Skip to main content

நாத்து....!















அது ஒரு மத்தியான குளக்கரை..நானும் சில பட்சிகளும் காற்றில் நடனமாடும் குளத்தினை ரசித்தபடி இருந்தோம். இந்த மதிய வெயிலின் கடுமைக்கு எப்போதும் சவால் விடுவது இந்த குளக்கரை அதற்கு காரணம் குளத்தின் மீது பற்றிப்பரவி படர்ந்திருக்கும் அரசமரம். மாடுகள் எல்லாம் கண்ணுக்கு எட்டிய தொலைவில்தான் மேய்ந்து கொண்டிருக்கின்றன...சற்று முன் தான் குளக்கரைக்கு வந்தேன்.....

என் கல்லூரி வார இறுதிகளில் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு வருவது என் வழக்கம். வாரம் முழுவதும் ஓடி ஆடி மனித சுவாசங்களை மேல் வாங்கி...இரைச்சலில் அமிழ்ந்து, கோபத்தில் கரிந்து, பொறாமையில் வெந்து ரொம்பவே தளர்ச்சியான ஒரு நிலைக்கு உற்சாகம் கொடுக்கும் என் மாடு மேய்த்தல்.

(மனசுக்குள்ள இருக்கும் போது ஒரு நடை ஆனா... பேச ஆரம்பிச்சா நம்ம சொந்த நடை வந்துடுது..சரி வாங்க பொடி நடையா போய்கிட்டே பேசலாம்)

ம்ம்ம்ம்ம்ம் அங்க பாருங்க..... அட அங்க இல்ல.. அதோ..............அங்க.. ஆமாம்.. அவளேதான்...

அந்த ஓரமா நின்னுகிட்டு கிலுவை இலைய இழுக்குறா பாத்தீகளா..செவலை கண்டு அவ பேருதான் கோமதி!

என்ன பெத்தா....நான்ன அவளுக்கு உசுரு அவன்னா எனக்கு உசுரு....கிட்ட போனாலே புஸ்ஸு புஸ்ஸூனு மூச்சு விட்டுகிட்டு முப்பது தடவை நாக்க வெளில நீட்டி நீட்டி என் கைய கால நக்கிகிட்டே இருப்பா....

நீங்க வேணா வந்து என்னைய வஞ்சு பாருங்களே.... இல்லாட்டி தள்ளி கிள்ளி பாருங்களே....உங்கள வெரட்டி வெரட்டி குத்த வருவா ஹா.. ஹா..ஹா..! பொன்னரசி அவ...முதுக தடவி..கழுத்த கட்டி கன்னத்தோடு கன்னத்த வச்சிக்கிற போது மிண்டாம நிப்பா...அம்புட்டு ஆசை எம்மேல அவளுக்கு...

அந்த வரப்பு தாண்டி எகத்தாளமா தலைய ஆட்டி…ஆட்டி திமிரா காட்டமுனுக்க செடிகிட்ட போயி திங்கிற மாதிரிபாவலா பண்ணிட்டு திங்காம...இங்கிட்டு பாத்து பல்ல காட்டி கத்துறான் பாருங்க...அவன் தான் வெள்ளையன்.. ரொம்ப மொரடன்.. .எங்க நீங்க புடிச்சுபுடிவியலாக்கும்....ஹீக்கும்... முடியாதுப்பே..நம்மளயே வெரட்டி வெரட்டி குத்த வருவான்ல....ஆன வெகுளிப்பயவுள்ள....

வெள்ளையனும் செவத்தையும் சோடி போட்டுத்தேன் நம்ம வயக்காட உழுவாய்ங்க... நுகத்தடிய மாட்டிவிட்டு வயக்காட்ல பத்தி விட்டாவுல்ல இருக்கு ..அசராம உழுவாய்ங்க.. !

எங்க அப்பு கஞ்சி குடிக்கிற செத்த வடத்துக்கு நானும் உழுதிருக்கேன்...! ஆத்தாடியோவ்.. ஒரு சேதி சொல்றே கேட்டுக்குறுங்க.. நீங்க எந் த ஊர்ல வேணா இருங்க என்ன தேசத்துல வேணா இருங்க.. ஒரு தமிழனாப் பொறந்து இருந்தியன்னா ஒரு தடவயாச்சும் வந்து வயல்ல உழுது பாருங்கப்பு....

