
எழுத வேண்டிய தொடர்களின் தொடர்ச்சியை சிந்தித்துக் கொண்டிருக்கும் மூளையை சமகாலத்தில் எழும் எண்ணஙகள் ஆக்கிரமித்து தொடர்ந்து விழுங்கிக் கொண்டே இருக்கிறது. ஏதோ எழுத வேண்டும் என்ற எண்ணத்துடன் விசைப்பலகையை தட்டத் தொடங்கினால் ஏதோ ஒன்று வருகிறது. திட்டமிடாத எழுத்துக்கள் வெகுதுல்லியமாய் தெறித்து விழும் வீச்சை நானும் பின் தொடர வேண்டியதாயிருக்கிறது.
திட்டமிட்டு செய்வோம் பல சூழ்நிலைகளில் ஆனால் என்ன நடக்கவேண்டும் என்று தீர்மானிக்கும் சக்தி ஒரு காரணி சார்ந்தது அல்ல....அது பல விசயங்கள் சார்ந்தது ஆனால் நிகழும் நிகழ்வுக்கெல்லாம் மனித மூளை ஒரே ஒரு காரணத்தை தேடும் போதுதான் ஏமாற்றமும் கோபமும் மனிதனை ஆக்கிரமிக்கின்றன.
சக மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கூட ஏதோ ஒரு வகையான எதிர்மறையான அவர்களின் எண்ணங்கள் காரணமாகின்றன். இந்த எதிர்மறையான எண்ணங்கள் ஏற்படுவதற்கு அவர்களின் புரிதலில் இருக்கும் கோளாறும், முறையற்ற செயல்களால் மற்றவர்களால் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளும் காரணமாகிப் போகின்றன.
புரிதலில் இருக்கும் கோளாறு வளர்ப்பிலும், வளரும் போது ஏற்படும் அல்லது தாக்கம் கொடுக்கும் புறச்சூழலும் காரணமாகிறது. முறையற்ற செயல்களால் தீங்கு ஏற்படுவதற்கு யாரோ தன்னுடைய சுய நலத்துக்காக செய்யும் அநீதிகளும் காரணமாகின்றன.
நம்மில் பல பேருக்கு தவறு என்றால் ஒரு சில செயல் சார்ந்த விசயங்கள் மட்டுமே நினைவுப்புள்ளியிலிருந்து வெளிப்பட்டு இது சரி இது தவறு என்ற ஒரு தீர்மானிப்புக்கு வந்து விடுகிறார்கள் ஆனால் அறியாமல் செய்யும் ஓராயிரம் விசயங்கள் சக மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதை உணராமலேயே எண்ணங்களாலேயே கொன்று குவித்துக் கொண்டு இருக்கிறோம் ஒராயிரம் மனிதர்களின் உணர்வுகளை.
எப்படிப் பார்த்தாலும் சக மனிதனின் சுயத்தை தொடும் அவரது சொந்த விசயங்களை ஆராயும் ஒரு தன்மை பெரும்பாலும் நமது சமுதாயத்தில் இருப்பது மறுப்பதற்கில்லை. எதிர்த்த வீட்டுக்காரனுக்கும் பக்கத்து வீட்டுக்காரனுக்கும் யாரோ ஒரு தூரத்து சொந்தக்காரனுக்கும் பயந்து பயந்து தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் உணர்வுகளை புதைத்து வாழ்பவர்கள் ஏராளம்.
காரணம் ஊர் என்ன சொல்லுமோ என்ற பயம். ஊரில் உள்ள 90 முட்டாள்கள் ஒரு விசயத்தை ஆதரித்து அதை அரங்கேற்றினால் அது ஏற்றுக் கொள்ளக்கூடியது என்றும் 10 பேர் நல்ல விசயம் சொன்னால் அது தவறு என்ற ஒரு பொது புத்தி நம்மிடையே இருக்கிறது. பொது புத்தி என்றால் நமது மனதை நாமே ஏமாற்றி மிகைப்பட்டவர்கள் சொல்வது சரியாயிருக்கும் என்று நம்புவது.
" எல்லோரும் சொல்வது சரியா? இல்லை எது சரியோ அது சரியா? "
இந்த கேள்வியை ஒவ்வொரு கணத்திலும் கேட்கும் போது நாம் பார்க்கும் எந்த ஒரு செயலிலும் இருக்கும் ஒரு அறியாமை தெளிவாக தெரியும். எனது உறவுக்காரர் ஒருவர் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். நாங்கள் எல்லாம் மதிய உணவருந்தி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். என்னுடைய மனைவி குழந்தை பற்றியெல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார் அந்த உறவுக்காரர். அப்போது அம்மாவின் முகத்தை நான் பார்த்த போது சற்றே வாடி இருந்தது. என்ன விசயம் என்றே புரியவில்லை. வந்த விருந்தினரும் இரவு தங்கி விட்டு மறு நாள் காலையில் காபி, டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பி போய் விட்டார்.
