Skip to main content

ராஜபக்சே என்னும் மிருகமும் திட்டமிட்ட இன அழிப்பும்...!
























உறங்காத இரவாக கடந்த இரவு அமைந்து போனதில் எனக்கு யாதொரு வருத்தமுமில்லை. எரிச்சலான கண்களை கடந்து உள்ளுக்குள் பரவி நிற்கும் நெருப்பின் வெம்மையில் எங்கணம் வரும் உறக்கம்...?

துபாய் நேரப்படி 2:55 அதிகாலைக்கு சானல் 4ன் வீடியோ காட்சிகளுக்கு விழிகளை கொடுத்து விட்டு சொல்ல முடியாத வார்த்தைகளோடு இதோ என் ஆதங்கத்தை எழுத்தாக்க வந்திருக்கிறேன்....! ஆமாம் சாமானியத் தமிழனாகிய என்னைப் போல எத்தனையோ பேர்கள் தங்களின் ஆதங்கங்களை, வலிகளை கண்ணீராகவும், கூக்குரலாகவும், எழுத்துகளாகவும், நீண்ட நெடிய மெளனங்களாகவும், சித்த பிரமை பிடித்தவர்களாக உலகின் எல்லா மூலைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்....

ஜனித்து விழுந்த பொழுதில் 'அம்மா....' என்று கத்திய தாயின் கூக்குரலை கேட்டுக் கொண்டே " ங்ங்கா...! என்று வீறிட்டு...ம்ம்மா என்று என் தாய் மொழியில் சப்தமிட்டு இந்த உலகோடு பந்தப்படுத்திக் கொண்டவர்கள் கொண்டவர்கள் நாம். உயிரோடு சேர்ந்து உச்சரிப்பாக உள்ளுக்குள் உணர்வாய் ஊறிப்போன ஒப்பற்ற ஒரு மொழி பேசும் மிக நீண்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம்....

இதோ நம் சொந்த இனம் காப்பாற்ற வக்குகள் அற்று கொடும் அரக்கர்களால் நம் பக்கத்து தேசத்தில் கொன்றழிக்கப்பட்ட போது, அதற்கு நாம் சார்ந்திருக்கும் இந்தியா என்னும் தேசமும் துணை நின்ற போது, கபட குள்ள நரி மூளைகள் கொண்ட பிறப்பில் குற்றமிருக்கும் தமிழர்கள் என்ற பெயரிட்டுக் கொண்ட பேடிகள் எல்லாம் அதிகாரத்திலும் அரசியல் போகத்திலும் இருந்து கொண்டு கொடியவர்களுக்கு துணை போன போது....

ஊமைகளாய் எல்லாவற்றையும் வேடிக்கைப் பார்க்கும் வெகு ஜன மக்களில் நாமும் இருந்தோம். ஒப்பற்ற வீரம் செறிந்த மானுடக் கூட்டத்தின் உரிமைப் போரட்டத்தை ஓநாய்கள் எல்லாம் ஒன்று கூடி தோற்கடித்ததை காலத்தோடு சேர்ந்து நாமும் சாட்சியாய் கண்டு கொண்டோம். ஒரு உயிர் அல்ல, இரு உயிர் அல்ல... லட்சோப லட்சம் உயிர்கள் ஈழ மண்ணிலே அடித்து நொறுக்கி துவம்சம் செய்யப்பட்டு, பச்சிளம் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கொன்றழிக்கப்பட்டதை கனத்த இதயத்தோடு நம் மரணம் கடந்தும் நமது நினைவுகள் ஏந்திதான் செல்லும்....

எம் மக்களை எல்லாம் சண்டையில்லாத பகுதி என்று திட்டமிட்டு ஒரிடத்தில் குவித்து, கொத்துக் கொத்தாய் கொன்றழித்திருக்கும் சிங்களவனின் இனமே ஜென்ம ஜென்மாய் இனி சபிக்கப்பட்ட ஒரு இனமாய் போகட்டும். அவனுக்கு உடன் துணை நின்றோர், மற்றும் ஈழ மக்களை வைத்து அரசியல் செய்து எச்சில் சோறு தின்று சுகபோகங்களை பதவிகளின் மூலம் அனுபவிக்கலாம் என்று கணக்குப் போடும் தமிழக, இந்திய அரசியல்வாதிகள் அத்தனை பேரும் நாசமாய் போகட்டும்....