சோறூ சோறுன்னு சோத்த திங்கிற பயலுக நாம....சோத்த வெளச்சு வெளச்சு கொட்டி கொட்டிக் கொடுக்குற ஒரு வெவசாயியோட பொழப்பு என்னனு சத்தியமா தெரிஞ்சுகிடணும் அல்லாரும்...! வெறுங்காலோடோ அந்த சகதி மண்ணுல காலவச்சி இறங்கி நிக்கிம்போது சில்லீர்னு உடம்புக்குள்ள சொகமா ஒரு ஏத்தம் ஏறும் பாருங்க...

ஆத்தத்தோ....பொறப்பு இன்னிக்கி நிறவேறிப் போச்சுடா சாமின்னு கத்தத் தோணும்..! எனக்கு தோணும் உங்களுக்கு தோணுமான்னு தெரியல...ஆன தோணும்னுதான் எனக்கு படுது...!

மண்ணுல இருந்துதேன் மனிசங்க வந்தாய்கன்னு சொல்லுவாக...எப்படி பாத்தாலும் இந்த மண்ணுதேன் இந்த பூமிதேன் நம்மல பெத்தாரு.....!!! அட வயக்காடு கூட நீங்க வரவேணாம் ராசா செத்தவடம் காலுல செருப்பு இல்லாம பூமில நடந்தாவது பாத்துருங்க...அம்புட்டுத்தேன்...!

சலக்கு புலக்குனு சகதில நடக்குறதே செரமமா இருக்கும்...ஒரு கால ஊண்டிப்புட்டியன்னா மறுகால எடுக்குறது செரமம்...உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!

ஆழமா உழுதாதேன் அப்புறமா வெதை வெதைக்கிறப்பா நல்ல ஆழத்துல போய் வேர் பிடிக்கும்..ம்ம்ம் அதுக்கப்புறம் களை எடுக்கணும், நாத்து நடணும், உரம் போடணும், தண்ணிபாச்சணும் மழை பெய்யணும்...ம்ம்ம்ம் வெவசாயம் வெவசாயம்னு பேசிறுவாக எல்லாரும்... ஆனா ஒரு வெவசாயியோட பாடு.... நாஞ்சொல்லமாட்டேன் சாமி....

அட வெள்ளையனையும் செவலையும் பத்தி சொல்ல வந்துபுட்டு எங்கயோ போய்ட்டேனே...நான்...! அத விட்டுத்தள்ளுங்க... சரி… சரி அங்கன நிக்கிற பத்து பதினைஞ்சு பயவுள்ளயும் அந்த 4 வெள்ளாடும் நம்மவுட்டுதேன்....

என்னத்த சொல்லுங்க...ஆடி ஓடி அலையுற வாழ்க்கையில் காசு பணம் சந்தோசம் எல்லாம் கிடைக்கலாம் ஆன நிம்மதி கிடைக்குமாப்பு...? சந்தேகம்தேன்...கொள்ளைப் பேரு இப்ப டவுனுக்கு போறாக... வேல பாக்க.. ஆனா எங்கள போல கிராமத்தாய்ங்க என்ன செய்றது...! விட்டுப்புட்டு நம்மூரு சனத்துல பாதியும் டவுனுக்கு போயிருச்சு... அது வேற கதை...

இருந்தாலும் பச்சப் புள்ளைய மாதிரி கிடக்குற இந்த நெலத்தையெல்லாம் தரிசா போட்டுபுட்டு போறதுக்கு எப்டிப்பு மனசு வருது...! பசிதேன்.. பஞ்சம்தேன்... மழையும் சரிய பெய்யறது இல்லா...மழை பெய்யாதுல்லப்பு.......எப்டி பெய்யும்.... ஆயிரம் கோடி.. ரெண்டாயிரம் கோடின்னு ஊழல் பண்றாக ஊருக்குள்ள அப்புறம் எப்படி மழை பெய்யும்...?

அறிவியல் விஞ்ஞானம்னு என்ன என்னவோ பேசுறாக....ஆனா கிராமத்துக்கும் இந்த வயித்துப்பாட்டுக்கும் மொறயா ஒண்ணும் செய்யிறது கிடயாது....! படிச்ச பக்கிகளுக்கு இது பத்தி சொல்லிகுடுக்குறது இல்ல..ஏப்பு விவாசாயம் பாக்குறது கேவலமா....?

