Skip to main content

விதை....!
























எனக்குள் திறன் இருக்கிறது! எனக்குள் திறன் இருக்கிறது..! எனக்குள் திறன் இருக்கிறது...! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்! நான் சக்தி மிகுந்தவன்...! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....!

என் பார்வையின் மிகுதியில் சிக்குவது எல்லாம் பாஸிட்டிவான விசயங்கள்..மட்டுமே...! எல்லா சூழ்நிலைகளுக்கும் தீர்வினை எட்டும் தீர்க்க முடிவுகள் மட்டுமே நான் எடுக்கிறேன் கூறுகிறேன்!

மனிதர்களை குழப்பத்தில் ஆழ்த்தும் விசயங்களையும் சிக்கலை கொடுக்கும் விசயங்களையும் எப்போதும் சொல்வதை தவிர்க்கிறேன். என்னிடமிருந்து வாழ்த்துக்களும், பரஸ்பரம் அன்பும், விசாரிப்புகளும் அலைகளைப் போல பரவிக் கொண்டே இருக்கின்ற. ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....!

ஊரின் விடியலுக்கு போராடக்கூடிய பெரிய செயல்கள் செய்ய முடியாவிட்டாலும் ஒரு மண் பானை வாங்கி நீர் ஊற்றி வீட்டுக்கு வெளியே தெருவில் வந்து செல்லக்கூடிய மனிதர்களின் தாகம் தணிக்க வைக்கும் அளவிற்கு திறனுள்ளவன்தான்......... நான்.......!

என்ன மக்கா.. அப்படியே கட்டுரைக்குள்ளே போய்ட்டீங்களா...? சரி வெளில வாங்க இப்போ நாம உக்காந்து பேசுவோம். மேலே சொன்ன மாதிரி தினமும் மனசுக்குள்ளே சொல்லிகிட்டே இருந்த நேர்மறையான எண்ணங்கள் நமக்குள்ளே ஆட்டோமேட்டிகா வரும்னு சொல்றாங்க....அது எப்டிப்பா வரும்.. மாயமா மந்திரமா..?

இப்டி சூடு...

எதை வலுவாக திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டு இருக்கிறோமோ அது உண்மை என்று மனது நம்புகிறது. மேலும் மனம் முடிவு செய்யும் தீர்மானமான முடிவுகள்தான் செயலாக மாறுகிறது. உதாரணமாக பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கவேண்டும் என்று நாம் முதலில் நினைக்கிறோம்.

வெறுமனே முதலில் நினைப்பது மனதில் நிகழ்கிறது. அது தீர்மானமான பின்னால்...கடைக்கு சென்று வாழைப்பழம் வாங்கி வருகிறோம். ஸ்தூலமான இந்த உடலை மனதில் தோன்றும் சூட்சுமமான தீர்க்கமான எண்ணம்தானே வழி நடத்துகிறது.

அப்படித்தான் திரும்ப திரும்ப எதை நம்பிறோமோ (தீர்க்கமாக) அதை வாங்கிக் கொள்ளும் ஆழ் மனது...அதை ஒரு கட்டத்தில் செயல்படவைக்கிறது. அதாவது நாமே அதை செய்கிறோம். நாம் செய்ய வேண்டியதை பெரும்பாலும் செய்யாமல் காலத்தையும் நேரத்தையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறோம். இப்போதிருக்கும் நமது நிலைக்கு காலம் கடந்த காலத்து நமது செயல்கள்தான் காரணம்....என்பதில் எந்த மாற்றமும் இருக்க முடியாது. அப்படி என்றால் நமது எதிர்காலத்தை தீர்மானிக்கபோவது எது? நம்து நிகழ்காலத்து செயல்கள்தானே....?

நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. தட்ஸ் த மில்லையன் டாலர் கொஸ்ஸின்?

புறச்சூழ்நிலை, பணவசதி, நமது பிரச்சினைகள் எல்லாம் ஒரு மாயை....அதிலிருந்து நமது கன்ஸ்டரக்டிவான ம்ம்ம்ம் தொடர்ச்சியான பாஸிட்டிவ் செயல்கள் மூலம் வெளி வர முடியும் என்று தான் சொல்கிறார்கள். ஒரு விசயத்தை எடுத்துப் பார்த்தால் வெற்றி பெற்றவர்களுக்கு எல்லாம் ஒரே ஃபார்முலாதான் இருந்திருக்கிறது. அவர்கள் எப்போதும் தங்களின் செயல்களிலும் நேரத்திலும் கவனம் வைத்திருந்ததோடு மற்ற மனிதர்களின் நிறையை பற்றி மட்டுமே பேசி இருக்கிறார்கள்.

