Skip to main content

Posts

தக்க்ஷின் குட் ஈவினிங் - 2

இதுவரை... இனி... சேட்டு ரொம்ப நொடிச்சுப் போய்ட்டாப்ல தேவ் தம்பி. ஒங்க கூட இருந்த டீம் எல்லோரும் வேலைய வுட்டுப் போய்ட்டங்க மிச்ச இருந்த யூனியன் ஆட்களால பிரச்சினை வேற எப்ப பாத்தலும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு சொல்லிட்டு ஒரே களேபரமா கிடந்துச்சுபா ஓட்டலே...! என்னமோ கோர்ட்ல வேற ஓட்டல் இடத்து மேல பிரச்சினை இருக்கும்ன்னு பேசிக்கிட்டாங்க...அத்தனால மூடிட்டாங்களா இல்ல சேட்டுக்கும் சேட்டு தம்பிக்கும் பெரச்சினையா ஒண்ணியும் தெர்லபா... ஓட்டல் மூடினதுக்கோசரம் நான் லீ மெர்டியன் இஸ்டாண்டுக்குப் போய்ட்டன் பா.... எப்பவாச்சும் ஹரி வருவாப்ள ஓட்டலுக்கு, ச்ச்சுமாங்காட்டியும் ஓட்டல தொறந்து வச்சு கொஞ்ச நேர ஒக்காந்திருந்துட்டு போவாப்ள...ஒனக்கு லக்கு இருந்தா இப்போ கூட அவரு வரலாம்..... எந்த ஹரி? செஞ்சி ஹரிண்ணாவா? சடாரென்று கேட்டேன்... அவருதாம்பா சேட்டுக்கு ரைட் ஹேண்ட் கனக்கா இருப்பாப்லயே...... டீ குடித்து விட்டு ஹோட்டல் பக்கம் நாங்கள் இருவரும் வருவதற்கும் அவர் புல்லட்டில் தக்க்ஷின் உள்ளே சென்று இறங்கி நிறுத்தவும் சரியாய் இருந்தது. இந்த வந்துட்டப்ளபா ஹரி.....என்று மதி அண்ணன் சுட்டிக்க...

தக்க்ஷின் குட் ஈவினிங்...!

தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ..... தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும். என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற  பாரதத்து கிர...

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே... விந்தையடி?!

ஒரு மாதிரியான தருணம்தான் அது. இமைக்க கூட மறந்து அவளின் விழிகளுக்குள் நான் கிடந்தது. காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் என்ற ஒரு கேள்வி மமதையாய் புத்திக்குள் ஏறி சிவதாண்டவம் கூட அப்போது ஆடிக் கொண்டிருந்தது. காதல் வெளிப்படுவது விழிகளில்தான் என்று மீண்டுமொரு முறை காலம் எனக்கு மெய்ப்பித்தது. இதற்கு முன்பு இரண்டொரு முறை காதல் கண்களுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து என்ன செளக்யமா என்று கேட்டதும் உண்டு. நிறைய கண்களை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே ஆண்களின் கண்கள் எல்லாம் உங்கள் மனதில் இருந்து கழன்று போகக் கடவதாக; ஆண்களின் கண்களைப் பற்றி பெண்கள் அல்லவா சிலாகித்து எழுத வேண்டும் அது பற்றிய கவலை எனக்கெதற்கு? குண்டு கண்கள், கூர்மையான கண்கள், சிவந்த வரியோடிய கண்கள், வெள்ளை வெளேறென்ற தும்பைப்பூ நிற கண்கள், துரு துரு கண்கள், சாந்தமான கண்கள், எப்போதும் கோபமேறிப்போய் உஷ்ணம் வீசும் கண்கள், வசீகரமாய் சொடக்குப் போட்டு அழைத்து இன்று இரவு எதுவும் வேலை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு சொக்க வைக்கும் கண்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் கண்கள் என்று...

கடவுள் இல்லாதவர்தான்....!

திடீரென்று படத்தின் பெயர் மனதில் தோன்றியதாகவும், உடனே இயக்குனர் சுந்தர். சியைக் கூப்பிட்டு நாம ஒரு படம் பண்றோம் படத்தோட பேர் அருணாச்சலம் என்று சொல்லி முடித்த கையோடு இசையைமைப்பாளர் தேவாவையும் அழைத்து இந்த விசயத்தைக் கூறினாராம் சூப்பர் ஸ்டார். கதை எதுவுமே முடிவாகவில்லையாம் அப்போது, அதனால்தான் படத்தில் வந்த பஞ்ச் டயலாக்கை கூட "ஆண்டவன் சொல்றான் இந்த அருணாச்சலம் செய்றான் " என்று கூட வைத்தார்களாம். அதாவது எதுவுமே மனிதர்கள் முடிவு பண்ணாமல் கடவுள் முடிவு பண்ணியதாம். நிஜத்தில் இந்த உள்ளுக்குள் தோன்றும் விசயங்களை ஆண்டவன் தான் தீர்மானிக்கிறாரா? என்ற ஒரு கேள்வி எனக்குள் வெகுநாளாய் இருந்து கொண்டிருப்பதற்கு காரணம் இதே போன்று எழுத்துச் சித்தர் பாலகுமாரனும் கூறுவதுதான். அவரும் கூட நான் எழுதுவது எல்லாம் எனக்குள் ஸ்பூரித்தது என்று அடிக்கடி சொல்வார்.  கடவுள் என்னை வழிநடத்துகிறார், எல்லாம் கடவுள் கிருபை, நான் ஆன்மீகத் தேடலில் இருக்கிறேன் என்று சொல்லிக் கொள்வதில் ஏதோ ஒரு கிறக்கம் நிறைந்த சுகம் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. இந்தக் கட்டுரை நாத்திகம் பேசி ஆத்திகத்தை அமுக்கவோ அல்லது ஆத்திக...

