Skip to main content

வாழ்வே மாயம்.... தொடர் பதிவு I V











சில நேரங்களில் வாழ்வின் சில பகுதிகள் இறுக்கமாய் நம்முள் பதிந்து....ஒரு புதிய பரிமாணத்தை நமக்கு கொடுக்கும்...புறத்தில் அது ஏதோ பெரிய.. இழப்பைப் போல் இருந்தாலும் அது புதிய விசயங்களின் பிறப்பாய்த்தான் இருக்கும்...

இதுவரை...

பாகம் 1 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i.html
பாகம் 2 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i.html
பாகம் 3 - http://maruthupaandi.blogspot.com/2010/04/i-i-i.html

அப்படித்தான் ஆகிப்போனது எனக்கும்...ஒரு இறப்பில் ஓராயிரம் புதிய விசயங்கள் என்னுள் பிறந்தன....சரி....ஊர்தியோடு சேர்ந்து நாமும் ஊர்வோம்.............

இனி....

அமரர் ஊர்தியின் உள்ளே இருந்த எனக்கு தலை மெதுவாக சுற்றத் துவங்கியது.. உள்ளே உடலின் அருகே இருந்த...எனக்கு...அசைவற்ற.. சலனமற்ற... மாமாவின் உடலை பார்க்கும் போது...அந்த உடல் உடுத்தி உண்டு.... சிரித்து... அலங்கரித்து...விளையாடி.... வாழ்வின் எல்லா பூரிப்புகளையும் அனுபவித்து...கவலைகளில் கலங்கி..எத்தனை எத்தனை ஆட்டங்கள்....!


அவரது திருமணம் நடந்த சமயம் என் நினைவில் வந்தது...அத்தனை சிறப்பாய்....அந் நாள் அ.தி.மு.க அமைச்சர் திருநாவுக்கரசர் தலைமையில் நடந்தேறியது.....வாழ்வில் எத்தனை குதுகலங்கள்......இன்று.. அந்த சம்பவங்களுக்கு எல்லாம் எந்த வித சம்பந்தமும் எனக்கில்லை என்னுள் இருந்து அனுபவித்ததது ஏதோ வேறு ஒன்று நாங்கள் வெறும் கருவிதான் என்று உடலின் பாகங்கள் எல்லாம்... வெறும் கட்டையைப் போல கிடந்தன......!

நிலையாமையின் உச்சத்தில் அமர்ந்திருந்த எனக்கு...உலகோடு எந்த தொடர்பும் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டது.. எனக்குள் எந்த எண்ணங்களும் ஏற்படவில்லை..சுற்றி இருந்தவர்களை பார்த்த போது அவர்கள் தலைகளை திருப்பி.....வெளிப்புறமாக பார்த்துக்கொண்டு உள்ளிருக்கும் சூழ் நிலையிலிருந்து தங்களை விடுவிக்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். வாகனம் இராயப்பேட்டையிலிருந்து டாக்டர். ராதகிருஷ்ணண் சலை வழியே சென்று கொண்டிருந்தது.... நான் வெளி நோக்கி பார்வையை செலுத்தினேன்....

ஆச்சர்யத்திலும் ஆச்சர்யாமாய் வெளியில் உள்ள எந்த நிகழ்ச்சியோடும் என் மனது தொடர்பு கொள்ளவில்லை அதாவது கண்கள் கண்ட காட்சியினை மனம் விவரித்து பார்க்கவில்லை. ஸ்கூட்டரிலும், பைக்கிலும்..பேருந்திலும்.... நடை பாதையிலும் மக்கள் ...மக்கள்...மக்கள்....சுற்றிலும் மனிதர்கள்....ஆனால் அத்தனை பேரும் பொம்மைகளாய் எனது கண்ணுக்கு காட்சியளித்தார்கள்.


அனைவரின் உடலும்..ஏதோ காரியமாக பொம்மைகளாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருப்பதாய் பட்டது. இந்த உடலை எல்லாம் உருவமில்லா ஏதோ ஒன்று...ஆட்டுவிப்பது போல தெரிந்தது...எல்லாம் போலியாய் பட்டது. ஏதோ ஒரு மாயையில் தனக்கும் தன்னை சுற்றியும் சில நியாயங்களை உருவாக்கி கொண்டு ஒரு வாழ்க்கை நடந்து கொண்டிருப்பாதாய் பட்டது.


எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?

எல்லா நியதிகளும் மனிதர்கள் தங்களின் வசதிக்காக ஏற்படுத்திக்கொண்டது....அந்த நியதிகளே மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வாழ்வாதாரங்களையும் தகர்க்கும் என்றால் அப்படிப்பட்ட நியதிகளின் அவசியமே நமக்கு தேவையில்லைதானே? சாதாரணனின் இந்த எண்ணங்கள் சரியா தவறா? என்று கூட மனிதர்கள் வாதிடலாம்....

மிக நீண்ட பயணமாகத்தான் எனது இந்த அமரர் ஊர்தியின் பயணம் இருந்தது....மெளனத்தால் நிரம்பிய அர்த்தங்கள் நிறைந்த ஒரு பயணம்....

வீடு வந்தது......வாகனத்தில் இருந்து கூட்டத்தை பிளந்து... நாங்கள் இறங்கினோம்....!கூட்டம் குய்யோ முறையோ என்று கதறியது......உடல் கீழே இறக்கி வீட்டுக்குள் கொண்டு செல்ல எத்தனிக்கப்படது. அப்போது கூட்டத்தில் இருந்து ஒரு உறவினர் அடித்தொண்டையிலிருந்து கத்தினார்...

" வீட்டுக்குள்ல உடம்ப கொண்டு போகாதீங்கப்பா......" நான் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தேன்......


தேவா. S



(தொடரும்...)

Comments

தற்கொலை என்பது கோழைத்தனம். ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பார்கள். ஆத்திரத்தில் அவசரப்பட்டு முடிவெடுத்து மீண்டும் மீண்டும் உற்றாரை காயப்படுத்துகிறார்கள்.
Chitra said…
எல்லா மனிதர்களும் இறப்பு என்பது தங்களுக்கு வெகு தூரம் இருப்பாதாகவும் தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன். இதை உணர்ந்தால்...மனிதன் எப்படி மனிதனை வதைப்பான்..? வன்முறை ஏது....?

........ சரியாக சொல்லி இருக்கிறீங்க. எனக்கு தெரிந்தவர் ஒருவர், வேலை வேலை என்று இருப்பார். " இப்போ சம்பாதிக்கிற வயது. retirement ஆனப்புறம் என்ன செய்ய போறேன்? நல்லா life என்ஜாய் பண்ணிக்கிறேன்" என்பார். இப்பொழுது, blood pressure முதல் பல ஆரோக்கிய பிரச்சினைகள். கவனம் குறைந்தால், heart-attack வரும் அளவுக்கு உள்ள உடல் நலத்துடன் கவலையுடன் வாழ்க்கையில் இருக்கிறார். அவருக்கு வயது ரொம்ப குறைவுதான்.
//தாங்கள் கோடானு கோடி ஆண்டுகள் வாழப்போவது போன்ற ஒரு எண்ணத்தில்....ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு நாள் சட்டென்று எல்லாம் நின்றவுடன் அவர்களின் கனவுகள் எல்லாம்...கலைந்து போன வானவில்லாய் மறைந்து விடுகின்றன்.//

மனதில் பதிந்த வரிகள்.. எழுத்துப் பணி தொடரட்டும்..

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...