
எல்லாமாய் இருக்கிறது வாழ்க்கை. இதை எல்லோரும் ஒத்துக் கொள்வீர்கள்தானே....? சில நேரம் மகிழ்ச்சியாய், சில நேரம் துக்கமாய், சில நேரம் கோபமாய்.. நவரசமும் சேர்ந்து அழகான ஒரு கலைவையா கிடைச்சு இருக்க விசயம்தான் வாழ்க்கை.
எங்கேயோ போகப் போறோம் அப்டின்னு ஒரு த்ரில் இருந்துகிட்டே இருக்கும் பாருங்க மனசுக்குள்ள.. இன்னிக்கு இல்லேன்னா கூடா நாளைக்கு, நாளைக்கு இல்லேன்னா நாளான்னிக்கு ஏதாச்சும் பெருசா நடந்து நாம நிம்மதியா இருப்போம்னு ஒரு துடிப்பு இருந்துகிட்டே இருக்கும் பாருங்க... அதுதான் பிரபஞ்ச சூட்சுமம்.
ஆனா எதுவுமே பெருசா நடக்கலேன்னா கூடப் பரவாயில்லைங்க.. ஆனால் நிம்மதி இல்லேன்னா போச்சு....! இது பத்தி நிறைய பேரு பக்கம் பக்கமா பேசி இருப்பாங்க, நிறைய பேரு எழுதி இருப்பாங்க, அதைப் பத்தியே நாம பேசிட்டு இருக்க வேணாம்...! நிம்மதியின் அளவுகோல்தான் என்ன?
நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையுமே நாம முடிவு பண்ணி நாம செய்ஞ்சுக்கிற மாதிரி நினைச்சுக்கிறோம். அதுலயும் இந்த அட்டிடியூட் சரியான அளவில இல்லாதவங்க தங்களோட தலைதான் பெருசு அப்டீன்னு நினைச்சுக்கிறாங்க. நிம்மதின்றது காசு, பணம், புகழ் இது எல்லாம் தாண்டி...எந்த சமுதாயத்தில் நாம வாழ்றோம். நம்ம கூட இருக்கவங்க எல்லாம் எவ்ளோ நிம்மதியா இருக்காங்க? இதைப் பொறூத்துதான் அமையும் அப்டீன்றது என்னோட பார்வைங்க....
நம்மள சுத்தி இருக்குற எல்லோரும் பசியோடவும், வறுமையோடவும் இருக்கும் போது நாம எப்டி நிம்மதியா இருக்க முடியும்? சமுதாயம் பெருசு, மனிதர்களின் தொடர்புகளும் விரிந்து பரந்ததது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் மனிதனுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அப்படீன்னு ஒரு நினைப்பு எல்லோருக்குமே இருக்கும். இது ஒரு பொதுவான புத்தி.
கன்னியாகுமரில இருக்கவன் பிச்சை எடுத்தா எனக்கேன்ன? இராமேஸ்வரத்துல மீனவன சுட்டா நமக்கேன்ன? நாமதான் நல்லா இருக்கோமேன்னு தயவு செஞ்சு யாரும் நினைச்சுடாதீங்க...! நாம இதோட நேரடி விளைவுகளை அனுபவிக்கலேன்னாலும் கூட மறைமுகமா அனுபவிச்சுதான் ஆகணும்.. சரி நாம இல்லையா நம்ம சந்ததி.. அனுபவிச்சுதான் ஆகணும்....! கொஞ்சம் கூட மிஸ் ஆகாது.
சரி.....நீ என்னடா சொல்ல வர்ற சாட்டா ரெண்டு லைன்ல சொல்லிட்டு போய்கினே இருன்னு சொல்றீங்களா?
முடிஞ்சவரைக்கும் யாருக்கும் நல்லது செய்யமுடியலேன்னா கூட பரவாயில்லைங்க...தேவையில்லாம எதிர்மறை எண்ணத்த வளர்த்துக்காதீங்க....! அது நம்ம உடம்புக்கும் கெடுதி.. அப்டி வளர்த்துக்கிட்ட எண்ணங்கள் நம்மள சுதந்திரமா செயல்பட விடாம எப்பவுமே அடுத்தவனை பத்தின ஆராய்ச்சில கொண்டு போய் விட்டுடும். மென்டல் சிக் ஆனவங்களுக்கு அடுத்தவன் முன்னேறினாலே...தனக்கு எதோ அநீதி நடந்துட்ட மாதிரி தோணிட்டே இருக்கும்.