நானும் காலேஷ்லதான் படிக்கிறேன்... மூணாவது வருசம் பி.காம்.....படிச்சுப்புட்டு விவசாயம்தான் பாக்க போறேன்....! அப்போ ஏன் படிச்சேன்னு கேக்குறியளா...ஏப்பு படிப்பு வேலை பாக்க மட்டுமில்லப்பு...அது அறிவு வளக்கவும்தேன்...

ஆத்தாடி பேசிகிட்டே இருந்திட்டேனே....பொழுது சாஞ்சி போச்சு....மாட்ட பத்திகிட்டு போவணும். ஆமா நீங்க டவுனுல இருந்து வந்திருக்கியலா.... ஹோப் யூ ஹேவ் ப்ளசண்ட் ஸ்டே அட் அவர் வில்லேஜ்.......இஃப் டைம் பர்மிட்ஸ்....ப்ளீஸ் டூ நாட் ஹெசிட்டேட் டு கம் அவர் ஹவுஸ்......பை த வே......

என் பேரு மாரிமுத்து... சரீங்களா...என்ன இங்கிலிபீசுன்னு பாத்தீங்களா சும்மாதேன்... தெரிஞ்சு வச்சுகிறது எப்பவும் உதவுமுங்களே.... நாம படிச்சது எல்லாம் மெட்ரிகுலேசன் ஸ்கூலுதேன்...பக்கத்து டவுன்ல…..!

ஏய்....செவல.....ஹேய்....ஹேய்..... ட்ரியோ...ட்ரியோ...ட்ரியோ....ஏய்... இங்குட்டு வாங்க எல்லாம் ...பொழுதோடிப் போச்சு வீட்டுக்கு போகலாம்...!

ஏய் கோமதி ம்ம்ம்ம்ம்ம்ம் ப்ப்ப்பூப்ப்ப்ப்ப்ப்ப்பு…………..

வாங்க வாங்க....! எல்லாத்தையும் ஒதுக்கிட்டேங்க.. நான் கிளம்புறேன்....சமயம் கிடச்சா வீட்டுப்பக்கம் வாங்க.....தெக்கிதெரு....அய்யாவு வீடு எதுன்னு கேட்டா ஊரு சனமே சொல்லும்....ஹா...ஹா..ஹா..

அப்போ வர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா....!


தேவா. S

Comments

எனது லட்சியங்களில் ஒன்று நிறைவேறியது .,
நிறைவேறியது ., நிறைவேறியது ..!!
//என்ன பெத்தா....நான்ன அவளுக்கு உசுரு அவன்னா எனக்கு உசுரு....கிட்ட போனாலே புஸ்ஸு புஸ்ஸூனு மூச்சு விட்டுகிட்டு முப்பது தடவை நாக்க வெளில நீட்டி நீட்டி என் கைய கால நக்கிகிட்டே இருப்பா....//

இந்த அனுபவம் எனக்கும் இருக்கு அண்ணா ., எங்க வீட்டுல இருக்குற மாடும் இதே மாதிரி பண்ணும் , கிட்டப் போன போதும் அது என்ன சொல்ல வருது அப்படின்னு புரிஞ்சிக்கிற அளவுக்கு இருக்கும் . !
ராமராஜன் படம் பாத்த மாதிரியே இருந்துச்சுண்ணே..!! உடம்பெல்லாம் சேறான மாதிரியே ஒரு பீலிங்..!! சூப்பர்ண்ணே..!!ஹா.ஹா..ஹா...
ம் விவசாயம் பக்கம் போயாச்சி அண்ணன் என்ன சொல்றாரு னா படித்தவன் கூட விவசாயம் பார்க்கிறான்... ஆனா நம்ம எல்லாம் வெளிநாடு போய்........
dheva said…
நமக்குன்னு நம்ம மண்ணுக்குன்னு ஆத்மார்த்தமான விசயங்கள் நிறைய இருக்கு தம்பி. மேலோட்டமா பாத்துட்டு குத்தம் சொல்ல முடியும்...ஆனா காலங்காலமா

உணர்வு நிலையோட வாழ்ந்த கூட்டம் என் கூட்டம்.

மேற்கித்திய நாடுகள் புலன் வயப்பட்டு... சட்ட திட்டங்கள் போட்டு போய்க்கிட்டு இருந்தப்ப நம்ம ஆளுக மனோதத்துவ ரீதியா ஆத்மார்த்தமா....கூட்ட பாக்காம உசுர பாத்து வாழ்தவய்ங்க...