என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்... நீ நிலையாமை பற்றியே நிறைய பேசுகிறாய்.... உடல் பொய்..எல்லாம் மாயை என்று அடிக்கடி சொல்கிறாய் நீ எப்படி நேர்மறை சிந்தனை உடையவனாவாய் என்று.....

சரி நிலையாமை பற்றி பேசுவதும் நேர்மறை என்பதை நண்பர் அறிந்திருக்கவில்லை... !
நிலையாமை உணர்ந்தால் கர்வம் போகும். கர்வம் இல்லை என்றால் அன்பு பெருகும். அன்பு பெருகிறானால் செய்யும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு அதிகரித்தால்... புரடக்டிவிட்டி என்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.

உற்பத்தி திறன் அதிகரித்தால்... லாபம் கிடைக்கும். லாபத்தினால் பொருள் கிடைக்கும். பொருளினால் இம்மை வாழ்க்கை அல்லது இந்த லெளகீக வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல்சார் தேவைகளும் சுற்றங்களின் தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் போதும் மனம்.. அடுத்து என்ன என்று ஆராயும் அங்கே.... நமக்கு தேவையான அல்லது எப்போதும் உண்மையான பேருண்மை வெளிப்படும்....இப்போ சொல்லுங்க... நிலையாமை எப்படி எதிர்மறையை போதிக்கும்....அது நேர்மறையின் நிழல்தானே....?

நேர்மறயான எண்ணம் இருந்ததால்தனே... ரூஸ்வெல்ட்.. சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அமெரிக்க ஜனாதிபதியாயிருந்தார்?

நேர்மறையான எண்ணம் இருந்ததால் தானே.. .மகாத்மா காந்தி.... நாம் சுவாசிக்கும் சுதந்திர காற்றினை நமக்கு கொடுத்தார்...

மொத்த ஆய்வுக் கூடமும் எறிந்த போது எடிசன் கவலைப்படவில்லை....என் தவறுகள் எரிந்து கொண்டிருக்கின்றன என்றார்...! அந்த நேர்மறைப் பார்வைதானே....இன்று எல்லோருடைய வாழ்க்கையிலும் வெளிச்சம் கொடுத்திருக்கிறது...

வலைப்பூக்களிலும், இணையங்களிலும் மிகுதியாக நிறைந்திருப்பது.....இளைஞர்கள். இளைய இந்தியா.. இன்று குழுமியிருக்கும் இடம்.. இணையம்.....! இதன் பயன்பாடுகள் நேர்மறையாகவும்... பயனுள்ள வகையிலும்...சக்தி மிகுந்ததாகவும் மாற....மிகுதியான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

இங்கே... எழுத்துரிமை, பேச்சுரிமை, சமூகக் கூட்டுறவு என்று எல்லாமே இருக்கிறது.. ! கண்ணிமைக்கும் நேரத்தில் உலக செயல் பாடுகள்.. மனித மூளைகளின் கவனித்திற்கு வந்து விடுகிறது ஆனால் அணுகும் முறைக்கும், பயன்பாடுகள் பற்றிய தெளிவுக்கும் நேர்மறையான சக்தி மிகுந்த பார்வை தேவைப்படுகிறது.

நேர்மறையான ஒரு பாசிட்டிவ் அவுட் லுக் என் தேசத்து இளைஞனின் உடனடித் தேவை! இயன்ற வரை அரசும்..., தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல் நோக்கு ஆர்வலர்களும்..இது பற்றிய விழிப்புணர்வினை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்...!!!

IF WE ARE NOT PART OF THE SOLUTION, THEN WE ARE THE PROBLEM!!!!

எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்......! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....!


