Skip to main content

இயமம்....!


















சப்தமின்றி அடங்கிப் போ...! சரித்திரங்கள் படித்து மடங்கிப் போ! வாசித்து வாசித்து தொலைந்து போ! அகந்தை அடக்கி அழிந்து போ...! மனதோடு பேசிக் கொண்டிருந்தேன் நான். மமதை கொள்ளாதே மனமே... தும்பிலும் சிறிய செயல்களை முன்னிலைப்படுத்தாதே மனமே...!

வரலாற்றில் பெரும் பங்கு ஆற்றியவர் யாரும் இன்று இல்லை.

விசுவ ரூபங்கள் என்று மனிதர்கள் நினைத்து எடுத்த அவதாரங்கள் எல்லாம் அழிந்து போய்விட்டன. வாழ்வின் அத்தியாயங்களில் இடம் பிடிக்க நினைத்து அவர்கள் செய்த பிரமாண்டங்கள் எல்லாம் கட்டிடங்களாகவும், வழிபாட்டுத்தலங்களாகவும்,குளங்களாகவும், ஆறுகளாகவும் இருந்தாலும்...அவையும் புவியின் ஓட்டத்தில் திசைகள் மாறி ஒரு நாள் சுக்கு நூறாகலாம்.

கவிதைகள் செய்தவர் கலைந்து போயினர்;போரில் வெற்றி வாகைகள் சூடியவர்கள் மாய்ந்து போயினர்; அழகாய் நின்ற பேதைகள் எல்லாம் நெருப்பின்,மண்ணின் அகோரப்பசியில் செரித்துப் போயினர். காலங்கள் தோறும் மானுடர்கள் சாரை சாரையா வந்து ஜகதல பிரதாபங்கள் செய்து, செய்ததாய் நினைத்து....வாரிசுகளாய்,வாழ்க்கையாய் எழுதி வைத்த, சேர்த்து வைத்த எல்லாமே எடுத்துச் செல்ல முடியாமல் போய்ச் சேர்ந்து விட்டனர்.

இருக்கும் வரை ஆடிப்பாடி ஏமாற்றும் என் மனமே.. ! கொஞ்சம் அடங்கிப் போ.... என்னுள் அமிழுந்து போ,,,! கூடுமான வரை தொலைந்து போ.....!

இப்படி நான் எனக்குள் பேசிக் கொண்டிருந்த 2002 ஆம் வருடத்தின் மாலை 3 மணியில் இருந்த இடம் எது தெரியுமா? எல்.ஐ.சி. அருகே இருந்த பஸ்டாப்.....! வெயில் போய் விடவா ..போய் விடவா என்று கேலி செய்தும்...மாலையின் குளுமை வந்து விடவா… வந்து விடவா என்றும என்னை பரிகசித்தும் கொண்டிருந்த ஒரு சூழல்...

என்னுடைய வார விடுப்பு நாளான திங்கள் கிழமை அது....! (அது ஏன் திங்கள் கிழமைன்னு ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.. மக்கா.. மெயின் ரூட்ட பிடிங்க..) சென்னை சுறு சுறுப்பாக ஓடிக் கொண்டிருந்த அந்த வேலை நாளில்... நீ என்ன லூசு மாதிரி எல்.ஐ.சி. ஸ்டாபிங்கல பண்றன்னு கேக்குறீங்களா?

சும்மாயிருந்த என்னை விக்னேஷ் அண்ணன் உசுப்பி விட்டு... உசுப்பி விட்டு…. எதேதோ சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவரது கைங்கர்யத்தில் விவேகாந்தரின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்றை படித்து விட்டு...இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி....இதில் மனம் போய் ஒன்றிக் கொள்ள....

இயமம் - விட வேண்டிய கெட்டப் பழக்கங்களை விடல்.

