உன்னைப் பற்றிய... நினைவுகளையும்..
உன் மீதுள்ள...காதலையும்...
எத்தனை முறை எழுத்தாக்கினாலும்...
அவை குறைப்பிறசவ...
குழந்தைகளாய்தான் ஜனிக்கின்றன!
கற்பனைக் கெட்டா...காதலுணர்வினை...
கவிதைக்குள் கொண்டுவர...
பகீரதனாய்...பிராயத்தனம்
செய்கிறேன் தினமும்!
ஒரு ஓவியனாய் மாறி...
ஓராயிரம்...சித்திரங்களில்..
நம் காதலை...கொண்டுவர...
முயன்று..முயன்று...
கைகள் ஊனமானதுதான் மிச்சம்!
இசையாய் உன்னை ....
வெளிப்படுத்த..எண்ணி..
ஓராயிரம் சந்தங்கள் இட்டாலும்
எல்லம் வெறும் சப்தமாய்..
மட்டுமே...வெளிவருகிறது...!
என் மூச்சுக்காற்றை
ராகமாக்கி...காதலை...
வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்...
காதலை உள்வாங்கிக் கொண்டு
வெறும் காற்றை மட்டுமே...
துப்புகிறது... புல்லாங்குழல்!
எப்படி சொல்வது...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
ஓராயிரம் முறை யோசித்தாலும்...
மூளையிடம் கேட்கும்...
வெறும் யாசிப்பாய்...
நின்று விடுகிறது என் நினைவுகள்!
இந்த கணமின்றி...
எல்லாக் காலங்களிலும்...
நிறைந்திருக்க வேண்டும்..
என் காவிய காதல்...
கவலையாய் சிந்தித்து..சிந்தித்து
வெளிப்படுத்த முடியாமலேயே...
அழிந்து போகுமா என் அற்புதக்காதல்!
நிறைவாய் கொட்டும் ...காட்டறுவி....,
நிறைந்து அடந்த பச்சைப் பசுமையான காடு...
யாருமற்ற வெட்டவெளி...
ஆர்ப்பரிக்கும்..பரந்த கடல்...
நட்சத்திரங்கள் நிறைந்த வானம்...
இவற்றில் எல்லாம் சூட்சுமமாய்..
நிறைத்து வைதிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்!
காதலை வார்த்தைகளில் சொல்லிவிட்டால் நாமும் சராசரியில் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் தனது காதலை சொல்லாமலேயே உள்ளே தேக்கி வைத்திருக்கும் ஒரு வித்தியாசமான காதலனின் மனோ நிலையின் வெளிப்பாடாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் தான் இந்த கவிதை.
எல்லாவகையிலும் முயன்று...முயன்று அதன் பிரமாண்டாத்தை விளக்கமுடியாமல் தனக்குள்ளேயே மரணித்து விடுமோ இவனின் காதல் என்ற அச்சத்தின் விளைவாக காதலை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்ற தீர்க்கமான முடிவில்...இயற்கை எல்லாம் காதல்தானே என்று உணர்ந்து...தனது காதலியை இயற்கையின் பிரமாண்டகளைப் பார்க்கச் சொல்லுகிறான்...ஒவ்வொரு முறையும் பிரமாண்டமான் இந்த இயற்கையை கண்டு தன் காதலி வியக்கும் தருணங்களில் எல்லாம் இவனின் காதலைக் கொண்டு அவள் பிரமித்ததாகத்தானே ஆகும்....
எப்போதுமே..சொல்லாத காதலில்தான் சுகம் அதிகம்...அதுவும் வார்த்தையில்ல இவனின் வர்ணிப்பினால் காலங்கள் கடந்தும் இவன் காதலின் விளக்கங்கள் நிலைத்து நின்று இவனை நித்ய காதலனாய் ஆக்கும்.....இது தான் அவனின் காதலின்...வெளிப்பாடு...!
ஒரு சென் டைப்பில் முடித்து விட்டேன் கவிதையை....என்று தான் நினைக்கிறேன்...! நிதானமாய்..படித்து முடிக்கும் நேரத்தில் உங்களை ஒரு தியான நிலைக்கு இந்தக் கவிதை அழைத்துச் சென்றால் ஆச்சர்யமில்லை!
தேவா. S

Comments
//எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்! //
ரொம்ப பிடிச்சிருக்கு இந்த வரிகள்..
முழு கவிதையும் ரசித்து படித்தேன்.. நீங்க ரொம்ப அழகா எழுதறீங்க தேவா..!!
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!
கவிதை படித்து முடித்ததும் எனக்கு த்யான நிலை வந்ததோ இல்லையோ..
ஆனால் உங்கள் அன்பான மனதின் அழகு தெரிந்தது..
தொடரட்டும் உங்கள் பயணம்.. :) :)
நிறைந்து அடந்த பச்சைப் பசுமையான காடு...
யாருமற்ற வெட்டவெளி...
ஆர்ப்பரிக்கும்..பரந்த கடல்...
நட்சத்திரங்கள் நிறைந்த வானம்...
இவற்றில் எல்லாம் சூட்சுமமாய்..
நிறைத்து வைதிருக்கிறேன்...
எனக்குள் இருக்கும் ..
நீ சொல்ல நினைக்கும் காதலை...
மெளனமாய் நீ…
வாசிக்கும் தருணங்களில்...
உன் நினைவுகளில்...இருப்பேன்...
நித்ய காதலனாய்!
..... super! தேவா, ரொம்ப ரசித்து ஒன்றி போய் எழுதி இருக்கீங்க என்று தெரியுது. நல்லா இருக்குங்க. புதன் கிழமை, பௌர்ணமி. நல்ல நிலவு வெளிச்சத்தில் மீண்டும் படிக்க வைக்கும் கவிதை. :-)
sorry for the late comment and vote. usually, I rarely check blogs on saturdays and sundays.
@ மிக்க சந்தோசம் ஆனந்தி.. உங்களின் பின்னூட்டங்கள் மேலுமொரு உந்து சக்தியாய் இருந்து நல்ல படைப்புகளை நிச்சயம் வெளிக்கொணரும்.
@சித்ரா.. இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை அதனால்தான் நீங்க லேட்ட வந்தீங்கன்னு எனக்கு தெரியும். உங்கள் எல்ல பின்னூட்டங்களும் என்னுடைய அடுத்த படைப்புகான வித்து....! மிக்க நன்றி....!
அதிலும்..
//என் மூச்சுக்காற்றை
ராகமாக்கி...காதலை...
வாசிப்பாய்...மாற்ற நினைத்தால்...
காதலை உள்வாங்கிக் கொண்டு
வெறும் காற்றை மட்டுமே...
துப்புகிறது... புல்லாங்குழல்!
//
அருமையான வரிகள்.. நல்ல சிந்தனை....
அப்புரம் கடைசியில பிரம்மாசாரிதான்
வெளிப்படுத்த முடியாமலேயே...
அழிந்து போகுமா என் அற்புதக்காதல்!//
than thavatthai veliyil sollamattan yogi..
thavam kalaitthaal thaan athu saatthiyam..
oru sillidum aruviyil kulittha sugam udalengum paravi nirkkirathu.
appadiyoru vartthaigalin pravagam..
vaasitthu muditthu kangalai moodi kavithaiyil ondrinaal kaatrodu karainthu ellaiyatra kathalodu naanum kaathalagip ponen..
Nandri anna... For the Great Lines and experience...