ராமராஜ் அண்ணன் டிக்கட் வாங்கிட்டேன்னு சொன்ன உடனேயே பி.பி ஏறிப்போச்சு...எதுக்கா?
எந்திரன் பார்க்கதான்...அச்சோ.... மறுபடி ஒரு ரிவியூவான்னு தலைய சொறிய ஆரம்பிச்சுட்டீங்களா மக்கா? எச்சூஸ்மி... இது ரிவியூ இல்ல.. வழக்கமான ஒரு கண்மூடித்தனமான ரசிகனின் அனுபவம் அம்புட்டுதேன்...! வாங்க மக்கா சேந்து போவோம் அபுதாபிக்கு? அபுதாபிக்கு எதுக்கா? அட அங்க தான் படம் பார்க்க போறோம்....
வியாழக்கிழமையே விழாக்கோலம் பூண்டு இரவு 9 மணிக்கு கீயை முடுக்கியதில் சந்தோசமாக உயிரை உடம்பு பூர பரப்பியது நம்ம வாகனம்...ஏனோ தெரியவில்லை உடம்பு முழுதும் ஒரு உற்சாக தேனி உள்ளே புகுந்து கொண்டு சுற்றி சுற்றி வந்தது போல ஒரு குறுகுறுப்பு....!
விடிஞ்சா கல்யாணம்.. எலேய். என்ன இப்படி மச மசன்னு நிக்குற.. சோலிய பாருலேன்னு கத்துவாங்களே கல்யாண வீட்டுல....அது மாதிரியும் அப்புறம் ஒரு படத்துல... பார்த்திபன் சொல்வாறே.. ரம்பாவ பாத்துட்டு...சார்.....ரம்ப்பா சார்.. சாப்பிடுது சார்.. சிரிக்குது சார்ன்னு ஒரே ஆச்சரியமா.. அது மாதிரிதான்.. என் நிலைமையும்... ரஜினிங்க... எங்க தலைவர்ங்க....விவரம் தெரிஞ்ச நாள் முதலா அவர்தாங்க... எனக்கு ஆதர்சன ஹீரோ.. அறிவுக்கு எட்டாத விசயமா இருந்தாலும் ரொம்ப சந்தோசமா இருக்குமுங்க..ரஜினிங்க.. இஹ் ஹா.. ஹா..ஹா…..!
என்னடா லூசு மாதிரி சிரிக்கிறேன்னு பாத்தீங்களா.. அப்படிதான் இருந்தேன் அந்த முதல் நாள் இரவில்.. விடிஞ்சா தியேட்டர்... தலைவர்.. படம்.. ! நைட் 11 மணிக்கு ராமராஜ் அண்ணன் வீட்டுக்கு போயாச்சு. அண்ணன் தூத்துகுடில கமல் ரசிகர் மன்ற தலைவரா இருந்தவரு..என்னய மாதிரி எக்சைட்மெண்ட் எல்லாம் இல்லாம..தம்பி.. அதிகமா எதிர்பார்க்காத சுட்டி டி.வி பாக்க போற மாதிரி நினைச்சுகிட்டுதான் நான் இருக்கேனு ஒரு குண்டை கூட தூக்குப் போட்டாரு...!
இருந்தாலும் எனக்கு பக்கத்துல தூணு மாதிரி மாப்பிள்ளை ராமகிருஷ்ணன்.. இருந்தாரு...சென்னைல ஒரு ரஜினி படம் விடாம பாலாபிஷேகம் செஞ்ச வீரத்திருமகன். அப்பவே முடிவு பண்ணிட்டோம்.. அவர் என் பக்கதுலதான்னு...ஏன்னா எனக்கு விசில் அடிக்க தெரியாது.. ஆனா மாப்பிள்ளை பட்டய கிளப்புறதா எனக்கு சத்தியமே பண்ணிகொடுத்தாரு...!
காலையில் எல்லோருக்கும் முன் எழுந்து லேப்டாப்பை எடுத்து தட்டி இன்ட்லிக்குள் நுழைந்தவுடன் பங்காளி ப்ரியமுடன் வசந்த் முத நாளே படத்த பாத்துட்டு வந்து என் பி.பியவா எகிறவைக்கணும்.....ஒரு வரி விடாம 5 தடவ படிச்சேன்....சூடு அதிகாமானது. காலையிலேயே ஒப்பன் பண்ணிட்டியா ராமராஜ் அண்ணன் பாசத்தையும் கண்டிப்பையும் சேர்த்து காதுகளுக்குள் ஊற்றினார்.
