Skip to main content

விலை....!



















அச்சரங்களின் அடுக்குகளில்
துடைக்கப்படும் தூசுகளில்
கூட்டும் அலங்காரங்களில்..
வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!

கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!

கனமா எதையோ எழுதிட்டு அதுக்குள்ள திரும்ப திரும்ப சுத்திகிட்டு இருக்க முடியாம ஒரு மாற்றத்துக்காக ஒரு கமர்சியல் பீட். சூப்பர் ஸ்டார் பதிவு எழுதணும்னு ஆரம்பிச்சேன்....தேன இறக்கி வச்சுட்டேன். கடவுளும் நானும் தொடர் பதிவு எழுத வந்தேன்....வேறு ஏதோ எழுதிட்டு போறேன்.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))

வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....

என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?

அதான் சொன்னேனே...வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!


தேவா. S

Comments

Chitra said…
.வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!

..... Sure to enjoy life's blessings with that attitude! :-)
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....//

உண்மைங்க...
Mohamed Faaique said…
//வாழ்க்கையை தொடரவிட்டு அப்போ அப்போ ரசிக்கணும்னு.... இப்போ நான் ரசிச்சுகிட்டு இருக்கேன்.... தொடர்பில்லாமல் தொடர்கிறேன்....!//

எல்லோருடைய நிலையும் இதுதான் ...
Unknown said…
கவிதை நல்லாயிருக்குங்க தேவா..
அடுத்த பதிவு கடவுளும் நானும் !!!!!!!!!!!!
sakthi said…
ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை

நல்ல கருத்து தேவா

மின்னல் வேகத்தில் தொடர்ந்து பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்

ஒரு கவிதை எழுதறகுள்ள எனக்கு நாக்கு வெளியே தள்ளிடுது

கலக்குங்க
//கூட்டி குறைத்து, நீட்டி சுருக்கி...
சுருதிகளின் சுத்தங்கள் மழிக்கப்பட்டு...
எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...
என்ற வக்கிரத்தின் ஜோடனைகளில்
மரித்துப் போன அர்த்தங்களின்
கல்லறைகளில் தொடங்குகிறது
ஓராயிரம் எழுத்து வியாபாரங்கள்!/ /
சரியாச்சொன்னீங்க... //சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை// இதுலதான் திரில்லே இருக்கு. நடக்குறத அப்புடியே ஏத்துக்கிட்டு எத்தனை பேரால வாழ முடியும்.
//.(அடுத்த பதிவு கடவுளும் நானும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... போடுறதே ரொம்ப தாமதம் இதுல என்ன மகிழ்ச்சி வேண்டி கிடக்கு.. (மனசாட்சியின் மிரட்டல்))///

சீக்கிரமே எழுதுங்க ..

//எதார்த்த குழந்தைகளுக்கு...
மீசைகளிட்டு முறுக்கி
புஜ பலங்கள் காட்டும் முயற்சிகளில்
பின்புலத்தில் விற்றுத்தான் ஆக வேண்டும்...//

இந்த வரிகள் கலக்கல் அண்ணா ..
//வாசிப்பாளனை... அசத்தும் முயற்சிகளில்
மாறிக் கொண்டே இருக்கிறது
தூரிகைகளின் வர்ணங்கள்...!//

Playing to the Galary-ன்னு இதை தான் சொல்லுவாங்க தேவா? வாசிப்பாளனை அசத்துகிற முயற்ச்சிகள் தான் பல மலினமான இலக்கியங்கள் வெளி வருவதற்கு காரணங்களாக இருக்கிறது

நல்ல வரிகள்! பாராட்டுக்கள்
Jey said…
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் ....ஆனா அப்போ ...அப்போ....சுவாரஸ்யத்தை எகிர்பாராமல் நடப்பதை தொடரவிட்டு... கொஞ்சம் ரசிப்பதில் தப்பு இல்லை.....//

very nice.
வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்..

//

உண்மை
சரி அடுத்த பதிவு எப்போ?
அடுத்த பதிவுல என்ன போட போறீங்க? அதிலும் கவிதையா? தத்துவமா? - சும்மா வாழ்க்கையின் சுவாரசியத்திற்கு காத்திருக்க முடியாதவர் சங்கம்
கவிதை ஏதோ சொல்லுது புரியல. காசுக்காக எழுதுறவங்கள பத்தி சொல்லியிருக்கீங்களா?
Riyas said…
//வாழ்க்கையின் சுவாரஸ்யமே அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாம இருக்கறதுதான்....சுவாரஸ்யமான வாழ்க்கையை சுவாரஸ்யமா தொடரவிட்டு வேடிக்கை பாக்கிறது கொஞ்சம் கஷ்டம்தான் ஏன்னா எப்பவுமே திட்டமிடல்கள் நம்மை துரத்தும் //

யாவும் உண்மை..
க ரா said…
வந்தேன் .. வாசித்தேன்.. செல்கிறேன் :)
nis said…
உங்களின் வரிகள் ஒவ்வொன்றும் வியக்க வைக்கிறது
nice
vinthaimanithan said…
ம்ம்ம்ம்...கச்சேரி களைகட்டுது...
என்ன கேக்குறீங்க...? கவிதைக்கும் இந்த கட்டுரைக்கும் என்ன சம்பந்தம்னா....?
////

யாரு இந்த டவுட்ட கேட்டா ? சொல்லுங்க இப்படியே மசாலா இல்லாம தந்தூரி பண்ணி சாப்ட்டு போயிடுவோம்
கழுகு கூட்டத்தில் ஒருவனாக நான் இணைய எனக்கு தகுதி இருந்தால் சொல்லுங்கள் அண்ணா...உங்கள் கையால் ஒரு blog-ம் open செய்து கொடுங்கள்...

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...