்து விட்டு....இறுதியில் ஐ லவ் யூ சொல்வது தான் விளம்பரத்தின் அழகு... ஒரு படைப்பாளியின் மூளை எப்போதுமே..புதிது புதிதாகத்தான் சிந்திக்கிறது...அதாவது பழைமையாய் இருந்தாலும் அதில் ஒரு புதுமையைப் புகுத்தி பார்க்கிறது. கிரியேட்டிவிட்டி என்பது இல்லாத வாழ்க்கை வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சலித்துக் கொண்டுதான் வாழ்றார்கள்.....

தோழி சித்ரா தனது பதிவில் சந்திரமுகி பார்க்க வந்தவர் சந்திரமுகி ஆகிப்போன கதையை சொல்லியிருந்தார்....இப்படித்தான்....எக்குத்தப்பாக வாழ்க்கையை வாழ்ந்து மிகைப்பட்ட பேர்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டு சிலபேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்....கடைசிவரை எதுவும் கிடைக்கமல்..அலுத்து சலித்து உட்கார்ந்து விடுகிறார்கள்.

ஒரு பூ பூப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது...அழகு தான் இருக்கிறது...மொட்டு மலர்கிறது....அவ்வளவே...இதில் என்ன ஆராய்ச்சி வேண்டி இருக்கிறது...மறுபக்கத்தில்....பூ பூப்பதில் எந்த கர்வமும் இல்லை.... அது பூக்கிறது...மடிகிறது... அது நிகழ்வு...அவ்வளவுதான்...! நாம் தான் காணும் எல்லாவற்றுக்கும் அர்த்த கற்பித்துக் கொண்டு......காணும் காட்சியின் உயிர்ப்பை விளங்கிக்கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

இராமரும், ஏசுவும் தத்துவங்கள் ....அதை ரசிப்பதை விட்டு விட்டு வேறு எங்கோ சென்று மாட்டிக்கொள்கிறோம்.....! வாழ்க்கை என்று சொல்லும் போதே அது வாழ்வதற்குதானே தவிர....அழுந்தி...அழுந்தி..வருந்தி வருந்தி மடிவதற்கு அல்ல..!

காலையில் இருந்து இரவு உறங்கும் வரை அனுபவித்து மகிழ ஓராயிரம் விசயங்கள் இருந்தாலும் ஏனோ இந்த பாழாய்ப்போன மனம் ஏதோ ஒரு கஸ்டத்தை நினைத்துக் கொண்டு கண்ணெதிரே உள்ள சந்தோசத்தை அனுபவிக்க மறுக்கிறது....இதை விட்டு வெளிவர வேண்டும் இது ஒரு யுத்தி....கஸ்டமாயிருந்தாலும் அதை அனுபவித்து சந்தோசமாய் எதிர்கொள்ளுங்கள்....அது நிச்சயம் பிரச்சினையின் வீரியம் நிச்சயமாய் குறையும்.

எப்போதும்..மிகப்பெரிய விசங்களில் சந்தோசத்தை தேடுகிறேன் பேர்வழி என்று மாட்டிக் கொண்டு முழிக்காதீர்கள்...சந்தோசம் சின்ன சின்ன விசயங்களில் உங்களின் கண்ணெதிரே இருக்கிறது... நீங்கள் செய்யவேண்டியது எல்லாம்....கண்ணை திறந்து....பார்ப்பது மட்டுமே.....

என்னடா விளம்பரத்தில் ஆரம்பித்து... எங்கேயோ போய்விட்டானே.. என்றுதானே நினைக்கிறீர்கள்...இல்லை இல்லை...இதோ..கீழே இருக்கும் விளம்பரங்களைப் பாருங்கள்...இதை உருவாக்கியவரின் கிரியேட்டிவிட்டியின் மூலம் இந்தப்படங்களின் உயிர்ப்பு...உங்களை நிச்சயமாய்....சிறிதளவேனும் சந்தோசம் கொள்ளச் செய்யும்...






மீண்டும் எச்சரிக்கிறேன்...ஆராயாமல்...அர்த்தங்களை விளங்கிக்கொள்ளுங்கள்.
....
....
......


என்ன புரியுதா...என்ன சொல்ல வர்றாங்கன்னு....!


ஹெல்த்தியா இருக்காங்களாம்....ஹார்லிக்ஸ் குடிச்சதனால....


2 நிமிசம் கொடுத்துதான் பாப்போமே..ன்னு தோணுதுல்ல....

வெளியே காற்றே இல்லையாமாம்.....

புவி வெப்பமடைதலை விளக்கும் ஒரு விளம்பரம்.....


புகை பிடிப்பதற்கு எதிராக இதை விட அழகாக யாரும் அறிவுரை சொல்ல முடியாது!

எல்லா பாம்புகளும்...அனிமெல் பிளானட் showவுக்கு போயிடுச்சாம்... !!!

மலையைக் கூட....பிளந்து தள்ளிவிடும் என்பதை எந்த இடத்தில் சரியாக பொருத்தியிருக்கிறார்கள் பாருங்கள்....!

