
ரசனையுடன் நேசிப்பாய்
தொடங்கிய அந்த நாள்...
சரியாக நினைவிலில்லை....
முழுதாய் என்னை...
உள்வாங்கிக் கொண்ட..
அந்த கணத்தில் தான்...
என் உயிர் நகரும்...
ஓசையினை உணர்ந்தேன்!
நான் உன்னை...
வாசிக்க....வாசிக்க...
என் மூளைகளின் செல்களில்..
கிறக்கமாய்... பரவிய...
போதை பரவவிடுகிறது....
ஓராயிரம்...எண்ணங்களை!
உன்னுள் ஊடுருவி...
என் விழிகள் உறவாடிய
பின் தான்...என் இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
நீ உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் இரவுகளை!
விலையில்லா உனக்கு.....
விலைகொடுத்து
உன்னோடு கூடும்...
கணங்களில் ...எல்லாம்...
நான் கற்றது எல்லாம்
என்னைச் சலனமின்றி
மெளனமாக்கும்
இன்று வரை...புது புது...
வடிவங்கொண்டு...
நித்தம் ...எனை...
வசிகரித்து... நித்தம்
ஒரு பெயரோடு...தொடர்கிறது
நம் உறவாடல்...
- தேவா. S
Comments
...... அழகான கவிதை .எழுத்துக்கு விலையில்லை மதிப்பிட முடியாது . எழுத்தை சுவாசிகிறீர்கள். பாராடுக்கள்.
உங்கள்கற்பனை வளம்.
ஏன் கருத்துக் களம் தரவில்லை
.நுழைய முடியாதுள்ளதே . இந்த வரிகளை நீக்கி விடவும்.
என் விழிகள் உறவாடிய
பின் தான்...என் இமைகள்...
கவிழ்ந்து.....உறக்கம் சூழ்கிறது...!
அப்போதும் கூட...
என் நெஞ்சினில்..தலை சாய்த்து...
நீ உறங்கும் அழகினை ...
கலைக்க விரும்பாமல்..
அணைத்துக் கொண்டே.....
கடத்தியிருக்கிறேன்..
என் இரவுகளை!
...... very nice..... அப்படியே ஒன்றி போய் எழுதி இருக்கீங்க...... மிகவும் ரசித்து படித்தேன்.