அட நெஜமாத்தாங்க...
ஏதோ வர்றோம் பதிவு எழுதுறோம். யாராச்சும் கமெண்ட் போடுறாங்க பாக்குறோம் போய்டுறோம். எப்பவுமே இந்த பதிவுகளையும் பதிவுலகத்தையும் மையமா வச்சு வாழ்க்கை இருக்க முடியாதுதானுங்களே? இது பகுதி. ஆக்சுவலா பாத்தீங்கன்னா எல்லோருக்கும் ஒவ்வொரு வேலை இருக்கும் ஒவ்வொரு டென்சன் இருக்கும். பதிவுன்னு எழுத வரும்போது மனசுல நமக்கு பட்ட நல்ல விசயங்கள, வாழ்க்கைல நாம எடுத்து இருக்குற நிலைப்பாட்ட, ஆன்மீகம் பத்தின புரிதலை, சமூகம் பத்தின பார்வையை சொல்ல, இப்டி ஒரு ஓப்பன் ஏரியா கிடைக்கும் போது இட்ஸ் லைக் எ ஹெவன்...!
எதை சொர்க்கம்னு சொல்றேன்னு யோசிக்கிறீங்களா? கருத்துக்களை சுதந்திரமா சொல்றதும் அதை மனசுல எந்த விகற்பமும் இல்லாம் நாலு பேரு விமர்ச்சிகிறதும். அப்படிப்பட்ட நேர்மையான விமர்சனங்களால நம்மள வளர்த்துகறதும் வரப்பிரசாதம்தானே?
மனிதன் கொண்டுதானே
மனிதம் வளர்க்க முடியும்
சப்தமில்லா மெளனங்கள் எல்லாம்
மனிதர்களின் அளாவளவலுக்குப்
பின் தானே ஆனந்தமாயிருக்கும்...!
சமூகப்பிராணிதான் மனிதன். சமூகம் சார்ந்த வாழ்வுதான் இவனது இயல்பு. கூடிக் களித்தலும், சந்தோசத்திருத்தலும் அதன் பின் எல்லா கேளிக்கைகளும், சந்தோசங்களும் கடந்த பின் கிடைக்கும் ஒரு ஆர்ப்பாட்டம் கழிந்த அமைதியில் எல்லாவற்றையும் ஆனந்தமாய் உற்றுப்பார்த்து தன்னைப் பற்றியும் தன் வாழ்க்கைப் பற்றியும் சிந்திக்க சிந்திக்க அவனின் தனிமையின் உன்னதம் அதாவது மெளனத்தில் கிடைக்கும் திருப்தி எங்கே இருந்து கிடைத்தது என்று பார்த்தால்...அது மனித சந்திப்புகளில், மனித சிரிப்புகளில், மனித உரையாடல்களில் இருந்துதான் என்பது புலப்படும்.
விழாக்களும், பண்டிகைகளும் இப்படி மனிதர்கள் கூடுவது எல்லாமே அப்போதைய கேளிக்கைகளுக்கு மட்டும் அல்ல....அது கேளிக்கைகள் முடிந்த பின்னும் தொடரும் மனித நிம்மதிகளுக்காக....!
துரோகிகளையும், எதிரிகளையும் மறந்து விடுங்கள். நேரே வரும் போது அல்லது செயல் படவேண்டிய தருணத்தில் ஒரு களையை களைவது போல களைந்து கொள்ளலாம் ஆனால் எப்போதும் அவர்களை நினைத்து நினைத்து அற்புதமான நல்ல நண்பர்களையும் கண் முன் இருக்கும் அற்புதமான வாழ்க்கையையும் நாம் சிதைத்துக் கொள்ளத் தேவையில்லைதானே...? குப்பைகள் எல்லாம் சுமப்பதற்கா? தூக்கி கச்சடாவில் எரியத்தானே?
நிம்மதி என்பதும் சந்தோசம் என்பது இப்போது இருப்பது மேலும் சுற்றியுள்ள சூழலும் நம்ம மனமும் நமக்கு கொடுப்பது. நமக்கு நாலு பேரு சந்தோசமா பிடிக்குற மாதிரி நடந்துகிட்டா பிடிக்கும்ல? கரெக்ட் பாஸ்.. கரெக்ட்.. நாமளும் அப்படியே எல்லோருகிட்டயும் நடந்துக்க முயற்சிப்பொம்...!
