
ஈழ தேசத்தில் வெடித்த அந்த அக்னி இன்று வியாபித்து அகில உலகமெங்கும் இருக்கும் தமிழர்களின் மனதில் எல்லாம் பெரும் தீப்பிளம்பாய் கிளர்ந்து நிற்கத்தான் செய்கிறது. ஆமாம்....பிரபாகரன் என்ற பெயரினை உச்சரிக்கும் போதே ஒவ்வொர் தமிழனின் மயிர்க்கால்களும் சிலிர்த்து எழத்தான் வேண்டும்....
கொடுமைகள் பல இழைத்து எம் மக்களை இன ரீதியாக ஒடுக்கி அடக்குமுறைகள் செய்த அரியாசனத்தில் இருந்த இலங்கை தேசத்தின் சொறி நாய்களுக்கு தலைவர் பிரபாகரன் சிம்ம சொப்பனமாய்த்தான் இருந்தார்...
இலங்கை இராணுவமும், போலிஸ் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் பிரபாகரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிப் போய் தமது கால் சட்டைகளை நனைத்துக் கொண்டு ,தொண்டை வரண்டு போய் உடனே உயிர் பயம் கொள்ளத்தான் செய்தார்கள்...
ஒரு இனத்தை ஒரு தேசத்திலிருந்து முழுதுமாய் ஒழித்து விட சிங்கள பேரினவாத அரசு முடுக்கி விட்ட எல்லா கொடும் செயல்களையும் ஆரம்பத்தில் அகிம்சா முறையில் சாதிக்க முயன்று, முயன்று அந்த முயற்சிகள் எல்லாம் கொடியவர்களின் ஆயுதங்களால் எரிக்கப்பட்ட போது களமிறங்கி ஆயுதத்தை கைப்பிடத்த சீற்றமான புலிதான் பிரபாகரன்....
எம் குலப் பெண்டிரின் கற்புகளை அழித்தாயா? எம் வீடுகளை சூறையாடினாயா? எம் பிள்ளைகளை எல்லாம் பிராயத்திலேயே அழித்தொழித்தாயா...? எமது பொறுமைகளின் தூரம் எவ்வளவு என்று கணித்துப் பார்த்தாயா? இதோ உனக்கு கொடுக்கிறேன் மரணம் என்னும் பரிசினை...எம்மை அடிக்க உயர்த்தும் உமது கரங்களையும், அவற்றை இயக்கும் மனிதனின் மூளைகளையும் செதுக்கிப் போடுகிறோம்...
கங்கை கொண்டோம், கடரம் கொண்டோம்.. தென் இந்தியா முழுதும் தாண்டி எத்தனையோ தேசங்களில் வெற்றி கொடி நாட்டினோம்..., உலகம் காடுகளில் மிருகங்களாய் திரிந்து கொண்டிருந்த போது நாங்கள் கவி செய்தோம், காவியம் செய்தோம்...வீரத்திலும் ஆன்மீகத்திலும் கொடிகட்டிப் பறந்தோம்...இன்றைய அறிவியலின் உன்னதங்களை எல்லாம் எங்களின் மூச்சடக்கி, புத்தியைக் கடந்து, உடலைக் கடந்து பிரபஞ்சத்தில் கலந்து கண்டறிந்தோம்....
சூரியனிலிருந்து வெடித்துச் சிதறி பூமி நெருப்பாய் தனித்து விழுந்தது.. அந்த நெருப்பு அடங்கி குளிர்கையில் மீண்டும் நெருப்பாய் தமிழனென்ற ஒரு தொல் இனம் தோன்றியது....
முட்டாள் சிங்களவனே.. நீ எமது எச்சம்...! எம்மின் உடல்களுக்குள் பரவிக் கிடக்கும் குணாதிசயங்களை எல்லாம் கடத்தி, கடத்தி அதிலிருந்து கற்றுக் கொண்டு பிறந்த உயிர் நீ...எம்மை ஈனம் செய்வதோ...? என்ற ரீதியில் ஈன சிங்களவனுக்கு பாடம் புகட்டிய புலி தான் அண்ணன் பிரபாகரன்...
