
ட்ரெய்லர்
சமப்பட்டு போய் கிடக்கிறது மனசு.....! இங்கே... அங்கே ஓடி ஓடி...ஆடிப் பாடி....ஒரு குறிப்பிட்ட காலத்திலேயே...சமப்பட்டு........மெளனத்தில் ஒரு மோகனப் புன்னகையோடு....எனக்குள் என்னையே பார்த்து சிரித்துக் கொண்டு...ரசித்துக் கொண்டு ஒரு சுகமான அதிர்வலைகளை உள்ளுக்குள் பரப்பிக் கொண்டு...சமப்பட்டுப் போய்க் கிடக்கிறது.
இப்போதெல்லாம் அரிதாகவே வெளியே வந்து எட்டிப்பார்க்கிறது....! ஆணவங்களும், அகங்காரங்களும், சப்தமான பேச்சுக்களும் சிரிப்புகளும் சேர்ந்து ஒரு வித அவஸ்தையைக் கொடுக்க வெளியே வர விருப்பமின்றி மீண்டும் உள்ளேயே போய்....கண்கள் மூடி....அகக்கண்கள் திறந்து அண்டத்துள் கலந்து .....பேச்சற்று மொழியற்று.....விழிகள் மூடியிருக்க.....ஏதோ ஒன்று திறந்து கொள்ள புலனற்ற பார்வை...வந்து பளீச் சென்று வந்து விழுந்து விடுகிறது.
ஒரு வித நெரிசல் தொலைத்த சந்தோசம் உடல் முழுதும் வந்து அழுத்த......உள்ளே சென்று உற்று நோக்க....வேசமிட்டு கோசமிட்டு.....கொக்கரிக்கும் மானுடர்களின் அகத்தின் உள்ளே இருக்கும் இருப்புத்தன்மைகள் எல்லாம்....அழுது கொண்டு மூலையில் சிறைப்பட்டு கிடக்கின்றன என்ற உண்மை தெரிகிறது.
அவர்களின் ஆன்மா சிறைப்பட்டுக் கிடக்கிறது. அகம் நோக்கி திரும்புவது கூட பல நேரங்களில் அகங்காரத்தில் நிகழ்ந்து விடுகிறது. பிரபஞ்சம் படைக்கப்பட்டதில் இருந்து சரி தவறுகள் எல்லாம் இயற்கைதான் நியமிக்கிறது...அதுவே எல்லா காரியங்களையும் நடத்துகிறது...ஆனால் ரப்பர் மனிதர்கள் எல்லாம் தாங்கள் நிகழ்த்துவது போல கருதி...தன்னுள் சேர்த்து வைப்பது அவர்களின் அகங்காரத்திற்கு வலுவேற்றி விடுகிறது.
ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன் கண்டு பிடித்த அத்தனையுமே ஏற்கனவே பிரபஞ்சத்தில் இருந்தது...என்ன ஒன்று மனித மூளைகளால் அறியப்படாமல் இருந்தது. உள்ளதை கொணார்பவன் மனிதன்.....இதில் ஆச்சர்யம் கொள்ள என்ன இருக்கிறது. மட்டுப்பட்ட மனிதர்களுக்கு மனிதர்களின் நியதிகள்...ஆனால் பிரபஞ்ச நியதி என்ற ஒன்று இருக்கிறதே...அது எத்தனை பேருக்குத் தெரியும்?
அது என்ன பிரபஞ்ச நியதி? பூமி சூரியனை சுற்றுவது நியதி.....சுற்றித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயம் இல்லை ஆனால் சுற்றவில்லை என்றால் என்ன ஆகும்....????? அண்டத்தில் இருக்கும் எல்லா கோள்களும் ஒரு வித பிடிப்பில் ஈர்ப்பில் கட்டுண்டு நிற்கின்றன....? உண்டா இல்லையா...? நியதிகள் எல்லாம் இல்லாம் சேர்ந்து ஒரு வித சீரான வேகத்தில் சீரான இயக்கத்தில் அதன் அதன் அழகில் எல்லாமே.... அழகாய் நகர்ந்து கொண்டிருக்கிறதே.....?
