
அன்புள்ள டோன்டு சார்.....!
எதுவுமே எழுதாம அப்படியே விட்டு விடலாம் என்று இன்று மதியம் வரை நினைத்தேன்...இருந்தாலும் சக பதிவர் என்ற வரைக்கு ஒரு சிறிய கடிதமாவது எழுதாவிட்டால் எனக்குள் இருக்கும் எனது விழிப்புணர்வு நிலை என்னை சும்மா விடாது.....!
பார்வதி அம்மாளை திருப்பி அனுப்பியதற்காக... அரசாங்கத்தின் மீதுதான் நமது கோபம் திரும்ப வேண்டும் அறிவு கெட்ட அரசாங்கம் அந்த மூதாட்டியை உள்ளே விடாததற்கு அதற்கு ஓராயிரம் சுய நல கேவலமான ஏகாத்திபத்திய காரணங்கள் இருந்தது....அது அதிகாரத்தில் இருப்பவர்களை மக்கள் தோலை உரித்து அரியாசனத்தில் இருந்து இறக்கும் வரை அவர்களின் ஏகாத்திபத்திய செயல்பாடுகள் மாறாது. இது ஒரு சமுதாய கோபாமாக மாறி....அரசாங்கக்துக்கு சூடு கொடுக்கும் வையில் இருக்க வேண்டும்...
சாதாரணமாய் வாழும் மனிதன் தனது கோபத்தை டீக்கடை வாசலிலோ அல்லது....அலுவலக கேண்டினிலோ....அல்லது ஒரு பேருந்து நிறுத்தத்தில் விவாதித்தோ தனது கோபத்தைப் போக்கிக் கொள்வான்...ஆனால் உங்களைப் போன்றவர்கள் எழுதும் ஆற்றல் கொண்ட மனிதர்கள் ...ஒரு முற்போக்கான விரிந்த பார்வை உங்களுக்கு இருக்க வேண்டாமா? இல்லை என்றால் வன்முறையாளன் கையில் கொடுக்கப்பட்ட சுதந்திரமாய் அது ஆகி விடாதா?
படைக்கும் திறன் கொண்ட ஒரு படைப்பாளி.....தப்பும் தவறுமாக தனது....சிந்தனைகளை ஓடவிட்டு...அதனை தன் எழுத்தாற்றல் மூலம் வாசகனுக்கு சமைக்கும் போது வலுவற்ற எண்ணங்களும்...சமகால நிகழ்வுகளின் விரிவாக்கமும் இல்லாத மனிதர்களின் மனதில் நஞ்சை விதைப்பது போல ஆகாதா? உங்கள் கையில் கிடைத்திருப்பது பலதரப்பட்ட மக்கள் படிக்கும் ஊடகம்...அதில் ஒரு கண்ணியம் இருக்க வேண்டாமா....! எழுதுவதில் ஒரு தனி ஒழுக்கம் இருக்கவேண்டாமா?
எழுத்தாளன் என்பவன் சமூக பொறுப்புகள் நிறைந்தவன்....சராசரி மனிதர்களுக்கும் உருவாக்கும் படைப்பாளிகளுக்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் பிடித்த அல்லது பிடிக்காத விசங்களை நான் பொதுப்படுத்தக்கூடாது....அப்படி செய்தால் அதற்கு பெயர் பதிவு அல்ல...அது உங்களின் பெர்சனல் டைரி...! நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு... சமச்சீரான பார்வைக்கு ....உட்பட்டு நாம் செய்திகளை நோக்கவேண்டும்....! உங்களுக்கு கண்டனங்களைத் தெரிவித்த அதே கதிர் சார்...உங்களின் சாதிப் பெயர் சொல்லி விமர்சித்தவர்களை கடுமையாக கண்டித்தார்.....இதில்தானே ஒரு சுய ஒழுக்கமும் நேர்மையும் இருக்கிறது!
சமுதாயத்தில் அக்கறை உள்ள உண்மையான மனிதன் இப்படி எழுதி விட்டு...மிகைப்பட்ட மனிதர்களிடம் இருந்து எதிரிடையான விளக்கங்களும்...கண்டங்களும் வரும் மாத்திரத்தில் உணர வேண்டாமா.....? தான் எழுதியது...தவறு என்று?...அதை மனதோடு வைத்திருந்தால்.அப்போது அது உங்களின் சொந்த கருத்து...!
உங்களின் எண்ணங்களை பதிவாக்கிவிட்டு... நான் அப்படித்தான் நினைக்கிறேன்!...அனுமாக்கிறேன்.....என்று....வாசிப்பவர்களை...அனுமானத்தின் நேசர்களாக....கற்பனையில் ஏதேதோ எண்ணச் சொல்லி....ஒரு தீவிரவாதத்தை உங்களின் எழுத்துக்குள் கொண்டு வராதீர்கள்...!
