Skip to main content

தமிழன் குடி....குன்னக்குடி தானா?



















தமிழ் நாட்டு அரசியல் ஒரு பக்கம் ஒரு பக்கம் சூடு பிடிக்குதுன்னா.. பதிவுலக அரசியல் மறுபக்கம் அனலடிக்குது...! ஆமாம் இப்ப எல்லாம் பதிவு எழுதுறதும் அதை வெளியிடுறதுக்கும் மூளை வேணுமோ இல்லையோ டெக்னிக் வேணும் போல இருக்கு. சரி...சரி.. எந்தப்பக்கம் இப்ப பாயப்போறேன்னு தானே கேக்குறீக....

பதிவுலகம் சாரா...வாசகர்கள் மீதுதான்..!

ஊரான் வீட்டுப் பிள்ளையா நினைச்சுக்காதீங்க .. உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு (வடிவேலு ஸ்டைல்...) நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க...! ஏன் உங்க ரசனை இப்படி போயிடுச்சு....மக்களே? எப்ப பாத்தாலும் பொழுது போக்குறதுலயே குறியா இருக்கீகளே... எப்ப ஒரு விசயத்தை முழுசா புரிஞ்சு விளங்கிக்க போறீக?

" இந்த பக்கம் போகாதன்னு போர்டு போட்டு இருப்பாங்கே........." அங்குட்டுதான் பூரா சனமும் ஓடி ஓடி பாக்கும்...! பாம்பு வித்தையும், குறளி வித்தையும், பாத்து பாத்து உங்களுக்கு சலிக்கவே இல்லையா? ஆபாசத்தையும் அரசியலையும் ரெண்டு கண்ணா நினைச்சு நீங்க காட்ற அபிமானத்த பாத்த.. இன்னும் நூறு வருசம் ஆனாலும், திருந்தித் தொலையப் போறது இல்லனு தெரியுது.

இரண்டு திராவிட கட்சிக்கு நடுவுலதானே தமிழனோட மொத்த பொழைப்பும் சீரழிஞ்சு கிட்டு இருக்கு... ! தி.மு.க. வந்தா அய்யான்னு சொல்லு அ.தி.மு.க வந்தா அம்மானு சொல்லு.. இது ரெண்டும் ஒழுங்கா சொல்லத் தெரியலேன்னா.. தமிழ்நாட்ல வாழ வக்கத்தவனா போயிற வேண்டியதுதான்.. (சத்தியமா நான் பாட்டாளி மக்கள் கட்சிய குறை சொல்லலீங்க.. யாரும் சண்டைக்கு வந்துடாதீக...)

உங்க அரசியல் புரிதல் லட்சணம்தான் இப்படின்னா வாசிக்கும் அறிவு.. சொல்லவே தேவையில்லை.. அதுக்கு ஆஸ்கார்தான் கொடுக்கணும்.

உதாரணமா.....

" அவளின் வேகமான நடையில் முன்னால் இழுத்து விடப்பட்டிருந்த கேசம் காற்றில் அலைபாயும் வேகத்தில் அவளின் முன்னழகை யாரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அதுவும் அவள் அணிந்திருந்த வெள்ளை நிற டி சர்ட்டில் லுக் அட் மீ என்ற வாசகம் எல்லோரையும் சிதறடித்துக் கொண்டிருந்தது.

பிரதீப்பின் அருகில் வந்து அமர்ந்தவள்.....தாமதமாய் வந்ததற்கு மன்னிப்பு கேட்கும் விதமாய் பிரதீப்பின் அருகே நெருக்கமாய் அமர்ந்து அவனின் கேசத்தை கலைத்து...காதுகளின் அருகே சென்று ....ஐ எம் சாரி என்று கூறிய வேகத்தில் சூடாய் அவளை உணர்ந்தான் பிரதீப்....கடற்கரை மாலையின் குளுமையையும் தாண்டி அவனுக்குள் சூடு பரவியது...."

இந்த மாதிரி வார்த்தைகளுக்குள் விரசத்தை விரவி விட்டு எழுத்தை வியாபரம் ஆக்கத் தெரியாத படைப்பாளிகளை நீங்கள் ஏறெடுத்தாவது பார்த்து இருக்கீகளா? பார்க்கா மாட்டீக.. உங்களுக்கு தேவை உணர்ச்சியைத் தூண்டும் அப்போ அப்போ பொழுது போக்காய் இருக்க கூடிய.. ஒரு ஃபாஸ்ட் புட் எழுத்து..... ! அம்புட்டுதானே... வேற என்னத்த செய்யப் போறீக....!

