
கவிதைக்கு கவிதை சொல்ல...
எங்கு நான் வார்த்தை தேட....?
கனவுகள் மெய்ப்பட்டால் ...
கற்பனைக்கு வேலை இல்லை!
என் இமைகளுக்குள் அகப்பட்டாய்...
இதய துடிப்பாய் நீ துடித்தாய்...!
உடலுக்குள் மறைந்திருக்கும்..உயிர் போல..
என்னுள்ளே நீ நிறைந்தாய்!
உன்னைப் பிரித்தெடுத்து...
உலகிற்கே கவிதை சொல்வேன்..
உனக்கே கவிதை என்றால்...
பள்ளி செல்ல... மறுக்கும் குழந்தையாய்....
வார்த்தைகள் வர மறுத்து அடம்பிடிக்கிறதே...!
மோகனப் புன்னகையால் மெளனமாய்...
என்னை மூர்ச்சையாக்கி...கவிதை சொல்....
என்று சொன்னால்...
விலாசம் தொலைத்த வழிப்போக்கனாய்...
மொழி மறந்த மனிதானாய்....
நானல்லவோ திணறிப் போகிறேன்....!
- என்னவள் என்னிடம் கவிதை கேட்ட அந்த நொடியில்... என்ன செய்வது என்றறியாமால்...விழித்த நொடியில்.. ஜனித்தது!
- தேவா. S
Comments