கன்று தடுத்து....
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?
***
திறந்த வீட்டினுள்...
நுழையும் எதோ...போல...
செடியின் அனுமதியின்றி....
மலர்கொய்யும் போது...
மனம் சொல்லவில்லையா...
இது அத்துமீறல் என்று?
***
மனம் திறந்து ...
பேசிடும் பேச்சாய்....
வானம் மேகமுடைத்து...
பெய்யும் மழை மறுத்து..
கதவடைக்கும் கணங்களில்...
தோன்றவில்லையா...
உங்களின் சுய நலம்!
***
ஒவ்வொரு முறை....
மரம் களையும் போதும்...
புரிந்ததில்லையா.....
உங்களுக்கு....பூமித்தாயின்
கையிலிருக்கு குழந்தையைத்தான்...
கொல்கிறீர்களென்று!
***
நீங்கள் ...
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!
***
குருடர்களாய்...
கவனிப்பதில்லை...
நம் அன்றாட அத்துமீறல்களை...
என்றுதான் நிறுத்தப்போகிறோம்...
வசதியாய் நாம் மறந்திருக்கும்..
இந்த வன்முறைகளை......!
பொதுப்புத்தி என்ன கற்பித்திருக்கிறது...வன்முறை என்றால் வெடிகுண்டு வைப்பதும்...உயிர்ச்சேதம் விளைவிப்பதும்...பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதுதான் வன்முறை என்பது...இவை எல்லாம் நாம் உணர்ந்த வன்முறைகள் அறிந்த வன்முறைகள். அறியாமல் இவை எல்லாம் வன்முறை அல்ல என்று நாம் உணராமல் செய்யும் ஏராளமான செயல்களில் வன்முறை இருப்பதை மிகைப்பட்ட மனிதர்கள் உணருவதில்லை.
கொஞ்சம் பைத்தியகாரத்தனமாய்த்தான் சராசரி ஓட்டத்தில் இருக்கும் மனிதர்களுக்கு இந்த கவிதையும், விளக்கங்களும் இருக்கும்...ஏளனம் செய்ய... நிறைய காரணஙக்ள் கூட இருக்கலாம்..... நான் உங்களிடம் வேண்டுவது எல்லாம்....கண்களால் இந்த பதிவை படிக்காமல் மனதால் படித்துப்பாருங்கள்... ஒரு வேளை... நான் சொல்ல வரும் உண்மையை நீங்கள் உணரலாம்!
தேவா. S

Comments
மனதால் படிப்பது அவ்வளவு எளிதா என்ன?
பெளர்ணமியாய்...
ரசிக்காத காரணத்தால்....
தினம் தேய்ந்து..
அமாவாசையாய்..
கோபம் காட்டும்... நிலாவை
புரிந்து இருக்கீறீர்களா
இதுவரையில்....!
......தேவா ........ கவிதையில் கருத்து அனல் பறக்கிறது. பாராட்டுக்கள்!
காராம் பசுவிடம்..
பால் கறக்கும் பொழுதுகளில்...
வரவில்லையா....
உங்களுக்கு மிருகாபிமானம்?
//
தேவா.. ஆரம்பமே அமர்க்களம்.. வன்முறை அத்துமீறல்களை... அழகா எடுத்து காத்திருக்கீங்க..
வாழத்துக்கள்.