எல்லா வித கட்டுப்பாடுகளுக்குள்ளும் இருந்து கொண்டு நவீனத்தின் நாடி தொட்டு, இயந்திரங்களின் உபயோகம் அறிந்து, அறிவியலின் கைகள் பிடித்துக் கொண்டு தரை, விமான, கடற் படைகளை கட்டியெழுப்பிய யுக நாயகன் பிரபாகரன்....!
சிங்கள கொடும் நாய்கள் போரென்றால் என்னவென்று அறியாத கோழைகள். அவர்களுக்கு எப்படி தெரியும் போர் மரபென்றால் என்னவென்று....? எதிர்ப்பவனை அடிக்கும் போது கூட அதில் எமது புறநானூற்று விதிமுறைகளை கடை பிடித்து எதிராளியின் பெண்டிர்க்கு, குழந்தைகளுக்கு, அறியாத அப்பாவிகளுக்கு பாதுக்காப்பு அளித்து தாக்குதல் நடத்திய மாவீரன் பிரபாகரன்...
எதிரிகளை எல்லாம் போர் முனையில் வைத்து கொன்று பாடம் புகட்டிய அதே வேளையில் துரோகிகளாய் நின்று முதுகில் குத்திய கோழைகளை எல்லாம் எப்படி கையாள வேண்டும் என்றறிந்து துரோகிகளுக்கு தூரோகத்தின் சாயலை மரணத்தின் முன்பு காண்பித்து...உனது தூரோகம் எனது துரோகத்தால் அழியட்டும் என்று கொடும்பாவிகளை களையெடுத்த கதாநாயகன் பிரபாகரன்....
எமக்கு பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், பதவிகள் வேண்டாம் ஆனால் எமது மண்ணில், சகலவிதமான உரிமைகளுடன் வாழ விடுங்கள்...! உரிமைகளை கொடுக்காமல் விட்டு எம்மை அடிமைகளாக்கி சிங்கள பேரின வாதத்தின் கால்களை கழுவும் ஒரு நிலையை நானும் என் சிங்க நிகர் தமிழ்க் கூட்டமும் எய்த மாட்டோம்...! அத்தகைய வாழ்க்கையை விட மரணம் எமக்கு மிக சந்தோசமான ஒன்று என்று கூறி தனது கொள்கைகளை உயிராய் நினைத்து வாழ்ந்த நெறியாளன் பிரபாகரன்...
என்ன கேட்டோம்...உலகத்தீரே...? எமக்கான வாழ்வு..அவ்வளவுதானே...அதுவும் எமது மண்ணில் அதை கொடுப்பது உமக்கு தயக்கமெனில் ஆயுதம் எடுப்பதில் எமக்கு யாதொரு தயக்கமுமில்லை என்று சீறீப்பாயந்த வேங்கைதான் பிரபாகரன். பிரபாகரனின் திட்டமிடலும், போரினை வழி நடத்தும் தன்மையும், கட்டுக்கோப்பான இயக்கத்தையும் அதனை நேசிக்கும் மக்களையும் உருவாக்கிய விதமும் காலங்கள் கடந்தும் பேசத்தான் படப் போகின்றன....
குள்ள நரிகள் கூட்டங்களாக கூடி நின்று, போர் திட்டங்கள் என்னும் நயவஞ்சகப் போர்வையில் சிங்கள நாய்களோடு சேர்ந்து, போர் தர்மத்திற்கு எதிராக நின்று எமது இனத்தினை கொத்துக் கொத்தாக அழித்துப் போட்டது. தனது தொப்புள் கொடி உறவுகள் நிறைந்து கிடக்கும் உலக தமிழர்களின் தாய் வீடான தமிழகம் இந்தியாவின் ஒரு பகுதி, தமிழகத்தை ஆளும் தலைவர்கள் இந்திய அரசில் அங்கம் வகிக்கிறார்கள் அவர்கள் எப்படியும் தமக்கு நீதியைக் கொடுத்து விடுவார்கள் என்று தலைவர் பிரபாகரனும்...இன்னும் லட்சபோப லட்ச ஈழத்தமிழர்களும் கடுமையாய் நம்பினார்கள்....