நான் ஊருக்கு வந்திருந்த அந்த ஒரு மாத விடுமுறையில் அம்மாவின் முகம் வாடியிருந்ததை அப்போதுதான் கவனித்தேன்." என்னாச்சும்மா?..." அம்மாவிடம் தனியே அழைத்து கேட்டேன்....! அம்மா சொன்னார்கள்..அது ஒண்ணும் இல்லைப்பா... நீ தனியே எங்களை எல்லாம் விட்டுவிட்டு உன் மனைவி குடும்பம் என்று சென்னையிலேயே செட்டில் ஆக போறியாப்பா? வெளிநாட்டில் இருந்து கொண்டே தனியா செட்டில் ஆவதற்கு எல்லாம் செய்றீயாமே? அம்மாவின் கேள்வியில் பதறிய நான்...? என்னாச்சும்மா ஏன் இப்படி கேக்குறீங்க....
இல்லப்பா அந்த மாமா வந்துட்டுப் போனார்ல அவர் சொன்னாரு....ஊர்ல ஒரு உறவினர் திருமணத்திற்கு போன பொது எல்லோரும் பேசிக்கிட்டாங்களாம் அவர் கேட்டுட்டு வந்து சொன்னாரு...என்று சொன்னார்கள். ஹேய்...வாட் இஸ் திஸ்....அது எப்படி என்னுடன் என் வாழ்க்கையின் திட்டமிடலில் நேரடி சம்பந்தம் இல்லாத யாரோ...ஹூ த ஹெல் இஸ் தட்? எனக்கு வந்த கோபம் டெலிபோன் காலாய் மாறி பாதி வழியில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த உறவினரை தொடர்பில் கொண்டு வந்தது.
என்ன மாமா? அம்மாகிட்ட என்ன சொன்னீங்க...?அவர் விலாவாரியாக சொன்னார்...சுப்பிரமணியன் மகளுக்கு கல்யாணம் வச்சிருந்தான்ல அங்க பேசிக்கிட்டாகப்பு.... நாந்தேன் அக்காகிட்ட (எங்க அம்மா) ஒண்ணும் உங்ககிட்ட கேக்க வேணாம்னுல சொன்னேன்...என் கோபம் உச்சத்திற்கே சென்றது...எதுக்கு ஒரு செய்திய சொல்லணும் அப்புறம் கேக்க வேணாம்னு சொல்லணும்.....ஏன் இந்த பொழைப்பு என்று மனதினுள் நினைத்ததை வெளிக்காட்டாமல்...ஏன் மாமா யாரு சொன்னது இப்படின்னு பொறுமையாய் கேட்டேன்....எனது மனதில் இதைச் சொன்னவர் யார் என்றறியும் ஆர்வமும் அம்மாவின் மனதை தெளிவாக்க வேண்டிய வேகமும் இருந்தது....
மாமா சொன்னார்... " அங்கன தான் பேசிக்கிட்டாகப்புன்னு...மீண்டும் சொன்னர். திரும்ப யாரு மாமன்னு கேட்டதற்கு....இன்னாருன்னு தெரியலப்பு...ஒரு கூட்டத்துல பேசிக்கிட்டு இருந்தத கேட்டேன். அம்புட்டுதேன்..என்று ஏதோ சாதாரணமாக சொல்ல அதற்கு மேல் எனக்கு அந்த விசயத்தில் அதீத ஆர்வம் இல்லை. இது வம்பு பேச்சு (gossip) என்று புரிந்து கொண்டேன்.
பின் அம்மாவிற்கு புரிய வைத்தேன்....இப்படி யாரோ சொல்வதை கேட்டு நாம் தீர்மானங்களை எடுத்தால் நமது சொந்த வாழ்க்கை அல்லவா தப்பிப்போகிறது.
அதன் பிறகு எல்லாம் சுமுகமானது எனது வீட்டில் அதை விட்டு விடுவோம் இப்போ...
ஆனால்....
இந்த யாரோக்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் இருப்பார்கள். தேவையில்லாமல் அவர்களை அனுமதிப்பதை விட்டு விட்டு மனதளவில் என் வாழ்க்கை நான் வாழ்கிறேன் என்ற எண்ணத்தோடு எப்போது பார்த்தாலும் அடுத்தவரையே உற்று நோக்காமல் நமது வாழ்க்கையை நாமே வாழ வேண்டும். என் சட்டையை முதலில் வெளுத்துக்கொள்கிறேன்.... என்ற எண்ணத்தோடு வாழ்ந்து பிறரின் சட்டைகள் கரையாயிருக்கிறது என்று சொல்வதற்கான நமது தகுதிகள் என்னவென்று ஆராய்ந்து வாழ்தல்தானே சுகம்?
