
ட்ரெய்லர் VI
இப்போ...இப்போ...இப்போ... நிஜமாவே நினைச்சு பாக்குறேன்...!!!!!! உப்பும் உறைப்பும் ஓவரா சாப்பிட்டு சாப்பிட்டு... ரோசமும், கோவமும்...நமக்கு அதிகமா வருதோன்னு....!
மிகப்பெரிய மனப்பிறழ்ச்சியும் தவறான கற்பிதங்களையும் காட்டுவதையும்....அதில் ஏதோ அபரிதமான உண்மைகள் இருப்பது போல மனிதர்கள் ஆராவரம் காட்டுவதையும் குறைந்த பட்சம் பார்த்து விட்டு வாயில் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டு எங்கேயோ ஒரு மூலையில் எனக்கேன்ன என்று துப்பிவிட்டு....மேலே வானத்தில் பறக்கும் காகங்களை எத்தனை என்று எண்ணிக் கொண்டு...சாதாரணமாக நகர......கண்டிப்பாய் என்னால் முடியாது.
உலகம் மொழியற்று கிடந்த காலத்தில் இயல், இசை, நாடகம் என்று உலகிற்கு நாகரீகம் கற்பித்த ஒரு இனத்தின் கலச்சாரத்தை சாட கவர்ச்சியான மேலை நாட்டு கலாச்சாரம் உதவுகிறது என்பதை மேம்போக்காக பார்க்கும்போது உண்மை இருப்பது போல தோன்றினாலும்....ஒரு குடியின் ஒரு சமூகத்தின் பழக்கவழக்கங்கள்....வாழ்வியல் முறைகள்...ஆங்காங்கே நிகழும் சூழ்நிலைகளின் அடிப்படையில் மனோதத்துவ ரீதியில் வார்க்கப்படுபவை.......
உண்ணவும், உடுத்தவும் வாழவும் மிகையாக இயற்கையை சார்ந்திருந்த ஒரு சமூகத்தின் மனோதத்துவ இயல்புகள் என்ன? என்று ஆராய்ந்து பார்க்க கொஞ்சம் விசால பார்வையும்...தெளிந்த உள்நோக்குத் தன்மையும் அவசியம் இவை இரண்டும் அற்றுப் போனால்..மேம்போக்கான....மனம் என்ன என்ன கதைக்கிறதோ அவை எல்லாம் எடுத்து நாம் கடை பரப்பி வைத்து... லேகியம் விற்பது போல கூவி கூவி விற்க வேண்டியதுதான்.
வியாபரத்தின் அடிப்படையில் சமோயோசித புத்தியை பயன்படுத்தி..தான்... தான் என்று வாழும் ஒரு கூட்டத்திற்கு எப்போதும் அடுத்த மனிதர்கள் பற்றி கவலையில்லை....! ஒருவன் முகத்தில் காறி உமிழ்ந்தால் அதற்கு கோபம் கொள்தல்தான் மனித இயல்பு...
அங்கே கோபத்தை மறைத்து விட்டு... சிரித்துக் கொண்டு....சாதரணமாக புத்திமதிகள் சொல்லிவிட்டு போகும் இடாமாயிருக்கட்டும் இல்லை.... உன்னை நான் கண்டு கொள்ளவில்லை என்று நகரும் இடமாயிருக்கட்டும் அதற்கு பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது ...கபட குள்ள நரித்தனம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்....?
இந்திய கலாச்சாரத்தின் இரு பெரும் சீர்கேடுகள் நிகழ்த்தப்பட்டது அன்னியர்களால்....ஒன்று...பெண்ணடிமைத் தனம்.....! இதை நிகழ்த்த....அன்னியர்களின் வழிமுறைகளும்....சாஸ்திரங்களும் உதவி செய்தது......இதைக் கிழித்து வெளியே நாம் வந்து கொண்டிருந்த நேரத்தில்தான்.....வியாபாரம் செய்ய கையேந்தி நமது தேசத்துக்குள் நுழைந்தனர்....இன்று கலாச்சாரத்தின் உச்சத்தில் இருப்பதாய் நாம் நினைக்கும் வெள்ளையர்கள்.