பார்வதி அம்மாளை உள்ளே வரவிடாமல் அனுப்பியது சரி என்று நீங்கள் சொல்வதனால்.... என்னவோ... நீங்கள்தான் ஏதோ இந்திய தேசத்தின் பக்தர் போலவும்...நாங்கள் ...தேசத்துக்கு எதிரானவர்கள் என்றும் உங்களுக்குள்...மாயையினை ஏற்படுத்திக்கொள்ளாதீர்கள். தேசப்பற்றோடு கூடியதுதான் மனிதாபிமானமும்....இந்திய தேசத்தை உங்களை விட அதிகம் நேசிக்கிறோம்...அந்த நேசிப்பு கூடிப்போனாதால்தான் எங்களிடம் மனிதாபிமானம் கூடிபோய் இருக்கிறது. மனிதாபிமானம் உள்ளவன் தான் ஒரு உண்மையான இந்தியனாக இருக்க முடியும்......
எங்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறது...... நாங்கள் இந்தியர்கள்.......! நீங்கள்....டோன்டூ ....சார்?
தேவா. S
Comments
இதில் எவளவு வஞ்சம் கலந்திருக்கிறது. இங்கே அந்த வயதான தாய் வந்தது தன்னுடைய பக்கவாத நோய்க்கு மருத்துவம் பார்க்க .அரசியல் செய்ய அல்ல.அவர் இதற்க்கு முன்பு திருச்சியில் வாழ்ந்திருக்கிறார் . அவரை வைத்து எப்போது யார் அரசியல் செய்தார்கள் .அவரை கவனிக்க இங்கே ஆள் தேவை .இங்கே அவரை கவனித்து அவருக்கு வேண்டியவை செய்ய மனித நேயம் உள்ள நல்லவர்கள் இருகிறார்கள்.அதனால் தான் அவர் இங்கே வந்தார்.அந்த தாய் எப்போதுமே தான் இங்கே தங்கி இருந்த காலத்தில் அரசியல் யாரிடமும் பேசியது இல்லை.இங்கே வந்தேறி பார்ப்புகளும் ,சேட்டு களும் ,பணியாக்களும் ,மலையாளிகளும் வசதியாக வாழும் போது ஒரு தாய்க்கு தன்னுடைய ரத்த சொந்தங்கள் இருக்கும் நாட்டிற்கு வர உரிமைகள் மறுக்க படுவதும் அதை டோண்டு ராகவன் போன்ற வந்தேறி பார்ப்புகள் ஆதரித்து பேசுவதும் தமிழர்களுக்கு ஒரு கிழிந்து போன இத்தாலிய சேலையை தன்னுடைய துண்டாக ,கோவணமாக அணிந்து கொண்டிருக்கும் மற்றும் பணத்தால் உணர்விழந்து போன மட தலைவனால்தான். இங்கே காவி அணிந்து கொலை மற்றும் பல பஞ்சமா பாதகங்கள் செய்த காஞ்சிபுரம் சங்கராச்சாரி என்கிற அய்யோக்கிய பார்பான்கள் எல்லாம் நடமாடுகிற போது ஏன் என்னுடைய தாய் இங்கே வரகூடாது? .
இப்போது சசி தரூர் என்கிற ஒரு மலையாள பாப்பான் செய்த காரியம் என்ன . ஒரு நாட்டின் அமைச்சு பதவியில் இருந்து கொண்டு அவன் செய்த காரியம் தன்னுடைய தாயை கூட்டி கொடுபதற்க்கு சமமானது .அதை இந்த வந்தேறி பார்ப்புகள் தான் செய்ய முடியும் .
தாயே எங்களை மன்னித்து விடு .மீண்டும் ஒரு புத்தநும் ,ஒரு பெரியாரும் ,ஒரு நாராயண குருவும் ,ஒரு வேம்மன்நாவும் ,ஒரு பிரபாகரனும் ,ஒரு அய்யா வைகுண்டரும் இந்த புனித பூமியில் மீண்டும் பிறக்க ஆசி கூறு அவர்கள் பிறந்து பார்பனீயத்தை வேரோடு கருவருகட்டும் .
உமா.கா ,திருவனந்தபுரம்
தயவு செய்து எந்த தரக் குறைவான வார்தைகளையும் பயன்படுத்த வேண்டாம், மேலும் எந்த காரணம் கொண்டும் சாதியையும் மதத்தையும் கொண்டு வசவுகள் செய்ய வேண்டாம்..ஒரு நிகழ்வினைப் பற்றி ஒருவர் தெரிவித்த கண்ணோட்டத்திற்கான....ஒரு மறுதலிப்புதான் இந்தப் பதிவு....! நாம் அனைவரும் நமது நாகரீகத்தை காப்பதில்....மிகக் கவனமாக இருக்க வேண்டும்!
வாழ்த்துக்கள்