Skip to main content

உயிர்...!


















ஏன் இவளின் உணர்வுகள் என்னை இப்படி புரட்டிப் போட வேண்டும் என்பது சமீபத்திய ஆச்சர்யம்...! ஆனால் ஆரம்பம் முதலே எனக்கு ஏற்பட்டிருந்த பிணைப்பு...மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதில் ஆச்சர்யமும் ஒரு வித சிலிர்ப்புடன் கூடிய பயமும் இருப்பதை மறுப்பதற்கில்லை.

என் விடியலில் அவள் முகம் பார்த்துதான் எழுகிறேன்...! என் இரவுகள் அவள் இல்லையென்றால் எப்படியிருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே மிகப்பெரிய ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.

ஒரு நாள் அவளை கவனியாதது போல நான் வேறு வேலையாயிருந்தேன்...என்னருகே வந்து பின்னால் என்னைக் கட்டிக்கொண்டு அந்த இரவின் குளுமைக்கு குளுமை சேர்த்த அவள்..ஏன் இன்னும் உறங்க வரவில்லை? என்று என் காதோரோம் கிசு கிசுத்தாள்....எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது என்று அலட்சியமாகவே சொல்லிவிட்டு நான் ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன்.. பின் கவனம் எல்லாம் என் எழுத்தில் மீது ஆதிக்கம் கொள்ள நேரம் அதில் காணமால் போகத் தொடங்கியது....

அயர்ச்சியில் நான் நேரத்தை நோக்கிய போது அது நள்ளிரவு 12 க்கு கால் மணி நேரமே இருப்பதாக காட்டிக் கொண்டிருந்து. விளக்கை அணைத்து விட்டு படுக்கையில் போய் விழுந்த நான் .......புரண்டு படுத்து திரும்பிய போது..அவள் அப்போதும் விழித்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளின் தலை கோதி ..உனக்கு உறக்கம் வரவில்லையா...? என்று கேட்டதற்கு அவள் சொன்ன பதிலில் அதற்கப்புறம் என் தூக்கம் கபளீகரம் ஆனது.

ஆமாம் என்னருகாமையில்லாமல் அவளுக்கு உறக்கம் வராதாம். இப்படி பல நாட்கள் உறங்காமல் காத்திருந்ததைக் சொல்லக் கேட்ட என் கண்கள் கசிந்தது அவளுக்குத் தெரியாது… ஆனால் அவள் உச்சியில் முத்தமிட்டு தலை கோதி உறங்க வைத்து அவள் உறக்கத்தின் ஆழத்தினை நான் ரசித்திருக்கிறேன்.

அப்படி ரசிக்கும் போதெல்லாம் வாழ்வின் அடர்த்தியும் இருத்தலின் அர்த்தமும் மெலிதாய் என்னைச் சுற்றி உணர்வுகளாய் கவிதைகள் எழுத ஆரம்பிக்கும். ஒரு அதிகாலை உறக்கத்தில் அவள் கலக்கமாய் என்னைத் தேடி கைகளால் என் கழுத்து வளைத்து கட்டியணைத்த தருணத்தில் கலக்கமாய் என் இருப்பை உணர்ந்திருக்கிறேன்.

ஒவ்வொரு விடியலிலும் எனக்கு முன்னே எழுந்து விடும் அவள்… நான் எழும் வரை என்னையே சுற்றி சுற்றி வருவதும்… எழுந்த பின் கண்கள் மலர சிரித்து குட்மார்னிங் சொல்வதும் என்று எல்லா செயல்களும் என் உயிர் கரைக்கத்தான் செய்கின்றன.

வார இறுதியில் உறுதியாய் கேட்பாள் .. உங்களுக்கு ஏதேனும் வேலை இருக்கா இந்த விடுமுறையில்? நீங்கள் எங்காவது வெளியில் போவீர்களா? என்று...பல நேரங்களில் அவளின் எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றிய நான் அவள் நான் இருக்கும் நேரங்களில் உயிர்ப்போடு இருக்கிறாள் மேலும் இல்லாத போது சோர்ந்து போய் விடுகிறாள்... என்பதை அறிந்து துடி துடித்துப் போனேன்.