இயல்பிலேயே....வந்தவரை வரவேற்கும் ஆதரிக்கும், நம்பும் குணம் கொண்ட லெமூரியக் கண்டத்து மக்கள் இவனின் சூழ்ச்சியில் விழுந்துதான்.....இவனிடமே நாட்டை விட்டு...விட்டு....பின் போராடி பெற வேண்டியதாகி விட்டது. சுதந்திரம் கொடுத்துவிட்டு அவன் போய் 60 ஆண்டுகளுக்கும் மேலாயும் அவனின் கபடமும் வஞ்சமும் சூழ்ச்சியும் இன்னும் நம் மனிதர்களிடம் தொக்கியே நிற்கிறது.
பெரும்பாலும் அரசியலில் அவன் விட்டுச் சென்ற ஆதிக்க மனப்பான்மை கொடி கட்டிப் பறக்கிறது. ஆக இன்றைய சமூகத்தில் ஆங்காங்கே இருக்கும் சமூக சீர்கேடுகளுக்கு காரணம் நயவஞ்சகர்களின் குள்ளத்தனம் இன்னும் நம்மிடம் எஞ்சியிருப்பது தானே?
ஒரு கணம் நில்லுங்கள்....யாரை நாம் திட்டிக் கொண்டிருக்கிறோம் தெரியுமா..... நீதிக்காக தனது புதல்வனை தேர்காலில் வைத்தானே.. .மனு நீதிச் சோழன் அவனின் சந்ததியினரை.....!!!!! ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலேயே....குடவோலை முறை கொணர்ந்து ஜனநயகயத்தின் சாயல் உட்புகுத்தினானே...இராசராசன்...அவனின் சந்ததிகளையும்தான்......
ஒரு கோவில் கட்ட....அறிவியல் வசதிகள் அற்றுப் போயிருந்த காலத்தில்....மலைகளே இல்லாத ஒரு பகுதியில் கல்லாலேயே கோவில் செய்ததற்குப் பினால் இருந்த தொழில்நுட்பமும்.....நிர்வாகம் செய்த மூளைகளும்.....என்ன முட்டாள்களின் கூட்டமா?
" தேரா மன்னா...." என்று சபைதனில் வந்து கேட்ட பெண்ணின் கூற்றில் இருந்த உண்மை கேட்டு...." யானோ அரசன்....யானே...கள்வன்..." என்று உயிர் துறந்த வேந்தர்களின் வரலாற்றையும் உள்ளடக்கிய சந்ததியினருக்குத்தான்...இன்று கலச்சாரமற்றவர்கள் என்ற பட்டம்....
நான் பள்ளிக்கு முதன் முதலாய் செல்கிறேன்....பக்கத்து வீட்டு பாபு அங்கேயே..மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.....!!!! பாபுவிடம் அம்மாவிடம் என் அம்மா தம்பியை பார்த்துக் கொள்...என்று சொல்லி அனுப்புகிறாள்....தெருவில் விற்கும் பாண்டாங்களை வாங்கித் தின்னாதே தம்பி என்று கண்டிக்கிறாள்.....? பாபுவும் நானும் கைகோர்த்து பள்ளி செல்கிறோம்....கூடப்பிறக்காமலேயே பாபு எனக்கு அண்ணன் ஆகிவிட்டான்....
இது கூட்டு சமுதாயம்....!!!!!
இங்கே...மனிதர்கள் கூடி வாழ்ந்தார்கள் (இன்னமும் வாழ்கிறார்கள்)...! பின் தீர்மானித்து தலைவனை தேர்ந்தெடுத்தார்கள்.....அதன் பின் அந்த தலைவனின் கீழ்.....நிர்வாகம் நடந்தது.....! என்னதான் நிர்வாகமும் அரசும் இருந்தாலும்....இவன் பெரும்பாலும் சக மனிதனை சார்ந்தேதான் பிரச்சினைகளை தீர்க்கிறான்.