இது மட்டுமா.. ஒரு பதிவுக்கு டைட்டில் வக்கிறது கூட உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி...

"கிலு கிலு கில்மா
நமீதாவின் இடிப்பு சைஸ் சரியானதா?
நடு இரவில் அதிரடி....
கலைஞர் தொலைஞர்
அம்மாவின் அதிரடி யாகம்..."


இந்த ரேஞ்சுல இருந்தாத் தானே நீங்க ஒரு பதிவையாச்சும் ஓப்பன் பண்ணியாச்சும் பாக்குறீங்க...! எழுதுறவங்கள கொற சொல்றதுக்கு யாருக்கும் துப்பு கிடையாது. ஏன்னா நீங்கதான் நல்ல எழுத்தை படிக்கிறது இல்லையே....! இதே நிலைமைய விடாம நீங்க மெயிண்டெய்ன் பண்ணிகிட்டே போனா... எல்லோருமே மஞ்சள் பத்திரிக்கை ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சுடுவாங்க?

எவனாச்சும் யாரயச்சும் திட்டினாலோ அல்லது அடிச்சிகிட்டு கட்டி உருண்டாலோ வாசகப் பெருமக்களாகிய நீங்க கொடுக்குற ஆதரவு இருக்கு பாருங்க.. நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன் மக்கா...! ஆமாம் தெருவுல ரெண்டு பேரு அடிச்சுகிட்டாலே செம ஜாலியா இருக்கும்.. .ஓரமா நின்னு அழகா வேடிக்கை பாத்துட்டு.. நமக்கு என்னாச்சுன்னு... தேமென்னு போவோமே....

அதுவும் எழுத்துல இருந்துச்சுன்னா நாங்க என்ன புறக்கணிக்கவா போறோம்...! செம ஜாலி பாஸ்னு வாயை பொளந்துகிட்டு கூட்டமா நின்னு வேடிக்கைப் பார்ப்போம். எங்களுக்கு தேவை டைம் பாஸ்....எப்பவுமே சீரியசா இருக்க முடியாதுன்னு நீங்க சொல்ற லாஜிக் என்னவோ ஓ.கே.தான்...ஆனா நீங்க எப்பவுமே ஜாலியாவும் இருக்க முடியாதுன்ற லாஜிக்கை ஏன் மறந்துடுறீங்க?

"ஊரைத் திருந்த வந்த நல்லவன்" னு ஒரு டைட்டில் வச்சா ஒரு சனமாச்சும் வந்து எட்டிப்பார்க்கும்ன்றீங்க.. நாலு கெட்டவார்த்தையில .. "டேய்..!" " என்னாடா..." " இந்தாங்கடா..." அவனே இவனேன்னு ஒரு டைட்டில் வச்சா...ஊருச் சனமே.. கியூவ்ல வந்து எட்டிப்பார்க்கும்...! ஏன் நாம டிக்கட் போட்டு காசு வசூல் பண்ணினா கூட கூசாம குடுத்துட்டு ஊர் புறணி பேசவும் கேட்கவும்...ஆளுக இல்லனு மட்டும் சொல்லாதீக.....

எதையுமே விட்டுக் கொடுத்துடாதீங்க வாசகர்களே...! இதே மாதிரியான உங்க அகில உலக நேர்மையான பார்வையோடவே நாட்டின் நிகழ்வுகளையும், அரசியலையும், சினிமாவையும், பக்கத்து வீட்டுக்காரனையும் எதிர்த்த வீட்டுகாரனையும், பத்திரிக்கைகளையும், எழுத்தாளர்களையும் ஆதரிச்சுகிட்டே இருங்க....

தமிழன் குடி குன்னக்குடி ஆகி காவடி எடுத்துக்கிட்டே இருக்கட்டும்...!

அப்போ வர்ர்ர்ர்ட்டா...!


தேவா. S



Comments

Kousalya Raj said…
இப்படி ஒரு போஸ்ட் நான் எதிர் பார்க்கல ...!! :))

அட்டகாசம்...

வாசகனுக்கு இதை விட சூடா கொடுக்க முடியாது.

