Skip to main content

அடக்க நினைத்த அரசு.....கொதித்து எழுந்த மாணவர்கள்! தொடரும் போராட்டம்...



இதே வேலையை கருணாநிதி செய்திருந்தால், தமிழினத் துரோகி என்று மூலைக்கு மூலை நின்று முன்னூறு முச்சந்திப்  போராளிகள் கொக்கரித்து இருப்பார்கள்.  இப்போது ஜெயலலிதா செய்ததால்  சட்டம் ஒழுங்கை சீராக பார்த்துக் கொள்ள சரியான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்று ஒரு சாராரும்,  இல்லை.. இல்லை மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தினால் மட்டுமே அவர் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறார் என்று இன்னொரு சாராரும்....கருத்துச் சொல்வதைப் பார்த்தால்..

தமிழனின் சூடு சொரணை எல்லாம் இளிச்சவாயர்களைப் பார்த்துதான் புலிப்பாய்ச்சல் பாயுமோ என்ற ஐயம் கூட எனக்குத் தோன்றுகிறது. கருத்துப் போராளிகள் பொதுவெளியிலும், இணையத்திலும் இப்படி பம்முகிறார்கள் என்றால் ஊடகங்கள் கூட தங்களின் கண்டனக்குரலை வலுவாக எழுப்பாமல்...கள்ள மெளனம் சாதிக்கின்றன.

என்ன அநியாயம் இது...?

ஈழத்தில் அநீதி நடந்திருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளும் முதல்வர் ராஜபக்சேயை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கச் சொல்கிறார். அமெரிக்காவின் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று அவரது கட்சி எம்பிக்கள் பாரளுமன்றத்தில் போர்க்கொடி உயர்த்துகின்றனர். தமிழகத்துக்கு இலங்கையர்கள் விளையாட வருவார்கள் என்று சொல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தமாட்டேன் என்றும் சொல்லி விட்டார்...., இப்படி எல்லா விதத்திலும் ஈழப்பிரச்சினையில் தமிழக முதல்வரின் நிலைப்பாடு, சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த தம்பிகளின் நிலைப்பாட்டோடு ஒத்துதானே போகின்றது...?

குறைந்த பட்சம் யாரேனும் ஒரு அமைச்சரை அனுப்பி நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்ற ரீதியில் வாக்குறுதியைக் கொடுத்து சூழலை சரி செய்யாமல்.....பாசிச பற்களைக் கொண்டு போராடிய இளையர்களை கடித்துக் குதறியது எந்த விதத்தில் நியாயம்..? உண்ணாவிரதம் என்பது மகாத்மா காந்தியடிகள் வகுத்துக் கொடுத்த சத்திய வழிமுறை, அதை ஆங்கிலேயர்களே மிகக்கண்ணியமாக கருதி மகாத்மாவின் போராட்டங்களை ஏற்றுக் கொள்ளவும் செய்தார்கள்....

அந்தப்  புனிதரை தேசப்பிதாவாக கொண்ட நம் தேசத்தில் ஒரு நேர்மையான போராட்டத்தை இப்படித்தான் முரட்டுத்தனமாக காவல்துறையை வைத்து அடக்குவதா? 

ஈழத்தைப் பற்றி பேசியதற்காகவே ஒரு வருடத்திற்கும் மேலாக வைகோவை பொடாவில் அடைத்து வைத்திருந்ததையும் மக்கள் மறக்கவில்லை, ஈழத்தை கடுமையாக எதிர்க்கும் சோ போன்றவர்களோடு முதல்வர் கொண்டிருக்கும் நட்பு எத்தகையது என்பதை யாரும் அறியாமலும் இல்லை....மேலும் இப்போது ஈழ ஆதரவு என்ற உங்களின் குரலின் மூலம் நாதியற்று நின்ற தமிழினத்தின் வாக்குகளை எல்லாம் வசூலித்துதான் அரியணை ஏறினீர்கள் என்பதும் பச்சைப்பிளைக்கு கூடத் தெரியும்

காலம் இப்போது உங்கள் காலடியில் கால்பந்து போல பணிந்து  கிடக்கிறது முதல்வர் அவர்களே!!! உங்கள் கோட்டுக்குள் நிற்கிறது பந்து. 2016 வரையிலும் எந்த திசைக்கு வேண்டுமானாலும் நீங்கள் பந்தை அடித்து விளையாடுங்கள்....

