Skip to main content

தேம்பித் திரியும்.. வார்த்தைகள்...!













இந்தக் கணம் எழுதிச் செல்லும்
சுவாரஸ்யமான நினைவுகளின்
எல்லா பக்கங்களிலும்
உன் பெயரே எழுதப்பட்டிருக்கிறது...!

விடிவதற்கு முன்பாகவே
எழுந்து விடும் உன் நினைவுகளை
ஒரு குழந்தையாய் என் நெஞ்சில்
சுமந்து கொண்டுதான்
என் தினசரிகளைக் கடக்கிறேன்...!

யாரோடும் பேசப் பிடிக்கமால்
மீண்டும் மீண்டும் உன் ஞாபகங்களோடு
நான் பேசிப் பேசியே
கழிந்து கொண்டிருக்கும் என் பொழுதுகள்
உன்னால்தான் நிரம்பி வழிகின்றன...!

கைகோர்த்து நடக்கும் காதலர்களின்
கைவிரல்களாய் நானும் நீயுமே
இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்...
யாரோ யாருக்கோ தலை கோத....
கோதும் தலை எனதாகவும்
விரல்கள் உனதாகவுமே
கற்பிதங்கள் கொள்கிறேன்..!

தாயின் முந்தானை பிடித்து...
அலையும் குழந்தையாய்...
உன் நினைவுகளை  பற்றிக் கொண்டு
திரியும் என் காதலின் மொழியற்ற ...
தேம்பல்களை நான் கவிதைகளென்று
சொல்வதும்  உன்னால்தானே...?!

எப்போதும் சுவாசிப்பது போல
உன்னை நேசிக்கும் ஒருவனிடம்
என் மீதான உன் காதல் எப்படியானது
என்ற உன் கேள்விகான பதிலை
எழுதத் தெரியாமல்....
இதோ ஏதேதோ கிறுக்கிக் கொண்டிருக்கிறேன்...
எப்படி முடிப்பது என்று தெரியாமல்...


தேவா. S



Comments

Shankar M said…
நினைவுகள் புத்தகம் எனத் தொடங்கியது அருமை... தினசரிகளைக் கடக்கும் விதம் பொருள் பல அடங்கியது... ரசித்தேன்
நினைவுகளில் மட்டுமல்ல, பொழுதுகளிலும் நீ என்று பேசாமல் இருப்பதற்கு காரணம் சொன்னது அழகு! பார்க்கும் இடங்களிலெல்லாம் நபாரதியை நினைவூட்டுவதை என்னென்பேன்...கவிதையின் காரணியை கோடிட்டு காட்டிய வரிகள் அற்புதம்! கிறுக்கலில் பதில் சொல்லிவிட்டாய்... உன் மீதான என் காதல் முடிவற்றது என்பதை 'எப்படி முடிப்பது என்று தெரியவில்லை' என்று கூறிய விதம் வெறும் கூற்றாய் படவில்லை.. தொடரட்டும் சுவாசம்!!
/கைகோர்த்து நடக்கும் காதலர்களின்
கைவிரல்களாய் நானும் நீயுமே
இருப்பதாய் எனக்குள் தோன்றுவதும்/

வித்தியாசமான சிந்தனை. அழகான கவிதை..
semmalai akash said…
சூப்பர், அருமையான நினைவுகள்.
ஆத்மா said…
ரசித்தேன்..
அருமையான வரிகள்
இனிய நினைவுகள் அருமை...
காதல் வந்தாலே தாலாட்டும் நினைவுகளும் தலை கோதும் விரல்களென வாழ்க்கை சுவாரசியம் தான் உங்கள் எழுத்தை போல அழகாய் நடை பயிலுது உங்கள் கவிதை எண்கள் மனங்களில் வாழ்த்துக்கள்

Popular posts from this blog

ஓரிதழ்ப்பூ– சமகாலத்திலிருந்து விடுபடுதல்...