…
…
…
10 மணி தியேட்டர்....இந்த பக்கம் அண்ணன் அந்த பக்கம் மாப்ஸ்.... நடுவில் நான்....! எங்க வீட்டு தங்கமணிய உசாரா அண்ணி கூட 3 சீட் தள்ளி உட்கார சொல்லிட்டேன்......ஆமாம் நம்ம பண்ற ரவுசு தாங்காமாட்டாங்க... !
டைட்டில் போட்டாங்க எல்லாம் சரி.....படம் ஆரம்பிச்ச முத சீன்ல வந்துச்சு பாருங்க ஷங்கர் மேல ஒரு கோபம்...இப்படியாங்க அறிமுகம் படுத்துறது தலைவர யாரோ மூணாவது மனுசன் மாதிரி....மே பீ கதைக்கும் களத்துக்கும் சரியா பொருந்தி இருக்கலாம்.. எனக்கு நோ.. நோ.. நோ.... என்னால ஏத்துக்க முடியல.. இருந்தாலும் அதுக்கும் சப்தம் போட்டு வாயில கைய வச்சுகிட்டு லபோதிபோன்னு கத்தியது வேறு விசயம். சரி அடுத்த அடுத்த சீன்ல ரோபோ ரஜினி வருவாரு கலக்குவாருன்னு ஒரு நம்பிக்கையில காட்சி நகர்வுகளை கவனித்து கொண்டு இருந்தேன்...
அடச்சே.. ஐ டோண்ட் கேர் எபோட் டெக்னிகாலிட்டி பார்ட்.......! நான் என்ன ஆராய்ச்சி பண்ணவா தியேட்டருக்கு வந்து இருக்கேன்...ரஜினி படம் பாஸ்..........! எந்திரத்தனமாய் இருந்த படத்தில் ட்ரெய்ன் பைட்டில் கூட என் ரஜினி மொத்தமாய் தொலைந்து போயிருந்தார். ரஜினி முகத்தை மட்டும் யூஸ் பண்ணி சங்கர் தனது பசியை தீர்த்துக் கொண்டிருப்பதாக என் ரஜினி ரசிகனின் மூளை சொன்னது.....
காதல் அணுக்கள் பாட்டில் ரஜினியின் அழகை அள்ளி அள்ளி பருகிய நான் ( ஐ ஹோப் என்னை போன்ற ரசிகர்களும்தான்...)அதற்காக மட்டும் வரவில்லை..ஆக்ரோசமான ரஜினியை தேடி தேடி இடை வேளை வரை அலுத்துப்போய்விட்டது...! ராமராஜ் அண்ணன் கொடுத்த பெப்சி ஏமாற்றமான மனதை தாண்டி வயிற்றுக்குள் சென்றும் அதன் சுவை தெரியவில்லை...
இடைவெளிக்கு அப்புறம்....ரோபோ ரஜினியை டிஸ்மேண்டில் செய்து குப்பையில் போட்டு, அந்த குப்பையில் இருந்து ரோபோவாக வந்து காரில் வந்து படுத்துக்கொள்ளும் கடப்பாரையில் காதுகுத்தும் வைபோகமும் இனிதே நடந்து முடிந்தது.
நான் காத்திருந்தேன்...........
வாவ்........வில்லானாக மாறி தலைவர் சிரித்த நேரத்தில் நானும் சிரித்தேன்.. இஃஹாஹாஹாஹாஹா...என்ன ஸ்டைல் என்ன டயலாக் டெலிவரி.. என்ன ஃபயரு..........தலைவாவாவாவாவாவா.... ! தியேட்டர் வெகு நேரத்துக்கு அப்புறம் அதிர ஆரம்பித்தது.
" அச்ச்சோ வசிகரன் இங்க இல்ல போல இருக்கு சனா" தலைவர் திரையில் அசத்திக் கொண்டிருக்க.. மீண்டும் என் ரஜினி கிடைத்த ஒரு சந்தோசம் எனக்கு.... ரோ........போ என்று பழிப்பு காட்டி பளீச்சென்று வெளியே வந்து விழுந்த ரஜினி ஸ்டைலும் சரி......" சோல்ஜர்ஸ் ரொட்டேட் யுவர் ஹெட்ஸ்.." குரலில் இருந்த கம்பீரம்.... " மே.. மே.. மே..." என்று ஆடு போல கனைத்து வசீகரனின் தலையில் கையை வைத்து சிரிக்கும் இடமும் சரி.......இது....இது இது .. இது தான் ..ரஜினி ......ஏன் சங்கர் படம் ஃபுல்லா எங்க தலைவர .... இப்படி யூஸ் பண்ணாம விட்டுட்டீங்க...ம்ம்ம் ச்சே.. என்று ஒரு ஆதங்கம் வேறு...
