Skip to main content

ஏகாந்த வெளியில்.....!





















முயற்சி சிறகுகளை
பூட்டிக் கொண்டு விட்ட
என் பயணத்துக்கான
தொடங்குதல்களில்
சுருண்டு கிடக்கின்றன
தோல்விக்கு அச்சாரம்
இட்ட வெற்று நினைவுகள்!

வானம் தொடப்போகும்
என் வாழ்வின் முழு வீச்சு
தெரியாமல்...கேலியாய்
கூச்சலிட்ட சுவற்று பல்லியும்,
தெருவோரம் நின்று
எப்போதும் ஏளனமாய்
பார்க்கும் ஒரு தெரு நாயும்
முகங்களை திருப்பிய
இடமெல்லாம்... என் உத்வேகத்தின்
சக்தி பரப்பியிருந்த
சந்தோச வெளிச்சத்தில்
கண்கள் கூசிக் கிடந்தன...!

உயர பறக்க துணைக்கு
நின்ற ஒரு பறவை தன் சிறகசைப்பில்
எனக்கான வாழ்த்தைக் காற்றில்
எழுதுவதை கண்டு...
இரு மேகங்கள் உரசி...
வாழ்த்துக்களாய்
அனுப்பி வைத்தன
சில தூரல்களை!

பட்டாம் பூச்சிகள் எல்லாம்
என் தோள் தொட்டு
யாரும் அறியாவண்ணம் தாம்
உண்ட தேனின் சாற்றினை
என் உதடுகளில் தடவி....
ஒரு இனிப்பு முத்தம் பகின்ற
ஆனந்தத்தில்...உச்சி நோக்கி
பறந்ததில்...உணர்ச்சிவசப்பட்ட
பூக்கள் எல்லாம் காதலாய்
என்னைப்பார்த்து கண்ணடித்தன....!

ஒரு நதி.. செல்லும் போதே...
என்னை காதலோடு...
கழுத்து திருப்பி பார்த்துக்கொண்டே
உற்சாகத்தில் கரை புரண்டு ஓடியதில்
நீர் குடித்துக் கொண்டிருந்த
“ஆ “ க்களும் ஆடுகளும்
தலை நிமிர்த்தி பார்வையால்
என்னை பரவசத்தில் ஆழ்த்தி
அன்பை பொழிந்தன...!

இயலாமையை எரித்த
அந்த நொடியில் வெளிப்பட்ட
மாலை நேரத்து முழு நிலவு
காதலோடு என்னை கை நீட்டி
வெற்றியின் உயரத்தை கடந்து
வரப்போகும் எனக்காக
முத்தங்கள் பகிர காத்திருக்கிறது...

என் முயற்சி சிறகுகளை
மெல்ல அசைக்கிறேன்...
காத்திருந்த காற்று
காதலோடு என்னை கடத்தியும்
சிறகடிப்பில் நான் கிறங்கியும்
இதோ தொடங்கி விட்டது
என் ஏகாந்த பயணம்...!

* * *

என் உணர்வுகளை புரட்டிப் போட்ட நட்புகளுக்கும், உறவுகளுக்கும்...என் அன்பான நமஸ்காரங்கள் மற்றும் நன்றிகள் கோடி.....!

தம்பி செளந்தர்

நண்பன் தவ்லத்

தம்பி இம்சை& மாப்ஸ்டெரர்

தம்பி செல்வா

தம்பி சிரிப்பு போலிஸ்

நண்பர் எல்.கே

தம்பி ஜீவன்பென்னி


மாப்ஸ் சிறுகுடிராமு

தம்பி அருண் பிரசாத்

தம்பி வெறும்பய(ஜெயந்த்)

தம்பி விஜய்



தேவா. S

Comments

nis said…
அசத்தலான வரிகள்
அருமையான வரிகள்!
ஏகாந்த பயணம் வெற்றியடைந்து வானம் தொட வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Kousalya Raj said…
இந்த நாளில் அனைத்து சந்தோசங்களும், , ஆசிர்வாதங்களும் உங்களிடம் வந்து சேரட்டும் என ஆண்டவரிடம் வேண்டுகிறேன்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா.....
நிலா மழை எல்லாம் உங்களை பார்த்து காதல் கொள்கிறதா
//யாரும் அறியாவண்ணம் தாம்
உண்ட தேனின் சாற்றினை
என் உதடுகளில் தடவி....
ஒரு இனிப்பு முத்தம் பகின்ற
ஆனந்தத்தில்...//

அட அட .!! இதுதான் இனிப்பு முத்தமா ..?
boss innikkaavathu kulichchirukkalaam, chee tamilla ezhuthirukkalaam,
VELU.G said…
கவிதை அருமை

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு மாப்ஸ்..

பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாப்பு..

இங்கே பார்!!!
http://www.greatsirugudi.blogspot.com/
வினோ said…
/ என் முயற்சி சிறகுகளை
மெல்ல அசைக்கிறேன்...
காத்திருந்த காற்று
காதலோடு என்னை கடத்தியும்
சிறகடிப்பில் நான் கிறங்கியும்
இதோ தொடங்கி விட்டது
என் ஏகாந்த பயணம்...! /

அண்ணே அருமையான கவிதை...
இப்படி பல துணைகளும், நட்புக்களுமே வாழ்க்கை...
என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Unknown said…
உங்களுக்கும், தம்பிகளுக்கும் என் பாரட்டுகளும், வாழ்த்துக்களும் ....
Anonymous said…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!
Gayathri said…
happy birthday bro
ஹேமா said…
தேவா ....அன்பான மனம் நிறைந்த நிறைந்த வாழ்த்துகள்.உங்கள் கள்ளமில்லா மனதை மட்டும் களங்கப்படுத்தாமல் உண்மையோடு வாழ்ந்துகொள்ளுங்கள்.
எப்போதும் நன்மையே வாழ்வில் !
வலையுலகமே கொண்டாடுது தேவா பிறந்த நாளை..!
மிகுந்த மகிழ்வும் ,சந்தோசமும் உண்டாகிறது..!

வாழ்த்துக்கள் அப்பு..! ;)
என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தேவா அண்ணா... எல்லா வளங்களும் பெற்று வாழ்க பல்லாண்டு...
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா....
jothi said…
உங்களுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உங்களை வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும், நல்ல நட்பிற்கும் வாழ்த்துக்கள்

உங்களின் எழுத்து பயணம் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

உங்களின் தேடல்களில் தெளிவுகிடைக்க வாழ்த்துகிறேன் ...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்
Chitra said…
HAPPY BIRTHDAY, DHEVA!

பட்டாம் பூச்சிகள் எல்லாம்
என் தோள் தொட்டு
யாரும் அறியாவண்ணம் தாம்
உண்ட தேனின் சாற்றினை
என் உதடுகளில் தடவி....
ஒரு இனிப்பு முத்தம் பகின்ற
ஆனந்தத்தில்...உச்சி நோக்கி
பறந்ததில்...உணர்ச்சிவசப்பட்ட
பூக்கள் எல்லாம் காதலாய்
என்னைப்பார்த்து கண்ணடித்தன....!


....... Awesome!
இன்றுபோல என்றும் எல்லா வளமும் பெற்று இனிதே வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

பங்காளி தேவாவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
///உயர பறக்க துணைக்கு
நின்ற ஒரு பறவை தன் சிறகசைப்பில்
எனக்கான வாழ்த்தைக் காற்றில்
எழுதுவதை கண்டு...
இரு மேகங்கள் உரசி...
வாழ்த்துக்களாய்
அனுப்பி வைத்தன
சில தூரல்களை!///

அப்போ...... உங்க பர்த்டே-கு மழை பெஞ்சதுன்னு சொல்லுங்க..
சூப்பர் அப்பு.... சூப்பரு... :-)))

உங்க ஏகாந்த பயணம் தொடக்கமே அருமை.....
பயணத்தில் கண்ட அனைத்தையும் எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்... :-))

(அதுக்கு தனியா பீஸ் வசூல் பண்ண பிடாது.... :P :P )
தேவா இனியப் பிறந்த நாள் வாழ்த்துக்கள். இனி நடப்பவை எல்லாம் உங்கள் நன்மைக்காக இருக்கட்டும்
Parthi_MC said…
அன்பு அண்ணனுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் - பார்த்திபன்
க ரா said…
நீங்க எழுதிருக்கறதுதான் கவித.. கவித.. எழுத்து சித்தருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் :)
பிறந்தநாள் வாழ்த்துகள் பங்காளி!
கவிதை அருமை. ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து போட்டதுபோல் உள்ளது.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்!
vasu balaji said…
பிறந்த நாள் வாழ்த்துகள் தேவா. கவிதை எப்பவும் போல் அருமை.
Unknown said…
கவிதை நல்லா இருக்குங்க.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
Ramesh said…
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்..இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா..
vasan said…
தேவா,
சிறகு பூட்டி, மேலெழுந்து தேன் சுவைத்து,
வின்னேகி, நிலா தொட‌ நீளும் உந்த‌ன் ப‌ய‌ண‌ம்,
தேவைக‌ளை தீர்த்து வைக்கும் தேவ‌தைக‌ளோடு
தொட‌ர‌ வாழ்த்தும், ப‌திவ‌ர்க‌ளில் ஒருவ‌னாய் நானும்.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...