பல கதாபாத்திரங்களை உருவாக்கிக் கொண்டே செல்கிறார். பாத்திரங்களின் மூலம் நாவல் விரிவடைந்த்து கொண்டே செல்கிறது. திருவண்ணமாலையும் அதனை சுற்றியிருக்கும் இடங்களும் நாவலின் படிமங்கள். அய்யனாரால் அதை அனாசயமாக   அழுத்தம் திருத்தமாக எழுத முடிந்திருக்கிறது. அவர் அந்த மண்ணின் மைந்தன். கட்டடற்ற பெருவெளியில் பல்கிப் பெருகும் பாத்திரப்படைப்புகளை சுதந்திரமாக உலாவுகிறார்கள். மாய எதார்த்தம், புனைவு, அபுனைவு, ஆன்மீகம், மது, மாது என்று சீறிப்பாயும் கதை ஷிக்-ஷாக் முறையில் முன்னால் சென்று பின்னால் வந்து போவது வாசிப்பவனை சுவாரஸ்யமாக்கும் யுத்தி. இந்த குறு நாவலை எப்படி வாசிக்கப் போகிறேன் என்ற சவால் என்னிடமிருந்தது, ஏனென்றால் சமீபமாய் வெறும் வாசகனாய் மட்டும் எந்த படைப்பையும் என்னால் கடக்க முடியவில்லை. ஸ்கெலெட்டன் ஆஃப் த நாவல் எனப்படும் ஒரு   எப்படி கட்டியமைக்கப்பட்டது என்று ஆராயும் கண்ணோட்டம் எந்த ஒரு படைப்பையும் சுதந்த்திரமாய் என்னை வாசிக்க விடுவதில்லை. மேலும் யுத்திகளை அறியும் ஒரு பயிற்சியாகவும் வாசிப்பு எனக்கு மாறிவிடுகிறது அதனால் ஆசுவாசப்படுத்திக் கொண்டே படிக்க வேண்டிய ஒரு மனோநிலைய...

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... பதிவுத் தொடர் V

சில சமயங்களில் நமக்குள் ஏற்படும் அதிர்வுகளுக்கு ஏற்ற மாதிரிதான் எண்ணங்களும் செயல்களும் ஏற்படுகிறது. ஒருவித மனோ நிலையில் இன்னொன்றை செய்ய முடியாது இது ஒரு பொதுவான எல்லோரும் அறிந்த உண்மை. அதனால் பல நேரங்களில் அலட்டிக் கொள்ளாமல் காத்திருக்கவேண்டியிருக்கிறது. எது எப்படி இருந்தாலும் நியதிகளுக்குள் மாட்டிக்கொண்டு அதனை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விளைச்சல் போலத்தான் எழுத்துக்களும். நன்றாக விளையலாம்.. இல்லை விளையாலும் போகலாம். ஒரு காரணி சார்ந்ததல்ல எண்ணங்களும் வெளிப்பாடுகளும் வரும் போது பிடித்துக் கொள்வோம் மழை போல.... வாங்க...ரொம்ப நாளா....ஸ்டில் பண்ணி இருக்க.. நம்ம சூப்பர் ஸ்டார் தொடருக்குள் நுழைவோம்..... இதுவரை பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV இனி.... மீனா அக்கா சொன்னது பொய்யாக போகட்டும் கடவுளே என்று வேண்டிக்கொண்டு அவுங்க கொடுத்த தினத்தந்தி பேப்பரை வாங்கி படித்த எனக்கு தலை சுற்றியது..."அடுத்த வாரிசு" தான் ரஜினியின் கடைசிப்படம் என்றும் இனி மேல் அவர் நடிக்க மாட்டார் சாமியார் ஆகப்போகிறார் என்ற தினத்தந்தியின் வரிகளும், சுற்றி நின்று சிரித்தவர்களின் சிரிப்புகளும...

அப்பா...!

ஏதேதோ எண்ணங்கள் திசைகளை மாற்றிப்போட்டு எங்கோ இழுத்துச் செல்கிறது என்னை.....சுற்றுப்புறமும் சூழலும் மாறி ஏதோ ஒரு நியதிக்கு வாழ்வினை பழக்கப்படுத்திக் கொண்டு நகரும் இந்த வேளையிலும் என்னுள்ளே ஏதோ ஒரு வார்ப்பு வீரியமாய் என்னை வழி நடத்திக் கொண்டிருக்கிறது. அந்த வார்ப்பின் மூலம் என்ன? எல்லா விதமான வேக நிமிடங்களிலும் என்னை நிதானிக்கச் சொல்கிறது. மூர்க்கமாய் கோபம் வரும் நிமிடங்களில் என்னை தடுத்து நிறுத்தி யோசிக்கச் செய்கிறது. பெருமைகள் பேசும் மனதோடு சேர்ந்தே வந்து நான் கவனியாது இருக்கும் போது எல்லாம் என்னிடம் சாந்தத்தையும் எளிமையையும் போதித்துக் கொண்டே இருக்கிறது......... 100 ரூபாய் உன்னிடம் இருந்தால் அதுவும் சலவை நோட்டாக இருந்தால் அதை பகட்டாக எடுத்து பத்து பேர் முன்னால் செலவு செய்யாதே... என்று அந்த குரல் எனக்கு படித்து கொடுத்திருக்கிறது. காரணம் என்ன என்று கேட்டதில்லை.......முதலாவது உன்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது என்பது அடுத்தவரிடம் பகட்டாக காட்டவேண்டிய அவசியம் இல்லை, இரண்டாவதாக பணம் இருக்கிறது உன்னிடம் என்று தெரிந்தால் உன் பகட்டு இயலாமையில் இருப்பவரை மேலும் காயப்படுத்தும் மேலும் பணம் என்பது ந...