அதே மாதிரி கடைசி சீன்ல தன்னைதானே டிஸ்மேன்டில் செய்துட்டு பாவமா ஒரு மூஞ்சிய வச்சுக்கிட்டு டையலாக் டெலிவரி செய்யும் இடத்துலயும் சரி..........
ரஜினி .....இஸ் ரஜினிதான்......
என்ன மொத்ததுல ஒரு மூணு நாளு சீன்ல மட்டும் தலைவர பாத்துட்டு... படம் புல்லா அவர வெறுமனே ஒரு பொம்மைய போல பாத்துட்டு வர.. மத்தவங்களுக்கு ஓ.கே.. ஆனா என்ன மாதிரி சின்னவயசுல இருந்து ரஜினினா ஸ்டைலு, ஃபைட்டு, ஸ்பீடு, பவர்னு பாத்த ரசிகர்களுக்கு பிடிச்சு இருக்குமான்றது சந்தேகம்தான்.....எனக்குள் ஒரு ஏமாற்றம் இருந்தது...!
ஷங்கர்.........கலா நிதிமாறன்.......ஐஸ்வர்யா ராய்......150 கோடி... பிரமாண்டம்.......ஹாலிவுட் ரேஞ்ச்..........படம் சூப்பர் ஹிட்.....ஏ.ஆர். ரகுமான்......வைரமுத்து............சூப்பர் லொக்கேசன்ஸ்.....டெக்க்னிகலி அச்சீவ்ட்........இந்தியாவின் பிரமாண்டாம்.......
எல்லாம் சரிங்க.........எங்க தலைவர காணமே படம் புல்லா.. ?
படத்துல ரஜினி எங்கே?
படம் முடிஞ்சு ரொம்ப நேரம் தம்பி வாலண்டோ கேட்டுட்டு இருந்தான் ஏன்னா ஒரு மாதிரியா இருக்கீங்கன்னு…? ஒண்ணுமில்லைப்பான்னு சொன்னேன்.. ஆனா இன்னிக்கு தெரிஞ்சு இருக்கும் ஏன் ஒரு சோகம்னு.......ஹா...ஹா..ஹா..ஹா..!
அப்போ வர்ர்ர்ர்ட்டா...!
தேவா. S
Comments
உங்களுக்கு எல்லாம் ரஜினி நல்லா நடிச்சா புடிக்காதே ரஜினி வரும் போது அவர் தலையில் பூசணிக்காய் உடைக்கணும் அப்போ தான் உங்களுக்கு புடிக்கும்
செளந்தர்..@ ஆமாம் தம்பி....அதிகமா சிந்திக்கிறது இல்ல நாங்க..எல்லாம்.. சினிமால நம்மளால செய்ய முடியாதத ஹீரோ செய்யணும்னு எதிர்பார்க்குற சராசரி ரசிகர்கள்தான்...!
சிரிப்பு போலிஸ்..@ தம்பி அவர் கூப்பிட்டா மட்டும் நாங்க போயிடுவோமா? மூணு மணி நேரம் படம் பாக்க போற நான்.. எனக்கு பிடிச்ச மாதிரி படம் இருக்கா இல்லையானுதான் நினைப்போம்...
சரியா..
சொந்தக்காரங்க கூப்பிட்டால நான் போறது இல்லா.... இதுல ரஜினி எதுக்கு கூப்பிடணும்..? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சிரிப்பு போலிஸ்.. @ நான் என்ன.. நித்யானந்தா சுவாமிய பத்தியாட எழுதியிருக்கேன்.. ஏதோ சின்னவயசுல இருந்து பார்த்து ரசிச்ச ஒரு நடிகன பத்திதானே எழுதி இருக்கேன்..கூல் டவுன் கூல் டவுன்...ஹா.. ஹா..ஹா..!
அண்ணா உங்களுக்கே அடுக்குமா இது.. உங்களோட பதிவுகள படிச்சிட்டு எப்படியெல்லாம் யோசிக்கிறாருன்னு நினைச்சிருக்கேன் நீங்க இப்டி சொல்றீங்க..
இல்ல இதுக்கு பேரு தான் தன்னடக்கமா.. அவ் :)
எல்லாம் சரிங்க.........எங்க தலைவர காணமே படம் புல்லா.. ?
படத்துல ரஜினி எங்கே?
ரஜினி முகத்தை மட்டும் யூஸ் பண்ணி சங்கர் தனது பசியை தீர்த்துக் கொண்டிருப்பதாக என் ரஜினி ரசிகனின் மூளை சொன்னது.....//
இதுதான் உண்மை. நாம் ரஜினியைத் தொலைத்துவிட்டோம் எந்திரனில்.