2009 பாரளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு வாக்களித்தால் ஈழத்தில் போர் நிறுத்தப்படுவதோடு இந்தியாவிலும் ஒரு மதச்சார்பற்ற அரசு உருவாகும் என்ற இந்திய கூட்டு மனோபவத்தின் படி ஒவ்வொரு தமிழர்களும் வாக்களித்து எங்களுக்கு நாங்களே வாக்கரிசி போட்டுக் கொண்டதின் விளைவு.....

எங்கள் பிள்ளைகளின் வெற்று உடம்புகளில் சிங்களக் காடையர்களின் துப்பாக்கிக் குண்டுகள் இறங்கின, எமது சகோதரிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானார்கள், இராசாயன குண்டு வீசி பாதுகாப்புப் பகுதியிலேயே பாதுகாப்பாய் சமாதியாக்கப்பட்டன எமது உறவுகளின் உடல்கள், இறந்த உடல்களைப் புணர்ந்தும், புணர்ந்த உடல்களைப் படமெடுத்தும் வெளியிட்டு தனது கோரப்புத்தியை காட்டினான் ஈன சிங்களக் நாய்....

ஒரு விடுதலைப் போராட்டம் உலக நாடுகள் எல்லாம் ஒன்று கூடி நின்று இந்திய தேசத்தின் உதவியோடு மிதித்து நசுக்கி அழிக்கப்பட்டது. .......!!!!! இத்தனைக்கும் பிறகு தாய் தமிழகத்தில் எங்கள் எதிர்ப்பினை காட்டக் கூட கூடாது என்றா எப்படி முதல்வர் அவர்களே.....?!!!!  எப்படி பார்த்தாலும் நேற்றைய போராட்டத்தை கண்டு எதற்காக மற்ற கட்சிகள் பயந்தனவோ அதே பயத்தில்தான் ஆளும் கட்சியான நீங்களும் பயந்திருக்கிறீர்கள்...! ஆமாம்  அமைதியாய் நடந்த போரட்டத்தால் என்ன சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்று பயந்து இப்படியான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டீர்கள்....?

சமூகப் பிரச்சினைகளுக்கு மக்கள் போராடினால் அதுவும் மாணவர்கள் போராடினால்....பிறகு நாம் அரசியல் செய்ய இங்கு என்ன இருக்கிறது என்ற பயம் எல்லோரையும் போல உங்களுக்கும் வந்திருக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம். முத்துக்குமாரன்களும், செங்கொடிகளும் எரிந்து போயிருக்கலாம்....ஆனால் இனி தமிழ்  பிள்ளைகள் யாரும் தங்களை அவ்வளவு சீக்கிரம் கொளுத்திக் கொண்டு மாய்ந்து போய்விட மாட்டார்கள். 

எட்டு பேரின் உண்ணாவிரதத்தை அதிகாரம் கொண்டு தடுக்க முயன்றீர்கள்....இதோ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாடு இன்று..... 8 இப்போது 27 ஆக உயர்ந்திருக்கிறது, 27 என்பது 100 ஆகும்...100 லட்சமாகி கோடிகளில் நின்று கொண்டு புரட்சி முழக்கமிடும்....அப்போது என்ன செய்வீர்கள் என்று பார்க்கலாம்...?


தேவா. S




Comments

Unknown said…
போராட்டக்காரர்களை ஒடுக்குவதில் தான் கருணாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல என்பதை ஏற்கனவே கூடங்குளத்தில் நிரூபித்த பாசிச ஜெயா தற்போது லயோலா கல்லூரி மாணவர்கள் மீது காட்டியுள்ளார். போராட்டங்களை நசுக்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளைக் கடந்து இலக்கை எட்டும்வரை வன்முறையற்ற வழியில் முழுமையான பலத்தினையும் ஒன்றுதிரட்டி மாணவர் சக்தி போராடவேண்டும்.
தேவா.எங்களின் பார்வை.

http://www.etakkumatakku.com/2013/03/blog-post.html
தேவா அண்ணா...

