Skip to main content

Posts

கிட...!

ஒத்த கருத்தோடு கூடிய, சித்தாந்தத்தோடு கூடிய ஒருவரை சந்திக்கும் போது கிடைக்கும் உணர்வு பரவசத்தின் உச்சம். ஆமாம் ஒரு புத்தகம் படித்து முடித்த திருப்தியை அப்படி வாசித்து முடித்தவரிடம் பகின்றால்தான் அவருக்கு அது புரியும். சமகாலத்தில் நிகழும் எல்லா முரணான நிகழ்வுகளும் கோபமாய் மட்டும் பதியவில்லை பாடமாயும் மனதில் பதிந்து, ஏன் இப்படி? என்ற கேள்விகளை என்னுள் இரைத்துப் போட்டு குப்பைகளுக்கு நடுவே இருக்கும் மனிதன் போல கேள்விகளுக்கு நடுவே மாட்டிக் கொண்டு விழிக்கும் தருணத்தில் ஏன் நான் ம்ட்டும் இப்படி என்ற கேள்விக்கு பதிலாய் கிடைத்ததுதான் மெளனம்! பதிலாய் கிடைத்த மெளனமும் பின் கேள்வியாய் ஆகிப் போகுமா என்று எழுந்த கேள்வியும் எனது அறியாமையிலிருந்துதான் கிளைத்தது. மொத்தத்தில் கேள்விகளே அறியாமை என்ற தெளிவு கிடைத்ததின் பின் புலத்தில் எழுந்த கேள்விதான் எதை நோக்கி நகர்கிறாய் என்ற ஆதாரா ஸ்ருதியான ஒரு கேள்வி. சரி எதை நோக்கி நான் நகர்கிறேன்.........? ஒரு முறை என்னுள் கேள்வியை கேட்டு விட்டு மெளனமாய் வானத்தை வெறித்து பார்த்த பொழுதில் கவனித்த போதுதான்..........எனக்குள் அந்த கேள்வி விடைதேடி அங்கும் இங்கும் பசிக...

உமா....!

சிவா இன்னமும் கத்திகிட்டேதான் இருந்தான்..........கொஞ்ச நாளாத்தான் அவனுக்கு இந்த புத்தி. எப்ப பாத்தாலும் ஏதாச்சும் குத்தம் கண்டு பிடிச்சு கத்துறது. ஆமா நாய்னு சொல்ல ஆசைதான் ஆனா கழுத்துல தாலி கட்டிட்டா கொலையே பண்ணினாலும் அவனை கும்பிட்டு கொண்டாடடுணும்னு படிச்சு படிச்சு சொல்லிக் கொடுத்து இருக்காங்க.....அபியோட ஸ்கூல் பஸ் இப்ப வந்துடும் இன்னும் ஒரு 10 நிமிசத்துல அதுக்குள்ள நான் அவளுக்கு லஞ்ச் ரெடி பண்ணி பாக்ஸ்ல வச்சு....அச்சோ 6 வயசு பொண்ண ஸ்கூலுக்கு அனுப்பறதுக்குள்ள.... பெண்டு நிமிருது... இவன கல்யாணம் பண்ணி தொலைச்சு...அச்சச்சோ கல்லானாலும் கணவன் புல்லானாலும் என்னவோன்னு பேசுறவங்க எல்லாம் என்னை திட்டுவீங்க.. சரிதானே..? நல்லா திட்டுங்க.... அடுத்தவங்களை தன் கூட கம்பேர் பண்ணி திட்றதுதானே நம்ம பொழைப்பு.. ! என் கஷ்டம்னு என்னனு நீங்க தெரிஞ்சுக்க வேணாம் தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க...? போங்க.. நீங்க போய் உங்க வாய்க்கு வந்த படி என்னைய ஊர்ல எல்லோர் கிட்டயும் சொல்லுங்க...நம்பி காதலிச்சு கல்யாணம் பண்ணி வந்து குடித்தனம் பண்றேனே என் புருசன்...அவரே சொல்லும் போது நீங்க எல்லாம் என்ன? பஜாரின்னு சொல்லுங்க.. அட...

ஓடம்...!

