Skip to main content

மெல்ல திறக்கட்டும் மனது...!


















பயணம்


யாரோ புல்லாங்குழல்
வாசிக்கிறார்கள்.....
இந்த முறையும்
தவறாமல் ...காற்றில்..
தன்னை கரைத்துக் கொண்டு...
பயணத்தை தொடர்கிறது...
மெல்லிய....கீதம்...!
* * *

கவிதை


மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!
***

குளிர்


காத்திருகிறேன்...
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!
***

கூடல்


அமைதியாய் புணர்ந்து...
பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே...
நான் பூவாக...
பிறக்க வேண்டும்...
ஒருமுறையாவது!
***

மொழி


ஏன் இன்று வரை...
புரியவில்லை..
இரைச்சலுக்கு...
மெளனத்தின்
மொழி..மட்டும்!
***

காதல்


உனக்கென்று...
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
***

சுதந்திரம்

ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!
***

தோல்வி


உன் ஒவ்வொரு...
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***

வலி

உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?
***

சில நேரம் மனதில் என்னவென்றே சொல்லமுடியாத இரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். அப்படிப்பட்ட கணங்களில் நல்ல காட்சிகளை கேமராவால் கிளிக் செய்வது போல...உணர்வுகளை வார்தைகளில் டக் டக் என்று கேட்ச் பண்ணி வச்சுகிட்டா... படிக்கும் போது எல்லாம் மனம் கிளர்ந்து எழும்.

ஒரு வண்டும் பூவிடம் செய்யும் காதலில் இல்லாத வன்முறையும் அதில் இருந்த கவிதையும், மென்மையான மலரை உரசி அதில் அமர்ந்து பறக்கும் வண்டு கண்டு அதன் மீது ஒரு காதல் ஏற்பட்டது.

இதைத்தான் அனுபவித்து....

"பூவில் வண்டு கூடும்...
கண்டு போகும் கண்கள் மூடும்"

என்று வார்தைகளுக்குள் கொண்டு வந்திருப்பானோ கவிஞன்...! நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நீரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...


தேவா. S

Comments

க ரா said…
//ஏன் இன்று வரை...
புரிவில்லை.//

புரியவில்லை என்று இருக்க வேண்டுமோ ? நல்லா ரசிச்சு எழுதிரூகீங்கன்னா.
காத்திருகிறேன்...
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!//

நச்!
***
மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//

மிக அருமை.
உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?//

அவுங்க தான் சொல்லனும்.
விஜய் said…
//காத்திருகிறேன்...
மீண்டும் ஒரு குளிர்காலத்திற்கு....
கனத்த ஆடைகளைப்...
போட்டெரித்து.......
வெற்றுடம்போடு..
குளிரினைக் கட்டி அணைத்து...
நேசம் கொள்ள!
***//

அருமையனா கனவு கவிதை...



//உனக்கென்று...
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!
//

அருமையான காதல் உணர்வுகளை சுமக்கும் வரிகள்




என் தேவா அண்ணா , சகலகலா வல்லவன் அப்டின்னு நிருபிக்கிறார் பார்த்தீங்களா ?...நீங்க கலக்குங்க அண்ணா
dheva said…
இராமசாமி கண்ணன் @ நன்றி தம்பி திருத்தி விட்டேன்...
மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//

மிக அருமை.... பராட்டுக்கள்.
dheva said…
கருணாகரசு...@ என்ன பாஸ் இமிடெய்ட பிச்சு எறியுறீங்க.....ஹா...ஹா..ஹா..!
Unknown said…
//ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//

சுதந்திரத்தை , இயற்கையோடு ஒப்பிட்ட இடம் நல்ல கவிஞனை இனம்காண செய்தது... நன்றி...தொடர்க.
முதல் கவிதையில் கீதம் என்றில்லாமல் சோகம் என்றுமட்டும் சொல்லபட்டிருந்தால் இன்னும் ஆழமும்.,அதிர்வும் சேர்ந்து அற்புதம் அடைந்திருக்கும்.
dheva said…
விஜய்....@ தம்பி. டேய்..... என்ன இது இப்படி எல்லாம் கமெண்ட்...ஹா...ஹா..ஹா..!
உன் ஒவ்வொரு...
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***

///

நிஜமான வலி..
பயணம்,கவிதை,குளிர்,கூடல்,மொழி,காதல்,சுதந்திரம்,தோல்வி,வலி,என்று வார்தைகளுக்குள் கொண்டு வந்திருப்பானோ கவிஞன்...!

