Skip to main content

கிழியட்டும் இத்தாலிய காங்கிரஸின் இந்திய முகமூடி....!

















ராஜிவ் கொலை என்னும் ஒற்றை விடயத்தைக் கடந்து ஒரு நியாயமான காரணத்தை சொல்ல இயலுமா என் இந்திய தேசமே... உன்னால்...ஏன் நீ  கொலைவெறி பிடித்து மனிதர்களை கொன்றழித்த இலங்கை என்னும் ஒரு தேசத்தை ஆதரிக்கிறாய் என்பதற்கு....

உலகெங்கும் இருக்கும் மக்கள் புத்திகளால் மற்ற நாடுகளை நோக்கினாலும் பாரதம் என்னும் பழம்பெரும் தேசம் எப்போதும் தன் இதயத்தாலேயே மற்ற நாடுகளையும் மனிதர்களையும் பார்த்திருப்பதை யார் உனக்கு சொல்வார் இத்தாலிய மூளையால் சிதைக்கப்பட்ட என் உயிர் இந்தியாவே....?

வணிகம் செய்ய வந்தவன் மெல்ல, மெல்ல ஊடுருவி சற்றேறக்குறைய 300 வருடங்கள் ஆண்டிருக்கிறானென்றால் அங்கே வீழ்ந்து போனது இந்தியனின் வீரம் அல்ல விசுவரூபமெடுத்த் நின்ற அவனின் விருந்தோம்பலும், அயலானையும் நேசித்து நம்பிய நேசமும்தானே....! சொந்த நாட்டிற்குள் தனது பூட்ஸ் கால்களால் அழுந்தப் பதிந்த எதேச்சதிகார ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தி சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக்கி வைத்திருந்த மனிதர்களை....

அஹிம்சை வழி கொண்டு, தடியடி வாங்கி, சகித்து சகித்து, அமைதி வழியில் போராடி பெற்ற காந்தியின் தேசமிது என்று நம்பித் தானே.. தென்கோடியில் வசிக்கும் மிகைப்பட பேர்களைக் கொண்ட தொன்மையான ஒரு தேசிய இனத்தின் மக்களாகிய நாங்கள் இந்தியர்கள் என்று எங்கள் குரல்வளைகள் கிழிந்து போக தொண்டை நரம்பு புடைக்க உணர்ச்சிகளை எங்கள் புத்தியில் வைக்காமல் உணர்வாய் இதயத்தில் வைத்து

நாங்கள் இந்தியர்கள்...! நாங்கள் இந்தியர்கள்...! நாங்கள் இந்தியர்கள்....! என்று பாரதத்தின் வட மூலையான காஷ்மீரமும் அதிர உரக்க கூச்சலிட்டோம்...!

புத்தனின் தேசமிது, கருணையின் பூமி இது என்று தாயின் முலைப்பாலோடு  சேர்த்து சேர்த்து இந்திய தேசியம் என்னும் தேசப்பற்றினை எமக்குள் ஊட்டி வளர்த்து, இந்திய தேசம் அநீதிக்குப் போகாது, இந்திய தேசம் சத்தியத்தின் சொரூபம், நமது தேசத்தின் சக்தி மிகுத்த வார்த்தை

 " சத்ய மேவ ஜெயதே " என்னும் வாய்மையே வெல்லும் என்ற அக்னி வார்த்தை....

நாங்கள் எப்போதும் சமாதானத்தை விரும்பும் ஒரு ஒப்பற்ற தேசத்தின் குடிமக்கள், எங்கள் வீரம் எல்லாம் எம்மைச் சீண்டுபவரின், அத்துமீறுபவரின் தலைகளைக் கொய்து போடவே என்று இறுமாப்புக்கள் கொண்டிருந்தோம்...! மகாத்மாவாய் இருக்கட்டும், அல்லது இந்திராகாந்தியாய் இருக்கட்டும், வட மாநிலங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளாய் இருக்கட்டும், பஞ்சாப் கலவரமாய் இருக்கட்டும்,   கார்கில் போராக இருக்கட்டும், பாராளுமன்ற தாக்குதலாய் இருக்கட்டும்...., பாகிஸ்தானோடான போராய் இருக்கட்டும், சீனாவோடான சீறலாய் இருக்கட்டும்....

நீ நேர்வழியில் நிற்பாய் என்றுதானே என் தேசமே எங்கள் குருதிகளை கொட்டிக் கொடுக்க கூட நாங்கள் தயாராய் நின்றோம்....

