நொடிக்கு ஒரு முறை என்னைப் பார்.... கவிதைகளென்ற பெயரில் ஏதேனும் கிறுக்கு.... நிறைய பேசு... அவ்வப்போது மெளனமாயிரு... சண்டையிடு... கோபத்தில் கண்கள் சிவந்து போ... காற்றில் கலையும் கேசம் சரி செய்... நான் கடந்து போகையில் என்னை கவனிக்காதே... தூரமாய் சென்று திரும்பிப் பார்... சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்து போ... எதிர்பாராமல் எதிரே வா... எப்போதாவது புன்னகை செய்.. உன் தோழிகளோடு உரக்கப் பேசு... சப்தமாய் சிரி.... சோகமாயிரு... சந்தோசமாயிரு... பிடித்த புத்தங்களை நான் பார்க்கும் படி சுமந்து போ... பிடித்த பாடலை முணு முணுப்பாகவாவது பாடு.... மழையில் நனை... குளிரில் நடுங்கு... வெயிலை திட்டு.... வராத பேருந்துக்காய் முகம் சுழி... மணிக்கட்டு கடிகாரத்தை முறைத்துப் பார்... ஓவியமாய் தலை வாரிக் கொள்... கவிதையாய் பூச்சூடிக் கொள்.. ...... ...... ...... ........ எல்லாம் செய்து கொள்... என்னை தூரமாய் நின்று.... உன்னைப் பார்க்க மட்டும் விடு.... தேவா. S
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....