தமிழ் பேச்சு எங்கள் மூச்சு....!

ஜோடிப்பொருத்தமும், வார்த்தை விளையாட்டும் சன்டிவி ஆரம்பித்த காலத்தில் வெகு பிரபலமான நிகழ்ச்சிகளாய் இருந்தன. எம்.ஜே. ரெகோ ஜோடிப்பொருத்தம் நிகழ்ச்சியையும், ஆனந்த கீதன் வார்த்தை விளையாட்டு நிகழ்ச்சியையும் தொகுத்தளித்துக் கொண்டிருந்தனர். இவர்களோடு சேர்ந்து ஈ. மாலா,  ரமேஷ் பிரபா மற்றும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருந்த ரபி பெர்னார்ட் எல்லாம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியின் அந்த நாளைய ஹீரோக்கள். சன் டிவியின் தமிழ் மாலை வீடுகள் தோறும் தோரணங்கள் கட்டிக் கொண்டிருந்த அந்தக் காலங்களில் தூர்தர்சனின் பட்டிமன்ற நிகழ்ச்சிகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போய்க் கிடந்த தமிழகம் உற்சாக போதையில் மெல்ல தள்ளாடிக் கொண்டிருந்தது. விவாத  நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பேச்சுப் போட்டிகள்  போன்ற சுவாரஸ்யங்களின் மீது ஏறி நின்று வருடக்கணக்கில் கோலேச்சியது விசுவின் அரட்டை அரங்கம் மட்டுமே.  எட்டு எட்டு பேராய் நான்கு அணிகள், அணிக்கு ஒரு தலைப்பு, அந்த தலைப்பை ஒட்டி  பங்கேற்பாளர்கள் பேச விசு அவர்களை குறுக்கீடு செய்து கேள்விகள் கேட்பார், கோபப்பட...

கோச்சடையான் – இது பொம்மை படம் இல்லை.. .செம்ம படம்!

திருடனுக்கு தேள் கொட்டியது போல முழித்துக் கொண்டிருக்கிறார்கள் கோச்சடையானைப் பற்றி விமர்சனம் செய்த கொக்குகள். இந்திய சினிமா வரலாற்றில்… ஏன் உலக சினிமா வரலாற்றில் சலனப் பதிவாக்கத்தில் உருவாக்கம் செய்யப்பட்ட அனிமேஷன் காட்சி வடிவாக தனது ஆதர்ச நாயகனைப் பார்த்த மாத்திரத்தில் திரையரங்கம் அதிர்ந்து நொறுங்கி இருக்குமா என்பது சந்தேகமே….!!!!!!! செளந்தர்யா அஸ்வின் ரஜினி மகளென்றுதான் இதுநாள் வரையில் நான் நினைத்துக் கொண்டிருந்தேன் ஆனால் கோச்சடையான் பார்த்த பின்புதான் தெரிந்தது செளந்தர்யாவும் எங்களைப் போன்ற ஒரு ரஜினி பைத்தியம் என்று! திரையில் மனிதப் பிம்பங்களை நேரடியாக பார்த்துப் பழகிப் போயிருந்த  கண்களுக்கு படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்கு புதிய திரைவடிவம் கொஞ்சம் பயிற்சி கொடுப்பது என்னவோ உண்மைதான் என்றாலும்… சூப்பர்ஸ்டார் குதிரையிலிருந்து குதித்து நடந்து வரும் காட்சியில் மெல்ல மெல்ல திரைக்குள் குவியத் தொடங்கும் நமது மனது ரஜினியின் காந்தக் குரலைக் கேட்கத் தொடங்கும் அந்தக் கணத்திலிருந்து கதைக்குள் தொபுக்கடீர் என்று விழுந்து மொத்தமாய் கரைந்து போயே விடுகிறது! அதன் பிறகு கோச்சடை...

பிடிபடாததின் ரகசியம்...!

திருவள்ளுவர் பேருந்தில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தோம். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். இருக்கையில் அமர்ந்தபடியே உறங்குவது எனக்கு கடினமாயிருந்தது. எல்லோரும் உறங்கிக் கொண்டிருந்தபடியால் நடைபாதையில் ஒரு விரிப்பை விரித்து என்னை அம்மா படுக்கச் சொன்னாள். நான் ஒருக்களித்து படுத்திருந்தேன். கீழே வேகமாய் சாலை ஓடிக் கொண்டிருப்பது போல தோன்றியதாலும், வண்டியின் சப்தம் காதுக்கு வெகு சமீபமாய் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று கேட்டதாலும் என்னால் உறங்க முடியவில்லை. உறங்கினேனா இல்லையா என்று யோசிக்கும் படியான ஒரு உறக்கம் அது. உறங்கிய மாதிரியும் தெரிந்தது உறங்காத மாதிரியும் தெரிந்தது. உண்மை என்று எதைச் சொல்கிறோம் நாம்? எதை நாம் நம்புகிறோமோ அதைத்தானே..? நான் சென்னை வந்து இறங்கியது உண்மையாய் இருக்குமா என்ற பயம் மெலிதாய் என்னை தொற்றிக் கொண்டதற்கு காரணம் உண்டு. காரணம் அன்று இரவு நான் பேருந்திற்குள் நடைபாதையில் படுத்திருந்த போது  அதிலிருந்த ஒரு ஓட்டையின் வழியாக ஒரு காட்டிற்குள் விழுந்து விட்டேன். விழுந்த வேகத்தில் உருண்டு சாலை ஓரமாக இருந்த புதருக்குள் விழுந்து, தூக்கம் தெளியாமலேயே இ...