விஜய் சொன்னது சரி தேவா அண்ணன் சகலகலா வல்லவன் தான்
பத்மா said…
எல்லாம் அருமைங்க ஆனா இது

ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....
சாரலாய்...என் நெஞ்சுக்குள்...
பெய்தது... நீ கேட்ட மழை...!

அருமையோ அருமைங்க
அது ரெண்டுபேர் மனதிலும் சேர்ந்து பெய்தால் அதான் காதலின் உன்னதம்
நல்ல இருக்குங்க தேவா
***
veeramanikandan said…
ungaloda multiple personality theriyudhu... neenga edhayume vidamateengala... thodar, kavidhai, katturai... kalakkunga...
வணக்கம் நண்பா! உங்களின் கவிதைகளில் எதனைக் கோடிட்டுக் காட்டுவதென்றே முடியவில்லை. அத்தனை கவிதைகளும் அருமை. ஆழமான சிந்தனை கலந்த நிஜமான வரிகள். தொடருங்கோ. வாழ்த்துக்கள்.
வணக்கம் நண்பா! உங்களின் கவிதைகளில் எதனைக் கோடிட்டுக் காட்டுவதென்றே முடியவில்லை. அத்தனை கவிதைகளும் அருமை. ஆழமான சிந்தனை கலந்த நிஜமான வரிகள். தொடருங்கோ. வாழ்த்துக்கள்.
vasu balaji said…
//நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நீரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...//

இதுதான் வாழ்க்கை ரகசியம்:) சூப்பர்ப் தேவா!
\\நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்..\\
சரியா சொன்னீங்க.
கவிதைகள் அருமை..
மாம்சு.... கூடல், தோல்வி.... இந்த ரெண்டு கவிதைகளும் சான்சே இல்லை.... ரொம்ப டாப்பு....


ஓவராலா பார்க்கும் என்னோட காதல்கவுஜைகள்கிட்ட வந்துகிடாது.... :))
SASIKUMAR said…
அருமையோ அருமை
Respectful Mr. Naanjil pradhaap
please tell us the true [Warrior] மெல்ல திறக்கட்டும் மனது...! sothappala? supera?
---shyssian
Anonymous said…
அருமையோ அருமை
Respectful Mr.Naanjil Sampath
please tell us the true மெல்ல திறக்கட்டும் மனது...! sothappalaa? supera? --shyssian
எல்லா கவிதையும் நல்லா இருக்கு அண்ணா.
//கவிதை


மெல்ல நகரும்...
ஒரு ஆற்றின் ஓரத்தில்..
சப்தமின்றி..நீரில் சாய்ந்து....
கவிதை செய்கிறது
ஓற்றை நாணல்!//
//சுதந்திரம்

ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//
எல்லாக் கவிதையும் நல்லாயிருக்கு. இது ரெண்டும் இன்னும் நல்லாயிருக்கு.
Unknown said…
//வலி

உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?

அருமை
எல்லாமே நல்லாருக்கு மகன்ஸ்.

// ஏன் இன்று வரை...
புரியவில்லை..
இரைச்சலுக்கு...
மெளனத்தின்
மொழி..மட்டும்!//

இது ரொம்ப நல்லாருக்கு.
//உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா? //

அனுபவம் பேசுது........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Chitra said…
சுதந்திரம்

ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!

....... தேவா...... மிகவும் ரசித்து வாசித்தேன் ...... இந்த கவிதை தான் பெஸ்ட். பாராட்டுக்கள்! ஒவ்வொரு கவிதையும் இனிமையாய் கருத்துக்களை சொல்கின்றன. :-)
"சில நேரம் மனதில் என்னவென்றே சொல்லமுடியாத இரு இனம் புரியாத பரவசம் ஏற்படும். அப்படிப்பட்ட கணங்களில் நல்ல காட்சிகளை கேமராவால் கிளிக் செய்வது போல...உணர்வுகளை வார்தைகளில் டக் டக் என்று கேட்ச் பண்ணி வச்சுகிட்டா... படிக்கும் போது எல்லாம் மனம் கிளர்ந்து எழும்."

அப்போ நீங்க ஆபிச்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யாமா நல்லா ஓபி அடிக்குறீங்க.