அண்ணே தென்னுங்க ., எங்க ஊரு தமில்லுல எழுதிப் போட்டீங்க ..!! நல்லாத்தானுங்க இருக்குதுங்கோய்..!!
இதுதான் வீரமா ..?
அதே மாதிரி அந்த கிலிமாஞ்சாரோ பாட்டும் அப்படித்தான் .. கேக்குரக்கு அது நல்லா இருந்துச்சு .. ஆனா படத்துல பாக்கும் போது செம கோவம் வருது .. இதுல பட்டா கஷ்டம் தீரனும்னா எங்க கமலோட மன்மதன் அம்பு வந்தாதான் எனக்கு சந்தோசம் .. அதவிட வர்ற சனிக்கிழமை உன்னைப்போல் ஒருவன் கலைஞர் டிவில போடப்போறாங்க . அது வரைக்கும் வெய்டிங்..!!
Try searching endhiran in google news
See how the movie received by the world (BBC, CNN.. etc). we must proud of this tamil movie.
some people wants to become big by finding fault with everything.. unfortunately in tamil blogsphere most of the like that.
PSK -Singapore
sunnidam ellaththaiyum tholaiththachchu...
nalla pakirvu...
கரெக்டா சொன்னீங்க அருண் பிரசாத். ஹஹாஹா
எல்லாம் சரிங்க.........எங்க தலைவர காணமே படம் புல்லா.. ?//
இந்த ஆதங்கம் எல்லா ரஜினி ரசிகனுக்கும் உண்டு தேவா அண்ணா .ஆனால் வெளியே சொல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள் .நீங்கள் கொட்டி விட்டீர்கள்
I never said here anything about Enthiran's successes....!
Even small child knows its sucessful movie...!
This post says only my point of view about the movie........as Rajini Fan!
அருமையாக உங்களுக்கே உரிய நடையில் கூறியிருக்கிறீர்கள் அண்ணா... /
repeat....
இதுக்கு நீங்க வீட்டுல உக்காந்து சுட்டிவியோ, கார்ட்டுன் நெட்வோர்க் பார்த்திக்கலாமே...
இதான் என்னை மாதிரி ஆளுங்ககிட்ட ஐடியா கேட்டகனும்கறது...அப்போ வர்ட்டா :))
வழக்கமான உங்கள் நடையில் பதிவு அருமை....
இவர் தேடல்லுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. ரஜினி படத்துக்கு போய் அங்க தேடினேன் ரஜினி கிடைக்கலனு சொல்லுறாரு பாருங்க
.......ஹா,ஹா,ஹா,ஹா....
//எங்க தலைவர காணமே படம் புல்லா//
இதுதான் ரஜினியின் நடிப்புக்கு கிடைத்த வெற்றி
எலே மக்கா நீ நம்மாளா... ஏய் சொல்லவே இல்ல பாத்தியா....:))
எந்திரனுக்கு வலி எப்படி இருக்கும்னு தெரியுமாக்கும்!
அண்ணாச்சி
அவருக்குத்தான் உணர்ச்சிகள் கற்பிக்கப் பட்டு இருக்கிறதே
கேட்டான்யா ஒரு கேள்வி ஆவ்வ்வ்...
nice written bangali
யோவ் மாப்ஸ்...நாங்க ரஜினி ரசிகரு தெரியும்ல....
V.Radhakrishanan...@ ரஜினி இதுல நடிச்சமாதிரி எனக்கு தெரிஞ்ச மூணு சீன் பத்தி சொல்லி இருக்கேன் பாஸ்...
மத்த படி பிரமண்டத்துக்கும் டெக்க்னிக்கல் பாராட்டுக்கும் கிடைச்ச...வெற்றி....ன்னுல சொல்லிக்கிறாங்க....!
இல்ல இதுக்கு பேரு தான் தன்னடக்கமா.. அவ் :)//
பாலஜி சரவணா...@ ரஜினி ரசிகர்னா..ரஜினி புடிச்சா..முட்டாள்னு கருத்து பொது புத்தில இருக்கு தம்பி... சரி நாம முட்டாளா இருந்துட்டு போவமே....மக்கள்ஸ் ஆசைய ஏன் கெடுக்கணும்...!
ஆமாம் தல... இருந்தாலும் 150 கோடி செலவு பண்ணியதற்கு வசனத்தையும் கொஞ்சம் கவனிச்சு இருக்கலாம்...
///
Yess.. I agree with you..