ஒரு புள்ளியில் நின்று கொண்டிருக்கிறது மனம். விரிந்து பரவ ஆசை இருந்தாலும் விருப்பமில்லை. இப்படியே இருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது. சுற்றி நிகழும் நிகழ்வுகளின் விசய குப்பைகளை எனக்குள் அள்ளிக் கொட்டிக்கொள்வதில் எனக்கு என்ன சந்தோசம் கிடைக்கப் போகிறது. எல்லாவிசயத்துகும் தன்னை முன்னிலைப்படுத்த மனிதன் எடுக்கும் பிராயத்தனங்களைப் பார்க்கும் போது குரங்காட்டி வித்தையில் ஆடும் குரங்குகளைப் போலத்தான் இருக்கிறது. எப்போதும் கடந்தகாலத்தில் அல்லது எதிர்காலத்தில் நிற்கும் இந்த மனக்குரங்கை நம்பிதான் மனிதன் பல முடிவுகளை எடுத்து விடுகிறான். ஏதோ ஒரு அதிருஷ்டத்தில் சில நேரம் அது நல்ல முடிவாகவும் சில நேரங்களில் வேறு விதமாகவும் முடிகிறது. முழு விழிப்புணர்வு நிலையில் இருந்து முடிவெடுப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நின்று நிதானிக்க ஒன்று மனிதனுக்கு தெரியவில்லை அல்லது புரியவில்லை. புறத்தில் நடக்கும் அவசரங்களுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது அது நியதியின் அடிப்படையில் எங்கோ ஓடிக்கொண்டிருக்கிறது. அகத்தில் ஏன் இத்தனை குழப்பங்கள், இத்தனை அவசரங்கள்? கலைத்துப் போட்ட வீடாய்....கலங்கிக் கிடக்கிறது மனிதர்களின் மனம். ஏத...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....