நல்லா ஓபி அடிங்க அப்பத்தான இந்த மாதிரியான அருமையான நினைவுகள பதிவு செய்வீங்க. இங்க இருக்குறதுல எல்லாமே எனக்கு பிடிச்சிருக்கு. நான்கே வரிகளில் எத்துனை அற்புதமான உணர்வுகளின் வெளிப்பாடுகள்.

பின் குறிப்பு: நிறைய தொடர் இருக்கு அதையும் கொஞ்சம் பாருங்க. அதிகமா காக்க வைக்குறீங்க.
//மெல்ல திற்க்கட்டும் மனது//

இந்த தலைப்பிலேதான் எத்தனை அமைதி.
Chitra said…
தோல்வி


உன் ஒவ்வொரு...
மெளனத்திற்கும்...
எதிர் கவிதை எழுத...
அந்த தருணத்திலேயே..
பட்டுப்போகின்றன வார்தைகள்!
***


..... Very nice! :-)
Chitra said…
நல்ல உணர்வுகளை விவாதம் செய்வது அறிவீனம்....! எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நீரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...


...... நேர்த்தியான கருத்து, தேவா.... அழகு! பாராட்டுக்கள்!
"பூவில் வண்டு கூடும்...
கண்டு போகும் கண்கள் மூடும்"...............

.......அழகான் பாடலின் வரிகள். உங்களுக்குள் கவித்துவம் இருக்கிறது. மேலும் பல கவிகள் புனைய வாழ்த்துகிறேன்.

கவி மழையில் நனைய காத்திருக்கிறேன். பாராடுக்கள். நட்புடன் நிலாமதி
/ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!//


ம்ம்


நல்லா வந்திருக்கு பாஸ் !!!!

கலக்குங்க ! :)
///சுதந்திரம்

ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!///

இதுதான் நான் மிகவும் ரசித்த கவிதை... மிக அருமை. வாழ்த்துக்கள் மாப்ஸ்.
//அருமையோ அருமை
Respectful Mr. Naanjil pradhaap
please tell us the true [Warrior] மெல்ல திறக்கட்டும் மனது...! sothappala? supera?//

Respectful Mr.Sasi Kumar,

As I am suffering from Fever...
அடச்சே... Respectful போட்டாலே பள்ளிக்கூட லீவு லெட்டரதான் ஞாபகத்துக்கு வருது...

கவித சூப்பர்தான்... நான் சொன்னத சும்மா லுல்லலலா...
//ஜீவன்பென்னி said...
//மெல்ல திற்க்கட்டும் மனது//

இந்த தலைப்பிலேதான் எத்தனை அமைதி.//

ஷபீர்... சரி...சரி... கொடுத்த காசுக்கு மேல கூவ கூடாது...தல.... :))
dheva said…
கே.ஆர்.பி செந்தில்...@ நன்றி பாஸ்... நீங்க சொல்றது கரக்ட்தான்..கீதம்னு வரமா சோகம்னு வந்த நச்சுனுதான் இருந்திருக்கும்!


வெறும்பய...@ நன்றி தம்பி....!


செளந்தர்...@ வரவர....பேரரசு படம் மாதிரி இல்ல போய்கிட்டு இருக்கு பில்டப் எல்லாம்...!


சிவா...@ நன்றி தம்பி!


வீரமணி...@ நன்றி தம்பி!


பத்மா...@ ஆமாங்க.. நீங்க சொல்றது சரிதான்... இவன் மனசுல மழை பெய்தா....அடுத்து அவ மனசுல பெய்ற மாதிரி செஞ்சுடுவான்ல...!


தமிழ் மதுரம் @ மிக்க நன்றி!


அம்பிகா....@ நன்றி தோழி!


நாஞ்சில்...@ மாப்ஸ்....உன்கிட்ட வாழ்த்து வாங்குறது....பெரிய பாடா போச்சு....என்னா வில்லத்தனம்....? உன் கவுஜ கிட்ட யாரு மாப்ஸ் வரமுடியும் ?


சசிகுமார்....@ நன்றி சசி!


ரமேஷ் (ச்ரிப்பு போலீஸ்) - நன்றி தம்பி!


கலா நேசன்..@ நன்றி கலா நேசன்...!


ப.ரா..@ நன்றி சித்தப்பா...! சித்தப்பா...மறு உலை வச்சுதான் ஆகணும் போலயே....