வயிற்றுப்பசியும், அயற்சியில் உறக்கமும், காமத்தில் கூடலும், தேடலில் விவாதங்களும், வலித்தால் கோபமும், சந்தோசத்தில் சிரிப்பும், சோகத்தில் அழுகைகயும்.....10 மாதத்தில் குழந்தையும்......நியதிகள்....! யார் வகுத்தது இவற்றை...? இவை அவற்றின் தேவைகளை அவையே கணக்கிட்டு....அதன் அழகில் நிகழ்த்தி.....அதன் பின் வரும் நிகழ்வுகளுக்கு அதே சீரில் இயங்குகின்றன.....! இங்கே விருப்பு வெறுப்பு என்று எதையும் திணிக்க இயலாது....அல்லது இதை மாற்றி எனக்கு 5 மாததில் குழந்தை வேண்டுமென்றால் ..அதற்குப் பெயர் குழந்தை அல்ல....பிண்டம்.....
ஓட்டுனர் உரிமம் பெறும் போது சாலை விதிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.....சரி உரிமமும் பெற்றாயிற்று......வாகனமும் வாங்கியாயிற்று....சாலையும் இருக்கிறது.... நமக்கும் வண்டி ஓட்டத் தெரியும்....? பின் எதற்கு ரெட் சிக்னலில் நிற்கிறோம்....?(சென்னைல ரெட் சிக்னல் தாண்டி தான் இன்னும் நிக்கிறாங்க....அது வேற கதை)...
இடது பக்கம் திரும்ப லெஃப்ட் இன்டிகேட்டர் போட்டு திரும்பு......முன்னால போற வண்டில பிரேக் லைட் எறிஞ்சா.. உன் வண்டி ஸ்பீடு கண்ட்ரோல் பண்ணு....அடிக்கடி சென்ன்டர் மிர்ரர் பாரு (எனக்கு தெரிஞ்ச துபாய் வாகனம் ஓட்டும் விதியை சொல்கிறேன்...அந்த அந்த ஊர்ல இருக்கவுக அந்த அந்த ஊர கற்பனை பண்ணிக்கோங்க.....ச்சும்மா எங்க ஊர்ல இப்டி இல்லானு வாதம் பண்னிட்டு வரப்பிடாது...) இப்படி ஒரு கட்டுக்குள் வாழ வேண்டிய சூழல்.....ஏனென்றால்...அப்போதுதான் இயக்கமும்.....விளைவுகளும் நன்றாக இருக்கும்.....
இது விடுத்து....நான் என் இஷ்டத்துக்குத்தான் வண்டி ஓட்டுவேன்...என்னிடம் லைசென்ஸ் இருக்குன்னு ஒவ்வொருத்தரும் நினைச்சா.......என்ன ஆகும்....????? இந்த இடத்தில ஒரு ரெண்டு நிமிசம் யோசிச்சுட்டு மேல படிங்க....
இப்படித்தான் மதங்களும்,மத ஆச்சார்யார்களும், இறைத்தூதர்களும் வாழ வழியையையும் சட்டங்களையும், மக்களுக்கு சொல்லிவிட்டுப் போனார்கள். இப்படி போனதற்குப் பின்னால் ஒரு சீரான இயக்கம் இருக்க வேண்டும் என்று ஒரு பெரு நோக்குதான்..இருந்திருக்க வேண்டும்..!
இன்னைக்கு ஈவ்னிங்க் ஆபீஸ் போய்ட்டு வந்து பக்கது வீட்டுக்காரன் பார்க்கிங்ல வண்டி போடமுடியுமா நான்.....? பிச்சு புடுவான் பிச்சு.....சரிதானுங்களே.....
கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் எங்கும் நிறைந்து இருப்பதற்கு காரணம்...ஜஸ்ட் ஃபார் ஸ்மூத் மூவிங்...! ஆனால் இதிலும் ஒரு விசயம் இருக்கு....இடம்,பொருள் ஏவல் ...தெரிஞ்சு நடந்துக்கணும்...ஆமாம்....இந்தியாவில் சட்டமாக்கப்பட்டது....வளைகுடா நாட்டில் சட்டமில்லை....வளைகுடா நாட்டில் சட்டம் என்று சொல்லி இறுக்கப்படுவது..... அமெரிக்காவில் சட்டம் கிடையாது......அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது ஈரோப்பில் தளர்த்தப்பட்டிருக்கும்.....
ஒவ்வொரு மண், வெவ்வேறு மனிதர்கள், அவர்கள் வசதிக்கும் சூழலுகும் ஏற்ப சட்ட திட்டங்கள்....! எல்லோரும் ஒரு சட்டத்தை பின்பற்றி வாழ வேண்டும் என்று கட்டாயம் இல்லை. வாழ்வின் வசதிகளுக்கு ஏற்ப மண்ணின் இயல்புக்கேற்ப (மண்ணுக்கு இயல்பு இருக்கிறது....இந்தியாவில் விளையுமொரு செடியை கொண்டு வந்து செளதியில் வைத்து ராஜ உபசாரம் கொடுத்தாலும் அது மரித்துதான் போகும்) மனிதர்கள் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள்.
நியதிகள் என்பவை இல்லாத ஒரு மனித இனம் இருந்திருக்கவே முடியாது......ஆதிகாலத்தில்.....இருந்திருக்கலாம் ஆனால் அங்கேயும் ஒரு வித அவர்களுக்கேற்ற நியதிகள் இல்லாமல் இருக்க வாய்ப்பு இல்லை...கட்டுபாடும் நியதியும் மனித ஆழ்மனதிலிருந்து தோன்றுபவை....ஆழ்மனம் பிரபஞ்சத்தோடு தொடர்புடையது........
பாருங்கள்... இவ்வளவு நேரம் பேசியதற்கே என் மனம் என்னை திட்டுகிறது...அது மீண்டும் உள்ளே செல்ல எத்தனிக்கிறது....ஆமாம்...தன்னைத்தான் பார்த்து ஆனந்தம் கொள்ளும் சுகம் அடுத்தவர் பற்றி பேசுவதிலும் ஊருக்கு உபதேசம் செய்வதிலும் கிடைக்கவே போவதில்லைதானே.....? ஒரு கதை ஒன்று சொல்லி முடிக்கலாம் என்று நினைத்தேன்....என் ஆன்மாவிடம் இருந்து எனக்கு அனுமதி கிடைகக்வில்லை.....
நான் என்னுள் லயிக்கப் போகிறேன்.....அது எல்லாம் சொன்னாப் புரியாதுங்க....தனியா உக்காந்து உங்களுக்குள்ளே நுழைந்து..ஆத்ம விசாரணை செஞ்சு பாருங்க தெரியும்.......!
(என்னது ஆத்ம விசாரணைனா என்னவா...தம்பி. சி.போ. வந்துட்டான்....மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்)
அப்போ வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா !!!!!!!
தேவா. S
Comments
அத யாரு பண்ணுவாங்க? இந்த சிபிஐ சிபிஐ ன்னு சொல்லுவாங்களே... அவுகளா?!!
jokes apart...
விதிமுறைகள் காலதேசவர்த்தமானங்களுக்கேற்ப மாறலாம். அடிப்படை விதியான வேறு யாரையும் முட்டி மோதி காயப்படுத்தக்கூடது என்பதை மீறும்போது அவர்கள் வண்டி ஓட்டும் தகுதியை இழந்து விடுகிறார்கள்
//இன்னைக்கு ஈவ்னிங்க் ஆபீஸ் போய்ட்டு வந்து பக்கது வீட்டுக்காரன் பார்க்கிங்ல வண்டி போடமுடியுமா நான்.....? பிச்சு புடுவான் பிச்சு.....சரிதானுங்களே.....//
இப்படி வேற ஒரு நெனப்பு இருக்கா?? ட்ரைலர் சூப்பர் மாப்ஸ் மெயின் பிக்சர் எப்பொ??
