எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள் என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும், யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன். நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை. கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு. பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம் சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம். அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம். கபாலி, கபாலி என்று ஊரே நடுங்கி ப
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....