அழுது அழுது கண்ணீர் வரண்டு போய் விட்டது உறவுகளே...! இனி நீதியைக் கேட்டு நாம் யாரிடமும் செல்ல வேண்டியது இல்லை. இந்தியாவில் எவன் காலில் விழுந்து கதறினாலும் அவன் ஈழத்தை வைத்தும், ஈழ மக்களின் துன்பங்களை வைத்தும் அரசியல் செய்யும் பிச்சைக்கார பிழைப்பை செய்யத்தான் பார்க்கிறான். சானல் 4ன் வீடியோ காட்சிகள் யாரோ ஒரு வெள்ளைக்காரனால் எடுக்கப்பட்டு நியாயங்களைப் பற்றி பேசுகிறது ஆனால் நான் சார்ந்திருக்கும் இந்திய தேசத்தின் அதிகாரவர்க்கமோ....கொலைகாரனோடு உறவு கொண்டாடிக் கொண்டு இரக்கமற்ற அரக்க மனிதர்களாக நடந்து கொள்கிறது.

இந்திய தேசத்தின் பிராதான மந்திரிகளான, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் வீட்டில் நடக்கும் எதிர்மறை நிகழ்வுகள் அவர்களுக்கு வலி என்றால் என்ன என்று கோரமாய் பாடம் புகட்டட்டும். ராஜபக்சேயும், கோத்தபயேவும் எவ்வளவு கோரமாய் மடிகிறார்கள் என்பதை சொல்ல முடியாத வியாதிகளையும், வலிகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொண்டு வந்தேறி சோனியா பிராட்டியார் பார்த்து ரசிக்கட்டும்....

ஈழ விடுதலைப் போரை பயங்கரவாதிகளின் போர் என்று வர்ணிக்கும் நாக்குகளுக்கு சொந்தக்காரர்கள் எல்லாம் சத்தியத்தை அறிய மறந்து பித்தர்களாய் தெருவெங்கும் திரியட்டும். அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகளோடு களத்தில் நின்று கடைசி வரை போராடிய ஒரு மாவீரன் பேசும் மொழியைப் பேசும் பேறு பெற்றேன் என்பதிலும் அவன் பிறந்த ஒரு இனத்தின் விழுதாய் நானும் நீங்களும் இருக்கிறோம் என்பதிலும் நாம் பெருமிதப்பட்டுக் கொள்ளலாம். ஒரு தலைவன், மக்களோடு மக்களாக களத்தில் நின்று கடைசி வரைபோராடியிருக்கிறான் என்றால் அவனது பராக்கிரமம் எப்படியானது? வீரம் எத்தகையது....?

அவனா(ரா) பயங்கரவாதி...?

பிரபாகரன் என்ற மாவீரனோடு சேர்ந்து ஒட்டு மொத்த தமிழினமும் வரலாற்றில் நின்று விட்டது. இந்த உலகில் கடைசித் தமிழன் என்று ஒருவன் இருக்கும் வரை அவன் கூடவே பிரபாகரன் என்னும் பெயரும் எப்போதும் நிலைத்து நிற்கும். தமிழன் என்று சொன்னால் அனிச்சையாக எல்லோருக்கும் பிரபாகரன் என்ற பெயரும் கூடவே நினைவுக்கு வரத்தான் செய்யும்.

அன்பான தமிழக அரசியல்வாதிகளே, அரசியல் கட்சிகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களே.....! மத்திய அரசிடம் போய் இனியும் பிச்சை கேட்காதீர்கள். டர்பனுக்குள் தலையையும் மனித நேயத்தையும் சேர்த்தே மறைத்துக் கொண்டு பதவிக்காய் பிச்சைப் பிழைப்பு பிழைக்கும் மன்மோகன் சிங்குகளிடமும், வந்தேறி சோனியாவிடமும் இனி கையேந்தி நிற்காதீர்கள்....! இனியாவது சுயமரியாதையான தமிழர்களுக்கான அரசியலை நேர்மையாய் முன்னெடுத்துச் செல்லுங்கள்...!