எங்க போனிங்க ஒழுங்கா தானே சொல்லிட்டு வந்திங்க அதுக்குள்ளே எங்க போனிங்க
யாருதோ ஆன்மா வேற ஜெயில்ல கிடக்காம்.. நான் அரெஸ்ட் பண்லயே..
எனக்கு எப்ப எந்த வண்டி ஓட்டப் பிடிக்குதோ அதை நான் ஓட்டுவேன்.. அதுக்கு எதுக்கு லைசென்சு.... லைசென்ஸே தேவையில்லைங்கறாங்க.. நீங்க வேற..
அச்சச்சோ.. நான் டபுள் மீனிங் ட்ர்பிள் மீனிங்க்ல பேசறேனோ?
ரெண்டு நிமிசம் யோசிச்சதுக்கே ரெண்டு மீனிங் வருதே...
தம்பி அதுக்குள்ள எப்படி ?? விதிமுறைகள் மீறுவதற்கு என்றால் எதற்கு விதிமுறை ??
:)))
இதுதான் அண்ணா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ., எப்பொழுதுமே அடுத்தவர் பற்றிப் பேசுவதென்பது இன்பத்தைக் கொடுக்காது .. அதே போல எப்பொழு நாம் நமது கருத்துக்களை அடுத்தவர் கருத்துக்களுடன் ஒப்பிட நினைக்கிறோமோ அப்பொழுதே அப்பொழுதே நமது கருத்துக்கள் மதிப்பிழந்து விடுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு .. அதை வைத்துக்கொண்டு எனது கருத்து தான் சிறந்தது என்று சொல்லும்போது பிரச்சினைகள் வடிவெடுக்கின்றன. மொத்தத்தில் நமது மகிழ்ச்சியானது நம்மிடமே இருக்கிறது . நமது கருத்துக்கள் வெற்றி பெறுவதிலோ தோற்பதிலோ அது கிடையாது ..!
என்னோட கவலை எல்லாம் புவி வெப்பமடைதலை எப்படி தடுப்பதுன்னுதான்...அல்லது அது பற்றி கட்டுரை எழுதணுமேன்னு அது பத்தி படிச்சுகிட்டு இருக்கேன்....
சும்ம ஒரு 50 இல்ல 60 வருசம் ஆவ்ரேஜா வாழ்றதுக்கு மனுசங்க கொடுக்குற பில்டப் இருக்கே....தாங்க முடியலடா சாமி...இரு ஒரு லெஸ்ஸி அனுப்புறேன் மொரிசியசுக்கு.......
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
ஏன் புரியாதுன்னு நினைக்கறீங்க தேவா? அது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. தியானம் பழகினா சரியா புரிய ஆரம்பிச்சிடும். Know Thyself என்று சொல்லிவைச்சுட்டுப்போனாங்கில்ல ஞானிங்க எல்லாம். நம்மை புரிஞ்சிக்கணும்னா தியானம் பழகினா போகுது.
அதை விட்டு சொன்னா புரியாதுன்னுட்டு என்ன இது.. ஏதோ அது யாருக்கும் கைவராத வித்தைன்னுட்டு சொல்லி குழந்தைங்களை பயமுறத்தறீங்க... அன்பா சொல்லிக்கொடுங்க. எல்லோருமே கத்துப்பாங்க..
நான் கூட மன்மதன் அம்பு ட்ரெய்லர் போலன்னு நினச்சு வந்தேன். ஒண்ணுமே இல்லியா?
it means =(equal to)
அடப்பாவி அண்ணா துபாய்ல நீங்க ட்ராபிக் போலீசா?
நானும் நீங்க சொன்னதால மேல படிச்சேன். ஏற்கனவே படிச்சதுதான் வருது. நாலு தடவை படிச்சிட்டேன். கீழ படிக்கலாமா?