என்ன செய்தது என் தமிழினம்...? ராஜிவ் காந்தி என்னும் ஒரு தலைவரைக் விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்னிறுத்தி அதுவும் அந்த கொலை வழக்கின் வேர்கள் எங்கெல்லாம் சென்றிருக்கின்றன, யாரெல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் என்று தீர விசாரிக்க வக்கில்லாத நீதித்துறையையும் புலனாய்த்துறையையும் வைத்துக் கொண்டு.....

ராஜிவ் படுகொலையின் போது தமிழகத்தின் தலைவர்கள் எல்லாம் உடனிருந்தும் குண்டு வெடித்த போது அந்த காங்கிரசு கட்சியின் மானமிகுத தலைவர்கள் எல்லாம் எப்படி ராஜிவ் காந்தியோடு உடன் இல்லாமல் போனார்கள் என்றெல்லாம் ஆராயமுடியாமல்.....

வழக்கினை இன்னமும் தெரு முச்சந்தில் நிறுத்தி முக்காடு போட்டு மூடிவிட்டு... முள்ளி வாய்க்காலில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான எம் தமிழ் மக்களை அழித்தொழித்த ஈன அரக்கன் ஆளும் தேசத்தை போர்க்குற்றம் புரிந்த தேசம் என்று உலக நாடுகளின் முன்பு நீ அறிவிப்பாய் என்று பார்த்தால் ..

" மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டிற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ஏற்க முடியாது என்று..." சத்தியசீலனை போல நீ அதர்மத்தின் பக்கம் நின்று அறைகூவல் விடுத்திருக்கிறாய்....

இது நியாமா? நீதியா? சொல்லுங்கள் என் தேசத்தை காப்பேன், என் தேசத்தின் மக்களின் உணர்வுகளை மதிப்பேன் என்று சத்தியம் செய்து ஆட்சிப் பொறுப்பேற்ற ஆளும் காங்கிரசு கட்சியினரே....?

ஏழரை கோடி தமிழர்களும் மண்டியிட்டு இறைஞ்சினோம், தமிழினத்தின் இருபெரும் கட்சிகளான் திராவிட முன்னேற்றக் கழகமும், அண்ண அதிராவிட முன்னேற்றக் கழகமும் வலுவான கோரிக்கையை வைத்து மன்றாடின....

இந்திய முகமூடி அணிந்த இத்தாலிய காங்கிரசே..... ஏழரை கோடி தமிழர்களின் உணர்வுகளை நீ குழிதோண்டி புதைத்து விட்டாய்.....! உலகிற்கே மானுட நேயத்தையும், விருந்தோம்பலையும், கலைகளையும் கற்றுக் கொடுத்த ஒரு மிகப்பெரிய தேசிய இனத்தை நீ இனமாக பார்க்காமல், நீ தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் இந்திய தேசம் என்னும் பெயர்ப்பலகையின் ஆதாரப்பூர்வ குடிமக்கள் என்ற உணர்வை மதிக்காமால் எங்கள் உணர்வுகளை உன் அதிகாரம் என்னும் பூட்ஸ் காலால் போட்டு நசுக்கி விட்டாய்....

எம்மோடு இரத்த பந்தம் இல்லாத தேசங்கள் எல்லாம் அறிவிக்கின்றன.... இலங்கை ஒரு போர்க்குற்றம் செய்த நாடு....இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு போர்க்குற்றவாளி....இலங்கையில் நடந்தது போர் அல்ல அது இன அழிப்பு என்று....

சத்திய தேசத்தின் முத்திரையோடு நீ மட்டும் இன்று இந்தியா என்ற முகமூடிக்குள் நின்று கொண்டு அதை ஏற்க மறுப்பது ஏன்...? என் தேசத்தின் ஆதார உணர்வு இரக்கம் என்பது, என் தேசத்தின் இதயத்துடிப்பு என்பது.....வீரத்தையும் தியாகத்தையும் ஒருங்கே கொண்டது என்பதான் என் தேசத்தின் வரலாறு....

இத்தாலியத்தின் ஆக்கிரமில் இதோ இன்று என் இந்திய தேசம் அடிமையாய் கண்ணீர் விட்டு கதறிக்கொண்டிருக்கிறது....! இத்தாலிய காங்கிரசின் அதிகார வரம்பிற்குள் இந்தியா என்னும் தேசத்தின் தொன்மயான வேர்கள் செத்துப் போய்விட்டன அல்லது கொன்றழிக்கப்பட்டன...! இந்திய தேசத்தின் சுயத்தை மாற்றிய இத்தாலிய காங்கிரஸ்.....சர்வ நிச்சயமாய் இந்த தேசத்திலிருந்து அழித்து ஒழிக்கப்பட வேண்டியது....