உலகமே மொழியற்று திரிந்த போது அறிஞர்கள் கூட்டத்தைக் கொண்டு முச்சங்கம் வைத்து நடத்திய பெருங்கூட்டம் நாம்.. இன்று பிச்சைக்காரர்களாய் பாரளுமன்றத்தில் கூச்சலிடுகிறோம்...கேட்பார் யாருமுண்டா?

பனிரெண்டு வயது பாலகனான தம்பி பாலச்சந்திரனை துளைத்த துப்பாக்கி தோட்டாக்களுக்கு கூட வாயிருந்தால் கதறி அழுதிருக்கும்...! அவன் நம் தமிழ்ப் பிள்ளை அல்லவா? அவன் மட்டுமா எத்தனையோ ஆயிரக்கணக்கான சிறார்கள் வெளியேயும், கருவிலேயும் வைத்து அழிக்கப்பட்டு இருக்கிறார்களே....???!

ஈழம் என்பது வேறு நாட்டவர் பிரச்சினை என்று கூறும் மாண்பு கெட்ட போக்கினை விட்டு விட்டு அது தமிழர் பிரச்சினை, அது நமது தொப்புள் கொடி உறவுகளின் பிரச்சினை என்ற ரீதியில் இனியாவது பார்ப்பீர்களா?

சர்வதேச சமுதாயத்தினை கடைசிவரை உள்ளே விடாமலேயே, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் தமிழர்களை மொத்தமாக செல்லவிட்டு கூண்டோடு அழித்துக் கொன்றிருக்கும் இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டிருக்கும் இந்திய பேரரசில் எதிர்காலத்தில் எவ்வளவு வலிமையான பங்கெடுப்பை தமிழகம் தன்னிச்சையாக எடுக்க முடியும் என்று பார்த்து பார்த்து காய் நகர்த்தவேண்டியதுதான் தமிழக அரசியல் கட்சிகளின் செயல்பாடாய் இருக்க வேண்டும்.

தமிழர் பிரச்சினையை மையப்படுத்தி ஒட்டு மொத்த தமிழர்களின் குரலும் எந்த கூட்டு அரசியலும் இன்றி தன்னிச்சையாக பாரளுமன்றத்தில் இடிமுழக்கமாய் முழங்க வேண்டும். அத்தகைய கட்சிகளை தமிழர்கள் அடையாளம் கண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆளும் இத்தாலிய காங்கிரஸ் இந்திய தேசம் என்ற போர்வயீல் இன்று தமிழர்களைக் கிள்ளுக் கீரையாகத்தான் நினைக்கிறது. அதற்கு இராமேஸ்வரத்தில் கொல்லப்பட்ட மீனவர்களைப் பற்றியும் கவலை இல்லை, ஈழத்தில் கொல்லப்பட்ட லட்சோப லட்சம் மக்களைப் பற்றியும் கவலை இல்லை....காரணம் காலம் காலமாக கூழைக் கும்பிடு போட்டு கூட்டணி அரசியலுக்குள் குடும்பம் நடத்தும் கோழைகளாக அவர்கள் நம்மைப் பார்த்ததுதான்...

இனி....

ஈழத்தில் நடத்தப்பட்ட சமூக அநீதிகளைப்பற்றி காங்கிரஸ் அரசிடம் மன்றாடுவதையும், கெஞ்சுவதையும் விட்டு விடத்தான் வேண்டும். ஈவு இரக்கமற்றவர்களிடம் போய் கருணையைப் பற்றி பேசி பிரயோசனம் இல்லை....!காங்கிரஸ் இலலத ஒரு அரசு இந்தியாவை ஆள்வதை நிர்ணயம் செய்ய வேண்டிய தலையாய கடமை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் இப்படித்தான் சிந்திக்க வேண்டும்.

இன்னமும் சர்வதேச சமுதாயத்தில் மனித நேயம் உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள், சானல் 4 போன்று இன்னும் எத்தனையோ மனித நேயம் கொண்ட மனிதர்கள் புற்றீசல் போல வந்து கொண்டே இருப்ப்பார்கள், அநீதிக்காய் சில நாடுகள் கூட்டு சேரும் போது நீதிக்காய் கூட்டு பல நாடுகள் ஒன்று சேரும்.....அதன் நீட்சியில்

தமிழீழத் தாயகத்தின் ஒப்பற்ற விடியல் மலரும்...!