விதண்டாவாதம் பேசுற மூக்குகளும் காத்தத்தானேப்பு சுவாசிக்கிது...! வேணாம்னு விட்றுமா என்ன?
dheva said…
செளந்தர்.. @ தப்புதேன் தப்புதேன்.. வெளிநாடு வந்தது தப்புதேன்....! வெரசா வந்கிடுறோம் தம்பி.. .அதுக்குள்ள ஊருல அது சரியில்ல இது சரியில்லன்னு மாத்திட போறாக...அறிவு நிறஞ்ச மக்க....!
பச்சைப்பசேலென வயல்வெளியில் உழுது அறியேன், எனினும் அந்த மண்ணின் மணம் அறிவேன்... நல்ல பகிர்வு...
//நானும் காலேஷ்லதான் படிக்கிறேன்... மூணாவது வருசம் பி.காம்.....படிச்சுப்புட்டு விவசாயம்தான் பாக்க போறேன்....! அப்போ ஏன் படிச்சேன்னு கேக்குறியளா...ஏப்பு படிப்பு வேலை பாக்க மட்டுமில்லப்பு...அது அறிவு வளக்கவும்தேன்..//

இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதானே அண்ணா ..!!
dheva said…
வெங்கட் நாகராஜ் @ மூலத்தை விட்டுப்புட்டு வாழ முடியாதே அண்ணாச்சி...! மனுசப்பொறப்பு பொறந்து எல்லாத்தையும் விட்டுப்புட்டு நமக்கென்னனு மிசினு மாதிரி வாழ்ந்து என்னத்த சாதிக்கப் போறோம்...

சிரிச்சி பேசி சண்டை போட்டு,...குப்பை போட்டு , குப்பை பொறுக்கி...எல்லாமே வாழ்க்கைதானுங்களே...அரங்கத்தனமா இறுக்கமா...வாழ்த்துட்டு என்ன பண்ண போறாக ...? சாகத்தானே போறோம்...மனுச இயல்புகளோட வாழ்வோமே...!
VELU.G said…
//அறிவியல் விஞ்ஞானம்னு என்ன என்னவோ பேசுறாக....ஆனா கிராமத்துக்கும் இந்த வயித்துப்பாட்டுக்கும் மொறயா ஒண்ணும் செய்யிறது கிடயாது....! படிச்ச பக்கிகளுக்கு இது பத்தி சொல்லிகுடுக்குறது இல்ல..ஏப்பு விவாசாயம் பாக்குறது கேவலமா....?
//

சரியா கேட்டீங்க தேவா. அதுதான் உயிர்த் தொழில்
vinthaimanithan said…
நல்லாவே போகுதுண்ணே! செருப்பைக் கயட்டி போட்டுட்டு அப்டியே வரப்போரம் நடக்குறப்ப பாதையில இருக்குற புல்லு காலோட கிளுகிளுப்பா கொஞ்சும் பாருங்க... செரியாத்தாம் சொல்லி இருக்கீங்க! ஒருபடி பழையத்தை எருமைத்தயிரு வெரல்ல வழிய வழிய ஊத்திப் பெசஞ்சி திங்கிறமாரியே ஒரு மெதப்பு வருது படிக்கிறப்ப!

ஆமா! நல்லா குளிச்சி முழுவி துன்னூத்துப்பட்டையெல்லாம் பூசிகிட்டு வெரதச் சாப்பாட்டுக்கு ஒக்காற்ரப்ப சோத்துக்கு நடுவ கறித்துண்ட வெச்சமாரி என்ன திடீருன்னு இங்கிலிபீசு வேண்டிகெடக்கு?
dheva said…
//இந்தக் கட்டுரையின் நோக்கம் இதுதானே அண்ணா ..//

செல்வு @ ஆமா தம்பி.....கோட்டும் சூட்டும் நுனி நாக்கு ஆங்கிலமும் ஒரு பண்பாடு...இது நம்ம பண்பாடு....

ஆம்பளையும் பொம்பளையும் கூடி வாழ்றது மட்டும் ஒரு கல்ச்சர் இல்ல... நம்மளோட பலமான தூண்கள் நிறைய இருக்கு....விவசாயம் பண்ணும் ஒரு ஆத்மார்த்தம் இன்றைய இளைஞர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும்....