வாசகர்கள் இதைதான் விரும்புராங்கனு ஒரு முடிவு பண்ணிட்டு எழுதுறாங்க பாருங்க, பாவம் பதிவர்களை குறை சொல்ல முடியாது தான்.

அந்த மாதிரி போஸ்ட் பக்கம் போவதை குறைத்து கொண்டாலே அப்படி எழுதுறவங்க தன்னால நிறுத்திடுவாங்க ... அதனால் வாசகர்கள் முடிவு பண்ணிகோங்க...

தேவா இப்போதைக்கு மிக தேவையான ஒரு பதிவு....நன்றி.
வாசகனுக்கு இதை விட சூடா கொடுக்க முடியாது.

yes... correct...

Pathivugalil nalla pathivugalai palar padippathillai...
அண்ணா ஒரு சந்தேகம் . பதிவுலகத்துல பதிவர்களைத் தவிர தனியா வாசகர்கள் அப்படின்னு இருக்காங்களா ?
சமூக சிந்தனைக்கு அப்படின்னே ஒரு சில பதிவர்கள் இருக்கும் போது நகைச்சுவைக்கு அப்படின்னு சில பதிவர்கள் இருக்க கூடாதா ?
dheva said…
செல்வா. @ பதிவர்களும் வாசகர்களாக இருக்கலாம்..........

நான் கூறுவது பதிவுலகம் சாரா பொதுவான வாசகர்களை!

தம்பி.. நகைச்சுவை பதிவுகள் இருக்க கூடாதுன்னு எங்கயுமே நான் சொல்லலையே!
என்னோட புரிதலையும் சொல்லிடறேன். இங்க சண்டைப் போடுறது வேஸ்ட் ,
இங்க இருக்குற பிரபலம் ஒரு மாயை , பதிவுலகத்துல நண்பர்களைப் பெற முடியும் .
அத விட்டுட்டு வேற விசயங்கள் எதுக்கும் பயன்படாது .. சரி நான் கிளம்புறேன் .. ஹி ஹி
dheva said…
செல்வா @ இப்போ யார் யார்கிட்ட சண்டை போட்டா....???? இந்த பதிவுக்கும் உன் கமெண்ட்டுக்கும் சம்பந்தம் இல்லை..தம்பி.....ஜஸ்ட் ரிலாக்ஸ்....ஹா...ஹா..ஹா!
அமுதன் said…
அண்ணே...

வீடு எப்படி இருக்குமோ அதை போன்றே நாடும் இருக்கும்... இது அறிஞர் அண்ணா கூறியது.

நாடு எப்படி இருக்கிறதோ பதிவுலகமும் அப்படியே இருக்கும்.

நீங்க ரொம்ப நல்லவரா இருப்பதால் பதிவுலகமும் அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறீர்கள்.

பதிவுலகத்தை திருத்த நீங்கள் மற்றும் உங்களை போன்றவர்கள் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி பட்ட படைப்புகளை வாசிக்க வேண்டும் என்று கற்று கொடுங்கள் . அடுத்த தலைமுறையிலாவது நல்ல பதிவுலகம் கிடைக்கும்.

இப்படிக்கு

வாசகன் மட்டும்
Anonymous said…
சீ சீ இந்த பழம் புளிக்கும்... தின்றால் நமது பல் கூசும்
ஹேமா said…
இதுதான் தேவா பதிவுலக அரசியல்.நல்ல அனுபவ அறிவுறுத்தல் !
தேவா,

இந்தப் பதிவின் தலைப்பு ஹிஹி.. என்ன வகை?

அதிகமாக எழுதுவதை விட தரமாக எழுத அனைவரும் முயன்றால் இது மாறும்.

இங்கே ரேட்டிங், தரவரிசை எல்லாம் வைத்து அனைவரையும் பந்தயத்தில் ஓட வைத்துவிடுகிறார்கள்.
dheva said…
செந்தில் வேலன்.....@ அதே வகைதான்......பாஸ்.......வேற வழி... முள்ளை முள்ளால எடுக்கறதுன்னு நீங்க கேள்விபட்டது இல்லையா? ஹி ஹி ஹி
Jackiesekar said…
வேறு தளத்தில் பார்வையிட்ட போது உங்கள் பதிவு லிக் கிடைத்தது...

பதிவுலகம் பற்றிய வேறு ஒரு கோணம், பார்வை... ரசித்து வாசித்தேன்..

நன்றி..

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...