நான் இயமத்தில் இருந்தேன். இயமம் பழகும் பயிற்சியிலேயே ஏராளமாக வழுக்கல்களும் சறுக்கல்களும் இருந்தது. விக்னேஷ் அண்னன் சொன்ன படி .....புறச்சூழலை சரியாக வைத்துக் கொண்டால் இயமம் கைகூடும் என்ற கூற்று என் சிற்றறிவுக்கு எட்ட...

இதோ திருவல்லிக்கேணி பார்த்தசாரதியையும், பாரதி சுற்றித் திரிந்த வீதிகளையும் போய் பார்க்கலாமே என்று ஒரு நோக்கத்தில்........பேருந்துக்காய் காத்துக் கொண்டிருந்ததின் பின்ணணியில் வலுக்கட்டாயமாக பைக்கை எடுக்காமல் வந்த என் மீது கோபமும் வந்தது. கெட்டவிசயங்கள் எது என்றே இன்னும் பிடிபடவில்லை. அதிலேயே குழப்பம்..அப்புறம் எப்படி விடுவது....என்ற ஆதங்கம் வேறு......(மனசு எப்டி எல்லாம் ஏமாத்துது பாருங்க...பாஸ்)

பின்னாளில் இந்த எல்லா கொள்கைகளும் உடைந்து சுக்கு நூறானது வேறு விசயம்.

பேருந்து வருவதற்கு முன்னால் பேருந்தை எதிர் நோக்கிதானே காத்திருக்க வேண்டும்...........! ஐ மீன் பேருந்தை தானே பார்க்க வேண்டும்...பக்கத்தில் இருக்கும் பிங்க் சுடிதாரை ஏன் அடிக்கடி பார்க்க மனம் தூண்ட வேண்டும்? மேலும் அந்த பிங்க் சுடிதாரை கவரும் படி எனது பாடி லாங்க்வேஜ் கூட ஏன் சரேலென்று மாற வேண்டும்.......

அப்படி மனம் என்னை தூண்டிய போதுதான் முதல் மூன்று பாராக்களை நான் எனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன்...அதை பார்த்துதான் நீங்க எல்லாம் என்னை லூசு என்று சொன்னீங்க......!

இப்போ புரியுதா? நம்மளை சரிபடுத்திக்க அடிக்கடி இப்படி புலம்ப வேண்டியிருக்கு...அப்படி புலம்புற நேரத்துல சரியா நீங்க வந்துடுறீங்க...என் டைம்…பாஸ்! நான் என்ன பண்றது.....? ஹா.. ஹா.. ஹா…

ம்ம்ம்ம்ம்ம் ஒரு நிமிசம் இருங்க பாஸ்...ஏதோ ஒரு பஸ் வருது.....ஓ.. யா..... !திருவல்லிகேணி பஸ்தான்....சரிங்க.. நான் கிளம்புறேன்.......ஓ அடக்கடவுளே அந்த பிங்க் சுடிதாரும் அதே பஸ்ல ஏறுது.......! பின்னால திரும்பி என்ன வேற பாக்குது......!

சரி பாஸ் நான அபீட் ஆகுறேன்....என்ன ஒண்ணு பஸ்ஸுக்குள்ள என்ன நடக்குதோ அதைப் பொறுத்துதான் நான் கோவிலுக்கு போறேனா....இல்ல...அதுக்கு பின்னால இருக்குற பீச்சுக்கு போறேனான்னு தெரியும்... (அப்புறமா சத்தியமா கோவிலுக்குதாங்க போனேன்)

ஹா..ஹா..ஹா... இயமம் அப்டீன்ற விட வேண்டிய தீய செயல்களை விடுறதுக்கே இவ்ளோ பஞ்சாயத்து? ம்ம்ம்ம் முதல்ல எது தீயதுன்னு நான் தீர்மானிக்கனும்...ஐயோ...பேசிட்டே இருக்கேன் பஸ் போகுது பாஸ்.....

