நவீனத்தின் நிழலில் அமர்ந்து கொண்டு நான் ஆன்மீகம் பேசுவது கொஞ்சம் பிற்போக்காகத்தான் இருக்கும். அறிவியலை அடையாளமாக்கிக் கொண்டு, இருப்பதை இல்லை என்று மறுப்பவர்களுக்கு கடவுள் என்ற பதமும், ஆன்மா என்ற சொல்லும் மிகுந்த கேலிக்குரியதாய் கூடத் தெரியலாம். எந்த இடத்தில் ஆன்மீகம் பாமரனைச் சென்றடைய யுத்திகள் செய்ததோ அந்த யுத்திகளைக் கொண்டு மேலேறி வராமல் அந்த யுத்திகளுக்கு யுத்திகள் செய்து மூடநம்பிக்கைகளை தங்களின் பைத்தியக்காரத்தனத்தில் இருந்து மேலேற்றிக் கொண்டு வந்து விட்டார்கள் மிகைப்பட்ட மனிதர்கள். மூடநம்பிக்கைகளும், பகட்டு பக்திகள் மட்டுமே புறத்தில் தெரிய.... ஆன்மீகம் என்ற சொல் பகுத்தறிவுக்கு வெகுதூரமாய் போய்விட்டது...! கடவுளை மறுப்பது பகுத்தறிவு என்று சிந்தனையின் உச்சத்தில் மனிதனின் மனமொரு செய்தியைப் பகிர அதையே அறிவின் உச்சம் என்று நம்பி விட்டான் ஆனால் கடவுள் என்றால் என்ன என்று கூடுதல் கேள்வியொன்றை எழுப்பி மறுப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஆராய இருப்பதெல்லாம் இருப்பதாகிப் போக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயத்தை நாம் எட்டிப்பிடிக்க முடியும். இந்த எட்டிப்பிடித்தலை நான் ஆன்
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....