இருங்க... இருங்க இந்த முயற்சிக்கிறோம் அப்டீன்ற வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை....ஒண்ணு செய்றோம் இல்லை செய்யலை.. இப்படித்தான் ஒரு நிலைப்பாடு வருமே அன்றி முயற்சிக்கிறேன் அப்டீன்ற வார்த்தைக்கு எந்த செயலையும் உதாரணம் சொல்ல முடியாது.
ஒரு பென்சில் கீழ விழுந்துடுச்சு...அதை நீங்க எடுத்துட்டீங்க.. அல்லது எடுக்கலை...அவ்ளோதானே.. நீங்க எடுக்க முயற்சிக்கிறேன்னு சொல்லி கைய நீட்டி ஏதோ ஒரு செயல் செய்றதை சொல்ல வேண்டாம்தானே....! அதனால எப்பவும் எந்த செயலையும் செய்றோம்.....இல்லேன்னா செய்யலை....முயற்சி பண்றேன்னு யாரச்சும் சொன்னா...செய்றதுக்கு பாதிதான் விருப்பம் மீதி யோசிக்கணும்னு அர்த்தம்.
இது எல்லாமே நான் எடுத்துக்கிட்ட அல்லது உணர்ந்த விசயம்தான் எந்த அளவுக்கு உங்களுக்கு சரியா வரும்னு எனக்குத் தெரியாது. ஏன்னா எப்பவுமே நாம உணர்ற அல்லது அனுபவப்படுற விசயத்தை அத்தாரிட்டி எடுத்து சொல்ல முடியாது. நாம் உணர்றதும் நம்ம அனுபவமும்ம் இறுதி உண்மையா இருக்கவேண்டிய அவசியம் இல்லை. நம்ம பார்வைன்றது வேற சத்தியம்ன்றது வேற... இதுல என்ன மேட்டர்னா.. எவ்வளவு துரம் நம்ம பார்வை சத்தியதோட ஒத்து இருக்கு அப்டீன்றது நம்ம மூளை இருக்குற சார்ப்நெஸ் பொறுத்த விசயம்.
போனவாரம் நான் ஒருத்தர்கிட்ட பேசிட்டு இருந்தப்ப...ஒருத்தர் சொன்னார்...வள்ளுவரே சொல்லிட்டாரு நாம பின்பற்றித்தான் ஆகணும்னு சொன்னாங்க...! நான் சொன்னேன் ஓ.கே வள்ளுவர் சொல்லிட்டாரு சரி அது அவரோட காலகட்டத்தையும் புறச்சுழலையும் பொறுத்து சொல்லிட்டாங்க.. நான் அதை உணர்ந்து பாக்குறேன் அது எனக்கு தேவையான்னு அப்டீன்னு சொன்னவுடனே அவருக்கு கோபம் வந்து உனக்கு திமிர் ஜாஸ்தின்னு ஒரு பட்டத்தை நான் கேக்காம்லேயே கொடுத்தார்.
நானும் என்கிட்ட ஏற்கனவே நிறைய திமிர் இருக்கு இது நீங்களே வச்சுக்கோங்கனு அவர் கொடுத்த பட்டத்தை அவர்கிட்டவே திருப்பி கொடுத்துட்டேன்....! இப்போ என்ன மேட்டர் அவர்கிட்ட பேசிட்டு இருந்தோம்னு கேக்குறீங்களா....
கொலை மறுத்தல்ன்ற அதிகாரம் பத்திதான்...! புலால் உண்ணுதல் தவறுன்னு அவர் சொன்னார். நான் சொன்னேன்.. சரி ஓ.கே..! தேவையின் அடிப்படையில் எடுக்க்கப்படவேண்டிய முடிவு அது. எல்லா காய்கறிகளும், பழங்களும், தானியங்களும் கிடைக்கும் நம்ம ஊருக்கு அது சரி...
எதுவுமே விளைவிக்க முடியாத பேரிச்சை மரங்கள் மட்டுமே நிறைந்த பாலைவன தேசத்துக்கு அது எப்டி ஓ.கே ஆகும்னு நான் கேட்ட கேள்விக்குத்தான் அவர் கொடுத்த பட்டத்தை அவருக்கே திருப்பி கொடுக்கவேண்டியதா போச்சு......! என்ன பண்றது சில மணிநேரங்களிலும் , சில சூழலையும் வச்சு மனிதர்களை தீர்மானிக்கும் கப்பாஸிட்டி எல்லோருக்கும் இருக்கா என்ன? இருக்கலாம் அப்டீ இருக்கவங்க அதிகம் தற்பெறுமை அடிச்சு பேசமாட்டாங்க! இப்போ ஒரு மேட்டர் சொல்றேன்...