நாம என்னிக்கு பாஸ் நிக்குற பஸ்ல ஏறி இருக்கோம்...? ஓடற பஸ்ல ஏறி எக்குத்தப்பா கைய கால ஒடச்சிகிறதுதானே...பெரிய பந்தாவா இருக்கு ஊருக்குள்ள....மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப் ஃபார் நவ்........ கேட்ச் யூ ஆல் லேட்டர்.....!

அப்போ வர்ட்டா....!


தேவா . S

Comments

இயமம் இப்போது இயலாத காரியம்..!!
அந்த பிங்க் சுடிதார்கிட்ட அடி வாங்கினத பத்தி சொல்லுங்க.
நானும் போய் எல் ஐ சி பஸ் ஸ்டாப்புல நின்னு பாக்குறேன்... வருதானு? பஸ்சை தாம்பா
Unknown said…
இயமம் அழகான வார்த்தை, இந்த பதிவுக்கு என்ன கமெண்ட் போடுறதுன்னு தெரியலங்னா. சுயபரிசோதனைதான் மாற்றத்திற்கான ஒரே வழி.
சைட் அடிச்ச கதைய சொல்ல இப்படி சுத்தி வரணுமா....
//(அது ஏன் திங்கள் கிழமைன்னு ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.. மக்கா.. மெயின் ரூட்ட பிடிங்க..) //

எனக்கு அப்படி ஆராய்ச்சி பண்ணத்தானே பிடிக்குது ..
அது ஏன் திங்கள்கிழமைன்னு தெரியுமா ..?
அதுக்கு முந்திய நாள் ஞாயிற்றுக்கிழமை . அதனால ..
அது சரி ., போய் பஸ்ல ஏறிப்போங்க..!! நானும் கிளம்புறேன் ..
@தேவா

//அப்படி மனம் என்னை தூண்டிய போதுதான் முதல் மூன்று பாராக்களை நான் எனக்குள் சொல்லிக் கொண்டு இருந்தேன்...அதை பார்த்துதான் நீங்க எல்லாம் என்னை லூசு என்று சொன்னீங்க......!//

மாப்பு மொதல் பேர படிச்சதும் எல்லா ஓடி போய்ட்டான். அப்புறம் எங்க 3 பேரா?? நான் தான் வழிமாறி வந்துட்டேன்.... :))
//(அப்புறமா சத்தியமா கோவிலுக்குதாங்க போனேன்)//

அந்த பிங்க் சுடிதார் கூடவா மாப்ஸ்..?
உங்க இயமம் நல்லா இருந்தது. பிங்க் சுடிதார் இயமத்துல வராதா?
ஏற்கனேவே ரஜினி ரசிகன் வேற ..............இனி தேவா அண்ணா வை பார்க்க எல்லோரும் இமய மலை அடிவாரத்தை நோக்கி பயணம் செய்ய வேண்டியது வருமோ
dheva said…
இம்சை..@ இயமம் டா தம்பி...இமயம் இல்ல.. ஹையோ..ஹையோ..!
dheva said…
சிறுகுடி ராமு..@ அடப்பாவி.. எப்படி லாக் பண்ற நீ....! இரு வர்றேன் தங்கச்சிக்கு போன போட்டாதான் சரியா வருவே.. நீ..!
dheva said…
டெரரு..@ அப்டியா மாப்ஸ்.. இவிங்கள சமாதனம் பண்ணி கூட்டிட்டு வரதுக்குள்ள டங்கு வாரு பிஞ்சுடும் போலயே...