நல்லா எழுதியிருக்கீங்க...
லயோலா மாணவர்கள் பற்ற வைத்த தீ இப்போது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது....
வணக்கம் தேவா! நல்ல பதிவு. உங்கள் ஆதங்கம் புரிகிறது; ஆனால் உண்மை சுடும்!

இந்த போராட்டம் அடங்கிவிடும் அல்லது அடக்கப் பட்டுவிடும்; அதைதான் நான் என் இடுகையில் எழுதி இருந்தேன்.

தமிழர்கள் ஊடகங்கள் சொல்வதை வேத வாக்காக எடுத்துக் கொண்டிருக்கும் வரை தமிழனுக்கு விடிவு கிடையாது...!

மேலும், நமது ஊடங்கங்களின் விமர்சனங்கள் எப்படி எனபது --- யார் தமிழ் நாட்டில் ஆள்கிறார்கள் எனபதைப் பொறுத்ததே..!

என்னால் google transliteration மூலம் தமிழில் தட்டச்சு செய்து நான் விரும்பும் வகையில் நிறைய விவாதம் செய்ய முடியவில்லை.

அகவே, என் தளத்திற்கு வந்து ஒரு சிறப்பு விருந்தினர்கள் பலரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்...!

இதனுடன் சம்பந்தப் பட்ட இடுகை...கீழே..

http://www.nambalki.com/2013/03/3.html

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க....பகிர்வுக்கு மிக்க நன்றி......

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
ஒட்டுமொத்த மாணவ சமுதாயமும் வெகுண்டு எழுந்தால் அரசியல்வாதிகளின் நிலை அதோகதிதான். அதனால் தான் அம்மாவோ அய்யாவோ காவல்துறை கொண்டு ஒடுக்குகிறார்கள்.

Popular posts from this blog

ஆனந்த யாழை மீட்டுகிறாய்.....!

ஒரு அடைமழை நாளில் அதன் சாரலை வாங்கிக் கொண்டு வாசலோரம் அமர்ந்திருக்கையில் கிடக்கும் சுகமொன்றை நீ பிறந்த அன்று உணர்ந்தேன் என் மகளே...! கனவுகளோடு வாழ்க்கையைத் தொடங்கியவனின் மடியில் வந்து விழுந்த கவிதையொன்று என் கண் முன்னே வளர்ந்து நின்று அன்பினால் என்னை ஆளும் விந்தையொன்றை காலம் எனக்கு சமைத்துக் கொடுத்ததடி பெண்ணே உன் வடிவில்..! உன் செல்லக் கோபங்களும், தொடர்ச்சியான கேள்விகளும், ஆளுமையான அதிகாரமும் தீர்ந்தே போகாத நேசமும் என்று இறவனின் கரங்கள் நேரடியாய் என்னை ஆசிர்வதிக்கும் அலாதி சுகத்தை நீதானடி எனக்கு எப்போதும் கொடுத்துக் கொண்டிருக்கிறாய்... ஜடை பின்னுமளவிற்கு உனக்கு முடி வளர்ந்திருந்த தினமொன்றில் நீ கவிதையாய் தலை துவட்டிக் கொண்டிருந்த அந்த கன்னிக்காட்சியை என் விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்தேன்....உன்னை இழுத்து அணைத்து உச்சி முகர்ந்து உனக்கான முதல் ஜடையை ஆசையாய் நான் பின்னிப் பார்க்கையில் ஆசையாய் தாயொருத்தி முதன் முதலாய் தன் குழந்தைக்கு முலை பொறுத்தி பாலூட்டும் சுகமொன்றை உணர்ந்தேன் என் மகளே...! உன் பிஞ்சு விரல்களில் நான் நகம் நறுக்கும் தருணங்களில் எல்...