அது ஒரு நடு நிசி என்று தெரிந்தேதான் எழுந்தேன். சப்தங்களற்ற அந்த தருணத்தில் என்ன நிகழ்கிறது இந்த பூமியில் என்றறிய நான் கொண்டிருந்த பெருங் கனவினை பெரும்பாலும் தூக்கம்தான் ஜெயித்திருக்கிறது. இன்று நான் தூக்கத்தை புறமுதுகிட்டு ஓடச்செய்து....கான்கிரீட் தடுப்புகளுக்க்குள் இருந்து வெளி நோக்கி வந்தேன் என்று சொல்வது சரியான வார்த்தையாய் இருக்காது...உண்மையில் பாய்ந்தேன். எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்த பொழுதில் நான் எப்போதும் அமரும் நதிக்கரை என்ன செய்து கொண்டிருக்கும் என்று காணும் ஆசை துளிர்க்க கால்கள் அனிச்சையாய் நடக்கத் தொடங்கியிருந்தன.... சில் வண்டுகளின் சப்தமும், சில்லென்ற காற்றும் ஒன்றாய் என்னைச் சூழ எப்போதும் போல நிலவு மேகங்களுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கையில் பக்கத்து தெருவில் நாய் மட்டும் ஏனோ ஊளையிட்டுக் கொண்டிருந்தது. பேயை கண்டால் நாய் ஊளையிடுமாமே? உண்மையா?மனது கேட்ட கேள்வியை புத்தி ஆராய்ந்து கொண்டிருக்கையில் மனமே மீண்டும் ஒரு பதிலைச்சொன்னது... ஆமாம் பேய் இருக்குமென்று.....ஆராய்ச்சியை நிறுத்திய மூளை உடல் முழுதும் பயத்தை பரவவிட்டு மீண்டும் மனமே சொன்னது திரும்ப வீட்டுக்கு சென்று விடு என்று...

எது தீர்வு.....????

கொதிக்கும் இரத்தத்தோடு தமது உறவுகள் கொல்லப்படுவதைப் பார்த்துக் கொண்டிருப்பது அதுவும் அநீதி என்று தெரிந்தே நெரிக்கப்பட்ட குரல்வளைகளோடு பிதுங்கிய விழிகளோடு சப்தங்கள் எழுப்பக்கூட திரணிகளற்று கிடப்பது.... என்பது நமக்குவழமையாகிப்போய்விட்டது. சகிப்புத்தன்மையையும் விருந்தோம்பலையும் ஜீன்களோடு சேர்த்து கொடுத்துவிட்டுப் போன நமது மூதாதையர்கள் வீரத்தையும்தான் கொடுத்து சென்றிருக்கிறார்கள் என்பதை எப்படி மறந்தீர் தோழர்காள்? ஒவ்வொரு ஐந்து வருடமும் தேர்தல் வரும் கும்பல் கும்பலாய் கொள்ளைக்காரர்கள் கொடி பிடித்துக் கொண்டு வீடுகள்தோறும் வந்து வாக்குகள் சேகரிப்பார்கள். மான ரோசமுள்ள தமிழனும் கொடிபிடித்து, கூச்சலிட்டு தன்னை தொண்டனென்றும் அபிமானியென்றும் உடல் மண்ணுக்கென்றும், உயிர் தன் தன்மானத் தலைவனுக்கென்றும் கொடி பிடித்து கத்தி தானே எல்லாமுமாய் நினைத்து ஒரு குவார்ட்டர் பிராந்தியிலும், கோழி பிரியாணியிலும் தனது உச்ச பட்ச சந்தோசத்தை எட்டி விடுவான் அல்லது கொடுக்கும் பணத்தை நன்றியுணர்ச்சியோடு வாங்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு விசுவாசத்தை வாக்குகளாக்கும் போது தனக்கே ஒரு சவக்குழியை வெட்டி தானே ஒரு ஐந்து வருடங்கள...

சுடர்....!

மிருகத்தின் வக்கிரத்தினைப் புத்தியில் தேக்கிவைத்து அதைப் பார்வைகளுக்குள் கொண்டு வந்து வக்கிரப்பார்வைகளைப் பொதுவினில் விதைத்துக் கற்பிதங்கள் கொள்ளும் கேவலப் புருசர்களை அழிக்க இன்றே எனக்கோர் வரம் கொடு இறைவா? முரண்பட்ட சமுதாயமே நீ செத்துப் போ! ஆணும் பெண்ணும் கொள்ளும் உறவில் காமம் என்ற உணர்வைக் கலந்து நோக்கும் கயமையும், கயமைவாதிகளும் என் முன் வர துணிகரம் கொள்ளாதீர், சற்றே ஓடி ஒளியும் அல்லது யாரையேனும் தேடிப் பதுங்கும் இல்லையேல் இக்கணமே நீவீர் இருந்த தடம் அறியாமல் எரித்து விடும் வல்லமை எம்மிடம் உண்டு. நீவீர் ஜீவித்தீர் என்ற சுவடுகளின்றி உமது சாம்பல்கள் காற்றிலே கரைக்கப்படும். எங்கே ஆரம்பித்தது இந்த மனித முரண்...? பாலினம் என்பது பிள்ளைகள் பெறுவதற்கு மட்டுமென்ற காமக்கேவலம்......? திருமண பந்தம் என்ற ஒன்று விதிக்கப்பட்ட தேசத்தில் , கணவனை விடுத்து மாற்று ஆணுடன் பேசினாலே அது தவறு? கற்கும் பொழுதில் நண்பனாய் ஒரு ஆண் இருந்தால் அதுவும் தவறு? சகோதரனாய் யாரேனும் பாசத்துடன் இருந்தால் அதுவும் தவறு? எங்கே போகிறாய் சமுதாயமே? மன்னிகவும் சமுதாயம் என்ற வார்த்தைக்கு வேறுபதம் கொள்கிறேன்? எங்கே போகிறாய் கேவலமே....