இந்த விளம்பரத்தை பார்த்த பின்னும் மரத்தை வெட்ட நீங்கள் துணிந்தால்....உங்களுக்கு கல் மனசுதான்!

இதற்கு ஒன்றும் எழுத தேவையில்லை...ஹா...ஹா....ஹா... !

விபத்தில் காரே...தலைகீழா போனாலும்...டயர்கள் நிமிர்ந்து அதுவும் பார்க்கிங்கில் சரியாய் நிற்குமாம்.


திருமண வாய்ப்புகளை ஏற்படுத்துகிறார்களாம்...அதான் வேஷ்டி சேலை...


உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கிகொள்ளுங்கள் நண்பர்களே....உங்களின் மகிழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்!

தேவா. S

Comments

அருமை .. சுவாரஸ்யமான பதிவு...! ;;))
Chitra said…
////தோழி சித்ரா தனது பதிவில் சந்திரமுகி பார்க்க வந்தவர் சந்திரமுகி ஆகிப்போன கதையை சொல்லியிருந்தார்....இப்படித்தான்....எக்குத்தப்பாக வாழ்க்கையை வாழ்ந்து மிகைப்பட்ட பேர்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் அர்த்தம் தேடிக்கொண்டு சிலபேர் அலைந்து கொண்டிருக்கிறார்கள்....கடைசிவரை எதுவும் கிடைக்கமல்..அலுத்து சலித்து உட்கார்ந்து விடுகிறார்கள்./////

..... நான் சொல்ல வந்ததை, அருமையாக சொல்லி விட்டீர்கள். சுற்றியுள்ள விஷயங்களில் பிரச்சனைகளை மட்டும் focus பண்ணி கொண்டு இருந்தால், வாழ்க்கை சலிக்கத் தான் செய்யும். சிரிக்க, சந்தோஷமாக இருக்க ஆயிரம் இருந்தும், ஒரே ஒரு காரணத்துக்காக கவலையுடன் சோர்ந்து இருப்பவர்களுக்கு உங்கள் இடுகை பயனுள்ளதாக இருக்கும்.

விளம்பரங்களும், எனக்கு பல புதிது. வெகுவாக ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.
நல்ல விளம்பர படங்கள், அதை வைத்து நல்ல கருத்தான கட்டுரை, மிக்க அழகு.
எல்லா விளம்பரமும் அருமை..
மரங்கள் எல்லாம் வெட்டபட்டால்......நல்லா இருக்கு..
வாழ்த்துக்கள்.
Unknown said…
இந்த விளம்பரங்களை வடிவமைத்தவர்களை வியக்கிறேன்.. உங்களை பாராட்டுகிறேன்...
Feros said…
அம்மாடி ஆத்தாடி என்னா விளம்பரங்கள் அது சரி அண்ணா இந்த விளம்பரங்களுக்கும் உங்களுக்கும் எதோ ஒண்டு ....
\மிச்சம் குளோசா அர்த்தம் சொல்றிங்க//

வாழ்த்துக்கள் ...........
அண்ணாச்சி சூப்பரா இருக்கு ஒவ்வொன்னும்.
அருமை அண்ணா .. சுவாரஸ்யமான பதிவு...! ;;))
இங்கு படைப்பாற்றல் தான் பாராட்டப்பட வேண்டியது

அந்த விளம்பரங்கள் வித்யாசமானது மட்டுமல்ல சிந்திக்க வைப்பதும் தான்

தங்களின் சிந்தனையும் வித்யாசமானதுதான்

வாழ்க்கை வித்யாசமாக வாழ்வதற்கே :) ஹா ஹா
இவ்வளவு அழகன படைப்பு அண்ணன் மறைத்து வைத்து இருந்தார் நான் விடுவேனா என்ன.....
dheva said…
எப்போதோ எழுதியது...தம்பி..செளந்தர்....எம்.ஜி.ஆர். படத்தை தூசு தட்டி மறுபடியும் ரிலீஸ் பண்ணி இருக்காப்ல.... ப.மு.க...சார்பாக அனைவரையும் வரவேற்கிறேன்.....

செளந்தர்... நல்லா இருக்கியாப்பு...!
மிக ரசித்தேன்.... அத்தனையும் அம்மாடிய்யோ ரகம்!
கலக்கல் விளம்பரங்கள்
கலக்கலா இருக்கு தேவா... ரொம்ப ரசிச்சேன். வாழ்த்துகள்.
Kousalya Raj said…
ரொம்ப லேட்டா தான் இதை பார்த்தேன்... விளம்பரங்கள் தீர்வு அருமை, அதற்கு உங்கள் கமெண்ட் வழக்கம் போல் கலக்கல்... வாழ்த்துகள்
Anonymous said…
the fan add' does not mean, no wind outside, but it means that their brand fan has tbe powerful wind to even move the clouds away...got it???
நீங்க தேடுறது எதை?
உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக ஆக்கிகொள்ளுங்கள் நண்பரே....உங்களின் மகிழ்ச்சிக்கு என் வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...