ஜெய்லானி...@ ரிப்பீட் ராஜாவுக்கு நன்றி...!


சித்ரா...@ இப்டிதான் பண்றதா... உங்க வீட்டு தேவைக்கு லேட்டா வர்றதா...? நன்றி தோழி!


ஜீவன் பென்னி...@ இருப்பா..ஒவ்வொருத்தனா வாங்க...மொத்தமா வந்தா நான் என்ன செய்யுறது.? ஹா...ஹாஅ..ஹா...


நிலாமதி...@ நன்றி தோழி!


நேசமித்ரன்... @ நன்றி தோழர்....!


சிறுகுடி ராமு.....@ நன்றி மாப்ஸ்!



பாலாண்னே....(வானம்பாடிகள்) @ நன்றின்ணே...!


@எல்லோரும் நாஞ்சில் பிரதாப்ப விட்டுடுங்க... ...அவரு நம்ம மாப்ஸ்தான்....!
" ஷபீர்... சரி...சரி... கொடுத்த காசுக்கு மேல கூவ கூடாது...தல.... :))"

ரிபீட்ட்ட்ட்ட்ட்டேய்.

ஷமீர் அகமது.
Anonymous said…
எப்பிடி தேவா இவ்ளோ அழகா அருமையா எழுதறே ??எல்லாமே சூப்பர் ஆனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது இந்த வரிகள் தான்
"ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!"
அத்தனையும் அருமை.

"ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!"

எல்லாவற்றையும் விட இந்த கவிதை ரொம்பப் பிடித்தது.
only one word i can say excellent
///எல்லா நேரமும் மூளையைச் சுமந்து செல்வது இயந்திரத்தனம் ஆகிவிடும்...சில நேரம் மூளையை கழற்றி வீசிவிட்டு.....வாருங்கள்....வாழ்வின் அற்புத பக்கங்களை காண...////

அற்புதமான வரிகள் அண்ணா ..!! நீங்க கவிதை கூட நல்லா எழுதறீங்க ...!!

///உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?///

எனக்கு தெரியலை ...
ரசித்து வாசித்தேன்.

'கூடல்' மிக அருமை.
vinu said…
உனக்கென்று...
என்ன வேண்டும்...
கற்பனையாய் கேட்டேன்..
ஒரு மழை பெய்தால் போதும்
எதார்த்தமாய் நீ சொன்னாய்.....


cute
அனு said…
///உன்னைப் பிரிந்த...
அந்த தருணத்தில்...
அழுகைக்கும் சிரிப்புக்கும்
இடையே.. ஒரு பாவம் காட்டினாயே....
அதற்கு பெயர்தான் காதலா?//

அருமை...
Bavan said…
நல்லாயிருக்கு..:))))
///////////
ஒரு காட்டு மலராய்...
இருப்பதில்தான்..
எவ்வளவு சுகம்...
மலர்ந்தாலும்..காய்ந்தாலும்...
கருத்து சொல்ல யாருமில்லை...!////////

அந்தரத்தில் கயிற்றில் நடக்கும் வீரனை ஒத்த உணர்வுகள கொண்ட வார்த்தைகள் மிகவும் ரசிக்க வைத்தது .பகிர்வுக்கு நன்றி நண்பரே
குறை காண முடியா நிறைவான கவிதைகள்..

அருவி போல் பாய்ந்து வாருங்கள் இன்னும் இன்னும்..
எவ்வளவு அழகான வீச்சங்கள் உங்களிடமிருந்து ரசனை என்பதுதான் வாழ்க்கை, அதை அனுபவிப்பதற்கும் பக்குவ ஞானம் வேண்டும், உங்களுக்கு வாய்த்திருக்கிறது.. எதையும் தனித்தனியே பிரித்து நன்மொழி உதிர்த்திட விரும்பமில்லை... இயற்கையும், பசுமையும், சாரலும், சுதந்திரமும் எத்தனையோ சொல்கிறது... நல்ல கவிதைகள் தேவரே....
அமைதியாய் புணர்ந்து...
பிரியும்..இந்த வண்டுகளுக்காகவே...
நான் பூவாக...
பிறக்க வேண்டும்...
ஒருமுறையாவது!//

காட்டு மலர் ஈர்த்தாலும் இது ரொம்பப் பிடிச்சு இருக்கு தேவா