Skip to main content

சினேகம்...!






















எப்போதாவது...வந்து செல்கிறது...
உன் நினைவுகள்...!
கடந்தகால விதைத்தலின்
விசுவாசமாய்....!
மெலிதாய் கிளர்ந்தெழும்.. நினைவுகளூடே....
மெளனமான பார்வையால்..
நம் கடந்த கால...சந்தோசங்களை
அவ்வப்போது வாரித்தெழிக்கிறாய்....!

எதிர்பார்ப்பே இல்லாமல் ....
நேசித்ததின் அடையாளமாய்...
இன்னமும்....ஒரு எதார்த்த
பிம்பமாய்... என்னை வலம்
வரும் உன் நினைவுகளோடு...
உன் பெயர் சொல்லி...
அழைத்து வாஞ்சையோடு...
என்னருகே இருத்தி...
என் பேத்தியின் தலை தடவும்
பொழுதுகளில்..கோர்க்கும்...
கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!


காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,

பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேயே ஒரு வித ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில் நின்று ஒரு வித சந்தோசத்தை உடலெல்லாம் பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது....?

மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!


தேவா. S

Comments

க ரா said…
அது எப்படி வயசான உடனே நான் இப்படித்தான் இருப்பேன்னு நீங்களே உங்களே வரஞ்சு வெச்சிருக்கிங்க.. ஒவியம் சூப்பர்.. கவிதை அத விட :)
Chitra said…
மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!


.......இந்த மென்மையான உணர்வுகளை, வயாதாகும் முன்னே, நீங்கள் உணர்ந்து உள்ளதை, கவிதையிலும் அதன் விளக்கத்திலும் காண முடிகிறது. :-)
Anonymous said…
//கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில்
விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும்
சில நினைவுகளை வலுக்கட்டாயமாக
கொண்டு வராமலேயே
ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில்
நின்று ஒரு சந்தோசத்தை உடலெல்லாம்
பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள்
இல்லாமல் யாரும் இருக்க முடியுமா?....//

கவிதைக்கு விளக்கமும் கவிதையாகவே இருக்கே அண்ணே!
சூப்பர்:)
//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!//

நன்றாக இருக்கிறது அண்ணா.மேலே குறிபிட்டது எனக்கு பிடித்த வரிகள்
@dheva
உங்கள் வயது என்ன என்று எனக்கு தெரியாது .ஆனால் சித்ரா கூறியது போல் இருந்தால் உங்கள் மனது பூ போன்றது
தள்ளாடும் வயதில் வரும் பழைய கால நினைவுகளை பற்றி அனுபவிக்காமல்.... அனுபவித்து கூறிய விதம் அருமை அண்ணா...
//கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!//

ஒரு தலை காதலை பற்றி தானே இது தேவா? அதன் சக்தி வீரியம் ஆனது தான் இல்லையா? மனத்தில் ஒளிந்து கொண்டு தினமும் நம் மனதிரையில் அந்த சொல்லாத காதலை ஓட்டு, நமக்கு ஒரு வேதனையையும், மகிழ்ச்சியையும் ஒரு சேர கொடுத்து...அதன் விளையாட்டுக்கள் அருமை...
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க

ங்கொய்யாலா.... யாராவது இப்படி கமெண்ட் போட்டீங்க, உங்க வீட்டுல வந்து நான், டெரர், ரமெஷ் எல்லாம் சேர்ந்து கும்மி அடிப்போம்
dheva said…
அருண்...@ தம்பி உடையான் படைக்கு அஞ்சான். அப்படின்ன்னு சொல்லிட்டு புரூஃப் பண்றேன்னு சொன்னியே... அதானா இது.....
//தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.//

கண்டிப்பா, நாங்க இருக்கும் போது யார் உங்களை கலாய்கறாங்கனு பாத்துக்கறேன்
பல்லாயிரம் பேரின் காதலை பதிவாக்கி உள்ளிர்கள
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க
//பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...//

இது நிறைய நடக்குது அண்ணா.. எல்லோர் வாழ்கையிலும் இது போன்ற தருணங்கள் கண்டிப்பாக இருக்கும் ..!!

