Skip to main content

புகை...!



ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!

பற்றியிழுக்கையில்
பரவசமாய் உள்ளே சென்ற
புகையினூடே உண்டான
முதல் பரவசத்தில்...
முரண்கள் பட்டுப் போயிருந்தன!

உள்ளே பரவி சூடான
நினைவுகளை தெளித்து விட்டு
வெளியே பெய்த மழையை
வேடிக்கையாய் பார்த்து
சிரித்தது வெள்ளை சிகரெட்...!

அழுந்த புகைத்தேனா
இல்லை ஆழமாய் சுகித்தேனா
என்றறியாமல் தடுமாறிய...
வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?

உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....
மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!


தேவா. S

Comments

மழை நாளும்.. சிகரெட்டும் அவளின் நினைவுகளும்... அருமை ...
ஒரு மழை நாளில்
உதட்டில் பொருத்திய
முதல் சிகரெட்டோடு
உள்ளே பரவிய நிக்கோடின்
துகள்கள் மூளையின் செல்களை
கலைத்துப் போட்டிருந்தன...!///

ச்சே ச்சே கெட்ட பையன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////

எல்லா காதலர்களையும் ஏளனம் செய்கிறதே.....!இந்த ............
//மிச்சத்தில் புகைத்தலின்றி
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//

அந்தச் சூழலைக் கண்முன்னால் கொண்டுவந்துவிட்டது இந்த வரிகள்......நிஜமாவே தம் அடிச்ச மாதிரி ஒரு ஃபீல்....ஹி ஹி ஹி :))
சிகரெட்டும் நினைவும்...
அருமை ...
//உள்ளிழுத்து வெளிவிட்டு
வெளிவிட்டு உள்ளிழுத்து
மொத்தாமாய் செத்துப் போயிருந்த
நிக்கோடின் குச்சியின்....//

அடடா ..! கவிதை நல்லா இருக்கு அண்ணா .. ஆனா என்ன சொல்ல வரீங்க அப்படின்னு வழக்கம் போல புரியல .!! ஹி ஹி ..
Arun Prasath said…
இதெல்லாம் அனுபவிச்சா தான் தெரியும் :)
வைகை said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!////////////

எல்லாம் காதல் பாஸ்!!
வைகை said…
மனுசபயகதான் சிரிக்கிராங்கன்னா மழை கூடவா!!
Unknown said…
//வேளையில் எங்கிருந்து...
எட்டிப் பார்த்தது உன் நினைவுகள்..?//
//தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
karthikkumar said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
தனித்து கிடந்த என்னை
வேடிக்கையாய் கேலி செய்து
சிரித்தது.. வெளியே பெய்த மழை...!//
நல்லா இருக்குங்க. ரொம்பவே ரசித்தேன்.
sakthi said…
மிகைத்து கிடந்த உன் நினைவுகளுடன்
புதிய சொல்லாடல் தேவா!!!!
புகை,காதல் இரண்டும் ஆபத்தானது
மழைக்கு தம்மு, டீ காம்பினேஷன் சூப்பர்
க ரா said…
புண் பட்டை நெஞ்சை புகை விட்டு ஆத்துன்னு சொல்லுவாங்கல்ல் அது மாதிரியா இது :)
புகை நமக்கு பகை!
Ciggarate is Injurious to Health.
புண் பட்டை நெஞ்சை புகை விட்டு ஆத்து
நமக்கு இந்த சிகரட் புகை வடையே புடிகாதுப்ப ..........
Chitra said…
200 + followers - Congratulations!!!!
ஹேமா said…
நானும் ஒரு கவிதை வச்சிருக்கேன் மழையும் புகைத்தலுமாய் !
dheva said…
அப்படியா ஹேமா... !!!!!!!
வினோ said…
மழையின் துளிகளில் நினைவுகளின் துளிகள்...
Present...என்னுடைய indirank மதிப்பெண் கூட 77 தான்...
மாஸ்டர் பீஸ் மச்சி............!

Popular posts from this blog

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

முரட்டுக் காளை....!

தலைவரை பத்தி எழுத சொல்லிட்டு தம்பி அருண் பாட்டுக்கு போய்ட்டான்....! நாம ஏற்கனவே ரஜினினு சொன்னாலே பத்திகிட்டு எரிவோம்....இதுல பெட்ரோல வேற ஊத்துன எப்டி? ....சும்மா பத்திகிட்டு எரியும்ல..எரிமலை மாதிரி..ஹா...ஹா..ஹா...! தலிவர் படத்த லிஸ்ட் எல்லாம் பண்ண முடியாது.. என்ன பொறுத்த வரைக்கும்....எல்லாமே... நம்பர் 1 தான்...!!! இது எப்டி இருக்கு....ஸ்ட்ரெய்ட்டா மேட்ருக்குள்ள போவமா....இப்டிச் சூடு..... முரட்டுக்காளை (1980) படம் போட்ட கொஞ்ச நேரத்துல நான் பயந்தே போய்ட்டேன்....! ஒரு காளை மாடு முரட்டுத்தனமா நிக்கும் போது.. அத அடக்க சிங்கம் மாதிரி நம்ம சூப்பர் ஸ்டார்.....! என்னோட கவலை எல்லாம் தலிவருக்கு ஒண்ணும் ஆகக்கூடாதுன்னுதான்....அது எப்டி ஆகும் தலைவர் சும்மா பிரிச்சு மேஞ்சு காளைய அடக்குற வரைக்கும் பக்கத்து சீட்ல இருந்த ஆள டேமேஜ் ஆக்கிட்டேன்...ஜு ஜு பி....!எப்பவுமே தலிவர் படம்னா...அப்டிதான்...இஹ் ஹா...ஹா ஹா..! அதுக்கு அப்புறம் வர்ற பாட்டு...நான் சொல்ல தேவயில்ல..உங்க ஹிட் இல்ல எங்க ஹிட் இல்ல.. உலக ஹிட்.... தமிழ் சினிமாவுக்கே பஞ்சர் பாத்த படம்.... ! எங்க ஊர்..(எந்த ஊர்னு கேட்டா ரூட்டு மாறிடும்...ட்ராக்க ...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...