
கலைத்துப் போட்டு....
விளையாடி விளையாடி...
களைத்தே போய்விட்டேன்
உன் நினைவுகளோடு..,
என்னைச் சுற்றியிருக்கும்
எல்லா விழிகளும்
வெறுமனே பார்வையைத் தான்
என் மீது பதித்துச் செல்கின்றன
காதலைப் பதிக்க
உன் விழிகளுக்கு மட்டுமே தெரியும்..!
என்னைத் தேடிக் கொண்டிருப்பாய்
என்று தெரிந்தேதான்
என் மெளனத்தைக் கூட
மொழியாக்காமல் ஊமையாக்கி வைத்திருக்கிறேன்...!
நிஜங்களில் விலகிப் போகையில்
கனவுகள் பல கதை சொல்வதை
நானும் ரசிக்கிறேன் உன்னை போலவே...
ஏதோ ஒரு புத்தகம்....,
நீல வானத்தின் வெள்ளை பொதிகளாய்
பறக்கும் பஞ்சு மேகங்கள்...,
உன் நினைவுகளில் நீந்திக் கொண்டு
தனிமையில் நடக்கும் நடை,
உனக்காக சேமித்து வைத்திருக்கும்
காதலை கவிதையாக்க்கி வைத்திருக்கும்
ஒரு நோட்டுப் புத்தகம்...,
மெல்ல வீசும் காற்றில்
அவ்வப் போது எழுதும் உன்பெயர்...,
ஏதோ ஒரு மென்மையான இசை...,
நிறைய நிறைய உன்...
நினைவுகளின் இம்சை...,
என்று...
நானும் உன்னைப் போலத்தான்
என்னை பற்றி நினைக்காமல்
எப்போதும் உன்னை பற்றி...
யோசித்துக் கொண்டும்...
கனவுகளில் உன்னிடம் காதலை
யாசித்துக் கொண்டும்...
கரைத்துக் கொள்கிறேன்
என் நாட்களை...!
தேவா. S
Comments
என்னை பற்றி நினைக்காமல்
எப்போதும் உன்னை பற்றி...
யோசித்துக் கொண்டும்...
கனவுகளில் உன்னிடம் காதலை
யாசித்துக் கொண்டும்...
கரைத்துக் கொள்கிறேன்
என் நாட்களை...!///
போங்கண்ணா இது செமையா இருக்கு :))