//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்..//

நானே சில சமயம் அப்படி சிரித்திருக்கிறேன் ..!!
Unknown said…
//காதல் என்பது பல நேரங்களில் ஒரு தயக்கத்திலேயே சொல்ல முடியாமல் போகும் அளவிற்கு காலத்தின் கணக்குகள் இருக்கும். சொல்லாத காதல்கள் சொல்லாததால் இல்லை என்றாகிவிடுமா? வாழ்வின் பல நேரங்களில் கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,//

nidarsanamaana unmai....
VELU.G said…
ரொம்ப நல்லாயிருக்குங்க தேவா
Kousalya Raj said…
கவிதைகளின் வரிகளை படிக்கும் போது 'சொல்லாத காதல்' என்ற ஒன்று பலருக்குள்ளும் பசுமையாக இருந்து வயதான காலத்திலும் நினைவுக்கு வந்து வலியை கொடுக்கும் என்பதைத்தான் எனக்கு புரிய வைக்கிறது. பேத்தி பேர் கூட அவங்க பேர்தானா....??!


//மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!//

அனுபவம் வாய்த்தவர்களும், இப்போது அப்படித்தான் வானம் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்...!!

:))
வினோ said…
கவிதையும் விளக்கமும் அருமை

நானும் வந்திட்டேன் தேவா...
ஆகா, சூப்பர்
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
கலக்கல் பதிவு
எப்படி இப்படிலாம் யோசிக்கறீங்க
மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்...../////

தனிமையில் பழைய நினைவுகளை நினைத்து பார்த்தால்
நல்ல அனுபவமாக தான் இருக்கும்
///மென்மையாய் இருக்கும் இந்த உணர்வுகளை உணர்ந்தவர்... தனிமையிலேயே சிரித்துக் கொள்ளவும் நேரிடலாம்......இல்லை என்று சொல்பவர்கள்...ஒரு கோப்பை சூடான தேனீரோடு கொஞ்சம் தனிமையில் போய் வானம் பார்த்து அமருங்கள்....உங்களுக்கான அனுபவம் வாய்க்கலாம்...!///

ஹா ஹா.. எனக்கும் இப்படி நேர்ந்திருக்கிறது... அந்த மெல்லிய உணர்வை உணர்வதே பாக்கியம்....!!

இல்லைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன்... (இருந்தாலும் ஏதோ பாத்து ஒரு தேநீர் கிடைக்குமா?? )
எச்சூச்மி... ஒரு கேள்வி கேக்க மறந்துட்டேன்...!!
படத்துல இருக்குற தாத்தா யாருங்க??
ஹேமா said…
உண்மையா உண்மை தேவா.
போனவாரம்தான் "மதராசப்பட்டினம்"பார்த்தேன்.
நீங்கள் குறிப்பிட்டுதுபோல காதலின் ஆழம் காத்திருப்பு மனதைப் பாரமாக்கிவிட்டிருந்தது.
vinthaimanithan said…
//என் பேத்தியின் தலை தடவும்
பொழுதுகளில்..கோர்க்கும்...
கண்ணீரில் ஒளிந்திருக்கிறது...
இத்தனை காலம் உன்னிடம்
சொல்லாத என்....வயதான காதல்!//

இது க்ளாஸ்!
அருமை
நல்லா எழுதி இருக்கீங்க
velji said…
கவிதையே சகலமும் சொல்லிவிடது....தனிமைக்கும்,தேனீர்க்கோப்பைக்கும் தேவையின்றி.அருமை!
கடந்து வந்த நேசங்களின் நினைவுகள் மரிக்கும் வரை மனதை விட்டு அது அகலாது,........excellent
//பொய்யாய் ஓராயிர மறைத்தல்களை கைக்கொண்டு வாழ்க்கையின் படிகளை கடந்து கொண்டுதானிருப்போம்...கடக்கும் பொழுதுகளில் ஏதோ ஒரு கணங்களில் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் சில நினைவுகள் நினைவுகளை வலுக்கட்டாயமாக கொண்டு வராமலேயே ஒரு வித ஏக்கத்தின் சாயலை உணர்வு நிலையில் நின்று ஒரு வித சந்தோசத்தை உடலெல்லாம் பரவசெய்யும் கண்ணிய மிக்க உறவுகள் இல்லாமல் யாரும் இருக்க முடியாது....?//
:)

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...