அமீரகத்தில் நான் வசிக்கிறேன்....எனக்கு முடியவில்லை ஏதோ பிரச்சினை என்றால்...ஒரே ஒரு தொலைபேசியில் ஆம்புலன்ஸ் வரும்....அவர்களே கொண்டுபோய் மருத்துவம் மனையில் சேர்த்து விடுவார்கள். இங்கே....சமூகம் என்பது அரசும் அரசுசார் நிறுவனங்களும்...இதில் ஒரு கட்டுபாட்டு இயங்குதன்மை மிகுந்திருக்கிறது. மனிதர்களும் உறவுகளும் அற்றுப் போயிருக்கும் ஒரு சூழல் இது!
ஆமாம் இறுக்கத்தோடு....ஒவ்வொரு கட்டுப்படுகளை எண்ணத்தில் கொண்டு வாழும் மனிதர்கள் பெரும்பாலும் சுயநலமாய் இருந்து போவதால் பக்கத்து வீட்டுக்காரனின் பெயரே கூட தெரிவதில்லை.....தெரியவேண்டிய அவசியமும் இல்லை.... இந்த சூழல் அப்படி.....
ஆனால்...சொந்தமோ இல்லையோ....சும்மாவே..... மாமா, சித்தப்பா, பெரியப்பா, பங்காளி, மாப்பிள்ளை, மச்சி....என்று உறவோடு வாழும் பெருங்கூட்டம் நாம். ஒருத்தருக்கு உடம்பு முடியவில்லை எனில் தெருவே கூடி நின்று அவரை மருத்துவமனையில் சேர்க்கும்.....பக்கத்து வீட்டுக்காரன் சமைத்து அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பான்...
எங்கள் கலாச்சாரத்தில் ஒருத்தருக்கு ஒருவர் நாங்களேதான் உரிமைகளை கொடுக்கிறோம்.....எங்களுக்கு....இப்படி வாழ்வதில் சுகம் இருக்கிறது. நாங்கள் கூட்டம் கூட்டமாக..... உண்டு வாழ்ந்து வளர்ந்தவர்கள்....!!!!
கலச்சாரம் போதிக்கும் நாடுளில் வாழும் மனிதர்களை நாம் குறை சொல்வதற்கில்லை.....அது அவர்களின் கலாச்சாரம். அவன் பர்கர்தான் எனக்கு பிடிக்கும்....காலையில் ஒரு பிரட் டோஸ்ட் சாப்பிடுவேன்.... என்று சொன்னால் அது இயல்பு...!!!! நான் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்கள் போல நடந்து கொண்டால் அது நடிப்பு......!!!!!!!
மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையைச் சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....
நாம் இயற்கையோடு ஒத்து வாழ்ந்தவர்கள்.....வாழ்பவர்கள்....இங்கே எமது மனிதர்களின் செயல்பாடுகளில்...விதிமுறைகளில்...மனோதத்துவ ரீதியான...மிகப்பெரிய பரந்த விசயங்கள் இருக்கின்றன... அவை மிக சூட்சுமமானவை....!
எவையெல்லாம் எமது திடமோ...அவையெல்லாம் புரிந்து கொள்ளப்படாமையால்....அவை குறையாகத் தெரிகின்றன....என்பதுதான்....சரியான உண்மை...
இன்னும் விரிவாக பேசுவோம் தோழர்களே.....காத்திருங்கள்...
அப்போ......வர்ர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்ட்ட்டா!!!!!
தேவா. S
Comments
உண்மைதான் இது தான் எங்கள் கலாச்சாரம்
அங்கே கோபத்தை மறைத்து விட்டு... சிரித்துக் கொண்டு....சாதரணமாக புத்திமதிகள் சொல்லிவிட்டு போகும் இடாமாயிருக்கட்டும் இல்லை.... உன்னை நான் கண்டு கொள்ளவில்லை என்று நகரும் இடமாயிருக்கட்டும் அதற்கு பின்னால் ஏதோ திட்டமிருக்கிறது ...கபட குள்ள நரித்தனம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்....?////
உண்மையிலும் உண்மை மாப்பு....!