ஹாய்......25.01.2011!

காலங்கள் நகர, நகர அனுபவம் என்பது சேர்ந்து ஒரு வித புத்தி முதிர்ச்சியை கொடுத்துக் கொண்டுதானிருக்கிறது. ஒரு வித கூர்மையான உள்முனைப்போடு வாழ்க்கை நகரும் போது இன்பம், துன்பம் எல்லாமே சேர்த்து வைத்து பார்க்கும் ஒரு பக்குவம் கை கூடி விடுகிறது. எது நடந்தாலும் அது ஒரு வித காரணமாய்த்தான் நிகழ்கிறது மற்றும் ஒரு காரணத்தினால் நிகழ்கிறது என்பது வேறு ஒன்றும் இல்லை என்று மட்டுப்பட்ட் அறிவு சொன்னாலும், என்ன செய்து விடும் வாழ்க்கை நம்மை? என்ற கேள்வி எழுந்து அதற்கு பதிலாய்.... ஒன்றுமில்லை..ஒன்றும் செய்து விடாது என்று தோன்றுகிறது. ஆனால் நமது தனிப்பட்ட சாதக பாதகங்களை வைத்துக் கொண்டு வாழ்க்கையை நன்றென்றும் தீதென்றும் கணித்து விடுகிறோம். வளர வளர நாம் பெறும் விசயங்களை விட இழக்கும் விசயங்கள்தான் அதிகம் ஆனால் இழத்தல் என்று நாம் சொல்வது புதிதாய் வேறு ஒன்றைப் பெறுதல் என்ற கோணத்தில் பார்க்கும் போது அங்கே புதுமையான மனோ நிலை வந்து விடுகிறது. மனம் என்ற வஸ்தாகத்தான் பெரும்பாலும் நாமாக இருக்கிறோம். இந்த மனதுக்கு பெரும்பாலும் புதிய விசயங்கள் கண்டு பயம்தான் ஏற்படுகிறது. அது எப்போதும் பழகிப் போன விசயங்களையே சுற்றிச் சுற...

அய்யனாரே...!

பள்ளியோடத்துக்கு போய்ட்றேம்மோவ் ..... தோளில் பைக்கட்ட மாட்டிக்கிட்டி பள்ளியோடத்துக்கு போற நாளு என்னிக்கி மாறுமோ ? பெரிய பள்ளியோடத்துல படிக்கிற பயலுவ எல்லாம் ரெண்டு நோட்டு புத்தவம்தான் கொண்டு போறானுவ ... இவனுவள பாத்துபுட்டு ஒரு நா நானும் ரெண்டு நோட்டை கொண்டுகிட்டு போனதுக்கு .... அந்த கணக்கு வாத்தி முருயேசன் மொத்து மொத்துனு மொத்திபுட்டான் . மனசுக்குள் பேசிக் கொண்டே வீட்ட விட்டு நடந்து கொன்டிருந்தவனை பாசுகரு பாசுகருன்னுன்னு பயலுவ எல்லோம் கூப்பிடுவானுவோ ஆனா அவனுக்கு அவன ரசினியாந்துன்னு சொல்லிகிறதுதலலதான் சந்தோசம் . ஏம்பி .... எங்காளு எப்டி அடிப்பாரு தெரியுமுல்ல எந்த கமினட்டியும் எங்க ஆளுகிட்ட வரமுடியதுல்லன்னு சொல்லிகிட்டு ரசினிக்கு கொடி புடிக்கிற பயவுள்ள அதே நேரத்துல கமலதாசன காலிப்பயன்னும் சொல்லி சண்ட போடும் . ஏலேய் ... ஏன்டா அப்புடி சொல்றன்னு கேட்டா ஆமாம் காலிப்பயதான அவன் எப்ப பாத்தாலும் காதலிச்சுகிட்டே இருப்பான் எங்காளு மாறி சண்டையெல்லாம் போட வருமான்னு நம்மளையே திருப்பி கிட்டு கேப்பான் .... எட்டாவது ...