கண்ணீரினைத் துடைத்தெறிந்து விட்டு அறிவுப் புரட்சி செய்யவேண்டிய காலம் இது. சிங்களப் பொருட்களை எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் நுகரக் கூடாது. ஒருங்கிணைந்த இலங்கையே சிறந்தது என்று எவன் கூறிக் கொண்டு வாக்குகள் கேட்டு வந்தாலும், தமிழர்களுக்கான சிறந்த வாழ்க்கையை ஒருங்கிணைந்த இலங்கையில் அமைத்துக் கொடுப்போம் என்று அவன் கூறினாலும் மெளனமாய் மனதுக்குள் அவனை காறி உமிழ்ந்து விட்டு உங்களின் அடுத்த வேலையைப் பார்க்க சென்று விடுங்கள்....

சொந்த நாட்டின் மக்களை கொன்று குவித்தவர்கள், நமது அக்கா, தங்கை, அம்மாக்களின் கற்பழித்த கொடும் நாய்கள், நமதுபிள்ளைகளை கொன்றழித்த மாபாவிகள் ஒருக்காலமும் நமது மக்களுக்கு சம உரிமையான வாழ்க்கையை கொடுக்கமாட்டார்கள் என்பதை தெளிவாக உணருங்கள்...!

இந்தகட்டுரையின் மூலம் வேறு ஒரு திட மனோநிலைக்கு நாம் சென்றாக வேண்டும் என்ற சிறு நெருப்பினை பற்ற வைத்திருக்கிறேன்....! இனி நாம் செய்யவேண்டியது எல்லாம்....

தமிழர்களுக்கான, தமிழர் நலம் பேண்டும் உண்மையான ஒரு அரசியல் கட்சியின் பின் திரளுவதும்.....காங்கிரஸ் என்னும் ஒரு இயக்கத்தை தமிழகத்திலிருந்து வேறோடு அழித்தொழிப்பதும்தான்....அதை எம் இளைய சமுதாயம் சர்வ நிச்சயமாய் செய்து முடிக்கும் என்ற நம்பிக்கையை ஏந்திய படி கனத்த இதயத்தோடு கட்டுரையை நிறைவு செய்கிறேன்.

" கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே
பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்! "



தேவா. சு

Comments

தேவா... இன்னும் முழுமையைப் படிக்கவில்லை....

//
இந்திய தேசத்தின் பிராதான மந்திரிகளான, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, எஸ்.எம். கிருஷ்ணா, மற்றும் ப.சிதம்பரம் போன்றவர்கள் வீட்டில் விழும் இழவுகள் அவர்களுக்கு வலி என்றால் என்ன என்று கோரமாய் பாடம் புகட்டட்டும்.////

இந்த சொற்றொடரின் வீரியம் குறைக்கவும் அல்லது மாற்றவும்....

-நட்புடன்,
வெளங்காதவன்.
Unknown said…
நெஞ்சு பொறுக்குதில்லையே...
பிறழ்கிறது மனம்....
அரசியல் சதிகளுக்கு, காணிக்கை எம்மனோர் உடல்கள்!!!!
தேவா, வறண்டுபோன விழியோரம் ஒரு துளி நீரை வரவழைத்தே விட்டாய்!!!
உன் போன்றோர் உள்ளவரை, தமிழ் இனி மெல்லத் தழைக்கும்.. தமிழினமும்...
sali said…
தவறாக நினைக்க வேண்டாம்.போர் நடந்த சமயத்தில் காங்கிரஸ் அல்லாது மற்ற கட்சிகள் முக்கியமாக பிஜேபி ஆட்சியில் இருந்து இருந்தால் அவர்களுடைய நிலைப்பாடு இப்படி தான் இருந்து இருக்கும்.நாம் இலங்கைக்கு உதவி செய்ய வில்லையென்றால் எங்கே சீனா அல்லது பாகிஸ்தான் இலங்கைக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் இலங்கையில் கால் பதிந்து விடுவனோ என்ற அச்சம் தான் நம்முடைய உதவிக்கு காரணம்.அதற்காக இந்த இன அழிவை நாம் ஆதரிக்க முடியாது.நான் சொல்ல வருவது எந்த ஒரு தேசிய கட்சிக்கும் தமிழர்கள் என்றால் அக்கறை கிடையாது.மற்ற கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் இது தான் நடந்து இருக்கும்.நாம் கண்டிக்க வேன்டியது ழதமிழர்களை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் அரசியல் வாதிகளை
Bibiliobibuli said…
தேவா, கட்டுரையை முழுதாய் படிக்க முடியவில்லை. இந்த ஆவணக்காணொளி பார்த்த தாக்கம் எனக்குள் இன்னும் தீரவில்லை. இன்னும் உள்ளுக்குள் உடைந்துகொண்டே இருக்கிறது.....