தற்பெருமையும் முட்டாள்தனமும் அண்ணன் தம்பி. ரெண்டும் ஒண்ணாதான் இருக்கும். ஒண்ணு இருக்கு ஒண்ணு இல்லேன்னு சொல்ல முடியாது. இட்ஸ் எ பேக்கேஜ்...ஹா ஹா ஹா!
அவரே சொல்லிட்டாரு, இவரே சொல்லிடாருன்னு அத்தாரிட்டி எடுத்து பேசுறது சுகமா இருக்கலாம்..ஆனா எதார்த்தத்தோட சேத்து எல்லாத்தையும் பாக்க வேணாமா? எல்லாமே சூழலையும் தேவையும் பொறுத்துதான்....
நான் வழக்கப்படி பேசிட்டே இருப்பேன்.... சோ...........ரொம்ப ஸ்ட்ராங்கா ஸ்டாப் பண்ணிக்கிறேன்...அடுத்த " ஹாய்" பகுதியில் பார்க்கலாம்...!
மற்றபடி... உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் மற்றும் எல்லா உறவுகளுக்கும் என் வணக்கம் + வாழ்த்துகள்!
அப்போ வர்ர்ர்ர்ட்டா....!
தேவா. S
Comments
நிம்மதிக்கு ஏது அளவுகோல். அவரவர் மனம் சார்ந்தது..
கவனிப்புத்தன்மை அபாரம் அதை எழுத்தில் கச்சிதமாக கொண்டு வந்ததற்கு பாராட்டுக்கள் ...
See.,
http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html
இப்போதெல்லாம் இவை வெறும் சடங்குகளாகவும், இன்னுமொரு விடுமுறை நாளாகவும் மாறிவிட்டதே?
சொல்லிப் போகிறீர்கள்.நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்
ஆனால்
எந்த வலியுறுத்துதலும், எதிர்பார்ப்பும் இல்லாம கருத்து தெரிவிச்சு இருக்க
பாரதி, கருண், ரமணி, மற்றும் மஹி கிரேனி அம்மா... @ நன்றிகள் (ஆரோக்கியமான நிகழ்வா கருதுதுறேன்)
//
உண்மைதான்! ஆனால் பலசமயங்களில் அது தெரிவதில்லை!
அற்புதமான கருத்து. :-)
அறிதல் (இப்படி ஒரு ஒரு விஷயம் இருக்கா), அறிந்ததை புரிந்து கொள்ளுதல், புரிந்ததை உணர்தல்....மௌனம்.
சரியாக விஷயங்களைப் புரிந்தவர்கள், புரியாமல் கேள்வி கேட்பவர்களின் அறியாமை விலகும் வகையில் விளக்கம் அளிக்கிறார்கள்.
உங்கள் நண்பர் அறிந்து மட்டும் விட்டுவிட்டார். புரிய வைக்க இயலாமை...அதனால் கோபம்...வள்ளுவர் சொல்லி இருப்பது - அதன் உயரம் - உங்களுக்கு எட்டவில்லை என்பதை தான் சொல்லத் தெரியாமல் "உங்களுக்கு திமிர்" என்று சொல்லிவிட்டார். :-)
"புலால் மறுத்தல்" என்பதன் தேவையை ஒருவர் ஆழமாக உணர வேண்டும். அவ்வாறு உணர்ந்தோர் புலால் உண்டு தான் உயிர் தரிக்க வேண்டும் போன்ற இடங்களை தவிர்த்து, பரந்த இந்த உலகில் தாங்கள் வசிக்க தோதான மற்ற இடங்களைத் தெரிவு செய்கிறார்கள். மேலும் அவ்வாறு உணராதோரைக் கடிந்து கொள்வதும் இல்லை. :-) ஏனெனில், "விரைவில் என் நண்பனும் தாவுவான்" என்று அவர்களுக்குத் தெரியும். :-)
அந்த த்ரில்தானே வாழ்க்கையை இன்னும் நகர்த்திச்செல்கிறது.
Correct Anna....
நிதானமாக சிந்திக்க அவகாசம் வேண்டும்.
அவகாசம் இல்லாத இடங்களில் முயற்சி செய்கிறேன் என்றுதான் கூறுவார்கள்.
பகிர்வுக்கு நன்றி.
ஏற்றுக்கொண்டு மாற்றப்பட்டு விட்டது கருணாகரசு.
நன்றிகள்!