தேவா. S

Comments

Mahi_Granny said…
எனக்குள் திறன் இருக்கிறது!..! என்னிடம் நேர்மறையான அதிர்வலைகள் இருக்கின்றன.....! aahaa .i agree. u r in super good form . go ahead.
நேர்மறை எண்ணங்களே நாட்டையும் நம்மையும் முன்னேற்றும்
ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....!////

நேத்து வீட்டில் சாப்பாடு போடலையா அதான் இப்படி
நல்ல சிந்தனை சார் , அதை அழகா சொல்லி இருக்கீங்க
profit500 said…
IF WE ARE NOT PART OF THE SOLUTION, THEN WE ARE THE PROBLEM!!!!
///இங்கே... எழுத்துரிமை, பேச்சுரிமை, சமூகக் கூட்டுறவு என்று எல்லாமே இருக்கிறது.. !///

உண்மை!!!
dheva said…
மஹி கிரேனி... @ நன்றிங்க அம்மா.... உங்களின் ஆசிர்வாதம்!
dheva said…
எல்.கே. @ அடிப்படையில் மனித மனங்களில் ஏற்படும் மாற்றம்.. ஆமாம் தனி மனித மாற்றம்...ஒட்டு மொத்த நாட்டையும் மாற்றியே ஆகவேண்டும்.
dheva said…
செளந்தர்...@ கட்டுரையில் உன் கண்ணில் பிரியாணி பட்டிருக்கிறது.

நேத்து நைட் தான் புல் கட்டு ஆச்சே.....ஹா..ஹா..ஹா..!
dheva said…
மங்குனி & பன்னிகுட்டி...@

ஆயுத பூசை நீங்க கொண்டாடலயா??????
நல்ல விளக்கம் .பொசிடிவ் எண்ணைகள் பற்றி . நன்றி .. இதுவும் ஆயுத பூஜை தான்
கொஞ்சம் சிந்திப்போம்
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
பக்காவா எழுதியிருக்கீங்க! சூப்பர்! நேர்மறை எண்ணங்கள் மனிதனுக்கு நிறைய தேவை!
அருமையான விளக்கம் அண்ணா...
Chitra said…
சரி நிலையாமை பற்றி பேசுவதும் நேர்மறை என்பதை நண்பர் அறிந்திருக்கவில்லை... !
நிலையாமை உணர்ந்தால் கர்வம் போகும். கர்வம் இல்லை என்றால் அன்பு பெருகும். அன்பு பெருகிறானால் செய்யும் செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஈடுபாடு அதிகரித்தால்... புரடக்டிவிட்டி என்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும்.



நேர்மறையான ஒரு பாசிட்டிவ் அவுட் லுக் என் தேசத்து இளைஞனின் உடனடித் தேவை! இயன்ற வரை அரசும்..., தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், சமூக நல் நோக்கு ஆர்வலர்களும்..இது பற்றிய விழிப்புணர்வினை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும்...!!!

IF WE ARE NOT PART OF THE SOLUTION, THEN WE ARE THE PROBLEM!!!!


...... முத்தான கருத்துக்கள்!!!!! தேவா...... சான்சே இல்ல! அசத்திட்டீங்க..... பாராட்டுக்கள்!
//dheva said...
மங்குனி & பன்னிகுட்டி...@

ஆயுத பூசை நீங்க கொண்டாடலயா?????? ///


முடிஞ்சதண்ணே!!
///ஒரு புல் பிளேட் பிரியாணி சாப்பிடும் ஆசையில் என் கண்ணெதிரில் இருக்கும் கஞ்சியையும், கருவாட்டுத் தொக்கையும் ருசிக்க மறக்கும் முட்டாள் மனிதனல்ல நான்....!///

சரி சரி.... நோ டென்ஷன்... (ஒரு குண்டா கஞ்சி + கருவாட்டு தொக்கு...........) சொல்லியாச்சு... :-))
///என்ன மக்கா.. அப்படியே கட்டுரைக்குள்ளே போய்ட்டீங்களா...? சரி வெளில வாங்க இப்போ நாம உக்காந்து பேசுவோம்.///

நல்ல வேளைங்க... கட்டுரைக்குள்ள போக இருந்தேன்... கூப்பிட்டுட்டீங்க..
கொஞ்சம் ஒன் மினிட் வெயிட்... நீங்க வச்ச மண் பானை தண்ணி ஒரு டம்ளர் குடிச்சிட்டு வரேன் :-)))
////நிகழ் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. தட்ஸ் த மில்லையன் டாலர் கொஸ்ஸின்?///

இங்க பாருங்க... ஏதோ முக்கியமா பேச கூப்புட்டீகன்னு வந்தா...
இப்படியா ஏடாகூடமா கேள்வி கேக்குறது???
இதுக்கு பதில் தெரிஞ்சா நாங்க.. ஏன் ப்ளாக் ப்ளாக்-ஆ சுத்திட்டு திரியுறோம்...?? :-))
///எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்......! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....!///

உங்க வெற்றிக்கு வாழ்த்துக்கள்... :-))

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...