என்ன பிரச்சனை. யார்கிட்ட மாமூல் வாங்கணும். சீக்கிரம் சொல்லுங்க!!!
செ ...... அடி. பெத்த ஆத்தா வந்து சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டோம் (?)
டக்குனு நிறுத்திட்டீங்க.. ஆத்ம விசாரணையை...
//
உண்மைதான் தேவா.. கட்டுப்பாடும் நியதிகளும் தான் எல்லாவற்றையும் ஒழுங்கமைக்கிறது. சீராக விஷயங்கள் நடக்க உதவுகிறது. ஆனால் அதே கட்டுப்பாட்டையும் நியதியையும் தலைகீழாய் மாற்றி இயங்க வைத்துவிட்டு இதுதான் சரி என்று காட்டுவதும் எல்லாம் இயற்கைக்கு மட்டுமே உள்ள கலை.
நாமெல்லாம் பொம்மைகள் தானே.
இன்னும் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் பிரபஞ்சத்தைப்பற்றி (பெரிய அளவில்) யோசித்துக்கொண்டிருக்கும் போதும் (//நியதிகள் என்பவை இல்லாத ஒரு மனித இனம் இருந்திருக்கவே முடியாது//) நாம் நம்முடைய மனித இனத்தை மட்டுமே முன்னிருத்திக் கொள்கிறோம். நாம் எப்போதும் நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறோம். நாம் அறிவில் வளர்ந்து விட்டோமா தேவா?
நாம் மட்டுமல்ல , விலங்குகளும் கூட ஒரு நியதிக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றன. அதன் வாழ்க்கை முறையை கூர்ந்து கவனித்தால் புரியும்.
தவறென்றால் திருத்தவும்
அதிலும் தேவா ஒரு அருமையான அபூர்வமான சிந்தனையாளர்.
நான் சொல்வது பொதுவாகவே நம் எல்லோரை(மனிதர்கள்)ப் பற்றியும் தான். நம்முடைய சிந்தனைகள் அனைத்தும் மனிதகுல முன்னேற்றங்கள் மற்றும் தாழ்வுகள் பற்றித்தான் இருக்கிறது. அனைத்து (இனங்கள்)உயிரிகள் பற்றியல்ல.
என்னுடைய தாழ்மையான கேள்வி என்னவென்றால் இயற்கைக்கு எல்லா உயிரிகளும் சமம் தான். புல் இல்லையென்றால் ஆடு,மாடு இல்லை. ஆடு, மாடு இல்லையென்றால் சிங்கம், புலி இல்லை. மரம் இல்லையென்றால் மனிதன் இல்லை. எல்லாம் ஒரு வட்டத்திற்குள் இருந்தும் ஒன்றில்லையென்றால் இன்னொன்றின் பாதிப்பு பற்றிய எண்ணம் இருந்தும் நாம் நம்மை(மனிதர்களை) பற்றி மட்டும் தான் சிந்திக்கிறோம். நாம் நம் அறிவை விரிவாக்கவே முடிவதில்லை. ஏனென்றால் எதை பற்றிய முழுமையான அறிவும் நம்மிடம் இல்லாததே. என் கருத்து இது அவ்வளவு தான்.
நீங்கள் சொல்லுவது சரிதான்.. இன்னும் சொல்லப் போனால் தன்னை பற்றியே எண்ணுவது அதிகம்
நலமா? உண்மைதான் வேலு மனிதன் பெரும்பாலும் தனக்குள்ளேயே தன்னைப்பற்றியே விவாதித்து கொண்டிருக்கிறான் அதை விட்டு வெளியே வர முடிவதில்லை.......
ஆனால் அப்படி வரவும் முடியும் வேலு...அதற்கு மிகப்பெரிய புரிதல் வேண்டும்...!
ஐ லைக் திஸ்
நியதிகளால் சூழப்பட்டதே வாழ்க்கை.