நிறைய எதிர்பார்ப்புகள் கனவுகளோடதான் ஒவ்வொரு வருடமும் நம்மை நோக்கி வருது. எல்லாமே நல்லபடியா நடக்கணும்ன்ற ஆசையோட ஹேப்பி நியூ இயர்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து கை குலுக்கி சிறு புன்னகையோட இந்த டிசம்பர் 31ன எல்லோரும் கடந்து போக நினைக்கிறோம். நியூ இயர்க்கு என்ன ப்ளான்னு என்கிட்ட எப்பவும் நண்பர்கள் கேட்கும் போதும் எல்லாம் ஒரு புன்னகையோட நான் கடந்து போயிடுறேன். ஏன்னா என்கிட்ட எப்பவுமே எதுக்குமே ப்ளான்ஸ் இருந்ததே கிடையாது. சரியோ தவறோ கொண்டாட்டங்கள் மனித வாழ்க்கையோட ஆதாரமா இருந்து இந்த வாழ்க்கையோட அர்த்தத்தை சூசகமா தெரிவிக்கிறதாதான் நான் கருதுறேன். சுகமோ, துக்கமோ பிடிச்சவங்க பக்கத்துல இருக்கணும். மனசுக்குப் பிடிச்சவங்க இல்லாத சொர்க்கமும் நரகம்தான். மனசுக்குப் பிடிச்சவங்க கூட இருந்தா நரகமும் நமக்குச் சொர்க்கம்தான். எல்லா புது வருசத்தையும் விட நான் சென்னையில வேலை தேடிக்கிட்டு இருந்த 1998ம் வருசம் பொறந்த அந்த வருசத்தை மறக்கவே முடியாது. யாருமே இல்லாம தனியா மொட்டை மாடியில பசியோட படுத்துக்கிட்டு நட்சத்திரங்களைப் வெறிச்சு பார்த்துக்கிட்டு இருந்தேன். என்னை சுத்தி சென்னை அல்லோலகல்லோலப்பட்டு
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....