இறந்து போன ஐயா ராஜிவ்காந்தி உயிரோடு இருந்திருந்தால் கூட இந்த மாதிரியான சூழலில் சர்வ நிச்சயமாய் இலங்கையை போர்க்குற்றம் செய்த நாடு என்று அறிவித்து சாட்சியம் கூறியிருப்பார்....

காரணம்..ராஜிவ் காந்தி என்னும் மனிதர் ஒரு சுத்தமான இந்திய தாய், தந்தையருக்குப் பிறந்தவர்....ஆனால்.....இன்று....மாபியாவின் தேசத்திலிருந்து வந்த ஒரு சைத்தான் எம் தேசத்தின் சுயத்தை பிளந்தெறிந்து விட்டது. வரலாற்றில் வழமையாய் நிகழ்ந்தது போலவே காட்டிக் கொடுக்கும் எட்டப்ப இந்தியர்கள் இன்று அடிவருடிகளாக மண்டியிட்டுக் கிடக்கின்றனர்....

விழித்துக் கொள்ளுங்கள் எம் மக்களே....!

குழந்தைகளையும், கர்ப்பிணிகளையும், முதியவர்களையும், பெண்களையும், அப்பாவி பொதுமக்களையும் கொத்துக் கொத்துக்களாக குண்டுகளை வீசி கொலைசெய்தவனுக்கு ஆதரவு தெரிவுக்கும் இந்திய சோனியா காங்கிரசின் கொடும் முகத்தை நீங்கள் காணப்பெறுவீர்களாக.....

காணொளிகளில் எல்லாம் நமது அக்கா, தங்கைகளின் உடைகளைக் களைந்து அவர்களை நிர்வாணப்படுத்தி கற்பினைச் சூறையாடிய கொடும் விலங்குகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கும் காங்கிரசு கட்சியின் கோரமுகத்தினை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்....

பள்ளிக்குச் செல்லும் சிறார்கள் பதுங்கு குழியில் ஒடுங்கிக் கொண்டிருக்கையில் குண்டு வீசிக் கொன்ற கொடிய ஈனர்களோடு கைகுலுக்கிச் சிரிக்கும் காங்கிரஸ் என்னும் அரக்கனை மனதிலே உறுதியாய் இறுத்தி வைத்துக் கொள்ளுங்கள்....

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த மண்ணில் மனநிலை சரியில்லாதவர்களாக பிரஞையற்று நடைபிணமாக அலைவதையும், கருவில் இருக்கும் குழந்தைக்கு சொந்தக்காரன் தன் கணவனா இல்லை தன்னை சீரழித்த கொடும்பாவி சிங்களவனா என்று சிந்திக்க கூட திரணியில்லாமல் அலையும் தொன்மையான தமிழ் இனத்தின் கற்பு நெறி கொண்ட பெண்களையும் மனதிலே தேக்கி வைத்துக் கொள்ளுங்கள்....

ஐ.நா மனித உரிமைகள் மாமன்றத்தில் இந்தியா என்னும் என் தேசம் தமிழின அழிப்பு நடத்திய கொடியவன் ராஜபக்சேயை ஆதரிப்பதை வரலாறு கவனமாக தனது குறிப்பில் ஏற்றிக் கொள்ளட்டும்......

ஏனைய உறுப்பு நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதரவில் இலங்கை ஒரு போர்க்குற்றம் புரிந்த நாடு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,. இலங்கை அரசின் மீது விசாரணை நடக்கட்டும் என்று அத்தனை தமிழகளும் உளமாற நம்புவோமாக....!!!!

கண்ணீரை எல்லாம் உள்ளுகுள் தேக்கி வைத்து இந்த கணத்தின் உணர்ச்சிகளை வெளியே சென்று விடாமல் அப்படியே அடைத்து வைத்து வருகின்ற பாரளுமன்றத் தேர்தலிலே....தமிழர்களாகிய நாம் அத்தனை பேரும்.....