மகள்...!

காற்றில் பறக்கும் பட்டம் போல நகர்ந்த வாழ்வின் பரிணாமங்களை மொத்தமாய் மாற்றிப் போட்டவள் அவள்.....!!!!!!! என் தெளியாத நினைவுகளை தெளியவைக்கும் வினையூக்கியாய் மொத்த வாழ்வையும் செரித்துப் போட ஜனித்து வந்தவளை வாரிசென்றும், மகளென்றும் வாழ்க்கை சொன்னாலும்..... எனக்கு எப்போதுமே ஒரு குழந்தையாய் அவளைப் பார்க்கத் தோன்றியது இல்லை..... வாழ்க்கை என்னை படமாக வரைந்து அதை அரைகுறையாய் நிறுத்தி வைத்திருந்த பொழுதில் அதை பூரணமாக்க இறைவன் அனுப்பி வைத்த தூரிகை அவள்....! அவள் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை விட கேள்வியின் ஆழங்களில் சிக்கிக் கொண்டு மேலே வர முடியாமல் நான் போராடிய தருணங்கள்தான் அதிகம்..... இரவும் பகலும் ஏன் வரவேண்டும்....? மேகங்கள் கொஞ்சம் தாழத்தான் பறந்தால் என்ன? நாங்களும் விளையாடுவோமே... இறந்தால் நாம் எங்கு போவோம்..... இறந்துதான் போவோம் என்றால் ஏன் டாடி பிறக்க வேண்டும்? கடவுள் இருக்கிறது என்றால் ஏன் டாடி யாரும் பயப்படுவதில்லை.....? வயதுக்கு மீறிய கேள்விகளா? இல்லை.. இந்த வயதில் நாம் குறை அறிவோடு இருந்தோமா என்ற சந்தேகங்களை சர்வ சாதரணாமாய் விதைத்துக் கொண்டே விளையாடச் சென்று விடுவாள் அவள். இங்கே விளையா...

பப்பு....!

காலையிலிருந்து பப்புவிற்கு தலை சுற்றியது, வயிறு குலைந்தது, மயக்கம் வந்தது, ஒரு மாதிரி...சுழற்றி, சுழற்றி அடித்தது....என்ன ஆச்சுன்னு கேக்குறீங்களா? மேலே படிங்க....பாஸ்.... பப்புவுக்கு தினம் ஒரு பதிவு எழுதி போஸ்ட் பண்ணனும் அப்படி இப்படி ஏதேதோ எழுதி போஸ்ட் பண்ணி ஓட்டிக்கிட்டிருந்த அவனுக்கு அன்னிக்கு என்ன எழுதறதுன்னு தெரியல.....ஏதாச்சும் எழுதியாகணுமேன்னு ஒரே டென்சன்.. என்னமோ இவன் கூவி உலகம் விடியப் போறாப்புல ஒரு நினைப்பு..... சொக்கா........பதிவு எழுத ஒரு வலி சொல்ல மாட்டியான்னு கத்தாத குறைதான்....! தூங்கி எழுந்த உடனே அடிக்கிற அலாரத்தை ஆஃப் பண்ணும் போதே நினைச்சான்....அலாரம் டைம்பிக்ஸ் பத்தி எழுதலாமா.....காலையில எப்படி தொந்தரவு கொடுக்குதுன்னு.....ம்ம்ம் சரியா அது பத்தி ஒண்ணும் மேட்டர் கிடைக்காததால அத ஸ்கிப் பண்ணிட்டான்... குளிக்க பாத்ரூம் போனான்...பைப்புல தண்ணி வந்த வேகத்துல நினைச்சான்... சரி தண்ணீர் சேமிப்பை பத்தி எழுதலாமான்னு,,ம்ம்ம்ஹீம்...அது பத்தியும் ஒண்ணும் சரியா தோணலை....! சாப்பிடும் போது நினைச்சான்... இட்லிக்கு தொட்டுக்க ஏத்த சட்னின்னு ஒரு சமையல் குறிப்பாச்சும் போடுவமான்னு ... உடனே அவ...