அங்க பாரு ஒருத்தன.. இயமம்னு போஸ்டு போட்டா.. மப்புல இமயம்னு படிக்கிறான்...!
dheva said…
//அதுக்கு முந்திய நாள் ஞாயிற்றுக்கிழமை . அதனால .. //

செல்வு..@ யப்பா... யாராச்சும் ஒரு ரேடியோ ஜாக்கி வேலைய சீக்கிரமா கொடுங்களேன்பா.. (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்)
dheva said…
//சைட் அடிச்ச கதைய சொல்ல இப்படி சுத்தி வரணுமா....//

வெறும்பய...@ அப்போ இது சைட் அடிச்ச கதையா????? அம்புட்டுதேன்....விளங்குச்ச...சாச்சுபுட்டியேடா தம்பி....!
//இம்சை..@ இயமம் டா தம்பி...இமயம் இல்ல.. ஹையோ..ஹையோ.//
இயமம்-இதுக்கு அர்த்தம் சொல்லுங்க நான் நிஜத்துக்கும் கேக்குறேன் ........ஆமா .இமசை ன காமெடி அப்படி நினைக்க கூடாது இல்ல ......அதான் இந்த சந்தேகம்
Anonymous said…
வெகு ஸ்வாரஸ்யமாக இருக்கிறது
Anonymous said…
சரி பாஸ் நான அபீட் ஆகுறேன்....என்ன ஒண்ணு பஸ்ஸுக்குள்ள என்ன நடக்குதோ அதைப் பொறுத்துதான் நான் கோவிலுக்கு போறேனா....இல்ல...அதுக்கு பின்னால இருக்குற பீச்சுக்கு போறேனான்னு தெரியும்//

சூப்பர் டச் வரிகள்
Chitra said…
////ஹா..ஹா..ஹா... இயமம் அப்டீன்ற விட வேண்டிய தீய செயல்களை விடுறதுக்கே இவ்ளோ பஞ்சாயத்து? ம்ம்ம்ம் முதல்ல எது தீயதுன்னு நான் தீர்மானிக்கனும்...ஐயோ...பேசிட்டே இருக்கேன் பஸ் போகுது பாஸ்.....////


.....தலைப்பை பார்த்துட்டு, என்னடா இமயம் ஸ்பெல்லிங் தப்பா இருக்கே என்று நினைச்சேன்... இப்போதான் விஷயம் தெரியுது.... கலக்குறீங்க, தேவா!
SASIKUMAR said…
mudiyala ippaveh kannaikkattuthuda saaamee.innum evlavuthaaan stock irukku?
vinthaimanithan said…
அண்ணே, சீக்கிரமா ஆசிரமம் ஓப்பன் பண்ணிடுவோம்... நீங்கதான் தலைவரு... நாந்தான் செயலாளரு... ஒரு பயலுக்கும் ஒரு போஸ்டிங்கு குடுக்கப்படாது!
பின்னாளில் இந்த எல்லா கொள்கைகளும் உடைந்து சுக்கு நூறானது வேறு விசயம்.//

ஹெஹெஹே...

நாங்கல்லாம் யாரு !
////ஹா..ஹா..ஹா... இயமம் அப்டீன்ற விட வேண்டிய தீய செயல்களை விடுறதுக்கே இவ்ளோ பஞ்சாயத்து? ம்ம்ம்ம் முதல்ல எது தீயதுன்னு நான் தீர்மானிக்கனும்...ஐயோ...பேசிட்டே இருக்கேன் பஸ் போகுது பாஸ்.....////


.....தலைப்பை பார்த்துட்டு, என்னடா இமயம் ஸ்பெல்லிங் தப்பா இருக்கே என்று நினைச்சேன்... இப்போதான் விஷயம் தெரியுது.... கலக்குறீங்க, தேவா! //


Repeat.......... CHITRA Madam...
அதுதான் மனசு. இல்லன்னா கண்ணு முன்னாலேயே மரணங்களைப் பார்த்தும், தனக்கும் எந்த நேரமும் மரணம் வரலாம் என்று தெரிந்திருந்தும் மனிதன் இந்த ஆட்டம் ஆடுவானா?
Ungalranga said…
இன்னைல இருந்து நான் உன்னோட ஃபேன்யா!!!!!

பட்..இயமம்..சரியான டெக்னிக் இல்லை..!!

அதை அனுபவிச்சு சொல்றேன்...!!!!

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...