அவளுக்கு தமிழ் வாசிக்கத் தெரியாது. ஆனால் என்னுள் எப்போதும் நுழைந்து கொண்டு என் எழுத்துக்களை கதையாய் கேட்டுத்தெரிந்து கொள்வதில் அவளுக்கு இருந்த ஆர்வத்தின் பின்னணியில் என் மீதான அதீத காதல்தனே இருந்திருக்கிறது.

எப்போதும் அவளை அழைத்துச் செல்வதற்காக அங்கே நான் வருவேன்.... அவள் எப்போதும் காத்திருக்கும் அறையில்தான் காத்திருப்பாள். வரவேற்பறையிலிருந்து கொஞ்சம் நடந்துதான் நான் உள்ளே செல்லவேண்டும்.......ஆனால் கடந்த சில நாட்களாக அவள் வரவேற்பரையில் எனக்காக கத்திருந்தது பற்றி பெரிதாக நான் அலட்டிக் கொள்ளாமல் வழக்கப்படி அவளை அழைத்துக் கொண்டு வந்து கொண்டிருந்த போது....

என்ன சார் கால் எப்படி என்று எனது கால் வலியை வரவேற்பரையில் இருந்த பெண் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நான்… எனக்கு கால் வலிக்கும் நான் அதிகம் நடக்க கூடாது என்று அவளுக்கு தெரிந்த மொழியில் சண்டையிட்டு என் கால் வலியைச் சொல்லி....யாரையுமே அனுமதிக்காத நிர்வாகம் அவளை அங்கே அமரச் சொன்னதின் பின் புலத்தில் மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்.

நேற்று அவள் காரில் பின் பக்க கதவினை திறந்து ஏறும் போது.... நோ.. நோமா.. என்று நான் சொல்லி அவளை முன்னால் அழைத்து.....

" ஏம்மா.... நீ இனிமே...குழந்தை இல்லை சிறுமி....(யூ ஆர் நாட் எ பேபி... நவ் யூ ஆர் எ கேர்ள் ரைட்) எனக்கு பக்கத்து சீட்டில் முன்னால்தான் இனி நீ அமர வேண்டும்" என்று உன் உச்சி முகர்ந்து உனக்கு ஷேக் ஹேண்ட் கொடுத்து கட்டியணைத்து முன்னிருக்கையில் உன்னை அமரச் சொன்னபோது குட்டிக் கண்களால் எனைபார்த்து சிரித்து....கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு வழி நடுகிலும்... ஐ லவ் யூ டாடி.....இல்ல... இல்ல...... அப்பான்னு சொல்லிக்கொண்டே உன் பள்ளி வரை வந்தாயே....

என் மகளே......ஐந்து வயதில் என்னை ஆட்டுவிக்கும் ஏழாம் அறிவே....! என் உயிரே...! பெண்மையின் புனிதம் போதிக்கும் ஞான குருவே....கற்றுக் கொடும்மா.. இன்னும்... நான் கற்றுக் கொண்டே...இருக்கிறேன்..........!



தேவா. S

Comments

அனு said…
கடைசியில வச்ச ட்விஸ்ட் அருமை.. இந்த பதிவும் எனக்கு நல்லா புரியுது.. சிரிப்புப் போலிஸ் சொன்ன பேச்சு கேக்க ஆரம்பிச்சுட்டீங்க போல :)

