அதிர்ந்து கொண்டிருந்தது காடு. அணியணியாய் அங்கே நின்று கொண்டிருந்த மக்களின் கண்களில் பரவிக் கிடந்த அக்னியில் வீரமும், வேட்கையும் நிரம்பியிருந்தன. சிவந்து போயிருந்த அவர்களின் கண்களும் வெயிலில் கருத்துப் போயிருந்த தேகமும் காற்றில் பறந்து கொண்டிருந்த எண்ணையைப் பார்க்காத கேசமும் அடிபட்ட தங்களின் வலிக்கு வஞ்சம் தீர்க்க துடி, துடித்துக் கொண்டிருந்தன. போராளிகள் எல்லோரும் அப்படித்தான்!!!! சொந்த மண்ணை துரோகிகள் கபடமாய் கூட்டு சேர்ந்து களவாடிக் கொண்டு வென்று விடுவது வெறும் மண்ணை மட்டுமல்ல, அந்த மண்ணில் காலங்காலமாய் வாழ்ந்த மனிதர்களின் உரிமைகளை, கனவுகளை, பெருமைகளை எல்லாம் சேர்த்துதான் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு மண்ணில் ஆழமாய் வேரூன்றி செழித்து வளரும். தட்ப, வெட்ப பூகோள ரீதியாய் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்புண்டு. ஒவ்வொரு மண்ணிலும் அந்த அந்த மண்ணிலிருந்து கிடைத்த தாதுப் பொருட்களை காய்களாகவும், கனிகளாகவும், மாமிசமாகவும், நீராகவும் உட்கொண்டு அந்த மண்ணில் படுத்து, புரண்டு பேசி சிரித்து, கூடிக் களித்து, நுரையீரல்கள் ததும்ப ததும்ப பிராணனை சுவாசித்து வளரும் மக்களுக்க...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....