
எதார்த்தங்களை விரும்புபவர்களுக்கு
எழுத்துக்களோ, விமரிசைகளோ
அல்லது...
சராசரி நிகழ்வுகளோ எப்போதும்
திருப்தியை கொடுத்து விடுமா என்ன?
சொர்க்கங்களில் வாசம் செய்பவர்களுக்கு
சந்தோசத்தை பெட்டிக்குள்...
அடைத்து கொடுத்தலாகுமா?
எல்லா விடியலையும் புதியதாய்
சுவீகரித்துக் கொண்ட ஜீவன்களுகு
சிறந்த நாளென்று தனித்து
எதைப் பகிர?..!
வழக்கம் போல
தனிமையில் மூழ்கி ஏகாந்தமாயிருக்க
நிதம் வானம் பார்த்து உனை மறக்க
ஒரு துளி கூட விடாது மழையை
மொத்தமாய் விழியாலோ அல்லது
உடலாலோ உள் வாங்கிக் கொள்ள
ஏதோ ஒரு புத்தகத்தில்
எப்போதும் உனைத் தொலைக்க
.....
.....
.....
மொத்தத்தில் பட்டாம் பூச்சியாய்
எப்போதும் சிறகடிக்க
வாழ்த்துகள்....!
......
.....
....
என்றெல்லாம்....
எழுதி முடித்த பின்னும்
எதோ ஒன்று மிச்சமாயிக்கும்
ஒரு அடர்ந்த மெளனத்தில்
நிறைந்திருக்கிறது...
எழுத்துக்களுக்குள் ஏற்ற முடியாத
வாழ்த்தின் ஓசைகள்!
தேவா. S
Comments
@ஆனந்தி: நன்றி!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அவர்களுக்கு...