Backgroundல 'புதிய மனிதா' கலக்கல்.. ஆனா, எங்க இருந்து சவுண்ட் வருதுன்னு தெரியாம 10 tabsஅ close பண்ணி கண்டுபிடிக்க வேண்டியதா போச்சு.. முதல்லயே கண்டுபிடிச்சிருக்கனும்.. இது ரஜினி ரசிகன் வேலையா தான் இருக்கும்னு..
அழகான அப்பாத் தனம் /வருணனை அருமை. என் நாளும் கிடைக்காது இந்த அன்பு .
கிடைக்கும்போது அசை தீர அள்ளிக் கொள்ளுங்கள்.
பாஸ் மிக மிக அருமை... ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பு. உங்கள் எழுத்துக்களில் மிக அழகாக அழுத்தமாக வெளியாகி உள்ளது
நினைச்சேன் கடைசி நீங்கள் இப்படி தான் முடிப்பீர்கள் என்று கரெக்ட் ஆக இருந்தது ........என் கணிப்பு தவறவில்லை அண்ணா...........
தகப்பன் ஸ்தானத்தில் இருந்து யோசிக்கும் பொழுது ஒரு வேளை....இதை தான் எழுதுகிறீர்கள் என்று யோசிக்க முடிந்ததோ எனவோ ?..................
ம்... இது தான் எனக்கு ஏற்கனவே தெரியுமே அக்ஷயா தான் சொல்றா அவங்க அப்பா என்ன செய்றார் என்று
நல்லாயிருந்தது! ட்விஸ்ட் எதிர்பார்த்ததாய் இருந்தாலும் ரசித்தேன்!
Chitra said…
பல நேரங்களில் அவளின் எதிர்ப்பார்ப்புகள் பற்றி கவலைப்படாமல் ஊர் சுற்றிய நான் அவள் நான் இருக்கும் நேரங்களில் உயிர்ப்போடு இருக்கிறாள் மேலும் இல்லாத போது சோர்ந்து போய் விடுகிறாள்... என்பதை அறிந்து துடி துடித்துப் போனேன்.


......எத்தனை அழகாக, உணர்வுகளை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள். வாவ்!
அப்பாவின் பாசமும், மகளின் அன்பும் என்றும் உயிரோட்டத்துடன் இருப்பதே ஒரு ஆசிர்வாதம் தான்..... Praise the Lord!
Unknown said…
நல்ல எழுத்து முடிவு மிகப்பொருத்தம்.கற்றுகொண்டே இருப்போம் வாழ்கையின் ஒவொவொரு இருப்பிலும்
@அனு

//கடைசியில வச்ச ட்விஸ்ட் அருமை.. இந்த பதிவும் எனக்கு நல்லா புரியுது.. சிரிப்புப் போலிஸ் சொன்ன பேச்சு கேக்க ஆரம்பிச்சுட்டீங்க போல :)
//

ஹலோ அனு!!! மாப்ஸ் என் கட்சி!! ரமேஷ் அப்படின்ற மரமண்டை, காமடி பீஸ், லூஸ் போலீஸ வச்சி சும்மா காமடி பண்ணாறு... நீங்க அத அப்படியே நம்பிட்டிங்க... அய்யோ அய்யோ...

@தேவா

இந்த ரமேஷ்..பய ஆபிஸ்ல ஆணி இல்லைனா என்னை காலாய்ச்சி பதிவு போடறான் மாப்ஸ்... :))) இவனை நாடு கடத்து மாப்ஸ்.... :))
@தேவா

//குட்டிக் கண்களால் எனைபார்த்து சிரித்து....கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு வழி நடுகிலும்... ஐ லவ் யூ டாடி.....இல்ல... இல்ல...... அப்பான்னு சொல்லிக்கொண்டே உன் பள்ளி வரை வந்தாயே....//

ஏதோ லவ் ஸ்டோரி சொல்ற நினைச்சி படிச்சேன் (புத்தி அப்படி மாப்ஸ்... அவ்வ்வ்). கடைசில நல்ல ட்விஸ்ட் நான் எதிர் பாக்கவே இல்ல மாப்ஸ் (Guess பண்ற அளவு அறிவு இல்லை மாப்ஸ்... அவ்வ்வ்) நல்லா டச்சிங்க எழுதி இருக்க மாப்ஸ்..
@தேவா

//ஒரு கேள்விக் குறி வந்து அந்த எண்ணத்துக்கு அருகே வந்து விழுந்து விடுகிறது.//

இந்த லைன்க்கு அப்புறம்....

//மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்.//

இந்த லைன்வரை எல்லாமே சூப்பர்!!!