அப்புறம், புலிகளிடமிருந்து கருணாவை பிரித்து கூட்டுச்சதி செய்து ஈழத்தமிழர்களை கொன்று குவிக்க ராஜபக்‌ஷேக்களுக்கு துணைபோனவர்கள் விளம்பரத்துக்கும் உங்கள் தளத்தில் ஒரு இடம் ஒதுக்கி கொடுங்கள்.
Unknown said…
என்ன சொல்வது...இந்தியனாக இருந்து இதற்க்காக தலை குனிகிறேன்!
dheva said…
ரதி அக்கா...@ தேவையற்ற பிதற்றல்களை எடுத்துவிட்டேன் அக்கா...!

உணர்விற்கு நன்றிகள்!
ஹேமா said…
இன்று உங்கள் உணர்வுக்கு நன்றி மட்டுமே சொல்ல மட்டுமே தென்பு இருக்கிறது தேவா !
//////" கொலை வாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!
குகைவாழ் ஒரு புலியே!
உயர் குணமேவிய தமிழா!
தலையாகிய அறமே
புரிசரி நீதி உதவுவாய்! சமமே
பொருள் சனநாயகம் எனவே
முர சறைவாய்! " /////////


இதுக்கு என்னய்யா பதில் சொல்ல போற

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

அவள்....!

அந்த கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் மாணவன் சுரேஷ். கல்லூரியில் சேர்ந்த ஆரம்பத்திலிருந்த கூச்சம் எல்லாம் போய் விட்டது அவனுக்கு. இப்பொதைய நாட்கள் நண்பர்கள், பாடம், கல்லூரி என்று கலை கட்ட ஆரம்பித்து விட்டது. +2 முடித்து கல்லூரியில் சேரும் எல்லா மாணவர்களுக்குமே வாழ்வின் அடுத்த நிலையான கல்லூரி வாழ்க்கை ஒரு சந்தோசமான விசயம்தான். வாழ்வின் அடுத்த கட்டம் ஒரு பள்ளி என்ற கட்டுண்ட நிலையில் இருந்து கொஞ்சம் சுதந்திரமான மரியாதை கிடைக்க கூடிய தான் பட்டம் பயில்கிறோம் என்ற ஒரு மமதையுடன் கூடிய சந்தோசம் என்று களை கட்டும் நாட்கள் அவை. அப்போதுதான் தலை முடியின் அலங்காரம் மாறும். சட்டை பேண்டின் விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு சில நோட்டு புத்தகங்கள் கூடியிருக்கும் நண்பர்கள் கூட்டம் என்றும் ஒரு வித மிடுக்கு இருக்கும் அதுவும் இருபாலர் பயிலும் கல்லூரி என்றால் சொல்லவே தேவையில்லை. மேலே சொன்ன எல்லாம் இரு மடங்கு ஆகும். இந்த வாலிப களேபரத்தில் கல்லூரியும் படிக்கும் பாடமும் மைக்ரோ லெவலிலும் இன்ன பிற விசயங்கள் மேக்ரோ லெவலிலும் இருக்கும். இப்படிபட்ட ஒரு நியதிக்கு சுரேஷ் மட்டும் என்ன விதிவிலக்கா? கல்லூரி மாணவன் என...