காட்டு மிராண்டி சமுதாயமில்ல நாம...இது எல்லோரும் உணரணும்...!
dheva said…
//உயிர்த்தொழில்//

சரியா சொன்னீங்க வேலு...சமுதாய அடையாளம்...! அத தொலச்சுப்புட்டு..என்ன பண்ண போறோம்....? மண்ணுல போற மனுசன் அட மண்ண மதிச்சாத்த என்னா தப்பு?
dheva said…
விந்தை மனிதன்..@ அது இல்ல தம்பி.. ஆங்கிலம் பேசுனா வெள்ளைகாரன் மாதிரி நடந்த நடந்துகிட்ட பெருமன்னு நினைகிறவோ....

நம்மாளுவ எல்லாத்தையும் கப்பான்...ஆனா அமெரிக்கவுல நாசாவுல கூட வேல பாப்பான்..ஆன ஊருக்கு வந்துட்டா வேட்டிய கட்டிகிட்டு.. எம்மக்களோட மக்களா சேந்துடுவான்..அவனுக்கு நடிக்கத்தெரியது...


ஆன சில பேரு நடிக்கிறாவோ.. தம்பி....!
Ramesh said…
அருமையான பதிவு தேவா.. (இது டெம்ப்லேட் பின்னூட்டமல்ல)..
dheva said…
ப்ரியமுடன் ரமேஷ் @ தெரிம்ங்க ரமேஷ்... நாம எல்லாம் மெப்பனைக்கு சேருர கூட்டம்.இல்லங்க.. ! ரொம்ப நன்றிங்க!
THOPPITHOPPI said…
பயனுள்ள பதிவு (இது டெம்ப்லேட் பின்னூட்டமல்ல).....ஹிஹி
dheva said…
தொப்பி தொப்பி..@ ஹி ஹி ஹி..நல்லா சிரிச்சியப்பு... ( கேலியும் நம்ம கூட பொறந்த கழுதைதேன்.. இருந்துட்டு போகுது ஒரு ஓரமா)
@தேவா

முடியல முடியல முடியல.. பதிவு பெருசா இருக்கு என்னால பாதிக்கு மேல படிக்க முடியல.... :))

(இது சாமி சத்தியம டெம்ப்லேட் கமெண்ட் இல்லை)
dheva said…
டெரர்...@ 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... ( இன்னிகே படிக்கணும்னு முறைப்பாடா என்ன?) அவ்வ்வ்வ்!
Unknown said…
விவசாயம் பாக்குறது மாதிரி மன நிறைவான விசயம் வேறெதிலும் இல்லை ...
dheva said…
கே.ஆர்.பி. செந்தில்.. @ இயற்கையோடு இயந்த வாழ்வு எப்பவுமே...ஆத்மார்த்தமானது செந்தில் கண்டிப்ப நிறைவத்தான் கொடுக்கும்!
கமல் said…
வணக்கம் ... வாழ்க விவசாயம் அருமையாக எழுதிருக்கிங்க விவசாய வேலை செய்வது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டும் ஏன் என்றான் அனைவரும் சாப்பிடுகிறோம் அல்லவா

நன்றி... தொர்ந்து எழுதுங்கள் தொடர்கிறேன்.
dheva December 1, 2010 12:37 PM
தொப்பி தொப்பி..@ ஹி ஹி ஹி..நல்லா சிரிச்சியப்பு... ( கேலியும் நம்ம கூட பொறந்த கழுதைதேன்.. இருந்துட்டு போகுது ஒரு ஓரமா)/////

உங்களை போல பின்னூடம் போடுபவரை சகட்டு மேனிக்கு திட்டுபவரை நான் கண்டிக்கிறேன்
Anonymous said…
good post
a said…
//
அந்த சகதி மண்ணுல காலவச்சி இறங்கி நிக்கிம்போது சில்லீர்னு உடம்புக்குள்ள சொகமா ஒரு ஏத்தம் ஏறும் பாருங்க...
//
ஆமாம் தேவா. நான் அனுபவிச்சிருக்கேன்.

உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!
//
அதுமட்டுமில்ல கொஞ்சம் அசந்தா கொலு மாட்டு காலுல ஏறிடும்..........
//விவசாயம் பாக்குறது மாதிரி மன நிறைவான விசயம் வேறெதிலும் இல்லை ... //
இன்றைய விவசாயத்தில் நிச்சயமாக மன நிறைவு கிடையாது ....போட்ட காசு கைக்கு வரவே வராது .........அப்புறம் நஷ்ட்டம் அடைஞ்ச எங்க மன நிறைவு கிடைக்கும் கே .ஆர் .பி அண்ணா ...நானும் பார்கிறேன் அதனால் சொல்லுகிறேன் ...........கூடிய விரைவில் வேனும்ம்ன வரலாம் ...........
// 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... //
அப்ப தொடர் பதிவா போடலாம் லா ..........
dheva December 1, 2010 12:42 PM
டெரர்...@ 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... ( இன்னிகே படிக்கணும்னு முறைப்பாடா என்ன?) அவ்வ்வ்வ்!////


@@@ஓஹ இந்த பதிவை படிக்க 3 நாள் ஆகுமா அப்போ நான் படிக்கலை
//ம் விவசாயம் பக்கம் போயாச்சி அண்ணன் என்ன சொல்றாரு னா படித்தவன் கூட விவசாயம் பார்க்கிறான்... ஆனா நம்ம எல்லாம் வெளிநாடு போய்//

படிச்சவன் கண்டிப்பா சோறு திங்கணும்ன விவசாயம் நல்ல இருந்த தன முடியும் மக்கா ..........
dheva said…
//உங்களை போல பின்னூடம் போடுபவரை சகட்டு மேனிக்கு திட்டுபவரை நான் கண்டிக்கிறேன்//

செளந்தர்..@ எப்டி எப்பவுமே இப்டியா இல்லா அப்போ அப்போ வருமா ... ஏம்பா ஒரு கட்டுரை எழுதியிருகேன்.. அதபத்தி பேச ஓண்ணுமே இல்லேண்ணா.. ட்ராக்க மாத்தி விடுற....அச்சோ..அச்சோ.. என்னத்த சொல்ல...!
dheva said…
//@@@ஓஹ இந்த பதிவை படிக்க 3 நாள் ஆகுமா அப்போ நான் படிக்கலை//

அடா அடா.. நான் என்ன பண்ணுவே என்ன பண்னுவே...? முதலு போச்சே...!
dheva said…
//இன்றைய விவசாயத்தில் நிச்சயமாக மன நிறைவு கிடையாது ....போட்ட காசு கைக்கு வரவே வராது ...//

இம்சை.. @ அப்போ கையில காசு வர்ற மாதிரி தொழில் எல்லாம் மன நிறைவுன்ன்னு சொல்ற.. சரியா?
dheva December 1, 2010 1:13 PM
//உங்களை போல பின்னூடம் போடுபவரை சகட்டு மேனிக்கு திட்டுபவரை நான் கண்டிக்கிறேன்//

செளந்தர்..@ எப்டி எப்பவுமே இப்டியா இல்லா அப்போ அப்போ வருமா ... ஏம்பா ஒரு கட்டுரை எழுதியிருகேன்.. அதபத்தி பேச ஓண்ணுமே இல்லேண்ணா.. ட்ராக்க மாத்தி விடுற....அச்சோ..அச்சோ.. என்னத்த சொல்ல...!/////

இன்னும் ட்ராக் மாறலையா இதோ வரேன்
Arun Prasath said…
சலக்கு புலக்குனு சகதில நடக்குறதே செரமமா இருக்கும்...ஒரு கால ஊண்டிப்புட்டியன்னா மறுகால எடுக்குறது செரமம்...உழுவுற கொலு வேற மண்ணுல நல்லா பதியுற மாதிரி நுகத்தடிய அழுத்திப் பிடிக்கணும்..அப்படியே நம்ம பயலுகளயும் கொஞ்சம் தட்டிக் கொடுத்து வெரட்டனும்...!

கஷ்டம் தான்.... நீங்க சொல்றதே அங்க கூட்டிட்டு போற மாறி இருக்கு
dheva said…
அருணு..@ சாப்பிடுற ஒவ்வொரு மனுசனுக்கும் நினைவுக்கு வரணும் அந்த பொருள் எங்க இருந்து எப்டி வருதுன்னு... ! உழவன் சேறுலயும் சகதிலயும் நிக்கலேன்னா....

தஞ்சாவூர் பொன்னி, ஐ.ஆர். 8 எல்லாம் எங்க இருந்து கிடைக்கும்....?