தமிழ்ச் சாதியை மொத்தத்தில் இரண்டு கூறுகளாய் பிரித்துப் போட்டுத்தான் ஆக வேண்டும்....! ஒரு சாரார் கட்டபொம்மன் சாதி, இன்னொரு சாரார் எட்டப்பன் சாதி....; ஆமாம் ஒரு சாரார் விசுவாசத்தால் நம்பும் சாதி இன்னொரு சாரார் எட்டப்பனைப் போல துரோகம் செய்து காட்டிக் கொடுக்கும் சாதி..ஆனால் இருசாராரும் தமிழனென்ற பெயர்ப்பலகை தாங்கியே வருவர்.....
ஈழ மக்களும் விடுதலைப் புலிகள் இயக்கமும், தமிழ் நாட்டில் இருக்கும் மிகைப்பட்ட தமிழர்களும் இப்படி நம்பி இருக்கையில், எட்டப்பர்கள் கொடும் இத்தாலிய இந்திய ஏகதிபத்தியத்தின் கைக்கூலிகளாய் இருந்து கொண்டே தமிழர்கள் வாழ்க என்று கோசமிட்டுக் கொண்டும், கடிதம் எழுதிக் கொண்டும் உண்ணாவிரத நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டும் இருந்தனர்...
ஊடகங்கள் எல்லாம் எழுதின, உலக தமிழர்கள் எல்லாம் அழுதனர், ஈழத்தில் கொத்துக் கொத்துகளாய் தமிழ் இனத்தின் உயிர்ப் போய்க் கொண்டிருந்தது....! உலக நாடுகள் கூடி நின்று ஒரு கொடும் செயலை அரங்கேற்றிக் கொண்டிருந்தன...ஆனால் தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த அரசும், இந்திய ஏகாதிபத்திய அரசும் கடைசி வரை இந்தியாவின் கை இதில் எல்லை என்று நடித்துக் கொண்டிருந்தது....
ஈழத்தில் போரை நடத்தியது இந்தியா.....! தமிழர்களை கொன்று குவிக்க உதவியாய் இருந்தது இந்தியா...என்ற உண்மை வெளியே கசிந்து கொண்டே இருக்கையில்....மெல்ல மெல்ல தமிழர்களின் உயிர்கள் அங்கே அடங்கிக் கொண்டிருந்தன....
ராஜபக்சே என்னும் கொடும் அரக்கன் சீனாவோடும், பாகிஸ்தானோடும் சேர்ந்து கொண்டு விடுவானோ என்று தொடை நடுங்கிய இந்திய ஏகாதிபத்தியத்தின் இத்தாலிய மூளை தன் பழிக்குப் பழி வாங்கும் சுயநல வஞ்சத்தை தீர்க்கவும் இந்தப் போரினை உபயோகம் செய்து கொண்டது என்பதுதான் உண்மை.....!
போர் முடிந்து விட்டது.....!!!! இன்று எம் தமிழ் மக்கள் ஈழ மண்ணில் எப்படி வாழ்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை யாரும் தெளிவாக தெரிந்து கொள்ள முடியவில்லை....! முள் கம்பிகளைத் தாண்டி அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதாக அரக்கன் ராஜபக்சே தெரிவிக்கிறான்....ஆனால் நிதர்சனம் என்ன என்று யாரும் அறிய முடியவில்லை...!
விடுதலைப் புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் அழித்து விட்டோம் என்று கூறிய சிங்கள அரசு தற்போது விடுதலைப் புலிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்று அறிவித்து தனது தொடை நடுங்கித்தனத்தைப் பகிங்கரப்படுத்தி இருக்கிறது. பொட்டு அம்மானும், அண்ணன் பிரபாகரனும் இன்னும் அழிந்து விடவில்லை அவர்கள் மனதில்...