சபாஷ் ............சபாஷ் ................சும்மா நச்சுன்னு மண்டைல ஆணி அடிச்ச மாதிரி இருக்கு ..............
மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையோடு சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....
//
நிச்சயமான உண்மை
அருமையான சிந்தனை
மனிதன் வேறுபட்டவன் அவன் எக்காலமும் மத்த ஜீவராசிகளோடு ஒத்துப் போகாதவன்.....சிந்திக்கவும் ஒரு விசயத்தை உணரவும் மனிதானல் மட்டுமே முடியும்.....!!!!! அந்த உணர்தலும் விட்டுக் கொடுத்தலும், சகித்துப் போதலும்...அடுத்த மனிதரின் மனம் புண்படுமே என்று யோசித்து வாழ்வதும்...கொஞ்சம் ஆழமாக சுவாசித்து....இயற்கையோடு சார்ந்து வாழ்பவனுக்கு மட்டுமே கை கூடும்.....
//
நிச்சயமான உண்மை
அருமையான சிந்தனை
அருமையான சிந்தனை.
சரியான நேரத்தில் சரியான கேள்வி அண்ணா ., எனக்கும் ஆச்சர்யங்கள் பல உண்டு .. அதிலும் ஒரு வருடத்திற்கு முன்பு கும்பகோணம் சென்ற போது அங்கிருக்கும் கோவில்களின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைத்தது. தஞ்சைப் பெரிய கோவில் மற்றும் கும்பகோண சுற்றுவட்டாரக் கோவில்கள் வாய்ப்பே இல்லை ..!!
//
இதுவும் உண்மைதானே அண்ணா ., நாம கூட அண்ணா , தம்பி , மச்சி அப்படின்னு பதிவுலகதுக்குள்ள கூட பேசிக்கிறோம் ..!!
மனுசனா பொறந்தா ஒரு நாளைக்கு சாகத்தான் வேணும்....சரியா? எத்தனை பேர நம்ம ஆயுள்ள சம்பாரிச்சு இருக்கோம்.. பேசி சிரிச்சு இருக்கோம்...இதுதான் நமக்கு கிடைக்கிற ஒரு சந்தோசம்.
நான் எப்படி வேணும்னாலும் வாழ்ந்துக்கிறேன்னு உனக்கு என்னனு கேக்கறது மிகப்பெரிய மனித அபத்தம்.....
இது பத்தி நான் கட்டுரையில விலாவரியா சொல்றேன்...!!!
இப்போ நீ என் பாசத்துக்குரிய தம்பி..... இங்க நிக்குறது நம்ம அன்பு மட்டும்தானப்பா? வேறு என்ன இருக்க முடியும்...!!!! இது எல்லாம்...நம்ம கலாச்சரத்துல அதிகமா சாத்தியப்படுற விசயங்கள்...!
present sir... busy with valaicharam sir.. sorry sir
yes..!
உள்ளேன் அய்யா//
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ullen ayyyaaaa//
தேவாண்ணா எனக்கும் அட்டண்டெஸ் போட்டுருங்க...
வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும்!
//நான் போய் அங்கே உட்கார்ந்து கொண்டு அவர்கள் போல நடந்து கொண்டால் அது நடிப்பு......!!!!!!!//
சூப்பர்ப்...
தேவா உலகமே ஒரு ன்னு ஷேக்ஸ்பியர் எழுதுன கவிதை நியாபகத்துக்கு வருது...
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா நேரம் வரு காத்திருந்து பாரு ராஜா
சிச்சுவேசன் சாங்கா பங்கு?
உண்மை தேவா.. சரியா சொல்லியிருக்கீங்க..