புரிதலுகு நன்றி தம்பி!
dheva said…
வழிப்போக்கன் ரமேஷ்..@ சரியா சொன்னீங்க... ரமேஷ்!
Anonymous said…
ரொம்ப நல்லாச் சொன்னீங்க அண்ணே! வெறுங்காலோட உழுதது இல்லனாலும், வெறும் காலோட புழுதிக் காட்ல திரிஞ்சவைங்க கூட்டத்துல நானும் ஒருத்தன்.
வயக்காட்டுக் மணம் பதிவு வழியா இங்க வீசுது அண்ணே :)
Unknown said…
இந்தப் பதிவ படிக்கையில சொந்த ஊர் ஞாபகம் வருதுங்க...

"மாடு மேய்க்கத்தான் லாயக்குன்னு" யாரையும் திட்டக்கூடாது போலருக்கே.
நல்ல பதிவு அண்ணா.. பேச்சு வாக்கில் விவசாயத்தின் அருமை பெருமைகளையும் கூறிய விதம் நன்றாக உள்ளது...
மண் மனக்குது...அழகு..
போகும்போது வர்ர்ட்டா அப்டின்னு சொல்றீங்க. வரும்போது போகட்டா அப்டின்னு கேட்டா சரின்னு சொல்லுவோம்ல.
//dheva said...

டெரர்...@ 3 நாள் லீவு வருதுல்ல பொறுமையா படி மாப்ஸ்.... ( இன்னிகே படிக்கணும்னு முறைப்பாடா என்ன?) அவ்வ்வ்வ்!///


என்னது டெரர் மூணு நாள்ல படிச்சி புரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவாளி ஆயிட்டாரா # டவுட்டு...
//சரி வாங்க பொடி நடையா போய்கிட்டே பேசலாம்///

மூக்கு பொடியா? மசால் பொடியா?
//என் கல்லூரி வார இறுதிகளில் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்கு வருவது என் வழக்கம்.//

அதுவே இப்ப உங்களுக்கு முழு நேர தொழில் ஆகிடுச்சே...
//ஆயிரம் கோடி.. ரெண்டாயிரம் கோடின்னு ஊழல் பண்றாக ஊருக்குள்ள அப்புறம் எப்படி மழை பெய்யும்...?///

ஊழல் பண்ணினா மழை பேயாதா. அறிய விஞ்ஞான கண்டுபிடிப்பு..
விவசாயம் அழிந்து வருவது கொடுமை! பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் விவசாயம் என்றோ முற்றிலும் அழிந்திருக்கும்!
அண்ணே கிராமத்துக்குப் போனா வயலப்பாக்க ஓடிடுவேன். பச்ச பசேல்னு மனசே குளுந்து போயிடும். நாத்து நடனுன்னு ஆசையாயிருக்கும் அதுவும் ஒரு நாலு வருசத்துக்கு முன்னாடி நிறைவேறிடுச்சு. நாத்த நட்டப்ப மனசு பூரா அப்புடி ஒரு சந்தோசம் நிறைஞ்சு இருந்துச்சு. வீட்டுக்குப் பின்னாடி பூரா வயக்காடுதான். சேத்து நண்டு பிடிக்க கிளம்பிடுவோம். இன்னைக்கு அது எல்லாம் கட்டிடங்களா மாறிப்போச்சு. மிச்ச இருக்குறதும் விவசாயம் பண்ணாம தரிசா போச்சு.
அருமையான நடை. கிராமத்து மண்ணுல போயி மிதிச்சுட்டு வந்த மாதிரி இருக்கு.
Anonymous said…
very nice.
i ve had the same experiance till 12 yrs (dad and mom both are veterinary doctorungooo)
aaathee enna vanjipudadhiga tamil font work seyyavillai
எங்க ஊருக்குல போயிட்டு வந்தாப்ல இருக்குங்க.
அருமையான நடை.
மண்வாசனை.. :-)
ஹாய் தேவா.... பச்சைப் பசேல்னு படமும் பதிவும் ஒண்ணோட ஒண்ணு போட்டி போட்டுட்டு நிக்குதே...!!

எப்படிங்க இப்ப்ப்ப்ப்ப்ப்புடி எழுதுறீங்க...?? :-))

இந்த போஸ்ட்-க்குத்தேன் இப்படி ஒரு நடைன்னா... உங்க எல்லா போஸ்ட்-க்கும் செம நடையா இருக்கே...??

சொல்லுங்க தேவா ....சொல்லுங்க.... :-)

(நீங்க கம்ப எடுக்க முதல்.. மீ எஸ்கேப்.........)

No violence.... Be happyyyyyy..!!!

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...