
இசைக்குள் ஒளிந்து கொண்டு
பாடலாய் சில்மிஷமூட்டுகிறாய்...
ஒரு மழையின் கனத்த
அடர்த்தியின் ஓரங்களில்
சாரலாய் நின்று மெல்ல சிரிக்கிறாய்
எப்போதும் தனிமைகளில்
ஆராவாரமாய் மனதில் இரைகிறாய்!
ஆழமான சுவாசங்களில்
அடி வயிறு வரை சென்று
இதமாய் நெஞ்சு நனைக்கிறாய்
தோட்டத்து செடிகளின்
துளிர் இலைகளில் மெலிதாய்
எட்டிப்பார்த்து கண்ணடிகிறாய்
கட்டியணைத்தே விடலாம் என்று
கை சேர்த்து அணைக்கும் போது
ஒரு காற்றாய் என்னை..
கடந்தே போகிறாய்....!
விளக்கணைக்கும் வரை
விழிகளுக்குள் வசிக்கிறாய்
விளக்கணைத்து இமை மூடும் போது
நெஞ்சத்தில் நினைவுகளாய் படருகிறாய்
சுற்றி சுற்றி எல்லாமாய் நீயிருந்தால்
எப்படித்தான் உன்னை மறப்பதாம்?
தேவா. S
Comments