இது ஒன்றுமில்லை.
இது சந்தோசம்.
இது துக்கம்.
இது வலி.
இது சுகம்.
பேச நிறைய இருக்கிறது;
ஒன்றுமே இல்லை.
கருணையானது;
கொடூரமானது.
நினைவில் நிற்கிறது.
மறந்தும் போகிறது.
இது பொய்.
இது நிஜம்.
இது நம்பிக்கை.
இது துரோகம்.
பேச என்ன இருக்கிறது இது பற்றி? மெளனமாயிருப்பதிலும் அர்த்தமில்லை. புத்தி பேதலித்த நிலையிது. புத்தன் சுவைத்துப் பார்த்த கனி இது. நிரம்பி வெறுமையான பாத்திரம் இது. இது நிறைய கொடுக்கும். இது நிறைய எடுக்கும். இது எல்லாமே. ஆனால் ஒன்றுமே இல்லை.
ஓ....கொடூரமான காலமே....
ஓ.... கருணை மிகு காலமே....
ஓ...அழகே....
ஓ.....கோரமே....
மிருகமே...
தெய்வமே....
ஓ..... காலமே.....................போ......போ...................போ....!
காலமே..... வா..... வா......!
நீ வேண்டாம்...நீ வேண்டும். சிரிக்கிறேன். அழுகிறேன்....பின் பகிர ஏதுமின்றி வெறிக்கிறேன்....!
திரும்பிப் பார்க்க விரும்பவிலை.....கெட் லாஸ்ட்.... அ|ண்ட் கெட் அவுட்.... 2013....!!!!!!!!!!!
தட்ஸ் இட்....!!!!!
#... அப்பா...ஐ லவ் யூ... ஐ லவ் யூ...... ஐ லவ் யூ...#
தேவா சுப்பையா....
Comments