
ஒரு மழைக்கால முன்னிரவின்..
இருண்ட வனமும்..
"சோ" வென்று பெய்த...மழையும்....
நீ இல்லாத வெறுமையை....அதிகமாக்கின....!
உன் காதல் பார்வையின்....
கதிர்வீச்சில்... பஸ்பமானது என் இதயம்!
உன் உதட்டோர மச்சமும்...
நெற்றி விழும் முடியும்...
கூரான நாசியும், கவனமாய்...
என் கவிதைகளுக்கு ...கருவாகின்றன....!
ஓவியமாய் தலைசாய்த்து....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!
உன் விரல்களால்...
என் தலை கோதி....
சமாதி நிலைக்குள்...கண நேரம்....
எனைத் தள்ளி....
கல கல சிரிப்பொலியால்..
மீண்டும் எனை மீட்டெடுத்த..
கணங்களை விட்டு...மீளவேயில்லை நான்!
கவிதையாய்
உன் இமை துடித்த
ஒவ்வொரு வினாடியையும்..
நினைத்து நினைத்து...
பட படக்கிறது என் இதயம்!
எல்லா வார்த்தைகளையும்
வாசிக்க தெரிந்த எனக்கு....
உன் பெயரை....மட்டும்....
ஏன் சுவாசிக்கத்தான் முடிகிறது....!
என் இமைகளுக்குள் எப்போதும் நீ...
அதனால்தான்...பகல் முழுதும்...
உன்னைத் தொட்டு விளையாடியும்....
இரவுகளில் அணைத்துகொண்டும்...
உறங்குகிறேன்!
என் வார்த்தைகளை எல்லாம்..
கூர் தீட்டி...கவனமாய் கவிதையாக்கி...
உனை வெல்ல யுத்திசெய்தால்...
உன் மெளனம் என்னும்...
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி?
சில பார்வைகளின் வீச்சில் சட்டென்று உள்ளம் தீப்பிடித்துக் கொள்ளும்...அப்படி ஏற்படும் ஒரு உணர்வை தனக்குள் வைத்துக் கொள்ள முடியாமல்... திணறும் ஒருவனின் மனோ நிலைதான் இந்தக் கவிதை.
காதல் வயப்பட்ட ஒரு மனிதனுக்கு.... தன் காதலியின் அசைவுகள் எல்லாமே..ஒரு கவிதைதான்... எல்லா நேரங்களிலும் தன்னிடம் நேசம் ஒரு பெண்ணை காதலியாகவே கொள்ளும் ஒருவன் சந்தோசமான ஒரு வாழ்க்கையினை வாழ முடியும். குறைகள் எத்தனை இருந்தாலும் காதல் அதை மறைத்து விடும் அல்லது மாற்றிவிடும்.
எனது கவிதை நாயகனும் அப்படித்தான்..... மழை பெய்யும் ஒரு முன்னிரவில் அந்த வெறுமை அவனது காதலி பற்றிய ஞாபங்களை கிளறிவிட...வெளியே பெய்த மழையை விட... இவனுள் பெய்த கவிதை மழை ரொம்ப சுவையாய் போனது. காதலைப் பற்றி வார்த்தைகளில் விவர்க்க முடியாமால் இவனின் வார்த்தைகள் எல்லாம் மெளனம் என்னும் கடலி விழுந்து தற்கொலை செய்த பின் இவனிடமும் மெளனமே எஞ்சி நிற்கிறது.
காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!
அற்புதமான உங்களின் இந்த பயணம் உங்களை....சாந்தப்படுத்தட்டும்...!
தேவா. S
Comments
காதல் ஒரு அற்புதமான உணர்வு....அது ஆணையும் பெண்ணையும் சங்கமிக்க செய்யும் கடவுளின் ஆசிர்வாதம்....காதலுக்குள் சென்று நிதானமாய் சுற்றிப் பார்க்கும் அல்லது பார்த்து உணர்ந்த அனைவருக்கும் நன்றாகவே தெரியும் கடவுள் யாரென்று.....? மழை பெய்த பின்பு....மரத்திற்கு கீழே நின்று மரம் உலுக்கி... நனைவது போல...அர்த்தங்களையும் ஆராய்ச்சியும் இல்லாமல்....உங்கள் விழிகளால் இந்த கவிதையை உள் வாங்கி.. உள்ளத்தால்.... உலுக்கி உங்களை பரவசமாக்கிக்கொள்ளுங்கள்!
intha varila nikkiranna , speed da poikiddu iruntha valkaila oru u turn poddu vanddiya thiruppina maathiri irukku .... sariiiiiiiiiii....
ஒய்யாரமாய் நீ ... பார்க்கும்..
காவியக் காட்சியினை...
விவரிக்கத் தெரியாமல்...
மெளனக் கடலில்...குதித்து...
தற்கொலை செய்து கொள்கின்றன....
வார்த்தைகள்...!///
அருமை...!
சிகரம் தொட்டு இருக்கின்றது கவிதை ...!
பெருமையாய் இருக்கிறது தேவன்..!
தொடருங்கள்...!
வார்த்தையில்லா கவிதைகள் எல்லாம்...
எனை வென்று விடுகிறதே இது என்ன மாயமடி? //
ரொம்ப அழகான வரிகள்..
ரசித்தேன்.. வாழ்த்துக்கள்..
..... தேவா, உங்கள் கவிதையும் அழகு. அந்த கவிதையின் கருவை, நீங்கள் விளக்கி இருக்கும் விதமும் அழகு. தேவாவின் எழுத்துக்கள், நாள் ஆக நாள் ஆக மெருகேறிக் கொண்டே வருகிறது. மிகுந்த சந்தோஷத்துடன், பாராட்டுக்கள்!