இப்போ தெரியுதா...ஒரு பிரச்சினைக்கு ஒரு காரணம் இல்லை பாஸ்... ஏகப்பட்ட காரணிகள் இருக்கு.....குறைந்த பட்சம் நாம் ஒரு காரணியாய் இருந்து ஏதேனும் பிரச்சினையின் பகுதியாய் இருப்பதை விட.......நமது வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி வாழலாமே ....?
யாரோ சொல்லும் தேவையில்லாத நம்மைப் பற்றிய விமர்சனங்களை குப்பையில் தூக்கிப் போடுங்கள். உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே பெயரோடு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை கவனித்தால் போதும்,
வாழ்வின் சந்தோசங்கள் எல்லாம் பெரிய பெரிய விசயங்களில் இல்லை....அவை சின்ன சின்ன விசயங்களில் ஒளிந்து கொண்டு காத்திருக்கின்றன நம்மை சந்தோசப்படுத்த, நாம்தான் கவனிப்பதில்லை......!
தேவா. S
Comments
அருமையான வரிகள்! எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு!
அப்புறம் தேவா! ஏன் என் கடை பக்கம் உங்களை காணோம். புது பதிவுகளை எழுதி இருக்கேன். வந்து பாத்து உங்க கருத்தை சொல்லுங்க.
பதிவுக்கு ஓட்டு போட்டாச்சு!
உண்மைதான் நண்பரே ,நம்முடைய வாழ்கையை நாம் தான் தீர்மானிக்கவேண்டும் .நம்மை சுற்றி இருப்பவர்க்களிடம் வாழ்கையை விட்டுவிடக்கூடாது .நல்லபகிர்வு நம்வாழ்க்கை நம்முடையதே...
அருமையான பதிவுங்க அண்ணா
நிச்சயமாக சுயநலத்திற்காக செய்யப்படும் செயல்களால் சில அநீதிகள் நடக்கத்தான் செய்கிறது..
//பொது புத்தி என்றால் நமது மனதை நாமே ஏமாற்றி மிகைப்பட்டவர்கள் சொல்வது சரியாயிருக்கும் என்று நம்புவது.//
இதுதான் பொது புத்தியா ..?
//. என் சட்டையை முதலில் வெளுத்துக்கொள்கிறேன்.//
இந்த மாற்றம் தான் வரவேண்டியது. முதலில் தமது தவறுகளைப் பார்க்காமல் அடுத்தவர் தவறுகளைப் பார்ப்பது .. அழகாக சொல்லிட்டீங்க அண்ணா ..!
//
உண்மை தான் தேவா
நல்ல பகிர்வு
நல்லா மாட்டிக்கிட்டேனே...என்ன சொல்றது... வரும்ம்ம்ம்ம்....ஆனா வராதுன்ற மாதிரி...
சென்னைலதான்....ஆனா அப்பா அம்மவையும் கூட்டிக்கிட்டு....!
நல்லா போட்டின்ங்க செந்தில்.... நங்கூரத்த....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
அருமையான வரிகள்
இந்த கேள்வியை ஒவ்வொரு கணத்திலும் கேட்கும் போது நாம் பார்க்கும் எந்த ஒரு செயலிலும் இருக்கும் ஒரு அறியாமை தெளிவாக தெரியும்
ஆம் உண்மை தான் தேவ்
நல்ல பகிர்வு
கவனித்தால் போதும் //
உண்மையான கருத்தை சொல்ல மனிதர்கள் நேரே ஜீன்ஸ், போட்டு நேர்த்தியாய் வருவார்கள் அவர்களை
கவனித்தால் போதும்.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ம்..இப்படியும் இருக்கலாம்...!
நல்ல பகிர்வு.
எதையும் தாங்கும் இதயம் வேண்டுமுன்னு அறிஞர் அண்ணா சொன்னார்
நீங்க என்னா சொல்றீங்னா..????
நா இப்ப எந்த அண்ணா சொல்வதை கேக்க
தேவாண்ணா எங்களை விட்டுடுங்க நாங்க பாவம் ..!! ஒரு கொலை செஞ்ச ( தற்கொலைக்கு தூண்டுற ) பாவம் எதுக்கு உங்களுக்கு
நீளமா பதிவிழுதுரதுலயும் போட்டியா... ஞாயிட்டுகிழமை லீவுதான் படிச்சி பிண்ட்டம்...ஒட்டு இப்ப...:) //
யோவ் மாக்கான் , அன்னைக்கு பெரியாஸ்பத்திரி லீவு .இன்னைக்கே படிச்சி தொலை..ஹி..ஹி..
///////////
முகவரி இல்லாத விமர்சனங்கள் குப்பை தொட்டிக்குள்தான் இருக்கவேண்டுமே தவிர சிறந்த பதிவுகளுக்குப் பின் மறுமொழியாக இல்லை . வாழ்த்துக்கள் தேவா .