ராஜபக்சேவுக்கும் கோத்தபயாவுக்கும் பாடம் புகட்ட பிரபாகரன் வந்துதான் ஆக வேண்டும் என்ற கோடாணு கோடி தமிழர்களின் எதிர்ப்பார்ப்புகளில் பிரபாகரன் என்னும் தீச்சுடர் எப்போதும் எரிந்து கொண்டுதானிருக்கிறது....! அந்த தீச்சுடருக்கு அவர் இருக்கிறாரா? இல்லையா என்ற சந்தேகங்கள் கிஞ்சித்தேனும் இல்லை....
மீண்டும் ஒரு விடியல் வரும்....அப்போது ஈழ மண்ணில் எம் உறவுகள் சுதந்திரக் காற்றை சர்வ நிச்சயமாய் சுவாசிப்பார்கள்...என்பதற்கு பிரபாகரன் என்ற ஒற்றை பெயர் உதவும் என்பதும் மறுக்க முடியாத உண்மை....!
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் மாவீரர் தின வாழ்த்துக்கள்...!
தேவா. S
Comments
முற்றிலும் மதிக்கப் படவேண்டிய, போற்ற பட வேண்டிய செய்கை!! வீரனுக்கு இலக்கணம்,.. பொருத்தமான பின்னணி பாடலுடன்... இந்த பதிவை படிக்கையில்.. எமை அறியாது மெய் சிலிர்த்து தான் போகிறது.
ஒரு வீரரின் வேள்வியை, வெற்றியை, நெறி முறை தவறா அவரின் செயல்களை... உணரச் செய்தமைக்கு நன்றிகள்.
வீரத்தமிழருக்கு வாழ்த்துக்கள்!
கருணாநிதி ஆட்சியின் போது, ஊர் ஊராய் ஈழ தமிழர் குறித்தும், மாவீரர் தினத்தை குறித்து பேசவும் உரிமை இருந்தது...ஆனால் இப்போது...அவை அனைத்திற்கும் தடை...அனுமதி மறுப்பு.....
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொம்படித்த சீமான், நெடுமாறன் போன்றவர்களும், ஈழத்தாயின் குபீர் தீடீர் ஆதரவாளர்களும் இப்போதாவது திருந்துவார்களா ???? உண்மையான தமிழின உணர்வு எங்கு உள்ளது, யாரிடம் உள்ளது என்பதை புரிந்து கொள்வார்களா ????..இனம் இனத்தோடுதான் சேரமுடியும்........
" மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் ஏற்பாடு: போலீஸ் தடையால் உணர்வாளர்கள் அதிர்ச்சி
மேலும், அன்னதானம் மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாமை தடை செய்திருப்பது உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=65979
கருணாநிதி ஆட்சியின் போது, ஊர் ஊராய் ஈழ தமிழர் குறித்தும், மாவீரர் தினத்தை குறித்து பேசவும் உரிமை இருந்தது...ஆனால் இப்போது...அவை அனைத்திற்கும் தடை...அனுமதி மறுப்பு.....
இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொம்படித்த சீமான், நெடுமாறன் போன்றவர்களும், ஈழத்தாயின் குபீர் தீடீர் ஆதரவாளர்களும் இப்போதாவது திருந்துவார்களா ???? உண்மையான தமிழின உணர்வு எங்கு உள்ளது, யாரிடம் உள்ளது என்பதை புரிந்து கொள்வார்களா ????..இனம் இனத்தோடுதான் சேரமுடியும்........
" மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் முகாம் ஏற்பாடு: போலீஸ் தடையால் உணர்வாளர்கள் அதிர்ச்சி
மேலும், அன்னதானம் மற்றும் நினைவேந்தல் பொதுக்கூட்டத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரத்ததானம் முகாமை தடை செய்திருப்பது உணர்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."
http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=65979
TM 8.
“மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்”