(ரமேசு... வந்து டெம்பிலேட் கமெண்ட் சொன்ன பிச்சிடுவேன் பிச்சி... உன் மேல சத்தியமா பதிவ படிச்சேன்...)
//என்ன சார் கால் எப்படி என்று எனது கால் வலியை வரவேற்பரையில் இருந்த பெண் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நான்… எனக்கு கால் வலிக்கும் நான் அதிகம் நடக்க கூடாது என்று அவளுக்கு தெரிந்த மொழியில் சண்டையிட்டு என் கால் வலியைச் சொல்லி....யாரையுமே அனுமதிக்காத நிர்வாகம் அவளை அங்கே அமரச் சொன்னதின் பின் புலத்தில் மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்////

ஹ்ம்ம்ம்.. உண்மையில் உங்கள் மகளின் தூய்மையான பாசமும், நீங்க அவ மேல வச்சிருக்கிற எதையும் எதிர்பாக்காத அன்பும்...... தெரியுதுங்க..

நீங்க ரெண்டு பேருமே அதிர்ஷ்ட சாலிகள்.. :-)))

இப்படி ஒரு மெல்லிய உணர்வை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. :-))
//என்ன சார் கால் எப்படி என்று எனது கால் வலியை வரவேற்பரையில் இருந்த பெண் கேட்டதும் ஆச்சர்யத்தில் மூழ்கிய நான்… எனக்கு கால் வலிக்கும் நான் அதிகம் நடக்க கூடாது என்று அவளுக்கு தெரிந்த மொழியில் சண்டையிட்டு என் கால் வலியைச் சொல்லி....யாரையுமே அனுமதிக்காத நிர்வாகம் அவளை அங்கே அமரச் சொன்னதின் பின் புலத்தில் மறைந்திருந்த அன்பு என் மரித்தலுக்கும் பின் அவளையே தேடும்////

ஹ்ம்ம்ம்.. உண்மையில் உங்கள் மகளின் தூய்மையான பாசமும், நீங்க அவ மேல வச்சிருக்கிற எதையும் எதிர்பாக்காத அன்பும்...... தெரியுதுங்க..

நீங்க ரெண்டு பேருமே அதிர்ஷ்ட சாலிகள்.. :-)))

இப்படி ஒரு மெல்லிய உணர்வை... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.. :-))
@தேவா

//குட்டிக் கண்களால் எனைபார்த்து சிரித்து....கன்னத்தில் அழுத்தமான முத்தமிட்டு வழி நடுகிலும்... ஐ லவ் யூ டாடி.....இல்ல... இல்ல...... அப்பான்னு சொல்லிக்கொண்டே //

இந்த பத்தி முன்னாடி உள்ள பத்திகளை எல்லாம் படிக்கும்போது மனசுல பொங்கி நின்ன லவ் பீலிங்.. இந்த லைன் படிச்சதும்... அப்படியே உடைஞ்சி பாசமா மாறி பரவி... மேல உள்ள வரிகள் எல்லாம் திரும்ப ஒரு சின்ன குழந்தையை வச்சி கற்பனை பண்ணி பாத்தா....சொல்ல வார்த்தை இல்லையடி பராசக்தி...

(எலேய்!! இன்னாது இது?? இந்த மனுஷன் கூட சேர்ந்த நம்மல இப்படி தணியா புலம்ப விட்டாறூ!!!! டெரர் மானஸ்தன் செத்துட்டானா???... NO.. NEVER...)

மாப்பு உன் கட்டுரை நல்லவே இல்லை.... அவ்வ்வ்வ்வ்... நான் கிளம்பறேன்...
ஹேமா said…
உயிர் என்று தலைப்பிட்டு மகளைப்பற்றி நெகிழ்வாய்ச் சொன்னது நல்ல ஒரு அப்பாவாக உயர வைக்கிறது உங்களை.இருவருக்கும் அன்பு வாழ்த்துகள்!
Anonymous said…
அண்ணே.. செம சூப்பர்.. இளஞ்சாரல் இனிமையாய் இருந்தது உங்கள் மொழி!
//என் மகளே......ஐந்து வயதில் என்னை ஆட்டுவிக்கும் ஏழாம் அறிவே....! என் உயிரே...! பெண்மையின் புனிதம் போதிக்கும் ஞான குருவே....கற்றுக் கொடும்மா.. இன்னும்... நான் கற்றுக் கொண்டே...இருக்கிறேன்//
அக்ஷயாக்கு என் அன்புகள்!
அடேங்கப்பா... நானும் வேற என்னத்தையோ நெனைச்சு ரொம்ப ஒருமாதிரியா படிச்சுகிட்டு இருந்தேன்டா மாப்ஸ்... ஹூம்