காங்கிரசு கட்சியின் முகத்திரையை கிழித்து தமிழகத்தில் ஒரு இடம் கூட வரமுடியால் விரட்டி அடித்து இந்திய சமூகத்திற்கு முன்பு ஒரு மானமுள்ள தமிழர்கள் கூட்டம் நாம் என்பதை நிரூப்பதை நமது தார்மீகக் கடமையாகக் கொள்வோம்....என்ற சூளுரையோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்....!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்...!


தேவா. சு.





Comments

baleno said…
Mr.Dheva காட்டுமிராண்டி புலி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் உங்கள் போலி முகமூடி எப்போ கிழியும்?
வைகை said…
baleno said...
Mr.Dheva காட்டுமிராண்டி புலி பயங்கரவாதிகளை ஆதரிக்கும் உங்கள் போலி முகமூடி எப்போ கிழியும்?////////

ஏன் பாஸ்... அவங்க பண்ணினது காட்டு மிராண்டிதனம்னா இத்தனை தமிழர்களை அழிக்க துணை போன காங்கிரசை ஆதரிக்கும் அத்தனை பேரும் காட்டுமிராண்டிகள்தான். ஆனாலும் ஈழத்தமிழன் பற்றி பேசினா புலிகள் ஆதரவாலன்னு சொல்ற உங்க மொக்கைதனமான வாதத்தை எப்ப விட போறீங்க? :-))
தேவா!உணர்ச்சிப் பிழம்பான பதிவு.
தமிழின் உணர்வும்,நியாய குரலும் எழுத்தில் பிரளயமாக கொட்டுகிறது.
பதிவுக்கு எனது ஆதரவும் வாழ்த்துக்களும்.

Mr.No ball காட்டுமிராண்டி ராஜபக்சே பயங்கரவாதிகளை ஆதரிக்கும் உங்கள் போலி முகமூடி எப்ப கிழியும்ன்னும் கூட வாசிக்கலாமோ:)

No ball போடும் முதல் பின்னூட்டத்தை புறம் தள்ளி நடை போடுங்கள் தேவா!

பிரச்சினைகளின் மொத்த பரிமாண வெளிப்படுத்தல் அறியாதவர்களுக்காக அல்ல இந்த பதிவு.
பலினோ !! ச்சே!! இந்த பேர புடிக்கல ..,மூட் அவுட் ஆவுது ..,தயவு செய்ஞ்சி வேற எங்கையாவது போய் வெண்சாமரம் வீசுங்க ..,காத்தாச்சும் வரட்டும் :))
dheva said…
Baleno @ ராஜபக்சேயும் அவனை ஆதரித்த இந்தியாவின் காங்கிசு கட்சியும் தேவதூதர்களென்று நீங்கள் கற்பிதம் செய்து அவர்களுக்கு கடவுள் பட்டம் கட்ட நினைத்தால்....

நாங்கள் கடுமையான காட்டுமிராண்டி பயங்கரவாதிகளாய் இருப்பதில் எங்களுக்கு சந்தோசமே...!

எங்கள் உணர்வுகளைக் கொட்டி கட்டுரை வடிக்கிறோம். அதற்கு கருத்துரை சொல்லக் கூட நீங்கள் முகமூடி இட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதை என்னவென்று சொல்வது...????
dheva said…
வைகை , ராஜ நடராஜன் & டிராகன் @

நன்றிகள்...!
Kumar said…
Mr. baleno... அப்ப இந்திய அமைதி படை இலங்கையில் நடத்திய கோர தாண்டவத்துக்கு என்னங்க பேரு சத்தியா கிரகமா??.. நம்மள அழிக்க வெளிய இருந்து யாரும் வர வேண்டாம் நாமலே போதும்...
baleno said…
ஐயா தேவா,
புலிகள் கடுமையான காட்டுமிராண்டி பயங்கரவாதிகள் என்பது உலகிற்கே தெரிந்த விடயம்.
baleno said…
Dheva said...எங்கள் உணர்வுகளைக் கொட்டி கட்டுரை வடிக்கிறோம். அதற்கு கருத்துரை சொல்லக் கூட நீங்கள் முகமூடி இட்டு வரவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருப்பதை என்னவென்று சொல்வது...????
அப்படியான துர்ப்பாக்கிய நிலையை ஏற்படுத்தியது LTTE பயங்கரவாதம் தான்.பிரான்சில் சிறிசபாரத்தினம் என்ற பத்திரிக்கையாளரை படுகொலை செய்த புலிகளின் காட்டுமிராண்டிதனம் உங்களுக்கு தெரியாதோ.

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...