டெரர் சொன்னதுமாதிரி

//இந்த பத்தி முன்னாடி உள்ள பத்திகளை எல்லாம் படிக்கும்போது மனசுல பொங்கி நின்ன லவ் பீலிங்.. இந்த லைன் படிச்சதும்... அப்படியே உடைஞ்சி பாசமா மாறி பரவி... மேல உள்ள வரிகள் எல்லாம் திரும்ப ஒரு சின்ன குழந்தையை வச்சி கற்பனை பண்ணி பாத்தா....சொல்ல வார்த்தை இல்லையடி பராசக்தி...//

அப்பறம் அப்டியே சேஞ் ஆயிட்டேன். கலக்கிட்ட போ.
உண்மையிலேயே அக்ஷு ரொம்ப குடுத்துவச்சவ... நீயும்தான்...
TERROR-PANDIYAN(VAS) said...

ஹலோ அனு!!! மாப்ஸ் என் கட்சி!! ரமேஷ் அப்படின்ற மரமண்டை, காமடி பீஸ், லூஸ் போலீஸ வச்சி சும்மா காமடி பண்ணாறு... நீங்க அத அப்படியே நம்பிட்டிங்க... அய்யோ அய்யோ...

@தேவா

இந்த ரமேஷ்..பய ஆபிஸ்ல ஆணி இல்லைனா என்னை காலாய்ச்சி பதிவு போடறான் மாப்ஸ்... :))) இவனை நாடு கடத்து மாப்ஸ்.... :))


அறிவுப் போட்டின்னு சொன்னதும் என் ப்ளாக் பக்கமே வராம ஆணின்னு பொய் சொன்ன பயதான நீ. நீயெல்லாம் பேசவே கூடாது. இது தேவா அண்ணன் ப்ளாக் என்பதால் நான் குறைந்த அளவு கோபத்தை காட்ட வேண்டியதுள்ளது. இல்லைன்னா!!!!!!
//ரமேசு... வந்து டெம்பிலேட் கமெண்ட் சொன்ன பிச்சிடுவேன் பிச்சி... உன் மேல சத்தியமா பதிவ படிச்சேன்...//

@ Terror

எங்க நாலாவது லைன்ல மூணாவது வார்த்தை என்னன்னு சொல்லு பாப்போம்..
வணக்கம்

//என் மகளே......ஐந்து வயதில் என்னை ஆட்டுவிக்கும் ஏழாம் அறிவே....! என் உயிரே...! பெண்மையின் புனிதம் போதிக்கும் ஞான குருவே....கற்றுக் கொடும்மா.. இன்னும்... நான் கற்றுக் கொண்டே...இருக்கிறேன்..........!//

பிள்ளைகளிடம் கற்றுக்கொள்ள
நிறைய திறமைகள் ஒளிந்துகிடக்கிறது அவர்களுள்
நம் வேலையை மட்டும் பார்க்காமல் இனியாவது அவர்களுடைய திறமைகளை வெளிக்கொணர தடையேதும் சொல்லாமல் பாசகரம் நீட்டுவோம்

http://marumlogam.blogspot.com/2010/09/blog-post_18.html
Unknown said…
சூப்பரா இருக்கு பதிவு.. பாசம் நிறைஞ்சுருக்கு..
அடடா இங்க சண்டை போட்டு முடிச்சாச்சு போலேயே ..,
அது எப்படி நான் அப்பா , பாசம் அப்படின்னு ஒரு பதிவு எழுதரக்கு முன்னாடியே நீங்க ஒண்ணு எழுதிட்டீங்க .. போங்க அண்ணா ..!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...